சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2

ஆரிய-திராவிட இனவாதம் பொய் என்றால், சாதி ஏன் இந்தியாவில் மட்டும் இருக்கிறது? முன்னேறிய நாடுகளில் இப்போது சாதி முறை இல்லையே. இந்தியாவில் தானே இந்த அளவு உள்ளது? .. அந்தணரான சுந்தரமூர்த்தி நாயனார் “திரு நீலகண்டத்துப் பாணர்க்கு அடியேன்” என்று தன்னைப் பெருமையுடன் அறிமுகம் செய்கிறார். இதே போன்ற பாணர்களைத்தான் செயின்ட் அகஸ்டைன் பாவப் பிறவிகளாகக் கருதினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2

சமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்

நாம் வன்முறையில் இறங்க வேண்டியதில்லை. சாத்வீக வழியில் உணர்வுகளை வெளிப்படுத்தவும் வெற்றியடையவும் நிறையவே அவகாசம் இருக்கிறது. அதுவே நிரந்தர அமைதியைக் கொடுக்கும் வழியும் ஆகும். ஆனால் அதற்கு முதலில் வெளிப்படையான விவாதமும் விழிப்புணர்ச்சி கொள்வதும் அவசியம் என்பதை ஒவ்வொரு இந்துவும் உணரவேண்டும். இந்து தர்மத்திற்கு வரும் சோதனைகளை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்தையாவது கொள்வோம். வெளிப்படையாக விவாதிப்போம். இந்து என்ற குடையின் கீழ் ஒன்றுபடுவோம்.

எம்மதமும் சம்மதம் என்பது அனைத்து மதமும் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் தான் சாத்தியம் என்பது நம்மவர்களுக்கு இன்னும் புரியவில்லை…

View More சமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்

ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்

இக்கால உலக எரியைத் தணிக்கும் ஆற்றல் சன்மார்க்கத்துக்கே உண்டு. சன்மார்க்கம் தண்மை வாய்ந்தது. அத்தன்மை பொழியும் இடம் எது? நாடு எது? … முறையீட்டை முறையிட்டேன். அழுகையை அழுதேன்; அன்புப்புரட்சியை அறைந்தேன். அப்புரட்சியை நாடோறும் நீங்கள் செய்யலாம். உண்மை அழுகைக்கு பலர் வேண்டுவதில்லை. ஒரு சிலர் போதும். அஃது உலகை உய்விக்கும்.

View More ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்

வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்

கர்நாடக மாநிலத்தில் தர்மஸ்தலா என்ற ஊரிலுள்ள மஞ்சுநாதர் ஆலயத்தில் தினந்தோறும் ஆயிரக் கணக்கான யாத்ரீகர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் அமிர்தஸரஸ் பொற்கோவிலுக்குச் சென்ற பொழுது அங்கு நடக்கும் அன்னதானம் கண்டு வியந்தேன். யாத்ரீகர்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் நேர்த்தியையும் சாப்பிட்ட தட்டை சுத்தம் செய்து நன்கு துடைத்துத் தருவதையும் மிக நேர்த்தியாகச் செய்கிறார்கள்

View More வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்

ஹிந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் மின்-ஊடகங்கள்

நாட்டில் விவாதிக்கப் படவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கும்போதும், இந்நிறுவனம் பல முறை ஹிந்து கலாசாரம், ஹிந்து ஆன்மீகம், ஹிந்து பண்பாட்டின் பழக்க வழக்கங்கள் என்று ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட கருப்பொருள்களையே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு, விவாதத்தினிடையே அவற்றை கேலி செய்து, நிந்தனை செய்து, அவமதித்து, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஹிந்துப் பெரும்பான்மையின மக்களின் மனங்களில் சந்தேகம், நம்பிக்கையின்மை போன்ற விஷவித்துக்களை விதைத்து, அவர்களே தங்கள் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது.

View More ஹிந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் மின்-ஊடகங்கள்

பவானி காதலிக்கிறாள்

[மூர் நாம் அவர்களின் ‘The Principle Of Adaptation’ என்கிற புனைவைத் தழுவியது]…

View More பவானி காதலிக்கிறாள்

“ஓம்” – உயிர்களின் ஆதார ஒலி – எப்படி?

இதையே வள்ளுவர் எல்லா எழுத்துகளுக்கும் (ஒலிகளுக்கும்) முதல் “அ” என்றார். இத்தனை ஆழமான கருத்தை சொல்ல வள்ளுவர் எடுத்துக் கொண்டது மூன்று வார்த்தைகள் மட்டுமே. இது இம்மையைப் ( இவ்வுலகம்) பற்றிய உண்மை. மறுமையைப் (மறுவுலகம்) பற்றிய உண்மையைக் கூற மீதி நான்கு வார்த்தைகளை எடுத்துக் கொண்டார். இந்த அளவிற்கு நுண்மையாக வள்ளுவர் ஆராய்ந்து இருப்பதால்தான்,….

View More “ஓம்” – உயிர்களின் ஆதார ஒலி – எப்படி?

இந்திய தேசியம்: ஸ்ரீஅரவிந்தரின் பிரசித்தி பெற்ற உரை

உலத்தாருக்குத் தொண்டு செய்ய நான் உனக்குச் சுதந்திரம் கொடுத்தேன். நீ வெளியே போய் இந்த சமாச்சாரத்தைச் சொல். இந்தியா விருத்திக்கு வரும்போது ஸனாதன தர்மம்தான் முன்னுக்கு வரும் என்பதைச் சொல். இந்தியா மேன்மையையடையுமென்று சொல்லும்போது ஸனாதன தருமந்தான் விருத்தியடையுமென்பது கருத்து; இந்தியா பிரவிருத்தியாகுமென்று சொன்னால், உலகத்தின் கண் ஸனாதன தருமம் பிரவர்த்திக்குமென்று பொருள்…

View More இந்திய தேசியம்: ஸ்ரீஅரவிந்தரின் பிரசித்தி பெற்ற உரை

உலக அமைதியும் ஹிந்து மதமும் – தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் உரை

தனக்கேயுரிய சிரிப்போடு பேச்சை ஆரம்பிக்கிறார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள். செல்பேசி இல்லாமல் உயிர்வாழ முடியாது என்று அவர் விளக்கத்தை தொடரும்போதே பின்வரிசையிலிருந்து செல்பேசி ஒலிக்கிறது. எங்கும் சிரிப்பொலி.

View More உலக அமைதியும் ஹிந்து மதமும் – தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் உரை

கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தில் கீதை

“என் தினத்தை உன்னதமாக்கியது பகவத் கீதை. நூல்களில் முதல் நூல் அது. ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் மகோன்னதம் நம்மிடம் உரையாடுவது போன்றதோர் மகத்துவம் அது – அதில் அற்பமானதென எதுவுமே இல்லை. ஆனால் மகா விசாலமானதும் அமைதி ததும்புவதும், சீரானதுமானதோர் ஆதி பேரறிவு மற்றோர் யுகத்திலிருந்து நாம் இன்று எதிர் நோக்கும் அதே கேள்விகளை உள்ளார்ந்து அறிந்து பதிலளித்துள்ளதாக அது அமைகிறது.” அமெரிக்காவின் மிகச்சிறந்த தத்துவ மேதையான ரால்ப் வால்டோ எமர்ஸன் (1803-1882) பகவத் கீதையை குறித்து எழுதிய வார்த்தைகள் இவை.

View More கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தில் கீதை