இன்றைக்கு கட்டமைக்கப்பட்டுள்ள சாதிய எதிர்ப்புவாதமானது தன்னை பிராம்மண துவேஷக் கோட்பாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது. பிராம்மணர்கள் என்பது ஒரு முகாந்தரம்தான். உண்மையான இலக்கு இந்து மதம்… எனவேதான் இந்த புத்தகம் முக்கியமானது. பல பிராம்மணர்கள் கடுமையாக தீண்டாமையை எதிர்த்தார்கள். தீண்டாமையையும் கேரளத்தில் அதையும் தாண்டி நிலவிய அணுகாமைக் கொடுமையையும் அவர்கள் எதிர்த்தார்கள். அதே ஹிந்து சமயத்தில் உள்ள கோட்பாடுகளை, கருத்துக்களைக் கொண்டு எதிர்த்தார்கள்…
View More வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள் – புத்தக அறிமுகம்Category: வரலாறு
அஞ்சலி: ஆய்வாளர் புலவர் செ.இராசு
தமிழகத்தின் தலைசிறந்த கல்வெட்டாய்வாளர்களுள் ஒருவரான புலவர்.செ.இராசு (85) நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். கொடுமணல் அகழாய்வுக்கு மூல காரணமாக இருந்தவர்.. மாவட்ட ஆட்சியரோ “கலைஞர் உங்கள் மீது மிகவும் வருத்தத்திலிருக்கிறார். தினமணியில் வெளிவந்த தமிழ்ப்புத்தாண்டு குறித்த கடிதம் உங்களால் எழுதப்படவில்லையென்றும் வேறு யாரோ உங்கள் பெயரில் எழுதி அனுப்பிவிட்டாரென்றும் நீங்களே ஒரு கடிதம் எழுதுமாறு கலைஞரே கேட்டுக்கொண்டாரென்று கலைஞரின் நேர்முக உதவியாளர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்” என்று கூறியிருக்கிறார். புலவர்.இராசு அவர்கள் மீண்டும் தமது நிலைப்பாட்டை மென்மையாகவும், அதே நேரத்தில் உறுதிபடவும் வலியுறுத்திக் கூறிவிட்டுத் திரும்பிவிட்டார். தாம் சரியென்று மனப்பூர்வமாக நினைக்கிற ஒரு கருத்தினை வெளிப்படுத்துவதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் உறுதியாக நிற்கிற மனிதர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. அருகி வருகிற அத்தகைய உயர்ந்த மனிதர்களுள் புலவர் இராசு அவர்களும் ஒருவராவார்..
View More அஞ்சலி: ஆய்வாளர் புலவர் செ.இராசுசாவர்க்கரின் சிறைவாசமும் சவுக்கு சங்கரும்
வீர சாவர்க்கர் மிகக் கொடுமையான வருடங்களுக்கு மத்தியில் எழுதிய மனுவில், தமக்கு விடுதலையே கிடைக்காது போகலாம் என்கிற சூழலில், என்னைத்தவிர பிறரை விடுவித்துவிடு என கேட்கிறாரே இந்த மனத்திண்மை சவுக்கு சங்கருக்கு உண்டா? அல்லது வீர சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார் என வாய் கூசாமல் பேசும் புல்லர் கும்பலில் எவனுக்கும் உண்டா?.. தனக்கு அடிப்படை வரலாறே தெரியாமல் இருப்பதை சவுக்கு சங்கர் வெளிக்காட்டுகிறாரா? அல்லது புத்தகம் படித்தால் கூட (அல்லது படித்ததாக பொய் சொன்னால் கூட) அதுவும் அவருக்கு புரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே நேர்மையில்லாமல் பொய் சொல்வதை வந்தவுடனேயே ஆரம்பித்துவிட்டாரா?…
View More சாவர்க்கரின் சிறைவாசமும் சவுக்கு சங்கரும்காசி – இலங்கைத் தமிழ் கலாசார பிணைப்புகள்
பாரதப்பிரதமர் தொடங்கி வைத்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்தும் காசிக்கு காலகாலமாக அறிஞர்களும் பக்தர்களும் பயணித்திருக்கிறார்கள்… இலங்கையின் பல பாகங்களிலும் காசி விஸ்வநாதருக்கு பேராலயங்கள் உள்ளன. புனித யமுனை நதி நீரை எடுத்து வந்து நல்லூரில் யமுனா ஏரியில் அந்த தீர்த்தத்தை சேர்த்ததாகவும் ஐதீகம்… காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகளோடு கூட, காசிக்கும் இலங்கை சைவ தமிழர்களுக்கும் உள்ள தொடர்பும் கூட இவ்வேளையில் சிந்திக்கப்பட வேண்டும்…
View More காசி – இலங்கைத் தமிழ் கலாசார பிணைப்புகள்பாரதியாரும் காசியும்
பாரதி கல்லூரி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கங்கா நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு கவிதைகள் புனைவதிலும், இயற்கையழகை அனுபவிப்பதிலும், நண்டர்களுடன் படகில் உல்லாச யாத்திரை போவதிலுமாகப் பொழுதைக் கழிப்பார். அந்தணருக்கேற்ற ஆசாரமின்றி எல்லா ஜாதியாருடனும் கைகோர்த்துக் கொண்டு உலாவுவதும், நியம நிஷ்டையில்லாது எப்போதும் கோட்டும் சட்டையும் தலையில் முண்டாசும் காலில் பூட்ஸும் அணிந்திருப்பதும்… பாரதியின் காசி வாசம் மொத்தம் ஐந்தே ஆண்டுகள் தான். காசி வாசத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும், திறப்புகளும், தரிசனங்களுமே எட்டையபுரத்தில் ‘இளசைச் சுப்பிரமணியன்’ என்று சம்பிரதாயமாக தமிழ்ப் பண்டித நடையில் கவிதை எழுதிக் கொண்டிருந்த சுப்பையாவை, மகத்தான இலட்சியங்களும், தேசிய உணர்வும், சுதந்திர சிந்தனைகளும் கொண்ட சுப்பிரமணிய பாரதி என்ற நவீனத் தமிழ்க் கவிஞராகவும், எழுத்தாளராகவும், படைப்பாளியாகவும் மாற்றின…
View More பாரதியாரும் காசியும்கித்தூர் ராணி சென்னம்மா: சுதந்திரப் போராட்ட வீராங்கனை
தன் மண்ணையும் மக்களையும் ஆங்கிலேயரிடமிருந்து காக்க எதையும் செய்வதற்கு அவர் தயாராக இருந்தார். அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே. சென்னம்மாவின் தொடர் எதிர்ப்பால், 1824-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கித்தூரைத் தாக்கினர். சென்னம்மாவின் சிறிய படையோ துணிச்சலுடன் போரிட்டது… நாட்டுப்புறக் கதைப்பாடல், லாவணி, கிகி படா வடிவங்களில் ராணி சென்னம்மாவின் வீரக் கதை காலம்காலமாகக் கூறப்பட்டுவருகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 22-24-ம் தேதிகளில் கர்நாடக மாநிலம் கித்தூரில் நடைபெறும் ‘கித்தூர் உற்சவ’த்தில் சென்னம்மாவின் வீரம் கொண்டாடப்படுகிறது..
View More கித்தூர் ராணி சென்னம்மா: சுதந்திரப் போராட்ட வீராங்கனைஎழுநூறாண்டு பழைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் பேசும் தீபாவளித் திருநாள்
பொ.யு 1310ஆம் ஆண்டு இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை என்ற ஈழத்து சோதிட இலக்கிய நூல், “உரிய நற்பிதிர்கள் இன்பமுறு தீபாவலியாம் எண்ணெய் – மருவி வெந்நீரின் மூழ்கி மகிழ்ந்து நல் தருமம் செய்யே” என்று கூறுகிறது. ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) சதுர்த்தசி என்ற குறிப்பும் உண்டு.. இந்த நூலின் காலகட்டத்தில் வடஇலங்கை – குறிப்பாக யாழ்ப்பாணம் பாண்டியப் பேரரசின் தளபதியாக கருதப்பட்ட ஆரியச்சக்கரவர்த்திகளால் ஆளப்பட்டு வந்தது… ஆக, ஆயிரம் ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக தமிழர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடி வருகின்றனர்…
View More எழுநூறாண்டு பழைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் பேசும் தீபாவளித் திருநாள்பொன்னியின் செல்வன் பாகம்-1: திரைப்பார்வை
ஒருவகையில் பொன்னியின் செல்வன் ஒரு “தமிழ் ஹாரி பாட்டர்” போல. சோழ சாம்ராஜ்ய வரலாற்றில் நிலவிய குழப்பத்தைக் களமாக்கி, ஒரு மாபெரும் காவியத்தன்மை கொண்ட நாவலை சிந்தித்தது கல்கியின் கூர்மையான வரலாற்று பிரக்ஞையையும், ஒரு கதாசிரியராக அவரது கற்பனை வளத்தையும் காட்டுகிறது.. ஒட்டுமொத்தமாக படம் சுவாரஸ்யமாக, ரசிக்கும்படியாக இருந்தது. சிற்சில போதாமைகள் தவிர்த்து பெரிய குறைகள், சொதப்பல்கள் எதுவும் இல்லை. இந்தப் படத்தின் முக்கியமான ஒரு குறை என்றால், இந்த மூன்று பாத்திரங்களைத் தவிர்த்து மற்றவைஅவ்வளவு சரியாக வெளிப்படவில்லை என்பது தான்…
View More பொன்னியின் செல்வன் பாகம்-1: திரைப்பார்வைதியாகச்சுடர் வீர சாவர்க்கரின் தீர்க்கதரிசனம்
இந்தியாவின் விடுதலைக்காக உழைத்த வீரர்களுள் மிக அதிகமாக தியாகங்களை செய்தவர், வலிகளையும், இழப்புகளையும் அனுபவித்தவர் வீர சாவர்க்கர்… அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களால் அவருக்கு யாருக்காக நாம போராட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. ஹிந்து என்பவன் யார் என்ற சிந்தனை எழுந்தது. அந்தமானில் சிறைதண்டனை அனுபவித்து கொண்டிருக்கும்போது அவர் சிந்து நதியின் மறுபுறம் இருக்கும் நிலப்பரப்பை தன்னுடைய புண்ணிய பூமியாக தாய் நாடாக
யாரெல்லாம் கருதுகிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என்ற கோட்பாட்டை எழுதினார். இதன் விரிவாக்கம் பின்னாளில் மிகப் பிரபலமாக இந்துத்துவம் என வளர்ச்சி அடைந்தது…
பழங்காலத்தில் கோவில் வழிபாடு
காசு கொடுத்தால், இப்பொழுது சில கோவில்களுக்குள் முன்னால் சென்று தரிசனம்செய்யலாம். வரிசையில் மணிக்கணக்காக நின்று, கடைசியில் தர்ம தரிசனம் கிடைத்தால், ‘போ! போ!’ என்று விரட்டப்படுவதே நிதர்சனம்.
இன்னும் சில கோவில்களுக்குச் சென்றால், வியப்புகலந்த பய உணர்வு மேலிடுகிறது. கோவில் வெறிச்சோடிக் கிடக்கிறது.