வேதப் பாக்கள் வனங்களில் தான் உருப்பெற்றன. ஆரண்ய காண்டம், வன பர்வம் இரண்டுமே நம் இதிஹாஸங்களில் உள்ளவையே. நைமிச வனம்,காம்யக வனம், த்வைத வனம், தண்டக வனம், மது வனம், தாருகா வனம் என்று பல பண்டைய வனப் பெயர்கள்.. ஆனைக்கா, கோலக்கா, கோடிக்கா, நெல்லிக்கா, குரக்குக்கா, வெஃகா, தண்கா எனும் அழகான பெயர்கள் வனம் சார்ந்த தலங்களைக் குறிப்பவை… நெருங்கிய வனப்பகுதி நாட்டுக்கு ஓர் அரணாகவே திகழ்ந்தது. தமிழ் மன்னர்கள் பனையையும், வேங்கையையும், ஆரையும் காவல் மரமாகக் கொண்டிருந்தனர்… காடுறை வாழ்க்கை ஆன்மிகத்துக்குத் துணை புரிவதாக நம்பினர்; வானப்ரஸ்தம் எனும் ஒருநிலையும் வரையறுக்கப் பட்டது. ..
View More வனங்களும் நமது பண்பாடும்Category: சூழலியல்
சுற்றுச் சூழல் குறித்த பதிவுகள்..
எனதருமை இந்தியாவின் எருமைகளே [கவிதை]
இன்று உலகில் உன் மாமிச ஏற்றுமதியில் முதலிடம் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான் புகழ் வல்லரசுக்குத்தானாமே.. உன் உதிரத்தை நீ பாலாகச் சுரந்தும் உன் மீது சுரந்திருக்கவில்லைதான் போதிய கருணை. உன் உடம்பை உயிரோடு தந்தும் உனக்குக் கிடைத்திருக்கவில்லைதான் உரிய மரியாதையும்.. ராமன் பேரில் போர் நடத்தி ராவணனிடம் ராஜ்ஜியத்தை நாங்கள் ஒப்படைத்த பாவம் ஒட்டு மொத்தமும் உன் மீதுதானா இறங்கவேண்டும்?..
View More எனதருமை இந்தியாவின் எருமைகளே [கவிதை]காந்தாரா (கன்னடம்): திரைப்பார்வை
இந்த இயற்கைக்கு ஒரு மொழி உள்ளது. அது நம்மோடு பேசுகிறது என்பதை காடுபட்டி சிவனும், வனத்துறை அதிகாரி முரளியும் உணர்ந்துகொள்ளும் தருணம் நிலத்திற்கும் – அதிகாரத்திற்கும் வரும் இணக்கத்தை காட்டுகிறது.. ‘பஞ்சுருலி’ தன் மக்களுடைய தார்மீக சக்தி,அறத்தின் பெரு எழுச்சி. அது கண்களறியா நெருப்பு வேலியை போட்டு தன் மக்களை காக்கிறது.. இதை திரையில் சாத்தியப்படுத்திய விதத்தை பார்க்கும் போதுதான் அதில் இருக்கும் தெய்வத் தன்மையை உணர முடிகிறது. படத்தின் இறுதிக்காட்சிகளை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது…
View More காந்தாரா (கன்னடம்): திரைப்பார்வைஇருளர்களும் புளோரிடா மலைப்பாம்புகளும்
குட்டி விலங்குகளை சுவாகா பண்ணும் மலைப்பாம்புகளைப் பிடிக்க இயலாமல் மொத்த புளோரிடா அரசாங்கமும் தடுமாறியது.. ஆராய்ச்சியாளர் ரோமுலஸ் விட்டேக்கர் உதவியுடன் தமிழ் நாட்டிலிருந்து மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் என்ற இரு இருளர்களையும் அங்கு தருவிக்கிறது. இது நடந்தது 2017ல், பொய்யான சித்தரிப்பில் எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம் ‘ கூறும் 1993ஆம் வருடத்திற்கு நாற்பது ஆண்டுகள் சென்ற பிறகு நிகழ்ந்தது இது… இருளர்களுக்கு என்று தனியாக உள்ள கூட்டுறவுச் சங்கம் நாற்பது வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது. இதன் உறுப்பினர்களான இருளர்கள் மருந்துக்காக விஷப் பாம்புகளைப் பிடித்து கொடிய நஞ்சினை உரிய தொழில் நுட்பங்களோடு சரியான பாதுகாப்பு வழிமுறைகளோடு எடுக்கிறார்கள்… கிட்டதட்ட இரண்டு இலட்சம் எண்ணிக்கையுள்ள இருளர் சமுதாயத்தின் இறுதி பாம்புப் பிடிப்பவர்களாக இவர்கள் மட்டுமே இருக்கப் போகின்றனர்…
View More இருளர்களும் புளோரிடா மலைப்பாம்புகளும்கொலைகாரக் கிறிஸ்தவம் — 20
“ஹிந்துக்கள் தங்கள் திருமணங்களை ஹிந்துப் பண்டிகைகளுடன் சேர்த்துக் கொண்டாடுவதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். எனவே ஹிந்துத் திருமணங்கள் எவையும் திருவிழாக்காலங்களிலோ அல்லது பிறமதச் சடங்குகளுடனோ கொண்டாடுவதனை முற்றிலும் தடுத்து அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். பாதிரிகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஹிந்துக்களைக் கண்காணித்து அவர்களில் எவரேனும் பெற்றோர்களை இழந்த அனாதைகளாக, பதினான்கு வயதிற்கும் குறைந்தவர்களாக இருக்கிறார்களா என்பதினைக் கண்டறிந்து, அந்த அனாதைகளை உடனடியாகப் பிடித்துக் கொண்டுவரவேண்டும். அவ்வாறு பிடிபட்ட அனாதைகளை உடனடியாக கிறிஸ்தவனாக ஞானஸ்னானம் செய்துவைக்கவேண்டும்.
View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 20கொலைகாரக் கிறிஸ்தவம் — 17
போர்ச்சுகீசியர் ஆட்சிக்குட்பட்ட இந்தியப் பகுதி எவற்றிலும் பிராமணர்கள் எவரும் குடியிருக்க அனுமதிக்கவே கூடாது எனவும், அவர்களுடன் கிறிஸ்துவமத நம்பிக்கையற்றவர்களும் விரட்டியடிக்கப்படவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. . ஹிந்துக்கள் என்கிற ஒரே காரணத்திற்க்காக பல்வேறு அவமானங்களும், கொடுமைகளும், உடல் உறுப்புகளைச் சிதைத்தலும் வெளிப்படையாகச் செய்யப்பட்டது.
View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 17கொலைகாரக் கிறிஸ்தவம் — 15
இந்துக்கள் கோவாவிலிருந்து வெளியேறியதைச் சாக்காக வைத்துக்கொண்டு 1567-ஆம் வருடம் செலாஸ்ட் பகுதியில் எஞ்சியிருந்த பிற கோவில்களை இடித்துத் தள்ளினார்கள், போர்ச்சுக்கீசியக் கிறிஸ்தவப் பாதிரிகள். ஹிந்துக்கள் எடுத்துச் செல்லாமல் விட்டுச்சென்ற கடவுளர்களின் சிலைகளும் தெருவில் தூக்கியெறியப்பட்டுத் துண்டுகளாக உடைத்துத் தள்ளப்பட்டன.
View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 15ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4
ஹெச்.எஃப்-24 விமானத்தின் வடிவமைப்பு சிறந்து விளங்கியபோதிலும், பிரிஸ்டல் சிட்டலி ஆர்பியஸ் தயாரித்து வழங்கிய அதன் இரட்டை எஞ்சின்கள் வலிமையற்றவையாக இருந்ததால், எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. இப்பொழுது அந்த விமானங்கள் பாரதத்தின் பல விமானதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை ஒரு வெட்கக்கேடு என்று உணர்வதால், விமானப்படைத் தலைமையகமும், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனமும் பாராமுகமாகவே இருக்கின்றன
View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 3
இதுவரை 11,400க்கும் அதிகமாக மிக்-21 விமானங்கள் உற்பத்திசெய்யப்பட்டிருக்கின்றன. இருபதுக்கும் மேற்பட்ட வகைகளும் உண்டு. சீனா உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இதைப் பயன்படுத்திவருகின்றன. சீனா இதை ஜே-7 என்ற பெயரில் உற்பத்திசெய்து பல நாடுகளுக்கும் விற்றுவருகிறது.[3] இந்தியாவிலுள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மிக்-21எம் [MiG-21M] வகையை வடிவமைத்து உருவாக்குகிறது.
View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 3சல்லிக்கட்டு : கலாசாரத் திரிபுகளும் மீட்டெடுப்புகளும்
சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் வரைகூட காளையை அடக்குபவர்கள் அந்தப் போட்டியை நடத்தும் கோவிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையில் பங்குபெற்று, நெற்றி நிறைய விபூதி பட்டை இட்டுக்கொள்வார்கள். வேட்டியை தார்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு களத்தில் குதிப்பார்கள். இப்போதைய போட்டிகளில் பங்குபெறுபவர்கள் விபூதி இட்டுக்கொள்வதில்லை. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டிக் கொண்டு களம் காண்பதில்லை… காளையை அடக்குவதற்குப் பின்னால் என்ன மனநிலை செயல்படுகிறது..? ஆண் என்கிற கர்வம். ஊரில் எல்லார் முன்னாலும் வீரனாக வலம் வர வேண்டும் என்ற ஆசை. பெண்கள் முன்னால் தலை நிமிர்ந்து நடக்கவேண்டும் என்ற ஆணாதிக்க மனம்….
View More சல்லிக்கட்டு : கலாசாரத் திரிபுகளும் மீட்டெடுப்புகளும்