தேவர்களே!
காதுகளால் நாங்கள் நல்லனவற்றைக் கேட்க வேண்டும்.
பூஜைக்குரியவர்களே!
கண்களால் நாங்கள் நல்லனவற்றைக் காணவேண்டும்.
உறுதியான அங்கங்களுடன் கூடிய நல் உடலுடன்
ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்கவேண்டும்.
உலகிற்கு நன்மை செய்தவண்ணம் வாழவேண்டும்.
Category: இந்து மத மேன்மை
ஜெகா மாமா
“ஜகா மாமா” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் தத்தோ J. ஜெகதீசன் மலேசியாவில்…
View More ஜெகா மாமாடாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சு-தமிழாக்கம்
“..நான் Hinduism என்பதன் வரையறை பார்த்த போது அது சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தினை தாங்கும், போஷிக்கும், ஒருங்கிணைத்து பாதுகாக்கும் தர்மம் என கண்டேன். அது இல்லாமல் இப்பிரபஞ்சமே பிரிந்து போய் அழிந்துவிடும். வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் தர்மம் ஒவ்வொரு விதமான செயல்பாடுகளை வலியுறுத்துகிறது…..
நான் என்றுமே ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த ஆன்மிக கருத்துக்களால் உத்வேகம் பெற்றுள்ளேன்.”
View More டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சு-தமிழாக்கம்இந்துமதம் பற்றி ஸ்ரீஅரவிந்தர்
“இந்து தேசம் சனாதன தர்மத்துடனேயே பிறந்தது. அதனாலேயே இயங்குகிறது, அதன் ஊடாகவே வளர்கிறது. சனாதன தர்மம் வீழுமானால், ஆதியும் அந்தமும் அற்ற சனாதன தர்மத்திற்கும் அழிவு என்பது சாத்தியம் என்றால், இந்த தேசமும் அதனுடனே அழியும். ஆகவே, சனாதன தர்மம், அதுவே நம் தேசியம்.”
View More இந்துமதம் பற்றி ஸ்ரீஅரவிந்தர்இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி
“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்.”
இந்துமதம் என்றால் என்ன?: பாரதியார் கவிதை
“பெருமை மிக்க ஹிந்துமதத்தைப் பின்பற்றி அதன்படி நடக்காதிருப்போர் கவலை என்னும் நரகில் வீழ்கிறார் என்கிறார் (பொய்க் கற்பிதமான நரகத் தீயைக் கூறவில்லை). மேலும் தன்னைச் சாரும் அன்பர்கள் அனைவருக்கும் பெருமைமிகு வாழ்வை அளிக்கும் நல்ல துணை இந்துமதம் என்று பறைசாற்றி, “சேர வாரும் ஜெகத்தீரே” என்றும் அழைக்கிறார்.
View More இந்துமதம் என்றால் என்ன?: பாரதியார் கவிதை