பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16

துறவின் மிகக்கடினமான செயல், தான் என்பதை அறவே துறந்து, பசிக்கு உணவுவேண்டி, வேற்று இல்லத்தின்முன் நின்று, அம்மா உணவளியுங்கள் என்று அழைப்பதுதான். மாதவியின் கண்களில் நீர் நிறைந்தது. தான் பிச்சை எடுக்கிறோம் என்ற நினைப்பு மணிமேகலை முகத்தில் சிறிதும் இல்லை. மாறாக முகத்தில் புன்னகை மலர, “அம்மா! பத்தினிப் பெண்கள் இடும் பிச்சை, பெரும்பிச்சைகளில் சிறந்த பிச்சை. புண்ணியவதி. சோறு போடம்மா” என்று வேண்டிநின்றாள்.

View More பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16

பாத்திர  மரபு கூறிய காதை – மணிமேகலை 15

கப்பல் நங்கூரம் இடப்பட்ட இடத்திற்குத் தாமதமாக வந்த ஆபுத்திரன் கப்பல் கிளம்பிப் போய்விட்டதை அறிந்ததும் திடுக்கிட்டுப் போனான். மனம் நொந்து அலையத் தொடங்கினான். ‘யாருமற்ற தீவினில் இந்த அட்சய பாத்திரத்தினால் என்ன பயன்? வெறுமே என் பசியைப் போக்கவா?’ என்று சிந்தித்தவாறே அங்கிருந்த நீர் நிறைந்த கோமுகி என்ற பொய்கையை அடைந்தான்

View More பாத்திர  மரபு கூறிய காதை – மணிமேகலை 15

பொருனைக்கரை நாயகிகள்

தோழி! என் நெஞ்சம் செங்கனி போன்ற வாயழகில் தன்னை மறந்தது. என் இதயமோ திருமுடிக்கு ஆட்பட்டு விட்டது. சங்கு சக்ரதாரியான அவன் கண்களால் வலைவீசி என்னைப் பிணித்து விட்டான். நானும் அவ்வலையில் அகப்பட்டுக் கொண்டேன். நாளும் விழாக்கள் நடைபெறும் தென்பேரை நாயகனான நிகரில் முகில்வண்ணனிடம் என் நெஞ்சத்தை பறிகொடுத்து என் நாணத்தையும் இழந்துவிட்டேனே!

View More பொருனைக்கரை நாயகிகள்

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14

பசித்தவுடன் குழந்தை அழத் தொடங்கியது. சிசுவின் குரல் கேட்ட பசு ஒன்று ஓடி வந்தது. சிசுவின் வாயில் வழியுமாறு தனது பாலைச் சொறிந்தது. ஆவின் பாலை உண்டு வயிறு நிரம்பிய சிசு அழுகையை நிறுத்தியது. பசு தனது கழுத்தை வளைத்து சிசுவை நாக்கால் நக்கிக் கொடுத்தது. இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்படப் பசி நேரத்தில் சிசு அழத் தொடங்கியதும் எங்கிருந்தாலும் அதன் குரல்கேட்டு ஓடிவரும் பசு பாலைப் பொழிந்து அதன் பசியைப் போக்கும்.

View More ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14

அறவணர் தொழுத காதை: மணிமேகலை – 13

‘அரண்மனைக்கு ஒரு புதிய யானையை வாங்கியிருந்தோம், அய்யனே! அன்று வீரை மதுவருந்திய களிப்பில் இருந்தாள். எனவே எவ்வித முன்னெச்சரிக்கை, பாதுகாப்பின்றி அந்தப் பழகாத யானை அருகில் போய்விட்டாள். யானை அவளைத் தனது துதிக்கையால் காலில் போட்டு மிதித்துவிட்டது. ஒருநொடிப் பொழுதில் வீரை உயிரை இழந்தாள். உங்களுக்குதான் தெரியுமே, தாரை தனது சகோதரிமேல் உயிருக்கு உயிராக இருந்தாள் என்று. யானை மிதிபட்டுத் வீரை உயிரிழந்தாள் என்பதைக் கேள்விப்பட்ட மறுவினாடியே தாரை துக்கத்தில் உயிர் இழந்தாள். என்னுடைய இரண்டு தேவிகளையும் இழந்து நான் வாடுகிறேன்.

View More அறவணர் தொழுத காதை: மணிமேகலை – 13

பாத்திரம்பெற்ற காதை – மணிமேகலை 12

என்னுடைய தேசத்தில் நல்லறங்கள்செய்வதால் வளமையான வாழ்வினைப்பெற்று மாடமாளிகைகளில் வசிக்கும் செல்வந்தர்கள் நிறைய உள்ளனர். அந்தச் செல்வந்தர்களின் இல்லங்களின்முன் நின்று நைந்துபோன கந்தல் ஆடைகளை அணிந்து, மழை வெயில் பாராமல் நிற்கவும் முடியாமல் பிச்சைகேட்டு அழைக்கவும் நாணப்பட்டுப் பசியில்வாடும் வறியவர்கள் பலர் உள்ளனர். பெற்ற குழந்தை பசியால் வாடியவுடன் ஈன்ற தாயின் முலைக்காம்புகள் தானே சுரப்பதுபோல, வறியவர்களின் பசிப்பிணியைக் கண்டு இந்த அட்சய பாத்திரமானது தானே உணவு சுரக்கச்செய்யும் திறனை நேரில் காண விழைகிறேன்.

View More பாத்திரம்பெற்ற காதை – மணிமேகலை 12

மந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11

“உயர்ந்த விதை நெல்லாகிய கந்தச்சாலி பயன்தர, அதிலிருந்து நாற்றுகள் கிளம்பி நல்ல அறுவடையை அளிக்க வேண்டும். அதைவிட்டு வெம்மையான பாலைவனத்தில் வெந்து மாவாகி உதிர்ந்து விட்டால் என்ன பயன்? அதைப்போல, புத்ததர்மத்தின் வழிநின்று இந்த உலகிற்குப் பயன்தரவேண்டிய நீ முற்பிறவியின் தொடர்ச்சியாக உதயகுமாரன் பின்னால் மனதை அலையவிட்டால் என்ன செய்வதென்றுதான் உன்னை இங்குக்கொண்டுவந்து விட்டேன்.”

View More மந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11

பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10

மணிமேகலையின் உடல் சிலிர்த்தது. இதென்ன இப்படி ஒரு நினைவு? முற்பிறவியில் இராகுலன் என்ற அரசகுமாரன் தன் கணவனாக அமையப்பெற்று கொடிய நாகம் தீண்டி இறந்து விட்டான், அவன் மனைவியாகிய தானும் அவனுடன் தீயில் வீழ்ந்து மாய்ந்து. மணிமேகலை என்ற பெயருடன் காவிரி பூம்பட்டிணத்தில் பிறந்திருக்கிறோம் என்றால், இராகுலனும் மறுபிறவி எடுத்திருக்க வேண்டுமே, அவன் யாராக இருக்கும் என்ற ஐயம் அவளுக்கு எழுந்தது.

View More பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10

மணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]

புத்தபிரானுக்கு என்று வடிவமைக்கப்பட்ட பத்மபீடிகை அது. மரங்கள் அதன்மீது மணமில்லாத மலர்களைச் சொரிவதில்லை. பறவைகள் அதன்மேல் அமர்ந்து சப்தம் எழுப்பவோ, எச்சமிடவோ செய்யவில்லை. தேவர் தலைவன் இந்திரனால் புத்தபெருமானுக்கென்று சிறப்புடன் செய்துகொடுக்கப்பட்ட பீடிகை அது. அதன் முக்கியமான சிறப்பு என்னவென்றால், அதனைக் காண்பவர்களுக்குத் தங்களது முந்தையப் பிறப்புகளை நினைவுபடுத்தும் தன்மையேயாகும்.

View More மணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]

துயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]

எனக்கு நீ ஒரு உதவி செய்யவேண்டும். நேற்றிலிருந்து உன்னையும் மணிமேகலையையும் காணாது மாதவி அங்கே வருந்திக்கொண்டிருக்கிறாள். நீ அவளிடம் சென்று, மணிமேகலை என்னுடைய பாதுகாப்பில் மணிபல்லவத் தீவில் இருக்கும் சேதியைக் கூறு. அவளுக்கு ஏற்கனவே என்னைப்பற்றித் தெரியும். இந்தப் புகார்நகரின்கண் மணிமேகலா என்ற பெண் தெய்வம் உலாவுந்தது என்பதை அறிந்த கோவலன் என்னைப்பற்றி மாதவியிடம் கூறியிருக்கிறான். இதன் பொருட்டே இருவரும் தங்கள் புதல்விக்கு என் பெயரைச் சூட்டியுள்ளனர்.

View More துயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]