தனது தோல்வியை ஏற்ற பிரதமர் இந்திரா, 1977 மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். ஜனநாயகம் மீண்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீளக் கிடைத்தன. அந்த அடித்தளம் மீது நின்றுகொண்டுதான் இப்போது நாம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குறித்து முழங்குகிறோம். வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் முட்டாள்கள். நாட்டுக்கு துயரமான அனுபவத்தை அளித்த காங்கிரஸ் கட்சியின் கொடிய முகத்தை உணர்ந்த பலர் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கிறார்கள். இன்றைய பாரதீய ஜனதா கட்சி, நெருக்கடி நிலையைக் களையப் போராடிய சக்திகளுள் தலையாயது. 25 ஆண்டுகால தொடர்ந்த முயற்சிகள் அதனை அதீத பலமுள்ள மத்திய ஆளும் கட்சியாக்கி இருக்கின்றன. ஆனால், 1975-77-இல் இந்திராவின் எதேச்சதிகாரத்திற்கு எதிராகப் போராடிய பிற அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலை என்ன?…..
View More நெருக்கடி நிலை யாருக்கு?Category: சமூகம்
இந்து சமுதாயம், வாழ்க்கை முறை, சமூக பிரசினைகள், தீர்வுகள்…
தாம்பத்யமும் நண்டுப்பிடியும்
“சொல்ற மாரி விசயம் இல்ல சார்” என்றவன் இரு நிமிடம் தலைகுனிந்து மவுனமாக இருந்தான். இந்த ஆறுமாசமா, ஒவ்வொரு நாளும் மூணு நாலுதடவ போன் பண்ணிருவா. எங்க இருக்கே?, யாரு கூட இருக்கே?ன்னு தொணதொணப்பு. நானும் பொறுமையா எத்தன தடவ சொல்ல முடியும்? அதுவும் கஸ்டமர் முன்னாடி… நான் தொடங்கினேன் “ ஸ்ரீரங்கத்துல, ஒரு விழா உண்டு. நம்பெருமாள் இரவெல்லாம் வேட்டைக்காக உலாப் போய் வருவார். எனவே திரும்பி வரும்போது அவர் திருமேனியில் அங்கங்கே கீறல்கள், சிராய்ப்புகள் தடம் இருக்கும்…
View More தாம்பத்யமும் நண்டுப்பிடியும்கொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்
கொடுப்பதை, சிரத்தையுடன் கொடுத்திடுக. அசிரத்தையுடன் கொடுத்தல் தகாது. செல்வத்திற்கேற்பக் கொடுத்திடுக. நாணத்துடன் கொடுத்திடுக. அச்சத்துடன் கொடுத்திடுக. சம்மதத்துடன் கொடுத்திடுக என்கிறது தைத்திரிய உபநிஷதம்… அச்சம் ஏன்? கொடுப்பதால் நமக்கு அகம்பாவம் ஏற்பட்டு விடக் கூடாதே, நல்ல உள்ளத்துடன் நாம் கொடுத்தாலும் பெறுபவன் மனம் புண்பட்டு சிறுமையடைந்துவிடக் கூடாதே என்பதான அச்சம். ‘ஸம்வித்’ என்பதற்கு ‘நட்புணர்வுடன்’ என்று சங்கர பாஷ்யம் தரும் பொருள் சிறப்பானது. கொடையைப் பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த ஆறு உபநிஷத வாக்கியங்கள் அளித்து விடுகின்றன…
View More கொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்வேதங்களில் விதவை மறுமணம்
உனது எஞ்சிய வாழ்நாளை மகிழ்ச்சியாக கழிப்பாய். நீ யாரருகில் துயின்றாயோ யார் உன் கையை மணமேடையில் பற்றினானோ அவன் இன்று சலனமின்றி இருக்கிறான்.. இறந்த உனது கணவனிடமிருந்து நீங்குவாயாக. உன் கைப்பற்ற தயாராய் இருக்கும் இந்த ஆடவனை சேர்ந்து பிள்ளைகளும் செல்வமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வாயாக’ என்று வாழ்த்துகிறது ஒரு சுலோகம். பெண்களுக்கு கணவனின் சொத்தில் பங்கு அவன் இறந்த பிறகும் உண்டு என்கிறது ரிக் வேதம். இதைத் தான் உச்ச நீதிமன்றம் 1995 இல் குறிப்பிட்டு சட்டத்திருத்தத்தை அங்கீகரித்தது.. சதி என்பது ஹிந்து மதத்தின் கருத்து அல்ல. அது செமிட்டிக் மதங்களின் கருத்து. மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது. அது பெண்களுக்கு கட்டாயம் அல்ல. காதல் கணவனை பிரிந்த பெண்கள் பிரிவின் துயரம் தாளாமல் அதை செய்தார்கள்…
View More வேதங்களில் விதவை மறுமணம்கையாலாகாதவனாகிப் போனேன்! — 5
நீ கோட்டும் சூட்டும் போட்டு ஆபீசுலே வேலை பார்க்கற சாப். உன் உலகம் வேற. நான் மூட்டைதூக்கிப் பொழப்பு நடத்துறவன். ரெண்டு வருசம் முன்னால குடிச்சுட்டுப் இவளைப் போட்டு அடிச்ச இவ புருசனை நீ கேட்டமாதிரி ஏண்டா அடிக்கறேன்னு கேட்டேன். அவனும் நான் உங்கிட்ட சொன்னமாதிரி, அடிக்கறத நிறுத்தறேன். தில் இருந்தா இவளையும், இவ புள்ளையையும் கூட்டிக்கிட்டுப்போடான்னான். பாவப்பட்டு இவ புருசன் கிட்டேந்து இவளையும், இவ பிள்ளையும் நான் சேர்த்துகிட்டேன். என்னால அப்படிச் செய்யமுடியும். என் உலகம் அப்படி. உன்னால முடியாது. எங்க வாழ்க்கை ஒனக்குப் புரியவும் புரியாது. இவனை இப்படி நான் தண்டிக்கலேன்னா, இவனும் ஒரு தெருப்பொறுக்கியா, கேப்மாரியா, திருட்டுப்பயலாத்தான் அலைவான். போலீசு இவன்பின்னாலே சுத்தும். ஜெயில்தான் இவனுக்கு மாமியா வூடாகிப்போகும். உனக்குச் சொன்னாப்புரியாது.
View More கையாலாகாதவனாகிப் போனேன்! — 5பசுவதைத்தடை – அருந்ததியர்: சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம்
மொகலாயர் காலம் தொட்டு பல நூற்றாண்டுகளாக , பல்வேறு சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகியும் ஹிந்துக்களாகவே நீடிப்பதுதான் மாபெரும் சாதனை. தங்கள் ஸ்வதர்மத்தின் மீதான அவர்களின் பற்று போற்றுதலுக்குரியது. அப்படிப்பட்ட சாதியினர்களில் மிக முக்கியமானவர்கள் அருந்ததியர்கள். வருடம் தோறும் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். எங்கள் ஊர் மாரியம்மன், மற்றும் பகவதியம்மன் திருவிழா நடைபெறும்போது தங்கள் தெருவில் இருந்து ஊர்வலமாக மாவிளக்கு எடுத்துவந்து வழிபடுவார்கள். அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள்….
View More பசுவதைத்தடை – அருந்ததியர்: சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம்நம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வை
அல்ஜீரியாவிலும் துனிசியாவிலும் இருந்து வந்த பயங்கரவாதிகளுக்காக, தான் என்றும் பார்த்திராத யூதர்கள் என்ற ஒரு இனக்குழுவின் மேல் ஒரு கடுமையான ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வைப்பது – இதை எப்படி செய்ய முடிகிறது? அந்த பயங்கரவாதிகளை ஏன் காக்க வேண்டும் – அவர்களுடன் என்ன உறவு, மத ரீதியிலானதை தவிர?… முன்பெல்லாம் இஸ்லாமியர் வீட்டுப் பெண்கள் நம் வீட்டு பெண்களை போல் தான் இருந்தார்கள். அவர்கள் எல்லா சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள். அயத்துல்லா கொமேனி ஈரானில் கல்லூரி படிக்கும் பெண்களை கருப்பு அங்கியால் மூடியபோது கூட நம் ஊர் முஸ்லிம் பெண்கள் சாதாரண ஆடைதான் அணிந்திருந்தார்கள்… ”இந்த அங்கியை அணிந்தால் தலை வேர்த்து கசகசவென்று ஆகி இப்படி நடக்கிறது. தலை வேறு வலிக்கிறது” என்று அழாக்குறையாக அந்தக் குழந்தை சொன்னது சுருக்கென்று தைத்தது. ஆனால் அவள் தந்தையோ கண்டும் காணாமல் இருந்தார். 7 வயது குழந்தைக்கு ஹிஜாப் என்ற அந்தக் கருப்பு அங்கியை அணிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன?…
View More நம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வைஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்திய அரசும், மாநில அரசும் ஓஎன்ஜிசியும் மிகத் தைரியமாக மக்களிடம் சென்று விளக்க வேண்டும். இந்தத் திட்டத்தைப் பின்வாங்கினால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டமல்ல, கச்சா எண்ணெய்யைக்கூட எடுக்க முடியாது. ஏனெனில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் முடக்க ஒரு தரப்பு முனைப்பாகவே இருக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதன் வாயிலாக அமல்படுத்தாமல், முகநூல், தொலைக்காட்சிகள் மற்றும் மக்களிடம் நேரடியான உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக நடைமுறைப்படுத்த வேண்டும்….
View More ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?மதச்சார்பின்மை இந்திய தேசப்பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் – துஃபாயில் அகமது
என்னுடைய பேரக்குழந்தைகளின் தலைமுறைக்கு சொல்ல ஒரு விஷயம் என்னிடம் உண்டு. உங்கள் காலத்தில் கேரளா, மேற்கு வங்கம், பிஹார் மற்றும் உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளிலிருந்து ஹிந்துக்கள் முற்றிலுமாக வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை மதச்சார்பின்மை உருவாக்கும் – காஷ்மீரீலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டது போல… ஒரு திருடன் குளித்துவிட்டு சுத்தபத்தமாக பயபக்தியுடன் ராத்திரியில் கோவிலுக்குள் நுழைகிறான். அவனுடைய உண்மையான நோக்கம் கோயிலில் உள்ள தெய்வ விக்ரஹங்களைக் கொள்ளையடிப்பது. காலடித்தடம் கேட்டு திரும்பிப் பார்த்தபோது, வேறொருவன் செருப்புடன் கோவிலுக்குள் நுழைந்ததை காண்கிறான். உடனே திருடன் எச்சரிக்கிறான் – “நான் மட்டும் இப்போது வேலையில் மும்முரமாக இல்லாதிருந்தால், ஆலயத்தை அவமதித்தற்காக உன்னை தண்டித்திருப்பேன்!” அந்த திருடன் மதச்சார்பற்றவன். இதுதான் இந்திய சமூகத்தின் யதார்த்தநிலை…
View More மதச்சார்பின்மை இந்திய தேசப்பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் – துஃபாயில் அகமதுநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)
பறையர்-பள்ளர்கள் நில உடமையாளர்களாகவும் நிலக் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய நிலை பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானதுதான். நில உடமைச் சமுதாயத்தினருக்குச் சேவைத் தொழில் செய்து வந்த சக்கிலியர், நாவிதர், வண்ணார், தோட்டி, வெட்டியார் போன்றவர்களே உண்மையில் ‘தலித்’ (Broken) என்று சொல்லத் தகுந்தவர்கள். இந்து சாதி அமைப்பின் கடைசிநிலையில் இருந்தவர்களாக, இருப்பவர்களாக அவர்களையே சொல்லவேண்டும்… இந்த இடத்தில்தான் சாதி அமைப்புக்கு நாம் முன்வைத்த நவீனத் தீர்வின் தோல்வி பற்றி சிந்திக்க வேண்டிவருகிறது. இந்த நவீனத் தீர்வு மூன்று வகையில் பிழையுடையதாக இருந்திருக்கிறது… பிற நாடுகளில் இருக்கும் அகமண முறை சாதியாக ஆகியிருக்காத நிலையில் இந்தியாவில் மட்டும் அகமண முறை மூலம் பிராமணர்கள் சாதிப் பிரிவினையை எப்படி நிலை நாட்டியிருக்க முடியும் என்ற கேள்வி வருகிறது….
View More நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)