ஐரோப்பாவில் விதைக் கலப்பையை 1662-ல் முதன் முதலில் பயன்படுத்தியதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அந்தக் கலப்பை எப்போது என்று கணிக்க முடியாத பன்னெடுங்காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்துவந்திருக்கிறது. நீர்பாசன வசதிகள், அருமையான கலப்பைகள், ஆண்டுதோறுமான மழையளவைக் கணிக்கும் திறமை, ஊடு பயிர் சாகுபதி, இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல், உள்நாட்டுக்குள்ளேயே பகிர்ந்துகொள்ளுதல் என பல விஷயங்களில் பழங்கால பாரதம் முன்னணியில் இருந்திருக்கிறது…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 3Category: அறிவியல்
இந்து அறிவியல் சிந்தனைகள், பங்களிப்புகள், ஆன்மிக-அறிவியல் உரையாடல்கள்..
ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7
பாரதம் செவ்வாய்க்கு முதல்தடவையே கோள் மங்கல்யானை அனுப்பி வெற்றிகண்டிருக்கிறது; விண்ணில் பறந்துசெல்லும் செயற்கைக்கோளை மிஷன் சக்தி ஏவுகணைமூலம் தாக்கியழித்திருக்கிறது; கண்டம்விட்டுக் கண்டம்தாவும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாகச் செலுத்தியிருக்கிறது; அணுகுண்டுத் தயாரிப்பிலும் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஆகவே, பாரத்த்தின் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் திறமையில், ஆய்வுத் திறனில் உலக வல்லரசுகளுக்குச் சளைத்தவர் அல்லர் என்று கண்கூடாகத் தெரிகிறது.
View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6
டசோல் நிறுவனம் மட்டுமல்ல, அமெரிக்க விமான நிறுவனங்களும்கூட, பாரதத்தில் எச்.ஏ.ஏல். நிறுவனத்துடன் இணைந்து விமான உற்பத்திசெய்ய முடியாது என்று தெரிவித்தபின்னர் பாரதத்தின்முன் நின்ற பெரும் பிரச்சினை இதுதான்..
முழுதாக, பறக்கும் நிலையிலுள்ள, பாரதம் விரும்பும் தொழில் நுட்பங்களுள்ள, – தாக்கும் திறனுள்ள, தளவாடங்களுள்ள, பாரத விமானப்படைத் தலைமை விரும்பும் போர்விமானமான ரஃபேலை உடனே பெறவேண்டும் என்றால் – அதை பிரெஞ்சு அரசின் மூலம்தான் அடையமுடியும் என்ற நிலைமை பாரதத்திற்கு ஏற்பட்டது.
ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 5
2013ல் டசோல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆயினும், பட்ஜெட் தட்டுப்பாட்டினால் 2015வரை விமான ஒப்பந்தம் பற்றிய நடவடிக்கையை ஒத்திப்போடுவது என்று காங்கிரஸ் கூட்டணி அரசால் தீர்மானிக்கப்பட்டது. இருந்தபோதிலும், டசோல் நிறுவனம் நம்பிக்கையை இழக்கவில்லை.
மூன்று ஆண்டுகள் டசோல் நிறுவனத்திற்கும், பாரத அரசுக்கும் இழுபறிப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கையில், 2015, ஏப்ரல் 10ம் தேதி, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி பாரிஸ் நகரில், “நான் அதிபரை [பிரான்ஸ்வா ஹாலன்ட்] பறக்கும் நிலையுள்ள 36 ரஃபேல் போர்விமானங்களை வழங்கும்படி கேட்டிருக்கிறேன். [ I have asked President (Francois Hollande) to supply 36 ready-to-fly Rafale jets to India.]” என்று தனது பிரெஞ்சுப் பயணத்தின் முதல்நாளில் செய்திக் கூட்டத்தில் அறிவித்தார்.[
ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4
ஹெச்.எஃப்-24 விமானத்தின் வடிவமைப்பு சிறந்து விளங்கியபோதிலும், பிரிஸ்டல் சிட்டலி ஆர்பியஸ் தயாரித்து வழங்கிய அதன் இரட்டை எஞ்சின்கள் வலிமையற்றவையாக இருந்ததால், எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. இப்பொழுது அந்த விமானங்கள் பாரதத்தின் பல விமானதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை ஒரு வெட்கக்கேடு என்று உணர்வதால், விமானப்படைத் தலைமையகமும், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனமும் பாராமுகமாகவே இருக்கின்றன
View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 2
விமானத்தாக்குதல் வரலாற்றிலேயே, ஒரு நாட்டை மண்டியிடச்செய்த விமானம் மிக்-21ஆகத்தான் இருக்கும் எனலாம். பாரதம் தனது மிக்-21 விமானங்களை அப்பொழுதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பியது. 1971 டிசம்பர் 14ல் காலை 11 மணி அளவில் டாக்காவில் கவர்னர் மாளிகையச் சுற்றி வட்டமிட்ட அவ்விமானங்கள் குண்டுமாரி பொழியவே, கவர்னர் ஐக்கிய நாட்டு விமானத் தாக்குதல் பாதுகாப்பிடத்திற்கு ஓடி ஒளிந்துகொண்டார்.
View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 2மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்
பள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை [The theory of evolution]’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது. இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.
பரம்பொருளான சிவனோ அண்டத்திலிருக்கும் அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார்.
இஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை!
சவூதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்பைத் தேடிவந்திருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு — எந்தவிதமான உரிமையோ, அதிக ஊதியமோ இல்லாது அனுதினமும் உழைக்கும் அந்த வாயில்லா[?] ஜீவன்களுக்கு குடியுரிமை வேண்டுமென்றால் அரபுமொழி நன்கு எழுதப்படிக்கப்பேசத் தெரிந்டிருக்கவேண்டும் என்று சொல்லும் அரசு, இது எதையும் எதிர்பார்க்காது, அரபுமொழியே தெரியாத ஒரு ரோபாட் பெண்ணுக்குக் குடியுரிமை எப்படி வழங்கியது என்று பலரும் கேள்விக்கணை தொடுக்கிறார்கள். தலைநகரான ரியாதில் இருபது சதவிகிதமே தரைக்கடி சாக்கடை வசதி உள்ளது. இந்த அரசு அடிப்படைத் தேவையையே நிறைவேற்றாமல் இருந்துவிட்டு, ரோபாட்டுகளுக்காகப் புது நகரை உருவாக்க முனைகிறதே என்ற கோபமே அது. “வீட்டைவிட்டு வெளியே வர இயலவில்லையே என்று பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை இங்கிருக்கும்போது ஸோஃபியா தன்னிஷ்டத்திற்கு அலைந்து திரிவது எங்ஙனம்?” என்று வெதும்புகிறார் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநரான அலி அல் அகமது.
View More இஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை!புல்லட் ரயில் எனும் பெருங்கனவு
நம்மூரிலே இருக்கும் ஆகச்சிறந்த அறிவாளிகள் ராக்கெட் விட்ட போதும் இதையே தான் கேட்டார்கள். இப்போது புல்லட் ரயிலுக்கும் இதையே தான் கேட்கிறார்கள். சீனா எப்போது புல்லட் ரயிலை ஆரம்பித்தது? 2007 இல் தான். ஆமாம். பத்தே பத்து வருசம் முன்பு தான்…சென்னை மும்பை விமான வழியாக 2 மணி நேரம் ஆகும். அதுவே அதிவேக ரயில் வழியாக 4 மணி நேரம் தான் என்றால்? அதுவும் கட்டணமும் விமானக் கட்டணத்தைவிட மூன்று மடங்கு குறைவு என்றால்? இதைவிடவும், புல்லட் ரயில் புதிய அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளுக்கான கனவை தூண்டிவிடுமல்லவா? டெல்லி மெட்ரோ கட்ட 7 வருடங்கள் என்றால் கொச்சி மெட்ரோ 2 வருடங்களிலே கட்டப்பட்டது. அதே போல் முதல் புல்லட் ரயில் கட்ட 5 வருடங்கள் எடுக்கலாம் என்றால் அடுத்தடுத்த ரயில்களை ஒரு வருடத்திலே கட்டி முடித்துவிடலாமே?…
View More புல்லட் ரயில் எனும் பெருங்கனவுஇந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்
தமிழில் இப்படி ஒரு நூல் வந்திருப்பது நம் நல்லூழ். இன்றைய அறிவியலுக்கும் பாரத மெய்ஞானச் சிந்தனை முறைகளுக்கும் என்ன தொடர்பு? அறிவியல் கண்டுபிடிப்புகளை நம் பாரம்பரியமான சிந்தனை மரபுகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடியுமா என்னும் கேள்வியுள்ள தேடல் கொண்டவர்களுக்கு வீணான பெருமித மார்தட்டல்களின்றி, மிகக் கறாராக நவீன விஞ்ஞானத்தின் பாய்ச்சலை, பாரதத்தின் மெய்ஞான தரிசனங்களின் ஒளியில் விளக்கும் சிறந்த நூல். இந்நூலுக்காக அரவிந்தன் நீலகண்டனுக்கும் சாந்தினிதேவி ராமசாமிக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். பாரதம் அளித்த தரிசனங்களிலும் நவீன அறிவியலிலும் ஈடுபாடுள்ளவர்கள் இந்த நூலைக் கண்டிப்பாகத் தவறவிடக் கூடாது….
View More இந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்