எங்கள் மாணவர்களிலேயே மிகவும் திறமையான மாணவன் நவீன். வேகமாக வேதங்களைக் கற்றுக் கொண்டான். இந்த வேதபாடசாலையில் குறிக்கோளாக உள்ள எங்களுடைய நோக்கமெல்லாம் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான். குழந்தைப் பருவத்தில் பயில விரும்பும் எவருக்கும் மதம், ஜாதி குறுக்கிடக்கூடாது. தற்பொழுது 60 மாணவர்கள் வேத பாடசாலையில் படித்து வருகிறார்கள். வரும் கல்வி ஆண்டில் மேலும் 30 மாணவர்களை சேர்க்க உள்ளோம். ஆண்டுதோறும் தேர்வு நடைபெறும். வேதபாடசாலையில் நான்கு ஆண்டு காலத்துக்கு கற்பிக்கப்படுகிறது என்று கூறுகிறார்.
View More வேதங்களோடு விளையாடும் பழங்குடி மாணவர்Category: வரலாறு
தேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்
ஜவஹர்லால் நேரு எந்த அளவுக்கு ஆர்எஸ்எஸ் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். 1962ல் நடைபெற்ற சீன போரின்போது ஆர்எஸ்எஸ் ஆற்றிய அரும்பணியை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார். எந்த நேரு ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வெறுத்தாரோ அதே நேரு 1963ம் ஆண்டின் சுதந்திர தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். காரணம் ஆர்எஸ்எஸ்-ன் தேசத்திற்கான தன்னலமற்றப் பணியை உணர்ந்ததால்தான். எந்த ஒரு இயக்கத்திற்கும் இதுவரை கிடைக்காத பெருமை ஆர்எஸ்எஸ்-க்கு கிடைத்தது. அதுவும் காந்திஜி படுகொலை காரணமாக தடைசெய்யப்பட்டு பின்பு நீக்கப்பட்டு, அதனால் பெரும் தொல்லைகளுக்கு ஆளான இயக்கம் சுதந்திர தின அணிவகுப்பில் 3500 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பூர்ண கணவேஷுடன் (ஆர்எஸ்எஸ் சீருடையுடன்) கலந்துகொண்டனர்.
View More தேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்தி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு!
மஞ்சை வசந்தன் ஆதாரமே இல்லாமல் தெய்வத்தின் குரல் புத்தகத்தில் சங்கராச்சாரி இப்படி சொன்னார் என்று ஒருதகவல் சொன்னார். உடனே நான் நீங்கள் எப்படி திரிபுவாதம் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் என்று சொல்லி அவர் எழுதிய புத்தகம், அவர் குறிப்பிட்ட தெய்வத்தின் குரல் புத்தகத்தோடு விளக்கினேன். என்னை முழுவதும் பேசவிடவில்லை என்றாலும் மஞ்சை வசந்தன் கோபமானார். நான் எடுத்துக்காட்டியதற்கு பதில் சொல்லவில்லை.
View More தி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு!கோயில்நுழைவுப் போராட்டமும் திராவிட இயக்கமும் – 1
‘தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டத்தை பகிரங்கமாகவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தொண்டர்களைத் திரட்டியும்…
View More கோயில்நுழைவுப் போராட்டமும் திராவிட இயக்கமும் – 1புரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு
சமஸ்கிருதம் என்றாலே அது தீட்டுப்பட்ட மொழிபோலவே நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். அது…
View More புரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவுராமானுஜாசாரியார்: ஒரு தமிழ்த் திரைப்படம்
கயமையின், போலித் தனத்தின் திருவுருவாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மு.கருணாநிதி என்ற கிழவர் திரைக்கதை எழுதி, குட்டி பத்மினி போன்ற ஜோக்கர்களின் இயக்கத்தில் ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடர் வருகிறது என்பது தமிழ் நாட்டின் சாபக் கேடு… 1989ல் ராமானுஜாசாரியார் என்ற தமிழ்த் திரைப்படம் ஏற்கனவே வெளிவந்திருக்கிறது. தூர்தர்ஷனில் இந்தப் படத்தை அப்போதே நான் பார்த்திருக்கிறேன். சம்ஸ்கிருதத்தில் ஆதி சங்கராசார்யா மற்றும் இன்னும் சில விருது பெற்ற திரைப்படங்களை இயக்கிய புகழ்பெற்ற கலைப்பட இயக்குனர் ஜி.வி.ஐயர் இந்தப் படத்தின் இயக்குனர்…
View More ராமானுஜாசாரியார்: ஒரு தமிழ்த் திரைப்படம்வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 2
தமிழகம் அக்காலங்களில் தன் எதிர்ப்பைக் காட்டாததும், பதிவு செய்யாததும் எத்தகைய சீரழிவுக்கு காரணமாகியிருக்கிறது என்பதை ‘சமரன்’ தொகுப்பு நமக்குச் சொல்லும். பேசவேண்டியதை, எழுத வேண்டியதைப் பேசுவதும், எழுதுவதும், பின் அவை காற்றோடு மறையாது பதிவு செய்வதும் அடுத்த தலைமுறைக்கு தருவதும் எவ்வளவு முக்கியமானது என்பது ‘சமரன்’ தொகுப்பிலிருந்து தெரிய வரும்…. குடியரசு இதழ் தொகுப்பு பற்றி ஒரு அன்பர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அது இல்லையெனில் பெரியாரின் 1925 எழுத்துக்கள், பேச்சுக்கள் பற்றி எப்படி நான் அறிந்திருக்க முடியும்?. விடுதலையையும், முரசொலியையும் யாரும் தொகுக்க முயன்றால், அதற்கு எதிர்ப்பு அவர்களிடமிருந்தே வரும். “நம்ம வீட்டு சமாசாரம், நமக்குள்ளே இருக்கணும்” என்று ஒரு மந்திர வாக்கியம் பிறக்கும். தன் உண்மை முகம் வெளித்தெரிய கூச்சப்படும் முகம். அது தான் வரலாற்றுப் பதிவுகளின் பலம்….
View More வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 2வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 1
சரஸ்வதி இலக்கிய மாதப் பத்திரிகையை, நடத்தி வந்த வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும் கூட நடத்தி வந்திருக்கிறார். தமிழக அரசியலிலும் இந்திய அரசியலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது… அகில இந்திய தளத்தில் நடந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி வாத விவாதங்களின் பாதிப்புகளை சமரன் இதழில் பார்க்கலாம். சமரன் ஒரு புறம் என்றால், தீக்கதிர் என்றொரு தமிழ் பத்திரிகை சமரனின் நிலைப்பாட்டை எதிர்த்து குரல் எழுப்பி வந்திருக்கிறது… அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்ற வசனத்தின் இன்னொரு மொழி மாற்றம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. இதன் இன்னோரு வடிவம், “நேருவென் மகளே வருக, நிலையான ஆட்சி தருக”. இது தன் முதன் மந்திரி பதவியைக் காப்பாற்றிக்கொள்ள. காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெறும் மாமந்திரத்துக்கு கருணாநிதியின் இன்னொரு விளக்க உரையாகவும் கொள்ளலாம். இந்த வீரவசனங்கள் கேலிப்பொருளாகியது சமரன் இருந்த காலகட்டத்தில் தான்….
View More வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 1மண்ணுருண்டையா மாளவியா?
மதன் மோகன் மாளவியா சனாதன வைதீக இந்து மதத்தை காப்பாற்ற அகில பாரத இந்து மகாசபையை உருவாக்கியவர். அவர் வட்டமேசை மாநாட்டுக்காக கடல் கடந்து இங்கிலாந்து சென்ற போது இந்த தேசத்தின் மண்ணுருண்டையை கொண்டு சென்றார். எனவே அவர் மண்ணுருண்டை மாளவியா என அழைக்கப்பட்டார். தலித் மக்களின் ஆலய நுழைவு போராட்டத்தை எதிர்த்தார். குழந்தை திருமணத்தை ஆதரித்தார். இவர் ஏற்படுத்திய பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஒரு இந்து நிறுவனம் மட்டுமே. இப்படிப்பட்டவருக்கா பாரத ரத்னா கொடுப்பது? இதைத் தமக்கே உரிய வசை பாணியில் எழுதியுள்ளார்கள்… ஆனால் உண்மை என்ன?
View More மண்ணுருண்டையா மாளவியா?விலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…
மெய்யாகவே இந்த நாவல் பேசுவது இந்துத்துவம் தானா? இந்த வாதத்தைப் போன்ற அபத்தம் வேறேதுவும் இல்லை. உலக அளவில் எழுதப்பட்ட பல் நாவல்களின் பேசுபொருள் தோல்வியால் துவண்டவர்களின் வரலாறே. எந்த நிலையிலும் ஒரு படைப்பாளி பாதிக்கப்பட்ட தரப்பில் தன்னை நிறுத்தியே படைப்புகளை உருவாக்குவான்.வெற்றி வரலாறுகள் என்றுமே இலக்கிய மதிப்பு பெற்றதில்லை… நிகழ்த்தப்பட வேண்டிய அழிவுகள் அனைத்தும் முன்பே நிகழ்த்தப்பட்டுவிட்டன. வெளிப்படுத்தப்பட வேண்டி இன்று தூண்டி விடப்பட்டிருக்கும் குரூரங்களை இந்த தேசம் முன்பே சந்தித்து முடித்து விட்டது. காயம் ஆற, ஆற குதறப்படும் மனிதாபிமானமற்ற செயல்கள் பல முறை நடந்தாயிற்று. இனியாவது இணைந்து வாழ்வதைப் பற்றி சிந்திக்கலாம் என்ற புரிதலை இந்த வரலாற்றுப் பார்வைதான் உருவாக்க முடியும். நாவலில் இந்த நோக்குடன்தான் வரலாற்று உண்மைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன…
View More விலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…