மானுட பிரயத்தனங்களுக்கு அப்பால் உள்ள தூய ஞானம் தான் இந்து தர்மம். இந்த பூமியில் பிற உயிர்க்காக இரங்கும் ஒருவன் இருக்கும் வரையில் இந்த தர்மம் நீடிக்கும் என்ற நம்பிக்கையை இந்த பயணங்கள் எனக்கு அளித்தன… கோனார்க்கின் சூரிய க்ஷேத்திரம். அண்டப் பெருவெளியில் காலம் எனும் தேரில் கடந்து போகும் சூரியன். அவனுடைய தேரை அலங்கரிக்கும் வாழ்வின் பல்வேறு நிலைகள். இந்த தேர் முழுக்க காலத்தை வெல்லும், இல்லாமலக்கும் இசையும், நடனத்தையும், சிருங்காரத்தையும் சேர்த்து அமைத்த மெய்கள். மனித உடலின் அபாரமான சாத்தியங்கள். நடன அசைவுகள், உடலே இசைக்கருவியாக மாறி தீராத படைப்பின் சங்கீதத்தை இசைக்கும் சிருங்கார சிற்பங்கள்… விளையாடும் யானைகள், துரத்தும் யானைகள், கூட்டத்தில் இருந்து விலகி ஓடும் யானை. நான்கு திசைகளிலும் பிரமாண்டமான அலங்காரத்தோடு கூடிய போஷாக்கான குட்டி யானைகள். எத்தனை யானைகள் வடித்த பிறகும் மகத்தான சிற்பிகளுக்கு இன்னும் நாம் யானைகளை பற்றி சொல்வதற்கு இருக்கும் தீராத ஆசையின் விளைவாக மேலும் மேலும் யானைகளை சித்தரிக்க இருக்கும் சிறு வாய்ப்புகளை கூட தவற விடாத மோகம்….
View More பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3Category: தொடர்
தொடர் கட்டுரைகள்
பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 2
ஒரு கட்டத்தில் அனைத்து ஆண்களும் களத்தில் மாண்டு விட பெண்கள் ஆயுதமேந்தி போராட வருகிறார்கள். மனம் வெதும்பும் அசோகன் போரை கைவிடும் முடிவை எடுக்கிறான் . இவை எல்லாம் மிக நேர்த்தியான புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப் பட்டுள்ளது… இஸ்லாமிய படையெடுப்பில் கலிங்கத்தின் தொன்ம அடையாளங்கள், முக்கியமான வரலாற்று ஆவணங்கள், குறிப்புகள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்பட்டு இருந்திருக்கிறது… இஸ்லாமிய படைத்தலைவர்கள் ஊர்களை எரியூட்டி அழித்தும், ஏராளமான பெண்களை கற்பழித்தும் , நகரங்களை நாசம் செய்தும், தீ வைத்தும் இருக்கிறார்கள். பொய்யை மட்டுமே சொல்வதற்காக பிறப்பெடுத்திருக்கும், இடது சாரி வரலாற்று ஆய்வாளர்கள் இவைகளை எல்லாம் சொல்வதற்கு வசதியாக மறந்து விடுவார்கள்.மேற்கு வங்கத்தில் இருந்த கம்யூனிஸ் அரசோ அரசாணை வெளியிட்டு இஸ்லாமிய கொடுரர்கள் செய்த பேரழிவுகளை வரலாற்றில் மறைக்க சொல்லி ஆணையிடும்…
View More பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 2எழுமின் விழிமின் – 34
முணுமுணுக்கிறவனுக்கு எல்லாக் கடமைகளுமே சுவையற்றவை. எதுவுமே அவனை ஒருபோதும் திருப்திப் படுத்தாது. அவனது வாழ்வு முழுவதும் தோல்வி மயமாக ஆவது திண்ணம். நாம் வேலை செய்து கொண்டே செல்வோம்…. உன்னையே நீ அலசி ஆராய்ந்து பார்த்தால், உனக்குக் கிடைத்த ஒவ்வொரு அடியும், நீ அதற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்ததால் தான் கிடைத்தது என்பது தெரியவரும். நீயாகச் செய்வது பாதி; வெளி உலகம் செய்வது பாதி; இந்த ரீதியில்தான் அடி கிடைக்கிறது…. நம்முடைய அஞ்ஞானத்தின் காரணமான, நாம் கட்டுண்டு விட்டதாக நினைத்து உதவி கோரிக் கண்ணீர் விட்டுக் கதறுகிறோம். உதவியானது வெளியிலிருந்து வராது. நமக்குள்ளிருந்தே தான் வரும்.
View More எழுமின் விழிமின் – 34ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 8
புனிதமான கங்கையில் குளித்துவிட்டு ஆச்சாரியார் தன் சீடர்களுடன் வரும்போது, எதிரே ஒரு புலையன் நான்கு நாய்களைப் பிடித்துக் கொண்டு வருகிறான். சீடர்கள் அவனை அவர் மேல் படாதவாறு ஒதுங்கச் சொல்ல, அப்போது அவன் சங்கரரைப் பார்த்து இப்படிக் கேட்கிறான்: “யதிகளில் சிறந்தோரே, அன்ன மயத்தாலான இந்த சரீரத்தை அன்ன மயமான இன்னுமொரு சரீரத்திலிருந்து விலகச் சொல்கிறீர்களா? அல்லது ஒரு சைதன்ய சொரூபத்தில் இருந்து இன்னொரு சைதன்ய சொரூபத்தை அகலும்படிச் சொல்கிறீர்களா? கங்கை நதியில் பிரதிபலிக்கும் சந்திரனின் பிம்பம், சண்டாளனின் குடிசையின் பக்கத்தில் இருக்கும் குளத்தில் பிரதிபலிக்கும் சந்திரனின் பிம்பத்திலிருந்து வேறாகுமோ? பொன் குடத்தின் உள்ளே இருக்கும் ஆகாசம் மண் குடத்தில் உள்ளதிலிருந்து வேறுபடுமோ? எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சத்திய ஆனந்த போதத்தில் திளைத்திருக்கும் உம்மிடம் “இவன் மேலோன், அவன் கீழோன்” என்ற பெரும் மயக்கம் எப்படித் தோன்றுகிறது?” இதைக் கேட்ட ஆச்சாரியார் தன் மனம் ஆன்மாவின் உன்னத நிலையை மறந்து உடலின் தூய்மை பற்றிய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி பாமரத் தன்மை அடைந்ததை உணர்கிறார். அதனை அகற்றி, “பரம்பொருளின் தன்மையை உணர்ந்து உறுதியான போதத்துடன் இருப்பவர் சண்டாளர் ஆயினும், அந்தணர் ஆயினும் அவரை என் குருவெனப் போற்றுகின்றேன்” என்று ஈற்றடி வருமாறு “மனீஷா பஞ்சகம்” என்ற ஐந்து ஸ்லோகங்களை இயற்றுகிறார். ஆக உடல்-ஆன்மா குழப்பம் எப்போதும் வராதவாறு நம்மைக் கண்காணித்துக் கொள்ள வேண்டும்…..
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 8பாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1
கடந்த ஒராண்டில் ஏறத்தாழ 23,500 கிலோ மீட்டருக்கும் மேல் பாரதம் முழுக்க என் பயணம் விரிந்தது. இதன் கலாச்சார வளமையும், நாகரீகமும், தொன்மையும், அறிவு செழித்து பல்கி பெருகி விரிந்த இடங்களையும், இயற்கை அன்னையின் பெருங் கருணையையும், பண்பாட்டு உச்சங்களையும், கவின் கலையின் பிரமிப்புகளையும், வரலாற்றுத் தடங்களையும், தருணங்களையும், மட்டுமின்றி பாரதத்தின் ஒருமித்த பேருருவை கண்டடைந்த பெருமித கணங்களை பதியத் துவங்குகிறேன்…. தமிழ் மொழியின் தோற்றம் வளர்ச்சி பரவல் பற்றி ஆராயும் மானுடவியலாளர்கள், மொழியியல் வல்லுனர்களுக்கு தமிழக கலிங்க உறவுகளும் ஹாத்தி கும்பா கல்வெட்டுகளும் மிகப்பெரிய புதையலாகும்… பெரிய மெளரிய வம்ச சக்ரவர்த்திகளாலேயே வெற்றி கொள்ள முடியாத தீரமிக்க தமிழ் மன்னர்களை திரை செலுத்த வைத்தது தன்னுடைய மிகப்பெரிய சாதனை என காரவேலர் இந்தக் கல்வெட்டில் தெரிவிக்கிறார்….
View More பாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27
தன் உடன் பிறந்தவர்களின் சாவுக்குப் பழி வாங்க வேண்டும் என்று அதிகயா துடித்துக்கொண்டு இருந்தான். அவன் தேரில் ஏறிப் போர்க்களத்துக்குப் போகும் வழியிலேயே பல வானரர்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டே போனான். லக்ஷ்மணன் அவனைத் தடுத்து நிறுத்தித் தன்னுடன் மோதுவதற்குச் சவால் விட்டான். போர் புரிய வக்கில்லாச் சிறுவன் என்று லக்ஷ்மணனை ஒதுக்கிவிட்டு அதிகயா போனான். மேலும் லக்ஷ்மணன் உடலைத் தன்னுடைய அம்புகளால் துளைத்து அவன் நிற்கும் பூமியை ரத்தக் களம் ஆக்குவேன் என்றும் அவன் சொல்லிக்கொண்டே போனான். வெறும் வார்த்தைப் பந்தல்களே அதிகயாவை வீரனாக்கிவிடாது என்று அதற்கு லக்ஷ்மணன் பதிலடி கொடுத்தான்.
ஒரு சண்டையில் எதிரியை வெல்ல ஒருவனுக்கு மோதவும், கொல்லவும் அதற்கான உணர்ச்சிகள் தூண்டிவிடப்பட வேண்டும். அதனால் சவால்கள் விடப்படும் போது எதிரியின் வலிமையைப் பற்றி காரசாரமாகவும், கீழ்த்தரமாகவும் தூற்றிப் பேசுவார்கள். அதுவே அவர்களை ஆக்ரோஷமாக மோதத் தூண்டிவிடும். முன் காலத்தில் நடந்த மாதிரி இப்போதெல்லாம் எவரும் நேருக்கு நேர் மோதாததால், சண்டைக்கு முன் நடந்த நேரடியான சவால் பேச்சுக்கள் எல்லாம் இக்காலத்தில் கேட்கப்படுவதில்லை. அதெல்லாம் இலக்கியத்தில்தான் காணப்படுகின்றன. ஒரு போருக்கு முன் நாம் பத்திரிகைகள், மற்றும் ஊடகங்கள் வாயிலாகக் கேட்கும் மறைமுகத் தாக்குதல்கள் மட்டும் தான் இப்போதெல்லாம் நடக்கின்றன. போர் நடக்கும் போதோ போரின் வழிமுறைகள் தெரிந்து விடக்கூடாதே என்பதால் அவைகள் பொதுவாக இருட்டடிக்கப்படுகின்றன; அல்லது பொய்ச் செய்திகள் திரித்து விடப்படுகின்றன.
View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27எழுமின் விழிமின் – 33
உலகத்தின் பாரத்தை எல்லாம் சுமக்க நீங்கள் உண்மையிலேயே ஆயத்தம் என்றால் தாராளமாக அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து உங்களுடைய முக்கல் முனகல்களையும், சாபங்களையும் எங்கள் காதுகளுக்கு எட்டச் செய்ய வேண்டாம். உண்மையாகவே பாரம் சுமக்கிற மனிதன் உலகத்தை ஆசீர்வதித்துவிட்டுத் தன் வழியே போகிறான். கண்டனமாகவோ, குற்றங் குறையாகவோ ஒரு சொல்கூட அவன் பேசுவதில்லை…. பூரணமாகத் தீமை வாய்ந்தது எதுவுமே இல்லை. இவ்வுலகில் தெய்வத்துக்கும் பிசாசுக்கும் இடமுண்டு. இல்லையேல் பிசாசு இங்கே இருக்காது. இந்த நமது போர்க்களத்தில் தவறுதலாகிய புழுதி கிளம்பியே தீரும். அந்தப் புழுதியைச் சகிக்க முடியாத அளவுக்கு எவருடைய தோல் மெல்லியதாக இருக்கிறதோ அவர்கள் இந்தப் படை அணிவகுப்பை விட்டு வெளியே போய்விடட்டும்…..
View More எழுமின் விழிமின் – 33ஆதி சங்கரரின் ஆன்ம போதம் -7
எந்த ஒரு பொருளுக்கும், செயலுக்கும் அவை ஏற்பட பல காரணங்கள் இருக்கும். ஒரு குயவன் பானையைச் செய்யும்போது அதற்கு பல விதமான பொருட்களும் தேவை என்றாலும் அவைகளுள் மண் மூலப் பொருளாய் உள்ளதால் அது முதற் காரணம் (உபாதான காரணம்) எனப்படுகிறது. பானையைச் செய்யும் குயவனின் புத்தியிலேயே அதை உருவாக்கப் போகும் திட்டம் உள்ளதால் குயவனை நிமித்த காரணம் என்று சொல்வார்கள். அப்படிப் பார்க்கும்போது, நீர் குமிழி ஒன்று கிளம்புவதற்கு தண்ணீர்தான் முதல் காரணமாக அமைகிறது. அந்த நீர்க் குமிழியின் வாழ்க்கைச் சக்கரத்தை வைத்துக் கொண்டு இங்கு மேலும் விளக்கம் வருகிறது.
நீரின் மேற்பரப்பில் புறப்பட்டு எழும் நீர்க்குமிழியை அது கிளம்பும் நீரை விட்டுவிட்டுத் தனியே பார்க்க முடியுமா? எப்படி அது நீரிலிருந்தே புறப்பட்டு, நீரிலேயே சில நொடிகள் இருந்து, பின்பு அது வெடித்துச் சிதறும்போது நீரிலேயே கலக்கிறதோ அதே போன்று பிரபஞ்சமும், அதில் உள்ள அனைத்தும் முழு முதற் காரணமான பரமேஸ்வரனிடத்தில் இருந்து புறப்பட்டு, அவனுடனேயே இருப்பதை அறியாதபோதும் அவனுடனேயே இருந்து, மறையும் போதும் அவனுடனேயே கலக்கின்றன.
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் -7[பாகம் 25] காமகோடி பீடம் – சுவாமி சித்பவானந்தர்
ஒரறிவு படைத்த உயிர்கள் இப் பிரபஞ்சத்தைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு ஆசைப்பட்டு ஈரறிவு படைத்த உயிர்களாகவும பின் அவைகள் மூன்று, நான்கு, ஐந்து, ஆறறிவு படைத்த உயிர்களாகப் பரிணமித்து வருகின்றன. இத்தகைய பரிணாமத்தின் உச்சநிலையில் இருப்பவன் மனிதன் ஆகின்றான். இனி மனிதனிலும் மிக்கதோர் உயிர் வகையை இப்பூவுலகில் யாரும் பார்த்ததில்லை. இப்பூவுலக அமைப்பில் மனிதனே அதிகமான இந்திரியங்களும், விரிந்து செயலாற்றக் கூடிய அந்தக்கரணமும் வாய்க்கப் பெற்றவனாக இருக்கிறான். இனி, மனித நிலைக்கும் மேலான ஒரு நிலை உண்டு. அது தெய்வீக நிலை எனப்படும். மனம் மனிதனிடத்து ஓயாது அலையும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. ஆகையால் தான் மனிதன் அநேக காமங்களுக்கு ஆளாகிறான். அக்காமங்களைத் தெய்வீகக் காமமாக மனிதன் மாற்றியமைக்கத் தெரிந்து கொண்டால் காமத்தின் வேகம் குறைகிறது. காமம் முற்றிலும் அகன்றவிடத்து மனிதன் தெய்வ சொரூபமாகிவிடுகிறான். மனிதநிலையில் இருக்கும் நாம் இந்த மேலாம் நிலையை அடைய முயற்சி எடுத்துக்கொண்டு அந்நிலையை யடைகிறபொழுது நம்முடைய காமத்துக்கும் ஒரு முடிவு உண்டாகிறது. மனித இனத்தில் ஓர் உத்தமர் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியயண்ணி ஏழை நெஞ்சம் புண்ணாகச் செய்தது இனிப் போதும் பராபரமே என்று இறைவனிடம் பரிந்து விண்ணப்பிக்கிறார். கண்ணா! மனம் அலையும் தன்மையது : திடமுடையது ; அதை அடக்குவது காற்றை அடக்குவது போன்று இயலாதது என்று நினைக்கிறேன் என்கிறான் மஹாரதனாகிய அர்ஜூனன்.
சிற்றுயிர் பேருயிராகப் பரிணமித்து வர ஆசை பயன்பட்டது. மானுட நிலையில் ஆசை இருவிதப்படுகிறது. மனிதனைப் பந்தத்தில் தள்ளவும், பாரமார்த்திக நெறிக்கு எடுத்துச்செல்லவும் ஆசை மனிதனுக்குப் பயன்படுகிறது. இந்த ஆசைக்கு இருப்பிடம் மனது ஆகும். இந்த மனது என்பது யாது? அதன் இயல்பு என்ன? மானுட நிலையில் அதை உயர்ந்ததோர் காரியத்துக்குப் பயன்படுத்துவது எப்படி, என்பனவற்றை ஆராய்வோம்.
View More [பாகம் 25] காமகோடி பீடம் – சுவாமி சித்பவானந்தர்எழுமின் விழிமின் – 32
நான் மிக அதிகமாக அஞ்சுவது இந்த பூஜை அறையைக் கண்டுதான். பூஜை அறை இருப்பதில் தவறில்லை. ஆனால் அதையே முழு முதலாக, எல்லாமாக ஆக்கிவிட்டு, பழைய காலத்துக் கட்டுப்பெட்டித்தனத்தை மீண்டும் நிறுவக் கூடிய போக்கு சிலரிடம் காணப்படுகிறது. இத்தகைய பழைய காலத்தைய, சிதைந்து குலைந்து போன சடங்குகளில் ஏன் இவர்கள் ஆழ்ந்து விடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களது உணர்ச்சித் துடிப்பு வேலை வேண்டுமென்று தவிக்கிறது. ஆனால் அதற்கான வழி/துறை இல்லாமல் போகவே இவர்கள் மணி அடிப்பதிலும் மற்றச் சடங்குகளிலும் சக்தியை வீணடிக்கிறார்கள். “என்னால் பாலைவனத்து மண்ணைப் பிழிந்து எண்ணெய் உண்டாக்க முடியுமென்று கூறுவாயானால் உன்னை நான் நம்புவேன். முதலையின் வாயிலிருந்து, அது என்னைக் கடிக்காத முறையில், பல்லைப் பிடுங்கி விடுவேன் என்றாலும் நம்பிவிடுவேன், ஆனால் குருட்டுத்தனமான வெறி பிடித்தவனை மாற்ற முடியுமென்று கூறுவாயானால் அதை மட்டும் நம்ப முடியாது”….
View More எழுமின் விழிமின் – 32