வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 2

தமிழகம் அக்காலங்களில் தன் எதிர்ப்பைக் காட்டாததும், பதிவு செய்யாததும் எத்தகைய சீரழிவுக்கு காரணமாகியிருக்கிறது என்பதை ‘சமரன்’ தொகுப்பு நமக்குச் சொல்லும். பேசவேண்டியதை, எழுத வேண்டியதைப் பேசுவதும், எழுதுவதும், பின் அவை காற்றோடு மறையாது பதிவு செய்வதும் அடுத்த தலைமுறைக்கு தருவதும் எவ்வளவு முக்கியமானது என்பது ‘சமரன்’ தொகுப்பிலிருந்து தெரிய வரும்…. குடியரசு இதழ் தொகுப்பு பற்றி ஒரு அன்பர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அது இல்லையெனில் பெரியாரின் 1925 எழுத்துக்கள், பேச்சுக்கள் பற்றி எப்படி நான் அறிந்திருக்க முடியும்?. விடுதலையையும், முரசொலியையும் யாரும் தொகுக்க முயன்றால், அதற்கு எதிர்ப்பு அவர்களிடமிருந்தே வரும். “நம்ம வீட்டு சமாசாரம், நமக்குள்ளே இருக்கணும்” என்று ஒரு மந்திர வாக்கியம் பிறக்கும். தன் உண்மை முகம் வெளித்தெரிய கூச்சப்படும் முகம். அது தான் வரலாற்றுப் பதிவுகளின் பலம்….

View More வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 2

வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 1

சரஸ்வதி இலக்கிய மாதப் பத்திரிகையை, நடத்தி வந்த வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும் கூட நடத்தி வந்திருக்கிறார். தமிழக அரசியலிலும் இந்திய அரசியலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது… அகில இந்திய தளத்தில் நடந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி வாத விவாதங்களின் பாதிப்புகளை சமரன் இதழில் பார்க்கலாம். சமரன் ஒரு புறம் என்றால், தீக்கதிர் என்றொரு தமிழ் பத்திரிகை சமரனின் நிலைப்பாட்டை எதிர்த்து குரல் எழுப்பி வந்திருக்கிறது… அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்ற வசனத்தின் இன்னொரு மொழி மாற்றம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. இதன் இன்னோரு வடிவம், “நேருவென் மகளே வருக, நிலையான ஆட்சி தருக”. இது தன் முதன் மந்திரி பதவியைக் காப்பாற்றிக்கொள்ள. காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெறும் மாமந்திரத்துக்கு கருணாநிதியின் இன்னொரு விளக்க உரையாகவும் கொள்ளலாம். இந்த வீரவசனங்கள் கேலிப்பொருளாகியது சமரன் இருந்த காலகட்டத்தில் தான்….

View More வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 1

மண்ணுருண்டையா மாளவியா?

மதன் மோகன் மாளவியா சனாதன வைதீக இந்து மதத்தை காப்பாற்ற அகில பாரத இந்து மகாசபையை உருவாக்கியவர். அவர் வட்டமேசை மாநாட்டுக்காக கடல் கடந்து இங்கிலாந்து சென்ற போது இந்த தேசத்தின் மண்ணுருண்டையை கொண்டு சென்றார். எனவே அவர் மண்ணுருண்டை மாளவியா என அழைக்கப்பட்டார். தலித் மக்களின் ஆலய நுழைவு போராட்டத்தை எதிர்த்தார். குழந்தை திருமணத்தை ஆதரித்தார். இவர் ஏற்படுத்திய பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஒரு இந்து நிறுவனம் மட்டுமே. இப்படிப்பட்டவருக்கா பாரத ரத்னா கொடுப்பது? இதைத் தமக்கே உரிய வசை பாணியில் எழுதியுள்ளார்கள்… ஆனால் உண்மை என்ன?

View More மண்ணுருண்டையா மாளவியா?

விலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…

மெய்யாகவே இந்த நாவல் பேசுவது இந்துத்துவம் தானா? இந்த வாதத்தைப் போன்ற அபத்தம் வேறேதுவும் இல்லை. உலக அளவில் எழுதப்பட்ட பல் நாவல்களின் பேசுபொருள் தோல்வியால் துவண்டவர்களின் வரலாறே. எந்த நிலையிலும் ஒரு படைப்பாளி பாதிக்கப்பட்ட தரப்பில் தன்னை நிறுத்தியே படைப்புகளை உருவாக்குவான்.வெற்றி வரலாறுகள் என்றுமே இலக்கிய மதிப்பு பெற்றதில்லை… நிகழ்த்தப்பட வேண்டிய அழிவுகள் அனைத்தும் முன்பே நிகழ்த்தப்பட்டுவிட்டன. வெளிப்படுத்தப்பட வேண்டி இன்று தூண்டி விடப்பட்டிருக்கும் குரூரங்களை இந்த தேசம் முன்பே சந்தித்து முடித்து விட்டது. காயம் ஆற, ஆற குதறப்படும் மனிதாபிமானமற்ற செயல்கள் பல முறை நடந்தாயிற்று. இனியாவது இணைந்து வாழ்வதைப் பற்றி சிந்திக்கலாம் என்ற புரிதலை இந்த வரலாற்றுப் பார்வைதான் உருவாக்க முடியும். நாவலில் இந்த நோக்குடன்தான் வரலாற்று உண்மைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன…

View More விலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…

வன்முறையே வரலாறாய்…37

தாங்கள் பிறந்த நாடுகளில் எங்கும் வெளியில் சென்று வரும் சுதந்திரமுடைய அந்தப் பெண்கள் ரியாத்திலும், ஜெத்தாவிலும், தமாமிலும் பூட்டுக்கள் பூட்டி அடைக்கப்பட்ட வீடுகளில் அடிமைகளைப் போல வாழ வேண்டிய நிலைமை விவரித்துக் கண்ணீர் சிந்தினார்கள்…..அவர்களை சவூதி அரேபியாவிற்கு அழைத்துவந்த அவர்களின் ஒப்பந்த நிறுவனங்களால் ஆட்டு மந்தைகளைப் போல டார்மெட்டரிகளில் அடைக்கப்பட்டு, தனிமையில் உழன்று, வெளியுலகில் எவரிடமும் உதவி கேட்கமுடியாத நிலையில் இருக்கும் அவர்கள், பாலியல் ரீதியாக சவூதிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு வாழ்கிறார்கள் – மனித உரிமைகளைக் கண்காணிக்கும் இயக்கத்தினர் அளிக்கும் ஒரு ரிப்போர்ட் சவூதி அரேபியாவின் பணிப்பெண்களின் நிலைமையை இப்படி விவரிக்கிறது… அடிமைகளை வைத்துக் கொள்வது முகமது நபியின் காலத்திலிருந்தே இஸ்லாமிய சட்டங்களினால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. சவுதிகள் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளுக்கு வாழப்போன இஸ்லாமியர்களும் கூட இன்றும் இதனையே தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்…

View More வன்முறையே வரலாறாய்…37

வன்முறையே வரலாறாய்…36

இஸ்லாமிய அடிமைப்படுத்துதலின் இன்னொரு மனிதாபிமானமற்ற, கொடூரமான வழக்கம் எதுவென்றால் அது பரவலான முறையில் மிருகத்தனமாக காயடிக்கப்பட்ட (castration) ஆண் அடிமைகள்தான். ஏராளமான பெண்களுடன் பெரும் ஹராமை (Harem) வைத்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சுல்தான்களும், பிற செல்வந்தர்களும் அதனை கவனித்துக் கொள்ள காயடிக்கப்பட்ட அலிகளையே பெரிதும் விரும்பினார்கள்… முகமது நபியின் காலத்திலிருந்தே இளம் சிறுவர்களின் மீதான இச்சை இஸ்லாமிய உலகில் தொடர்ந்து நடந்து வருகிற ஒன்றே. காஃலிபா அல்-அமீன் அராபிய உலகில் கில்மான்களை, அவர்களுடனான உடலுறவுத் தொடர்புகளையும் நிறுவனமாக்கிய ஒருவர்… ஜஹாங்கீர் மட்டும் ஏறக்குறைய 1200 அலிகளுக்குச் சொந்தக்காரனாக இருந்திருக்கிறான். அலாவுதீன் கில்ஜிக்குயின் சொந்த உபயோகத்திற்கென 50,000 அடிமைச் சிறுவர்களும், முகமது துக்ளக்கிடம் 20,000 சிறுவர்களும் இருந்திருக்கிறார்கள். அலாவுதீனின் புகழ்பெற்ற படைத்தளபதியான மாலிக்கபூர் ஒரு அலியே…

View More வன்முறையே வரலாறாய்…36

மீனாட்சி என்னும் இன்பமாகடல்

அன்னைக்குப் பூஜை முடிந்ததும் தீபாராதனை எடுக்க வைத்திருந்த கற்பூரத்திலிருந்து இரு கட்டிகளை எடுத்தார். தனது கண்களில் வைத்துக் கொண்டு அதில் நெருப்புச் சுடரையும் வைத்தார். ஆஹா! கண்கள் பொசுங்கின! பார்வை பறிபோயிற்று! “அம்மா, தாயே, மீனாட்சி,” எனப் புலம்பினார் தீக்ஷிதர்… வீரர்கள் சொன்ன செய்தியால் ஆச்சரியம் அடைந்தார் மன்னர் திருமலை நாயக்கர். திரை மறைவில் இதைக் கேட்டபடி இருந்த மகாராணி, இப்போது தைரியமாக மன்னர் முன் வந்தாள்… . தீக்ஷிதருக்குக் கண்கள் பொசுங்கியதால் தாம் படும் வருத்தத்தையும் வலியையும் விட, மன்னர் படும் துயரம் தாங்கொணாததாக இருந்தது. அடுத்து 61-வது ஸ்லோகத்தைப் பாடுகிறார் “இயற்கை அழகு வாய்ந்ததும், எல்லாவற்றிற்கும் மேலானதும், அறிவுக்கு எட்டாததும், பரம மங்களமானதுமான உனது அழகிய தாமரை மலர் போன்ற பாதத்தை நீ என்மீது இரங்கி எனக்குக் காண்பிப்பாய் என்றாலும், அதைத் தரிசிக்க எனக்கு (புறக்)கண்கள் இல்லையே தாயே!… “

View More மீனாட்சி என்னும் இன்பமாகடல்

வன்முறையே வரலாறாய்…35

ஜிகாத் செய்து காஃபிர்களைக் கொள்ளையடிப்பதால் கிடைக்கும் செல்வத்துடன் மட்டுமன்றி, அவர்களின் பெண்களும் தங்களுக்குக் கிடைப்பார்கள் என்னும் ஆசையே முகமதின் சீடர்களை அன்று முதல் இன்றுவரை ஜிகாதிகளாக்குகிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை… பாலியல் அடிமைகளைக் கைப்பற்றுவது குறித்து நம்பிக்கையாளர்களுக்கு அல்லா குரானில் மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கொண்டே இருப்பதனைக் காணலாம். முகமது நபியே மூன்று அழகான அடிமைகளைத் தனது வைப்பாட்டிகளாக வைத்திருந்தார். அத்துடன் முகமது அவரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான அடிமைப் பெண்களை, வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ள என அவரது சீடர்களுக்குப் பகிர்ந்தளித்தார்… அக்பரின் ஹராமில் (அந்தப்புரம்) ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள் இருந்தார்கள். ஜஹாங்கீரும், ஷாஜஹானும் தலா 5000 மற்றும் 6000 அடிமைப் பெண்களை தங்களின் சொந்த உபயோகத்திற்கென வைத்திருந்தார்கள்…இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இஸ்லாமிய இமாம்களும், முல்லாக்களும், ஜிகாதிகளும் அதனைக் குறித்து எவ்விதமான நாணமுமின்றி வெளிப்படையாகக் கூறிக் கொண்டு திரிவதைக் காணலாம்…

View More வன்முறையே வரலாறாய்…35

கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே

அந்த ஆலமரத்தடி சுடுகாட்டில் எனக்கு அந்தச் சிறு வயதில் பல ஆர்வங்கள் நிறைந்திருந்தன. கோவலன் பொட்டல் சுடுகாட்டில் பெரிய பெரிய பானைகளும் அந்தப் பானைகளில் இருந்து உடைந்த அழகான சின்னஞ் சிறு வழவழப்பான சில்லுகளும் நிறையைக் கிட்டும். ஒவ்வொரு முறை பிணம் தோண்டும் பொழுதும் இன்னுமொரு பெரும் மண்பானையை வெளியே எடுத்துப் போட்டிருப்பார்கள்… இதில் இருக்கும் சோகம் மனதை கலங்க அடிக்கும் ஒரு மாபெரும் சோகம். ஆழியை விடப் பெரிய ஒரு சோகத்தை இத்தனை சிறு வரிகளில் அடைத்து விட்டிருக்கிறார் அந்தப் புலவர்…

View More கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே

வன்முறையே வரலாறாய்…34

காஃபிர்களை அடிமைகளாகப் பிடிக்கும் இஸ்லாமியர்கள் அவர்களை சந்தைகளிலும், நாற்சந்திகளிலும் நடக்க விட்டுக் கேவலப்படுத்து சாதாரணமாகக் காணக்கிடைத்த ஒன்று. ஒரு அரசனோ அல்லது உயர் பதவியில் இருந்த ஒருவரோ அவ்வாறு நடத்தப்படுகையில் உண்டாகும் துயரம் வார்த்தையில் அடங்காதது… ராஜஸ்தானின் ஜாலூர் நாட்டை ஆண்ட இந்து அரசன் கன்ஹர்தேவாவின் மீது உலுக்-கான் பால்பனின் தாக்குதலைக் குறித்தும், அந்தப் போரில் கைப்பற்றப்பட்ட அடிமைப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் துயரம் குறித்தும் அதனை நேரில் கண்ட பிரபந்தா எழுதி வைத்திருக்கும் குறிப்புக்கள் அதை இன்று படிக்கும் எவரையும் நிலைகுலையச் செய்யும் – “… வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட, தங்களின் தாயின் முலைகளிலிருந்து பிடுங்கப்பட்ட குழந்தைகளின் அழுகைச் சத்தம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அடிமையின் துன்பமும் மற்றவனை விடவும் அதிகமாகவிருந்தது. பலரின் கால்கள் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தன. இன்னும் சிலரோ தோல் பட்டைகளால் பிணைக்கப்பட்டுக் கிடந்தார்கள். பிள்ளைகள் தங்களின் அன்னையரிடமிருந்து பிரிந்து திரிந்தார்கள். மனைவிகள் கணவன்களிடமிருந்து….சிறிதும் ஈவிரக்கமற்ற இந்தத் தாக்குதல்களின் காரணமாக. முதியவர்கள், இளைஞர்கள் என்ற பேதமில்லாமல் அனைவரும் வலியாலும், பசியாலும் துடித்துக் கொண்டிருந்தார்கள்…”

View More வன்முறையே வரலாறாய்…34