பெரும்பாலான இந்தியமொழிகளின் இலக்கிய வரலாறு என்பதே அம்மொழிகளில் எழுதப் பட்ட ராமாயண நூலில் தான் தொடங்குகிறது. இந்திய தேசிய உருவாக்கத்தில் ராமாயணத்தின் பங்கு மகத்தானது… சீதை போன்ற மற்றொரு பெண்மணியை இதுவரை தோன்றியிருக்கும் உலக இலக்கியங்கள் ஒன்றிலும் காணமுடியாது. இனிமேலும் காண்பதரிது. சீதை ஒப்பற்றவள்… தியாகத்திற்கு எல்லை உண்டா? சகோதர பாசத்திற்கு எல்லை உண்டா? பக்திக்கு எல்லை உண்டா? ஆசைக்குத் தான் எல்லை உண்டா?
View More நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்Category: பொது
Item that are yet to be categorised on a regular basis.
என்று தணியும் இந்து சுதந்திர தாகம்?
கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த இருபதே வருடங்களில், 17 பேர்கள் (ஒரு முஸ்லீம் நபர் உட்பட) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் கொலைவெறித் தாக்குதலுக்கு உட்பட்டு பின்னர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தோரும் உண்டு… இன்னும் எவ்வளவு நாட்கள் இந்தப் போராட்டங்களும், உயிர் இழப்புகளும் தொடரவேண்டும்? தங்களுடைய தர்மத்திற்காகவும், தேச நலனுக்காகவும் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்கள் இன்று எந்த நிலைமையில் உள்ளன? அக்குடும்பங்களின் வாழ்வாதரங்கள் என்ன?
View More என்று தணியும் இந்து சுதந்திர தாகம்?சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6
அண்ணல் அம்பேத்கர் வீர சாவர்க்கருக்கு எழுதுகிற கடிதத்தில் குறிப்பிடுகிறார்: “இந்து சமுதாயத்தை சீர்ப்படுத்த தீண்டாமை அழிந்தால் மட்டும் போதாது இன்றைய சாதிமுறையே முழுமையாக அழிய வேண்டும். இதனை உணர்ந்த வெகு சிலருள் நீங்களும் ஒருவர் என்பதனை அறிய எனக்கு ஆனந்தமாக இருக்கிறது.”… ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும், சுயநல சாதித் தலைவர்களும் இட ஒதுக்கீடு என்ற அம்சத்தையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, இந்து சமூகத்தைப் பிளவு படுத்தும் முயற்சிகள் மேற்கொள்வதை ஒவ்வொரு இந்துவும் எதிர்க்க வேண்டும்.
View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5
“ஸ்ரீ ஐயன் காளியின் ஆக்ஞைக்கு இணங்க நமது சகோதரிகளின் கல்மாலைகளை அறுத்தெறியவே நாம் முழு சம்மதத்துடன் இங்கு கூடியிருக்கிறோம்.” அம்மேடையிலேயே அருவாள் கொண்டு கல்மாலைகள் அறுத்தெறியப் பட்டன.. ”எனது இனத்தவர்களுக்கு வீடோ, பூஜை நடத்த கோவிலோ கிடையாது. எனவே இவ்விஷயத்தில் வேறு சமுதாயத்தினருக்குச் செய்வதை விடக் கூடுதலாக எங்களுக்கு அரசாங்கம் செய்து தரவேணுமென்று வேண்டுகிறேன். எங்கள் தேவைகளுக்காக கிணறுகளும், கோயில்களும் நிர்மாணித்துத் தரவேண்டும்”
View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5இலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து!
அச்சம் மீதூர தமிழர்கள் நிலை இருக்கையில், மாற்றுச் சமயத்தில் சேர்ந்து விடு என்று அருகாமையிலேயே ஆர்ப்பரிக்கும் குரல்கள்.. புத்தர் சிலைகள் சைவத் தமிழர் நிலப்பகுதியெங்கும் அமைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மளமளமென்று விகாரங்கள் எழுகின்றன.. இலங்கையின் பதினேழு மாவட்டங்களிலும் உள்ள சைவத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட முதற்கட்டமாக 150 திருமுறை வேள்விகளை நிகழ்த்துகிறோம்.
View More இலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து!சோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலை
சர்வேஸ்வரா கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அங்கு மசூதி ஒன்றைக் கட்ட மதவெறி அமைப்புகள் முயன்றதாகவும் அதை எதிர்த்து சோழவரம் முன்சீஃப் நீதிமன்றத்தில் மூர்த்தி அவர்கள் வழக்குத் தொடர்ந்தார் என்றும் ஊர்மக்கள் கூறுகின்றனர்… பூதூர் பாபா தர்கா அருகில் இவர் காலை 11 மணிக்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் 10 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன.. இந்த மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை ஓயாமல் போராடும் மன உறுதியை இறைசக்தி இந்தக் கிராம மக்களுக்கு அளிக்கட்டும்.
View More சோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலைசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4
ஒருநாள் ஐயன் காளி விளையாடிக் கொண்டிருந்த பந்து பக்கத்தில் இருந்த ஒரு நாயர் வீட்டில் விழுந்த போது அந்த நாயர் வந்து ஐயன் காளியை எச்சரித்தான். அன்று முதல் விளையாடுவதை விட்டுவிட்ட ஐயன் காளி ஆழமான மௌன சிந்தனையில் மூழ்கினார்… நினைவுகூர்ந்த ஐயன் காளி, ‘ஒரு புலையர் பெண் செய்த வேலையை, அட ஆறு நாயர் ஆண்கள் சேர்ந்து செய்ய முடியவில்லையே!’ என்றார்.
View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 3
பகவத் கீதை சாதியை கடவுளே உருவாக்கியதாக கூறுகிறதே? ..வெளிநாட்டு ஆதிக்கக் கைப்பாவையாக இருந்த திருவிதாங்கூர் மன்னன் ”அரச பரம்பரையை விட்டு கடவுள் என்ன தீண்டத்தகாத குலத்தில் பிறப்பாரா?” எனக் கேட்டான்… இன்றைக்கு தேவர் சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையே கலவரங்கள் தூண்டி விடப்படுகின்றன. ஆனால் வரலாற்றில் இந்த இருசமுதாயத்தினரும் இணைந்து ஆதிக்க சக்திகளை எதிர்த்துள்ளதையும் நாம் காணலாம்.
View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 3சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2
ஆரிய-திராவிட இனவாதம் பொய் என்றால், சாதி ஏன் இந்தியாவில் மட்டும் இருக்கிறது? முன்னேறிய நாடுகளில் இப்போது சாதி முறை இல்லையே. இந்தியாவில் தானே இந்த அளவு உள்ளது? .. அந்தணரான சுந்தரமூர்த்தி நாயனார் “திரு நீலகண்டத்துப் பாணர்க்கு அடியேன்” என்று தன்னைப் பெருமையுடன் அறிமுகம் செய்கிறார். இதே போன்ற பாணர்களைத்தான் செயின்ட் அகஸ்டைன் பாவப் பிறவிகளாகக் கருதினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்
இருபாலருக்கும் இடையில் இயல்பான, ஆரோக்கியமான, பாலியல் சாராத அதே சமயம் ஆர்வமூட்டுகிற (non-sexual, yet exploratory) நட்புகளைப் புரிந்துகொள்ளவோ, ஊக்குவிக்கவோ இன்னும் முழுமையாகத் தயாராகாத ஒரு சமூகத்தில், காதலர் தினத்தின் வருகையை இத்தகைய வருடாந்திர வெள்ளத்திற்குத் தான் ஒப்பிடத் தோன்றுகிறது… அதன் பக்கவிளைவுகள் எப்போதுமே துயரம் தரக் கூடியவை. மேலும், அவற்றை எப்போதுமே நாம் தவறில்லாமல் கணித்துவிடவும் முடியும்!
View More காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்