இந்து என்பதின் திரிபே இந்தியா என்பதுதான் பாரதியின் கருத்து என்று சொன்னால் மதிமாறனின் விமர்சனம் தேவையற்றது. ‘பாரதம், இந்தியா’ என்ற வார்த்தைகள் பாரதி பயன்படுத்தியிருப்பது பார்ப்பனியச் சிந்தனையின் வெளிப்பாடு என்று ஒரே வரியில் சொல்லியிருக்கலாம். அப்படியில்லாமல் மதிமாறன் பாரதி இந்தியா என்ற பெயரை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை என்று தனியாக விமர்சனம் வைக்கிறார். பார்ப்பனீய பூச்சாண்டியைக் காட்டி வளர்ந்த திமுக அரசு ஜூன் 1970ல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக இந்தப் பாடலை அறிவித்தது. பார்ப்பினிய எதிர்ப்பில் ஊறித்திளைத்த திமுக அரசாங்கம் இந்தப் பாடலில் பரதகண்டம் வருகிறதே – இது பார்ப்பனியச் சிந்தனைதானே – இதை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று யோசிக்கவில்லைபோலும்.
View More பாரதி: மரபும் திரிபும் – 5Category: விவாதம்
விவாதங்கள், உரையாடல்கள், கண்டனங்கள், எதிர்வினைகள்..
பாரதி: மரபும் திரிபும் – 4
‘பாரதி அகத்தியருக்கு பூணூல் அணிவிக்கிறாராம்!’.. அபிதான சிந்தாமணி உள்ளிட்ட பழைய நூல்கள் அகத்தியரை வேதியர் என்கின்றன. அவர் பாண்டிய மன்னர்களுக்கு புரோகிதராக விளங்குகினவர் என்று சாசனங்களால் அறியலாம்… ‘பகவனுக்கும், ஆதிக்கும் நடந்த கலப்புத் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டவர் மாதிரி ஆணித்தரமாகப் பொய் சொல்லுகிறாராம் பாரதி’…திருவள்ளுவரைப் பற்றிய இந்தச் செய்தி கபிலர் அகவல் என்ற நூலில் தொடங்கி, 1859 முதல் வெளிவந்த திருக்குறள் பதிப்புகள் அனைத்திலும் இடம் பெறுகிறது… பார்ப்பன ஆண் – தாழ்த்தப்பட்ட பெண் – அறிவு, தாழ்த்தப்பட்ட ஆண் – பார்ப்பன பெண் – அறிவு: உண்மையிலேயே மதிமாறனின் புரிதல் இதுதான்…
View More பாரதி: மரபும் திரிபும் – 4பாரதி: மரபும் திரிபும் – 3
”நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக’ என்ற நூலே பொய்களால் ஆனது. தாழ்த்தப் பட்டவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் வெளியிடப் பட்டது… சூழ்ச்சிக் கொள்கையை மக்கள்முன் வைத்துத்தான் கபடநாடகம் ஆடி நீதிக்கட்சிக் காரர்கள் ஆட்சிக்கு வந்தனர் என்கிறார் எம்.சி.ராஜா… .’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்ற பெயரால் செய்யப்படும் எந்தத் திட்டத்திலும் மருந்துக்குக்கூட உண்மை இல்லை. ஆனால் உண்மையில் நிலைத்திருப்பது ‘வகுப்புவாத ஏகாதிபத்தியமும், சாதியின் கொடுங்கோன்மை’யுமே ஆகும்… நீதிக்கட்சிக்காரர்கள் பிரிட்டிஷாருக்கு வால்பிடித்ததினால்– ஆதரவாக இருந்ததினால்– பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இந்துமதத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்ததினால்– மட்டுமே பாரதி அவர்களை தேசத்துரோகிகள் என்று விமர்சித்தார்.
View More பாரதி: மரபும் திரிபும் – 3பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்
தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.. பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது… கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும். இந்த அளவிற்குத் தெளிந்த வானியல் அறிவு படைத்த நம் முன்னோர், கருணாநிதியின் பார்வையில் மூடர்களாகவோ, ஆரிய அடிமைகளாகவோதான் காட்சியளிப்பார்கள்…
View More பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்