இரண்டெழுத்து அற்புதம்

கம்பன் எனும் காவியச் சோலையில் பூத்துக் குலுங்கும் சொற்பூக்களும் பழுத்துக் குலுங்கும் சொற்கனிகளும் ஏராளம், ஏராளம். அவற்றின் வண்ணமும் வாசமும் கண்ணைக் கவரும். கருத்தை ஈர்க்கும். சொற்பூக்கள் கண் சிமிட்டும்; இள நகை சிந்தும்; தீயும் சொரியும்; தென்றலாய் வருடும்; புயலாய்த் தாக்கும்; சொற்கனிகள் அமுதாய் இனிக்கும், கனிச்சுவையில் நவரசங்களும் சொட்டாது – கொட்டும். வார்த்தைகளைத் தேடிக் களைத்து தன்னை வஞ்சித்துவிட்டு ஓடிவிடுவதாக ஷெல்லியைப் போல் கம்பன் வார்த்தைக்காகத் தவம் கிடக்கவில்லை, வார்த்தைகள் அவனைக் காதலித்தன. வரிசையாக நின்று அவன் கவிதையில் இடம் பிடிக்க முண்டியடித்து முன்னே வந்தன. கவிதையின் அழகெல்லாம் ஒன்று திரண்டு ஒரே ஒரு சொல்லில் பூத்துக் குலுங்க வைப்பது கம்பன் கலை.

View More இரண்டெழுத்து அற்புதம்

கம்பனின் சித்திரகூடம்

பெண் யானை இரைத்து இரைத்து மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இளமையான யானை தான், ஆனால் உண்டாகி இருக்கிறது. களைத்துப் போய் உட்கார்ந்து விட்டது. கூட வரும் ஆண்யானை நறுமணம் கமழும் செந்தேனை துதிக்கையால் தன் துணைக்கு ஊட்டி விடுகிறது… கம்பர் சித்தரித்துக் காட்டும் அடர் கானகத்தில் ஒருவிதமான ஒத்திசைவும் ஒழுங்கும் உள்ளது. கொடிய கானகத்திலும் இராமன் சீதைக்குக் காட்டும் காட்சிகளில் எல்லாம் அன்பின் ததும்பலே வெளிப்படுகிறது. .. குடிசை கட்டி முடித்து நிற்கும் குன்று போர்ந்த உயர்ந்த அந்தத் தோள்களைப் பார்க்கிறான் இராமன். “இது போல எப்போதடா கற்றுக் கொண்டாய் லட்சுமணா?”..

View More கம்பனின் சித்திரகூடம்

படிவங்கள் எப்படியோ?

வெளி முழுவதையும் அந்த ஒற்றைப் பாதம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ என்பது போல ஒரு தோற்றம்… இராமவதார காவியத்தில், விராதனுக்கு சாப விமோசனம் மட்டுமல்ல, இராம ஸ்பரிசத்தால் மேலான நல்லறிவும் உண்டாயிற்று என்று கம்பன் எழுதுகிறான்… ஒரு விலங்கினால் மற்றொரு விலங்கிற்கு விளைந்த துயர் நீக்க வந்து, இரு விலங்குகளுக்கும் முக்தியளித்தாய்… “பார்த்தா, மூன்று உலகங்களிலும் எனக்கு யாதொரு கடமையும் இல்லை. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லை. ஆயினும், இடையறாது கர்மத்தில் இயங்கிக் கொண்டேயிருக்கிறேன்…”

View More படிவங்கள் எப்படியோ?

கம்பன் பாடிய குறள்

இந்த சிறிய பிரசங்கத்தையும் கவித்துவம் மிளிரும் அழகிய பாடல்களில் கம்பன் விவரிக்கிறான்.. ஆலமரம் முழுவதையும் தன் உள்ளே அடக்கிய விதை போல, நெடியோனாகிய திருமால் வாமனனாக அவதரித்தான்.. குள்ளனான வாமனன் ஓங்கி உயர்ந்து நின்றதற்கு அபாரமான ஒரு உவமை சொல்கிறார், உயர்ந்தவர்க்கு உதவிய உதவி போல… மண்ணில் நின்று உலகம் அளந்தது வாமனக் குறள். வானிலும் மண்ணிலும் நின்று உலகம் அளந்தது வள்ளுவர் குறள்.. அன்று தன் நெடுமையால் மாயன் அளந்த உலகை எல்லாம், தன் மனத்தில் நினைந்து செய்யும் கொடுமையாள் அளந்தவள் இவள்…

View More கம்பன் பாடிய குறள்

அவ்வரங்கள் இவ்வரங்கள்

இராமகாதை வரங்கள் காரணமாகவே வளர்கிறது… கைகேயி இராமனை, ‘உங்கள் மகன்’ என்றோ, ‘கோசலை மகன்’ என்றோ கூடச் சொல்லாமல் யாரோ மூன்றாம் வீட்டுப் பையனைச் சொல்வது போல ‘சீதை கேள்வன்’ என்று குறிப்பிடுகிறாள்… இராமன், ‘என் தாய்’ என்று கூடச் சொல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே போய், ‘என் தெய்வம்’ என்கிறான்… “இராமபிரான் எனக்கொரு வரம் தந்தார். அதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டும்,” என்கிறாள் சீதை… கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது.

View More அவ்வரங்கள் இவ்வரங்கள்

கம்பன் கண்ட சிவராம தரிசனம்

நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை… இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ?

View More கம்பன் கண்ட சிவராம தரிசனம்

கம்பராமாயணம் – 19 (Kamba Ramayanam – 19)

நன்கு ஆலோசித்துத் திட்டமிடப்பட்டு எழுப்பப்பட்டுள்ள (நகர) மதில் சுவரைச் சுற்றிலும் உள்ள பாறைகளை எல்லாம் பிளந்து, மிக ஆழமாக உருவாக்கப்பட்ட அகழிகளில் பொங்கி எழுவதும், மீள வீழ்வதுமாகத் திரியும் பெரிய முதலைகளைப் பார்த்தால், அடக்க முடியாத மதம்பிடித்த யானைகள் (தம்முடைய மதமயக்கத்தினால்) பெரிய கப்பல்கள் இயங்குகின்ற கடலி்ல் வீழ்ந்து, அதிலிருந்து மீளமுடியாமல்… (Verses 16-20)

View More கம்பராமாயணம் – 19 (Kamba Ramayanam – 19)

கம்பராமாயணம் – 18 (Kamba Ramayanam – 18)

அந்த மதிலில், (தொலைதூரத்துக்கு அம்புகளை எறியக் கூடிய மிகப் பெரிய) விற்கள் பொருத்தப்பட்டிருந்தன. கூர்மை மிகுந்த, கொல்லக் கூடிய வாளையும், கோடரிகளையும், இரும்புத் தடிகளையும், சக்கரங்களையும், எறியீட்டிகளையும், உலக்கைகளையும் வீசக்கூடிய கணக்கில் அடங்காத எந்திரப் பொறிகள் அமைக்கப்பட்டிருந்தன… (Verse 11-15)

View More கம்பராமாயணம் – 18 (Kamba Ramayanam – 18)

கம்பராமாயணம் – 17 (Kamba Ramayanam – 17)

‘இதன் முடிவு எது’ என்று அறிவால் ஆராய்ந்து தெளிந்துகொள்ள முடியாத காரணத்தால், இந்த மதிற்சுவர் வேதங்களையும் ஒக்கும். வானத்தைச் சென்று அடையும் காரணத்தால், (விண்ணில் உலாவுகின்ற) தேவர்களையும் ஒக்கும். வலிய பொறிகளைத் தம்முள் அடக்கியிருக்கும் காரணத்தால் முனிவர்களை ஒக்கும். நகரத்துக்குப் பாதுகாவலாக இருக்கின்ற காரணத்தால், கலைமான் வாகனத்தைக் கொண்டவளான துர்க்கையையும் ஒக்கும். மிகப் பெரிய அளவில் அமைந்த எல்லாப் பொருள்களையும் ஒக்கும். எல்லோராலும் எளிதில் அடைய முடியாத (உச்சியைக் கொண்ட) தன்மையால், ஈசனையும் இது ஒக்கும். (நகரப் படலம் பாடல்கள் 06-10; Verses 06-10)

View More கம்பராமாயணம் – 17 (Kamba Ramayanam – 17)

கம்பராமாயணம் – 16 (Kamba Ramayanam – 16)

இது ராம ராஜ்ஜியம் நடைபெற்ற இடம். இதைவிட அயோத்தியின் சிறப்பைக் குறித்து நான் சொல்ல வேறு என்ன இருக்கிறது!

(நகரப் படலம் பாடல்கள் 01-05 Verses 01-05 of Canto of City)

View More கம்பராமாயணம் – 16 (Kamba Ramayanam – 16)