கானக மண்ணிலேயே இயல்பாக உருவான காந்தாரா படத்தின் தொன்மம் போல அல்லாமல், அயோத்திதாசரின் கட்டற்ற கற்பனையில் எழுந்த இனவாத கட்டுமானம் கொண்ட டுமீல் புராணங்களிலிருந்து பா.ரஞ்சித் உருவாக்கியுள்ளது தங்கலானின் தொன்மம்.. இந்தப் படத்தின் அரசியல் வெறுப்பு ரீதியானது, இது முன்வைக்கும் வரலாற்றுக் கதையாடல் பொய்யானது. அதற்கு சான்றாக, மதுரைப்பிள்ளை, சுவாமி சகஜானந்தர், எம்.சி.ராஜா, ஜி.எஸ்.லட்சுமண ஐயர் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள் உள்ளன. இவர்களின் வரலாறுகளை எல்லாம் நாம் திரைப்படமாக்காத வரை…
View More தங்கலான்: திரைப்பார்வைCategory: அரசியல்
எப்போது திரும்பப்போகிறாய் தங்கலானே?
தலித் பட்டிக்குள் அடைக்கப்பட்ட – இத்தனை பேரின் – வாழ்க்கையும் வேறு; வரலாறும் வேறு – நிலம் பறிபோன பின்னும் – பிரிட்டிஷாரால் பீ அள்ளவைக்கப்பட்டவர்களில் – நீ இருந்ததில்லை.. ஆதித்தாய் அடிவயிற்றில் இருந்து கத்தியபடி – நம் கண் முன்னே கதறி அழுது சுட்டிக்காட்டுகிறாள் – அவள் கதறல் உன் காதில் விழவில்லையா?…
View More எப்போது திரும்பப்போகிறாய் தங்கலானே?தங்கலான்
உள்ளடக்கம் சார்ந்துமே ரஞ்சித்தின் அரசியல் நெடி அடிக்கும் காட்சிகள் நீங்கலாக படம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், அந்த அரசியல் என்பது மலினமானதாக இருப்பதாலும் அது படுசெயற்கையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாலும் இந்தப் படம் சுமார் என்ற தளத்துக்கு இறங்கிவிடுகிறது. மேல்பூச்சான கலை இனிப்பு கரைந்த பின் கசப்பு அரசியல்தானே.
View More தங்கலான்திரிசூலம் அஹிம்சையின் அடையாளமாம்…
அடிக்கிறவனின் கர்த்தர் அப்படித்தான் – அடிவாங்குபவனை – அடி வாங்கிக் கொண்டே இருக்கச் சொல்வான் – கொஞ்சமாவது – சுய மரியாதையும் சொரணையும் இருந்தால் – அடிப்பவன் கன்னத்தில் திருப்பி அறைவான்.. நீயும் உன் தென்னகக் கூட்டுக் களவாணிக் கும்பலும் – ராஜபக்சேவுடன் சேர்ந்து காட்டினீர்களே – அதுதானே உன் கட்சியின் அபய ஹஸ்தம்..
View More திரிசூலம் அஹிம்சையின் அடையாளமாம்…ஊடகமும் தர்மமும்
பிரிவினைவாத, இந்து விரோத ஊடகங்களை ஒழுங்குபடுத்தவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால், அவர்கள் இப்படியான விஷயங்களைக் கண்டுகொள்வதே இல்லை. ஊடக, தகவல் தொழில்நுட்பத்துறை என்பது போன்றவற்றில் இவற்றைத் தடுக்க சட்டங்கள் நிச்சயம் இருக்கும். ஆனால் மத்திய அரசு இவற்றில் 100-ல் ஒரு பங்கு நடவடிக்கைகூட எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் நம் மனதில் எழுகிறது.
View More ஊடகமும் தர்மமும்மோதி 3.0 : தேசிய, தமிழக, தர்மக் கணக்குகள்
வட இந்தியாவில் முஸ்லிம் அடிப்படைவாத ஆதிக்கம், தெற்கில் கிறிஸ்தவ அடிப்படைவாத ஆதிக்கம் என வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான ஆப்ரஹாமிய அடிப்படைவாத சக்திகளின் இலக்கு இது. வரவிருக்கும் தலைமுறையை நம் தெய்வங்களால் காப்பாற்ற முடியாது. இந்து ஆன்மிக, அரசியல், சமூகத் தலைவர்கள் ஏதேனும் செய்தால்தான் உண்டு…
முதல் பத்தாண்டுகளில் இந்து மறுமலர்ச்சி என்பதைவிட தேசத்தின் வளர்ச்சி என்பதையே பாஜக முத்திரை முழக்கமாக வைத்து ஆட்சியை நடத்திவந்திருக்கிறது. தொடர்ந்து இரண்டு மூன்று முறை வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன காரணத்தினாலோ அந்தக் கட்சி மீது அதிருப்தி வந்துவிடுகிறது. பாஜகவும் அந்த சலிப்பினால் ஓரங்கட்டப்படுவதற்கு முன்பாக சுதாரித்துக் கொள்ளவேண்டும். பாஜக தனக்கான பி.டீம்களைக் கண்டடைந்தாகவேண்டும்..
அதிமுகவின் தலைவர்கள்தான் இந்து விரோதிகளாக இருக்கிறார்களே தவிர அதிமுகவின் வாக்காளர்கள் அப்படி அல்ல. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். அவர்களுடைய ஆதரவு பாஜகவுக்குக் கிடைக்கவேண்டுமென்றால்..
ஈ.வெ.ராவை விட அம்பேத்கர் பல மடங்கு மேலானவர். அந்தவகையில் பாஜக அவரை தமது வழிகாட்டிகளில் ஒருவராகச் சொல்கிறது. ஆனால், பிராமணிய எதிர்ப்பு என்றவகையில் ஈ.வெ.ரா மற்றும் அம்பேத்கரை பாஜக நேச சக்தியாகவே கருதுகிறது. அதனால்தான் திமுக மீது காங்கிரஸ் அளவுக்குக்கூட எந்தவொரு நடவடிக்கையையும் பாஜக எடுப்பதே இல்லை. திமுகவின் இந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு ஆகியவற்றையாவது பாஜக தீவிரமாக எதிர்க்கலாம். அதையும் செய்வதில்லை…
(முழுக்கட்டுரையையும் இணையதளத்தில் வாசிக்கலாம்)
View More மோதி 3.0 : தேசிய, தமிழக, தர்மக் கணக்குகள்அண்ணாமலை எனும் திருப்புமுனை – புத்தக அறிமுகம்
அரசியல் விழிப்புணர்வை அதிகரித்து அரசியல் பொறுப்புணர்வுகள் மக்களை நடக்கவைக்கவேண்டும். இந்தப் புத்தகம் அப்படியான விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியிலேயே எழுதப்பட்டுள்ளது.. அண்ணாமலை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் என்ன விதமான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதையும் அவரை யாரெல்லாம் புகழ்ந்துரைக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிற முக்கியமான ஆவணமாகவும் இந்த நூல் திகழ்கிறது… இந்தப் புத்தகத்திற்கு அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஜே.சாய் தீபக் ஆகிய இரண்டு சிந்தனையாளர்களும் சிறப்பான முன்னுரை வழங்கியுள்ளனர். புத்தகத்தின் உள்ளடக்கத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசும் அந்த இரண்டு முன்னுரைகளையும் கீழே தருகிறோம்..
View More அண்ணாமலை எனும் திருப்புமுனை – புத்தக அறிமுகம்பெரியார் மண்
ஜாதிப் பிரச்னைக்கு தீர்வு ஜாதி சீர்திருத்தத்தில்தான் இருக்கிறது. ஜாதி ஒழிப்பில் இல்லை.கோவில் கருவறைக்குள் நுழையவிடாவிட்டால், நாமே கருவறையே இல்லாத ஒரு புதிய கோவிலைக் கட்டி அனைவரையும் கும்பிடவைக்கவேண்டும். அனைத்து ஜாதியினரில் இருந்தும் அர்ச்சகர்களை நியமித்து பூஜைகள் செய்யவேண்டும். சம்பிரதாயக் கடவுளுக்கு மாற்று நவீனக் கடவுளே
View More பெரியார் மண்இந்திய குற்றவியல் சட்டங்களில் மோதி அரசு கொண்டுவரும் மாபெரும் சீர்திருத்தங்கள்
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதே மூன்று புதிய சட்டங்களின் ஆன்மாவாக இருக்கும், அவற்றின் நோக்கம் தண்டிப்பது அல்ல, நீதி வழங்குவது.. இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் பரவலான மாற்றத்தைக் கொண்டுவரும் இந்தச் சட்டத்தின்படி அதிகபட்சமாக எந்த வழக்கிலும் 3 ஆண்டுகளுக்குள் எவரும் நீதியைப் பெற முடியும்… பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் காவல்துறை தங்கள் அதிகாரங்களை தவறாக பயன்படுத்த முடியாது… நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஜீரோ எஃப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படும். வழக்கு குறிப்பேடு, குற்றப் பத்திரிகை முதல் தீர்ப்பு வரை முழு செயல்முறையையும் டிஜிட்டல் மயமாக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது…
View More இந்திய குற்றவியல் சட்டங்களில் மோதி அரசு கொண்டுவரும் மாபெரும் சீர்திருத்தங்கள்கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்
உங்கள் பெரியாரால் *** கதை என்று இழிவு படுத்தப்பட்ட சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டியிருப்பது பாராளுமன்றத்தைக் கொச்சைப்படுத்தவா? பெரியார் அப்படி என்ன சொன்னார்?… “மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது” தமிழர் முறை. யார் தமிழர் இங்கே? கண்ணகியின் சாபம் தெரிந்த உங்களுக்கு கண்ணகியின் திருமணம் பற்றி தெரிந்திருக்க வேண்டுமே.. சிலப்பதிகாரத்தில் உங்களைப்போலவே, உங்கள் திராவிட இயக்கத்தைப் போலவே, ஒரு ஆசாமி இருந்தான். பொற்கொல்லன் அவன்…
View More கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்