உங்கள் தரப்பின் நியாயம் என்ன? ஓய்வூதிய பிடித்தம் என்னவாயிற்று எனத் தெரியவில்லை என்கிறீர்கள். பள்ளிகளை மூடுவதை தடுக்கிறீர்கள் .. இக்கோரிக்கைகளை நான் சரி என்பேன். நிச்சயம் அரசு இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் இவற்றை ஒப்புக்கு சப்பாணியாய் வைத்துக்கொண்டு சம்பளஉயர்வு , பழைய ஓய்வூதியம் என்று பாடுகிறீர்கள்… கல்வித் தரம் சரியில்லை எனில் கேள்வி கேளுங்கள் என்கிறீர்கள் சரி….யாரைக் கேட்பது ? இதுவரை பள்ளியின் மோசமான தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தியாக செம்மலான ஆசிரியர்களை காட்டுங்களேன் பார்ப்போம்…
View More ஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்Category: சமூகம்
இந்து சமுதாயம், வாழ்க்கை முறை, சமூக பிரசினைகள், தீர்வுகள்…
நீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன?
தமிழகத்தில் மாணவர்கள் கேட்ட மையங்கள் ஒதுக்கப்படவில்லை எனவும், மையங்களின் எண்ணிக்கை விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டிருந்ததை விட குறைக்கப்பட்டதாகவும் பங்கெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மையங்களின் எண்ணிக்கை அமையவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இது குறித்து தகவல்களை திரட்ட தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தோம். கிடைத்த விவரங்கள் இக்கட்டுரையில்…. சராசரியாக எத்தனை மாணவர்களுக்கு ஒரு மையமும் ஒரு மையமும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பார்த்தால், 615 மாணவர்களுக்கு ஒரு மையம என்ற விகிதத்துடன் கர்நாடகா முதலிடத்திலும் 668 மாணவர்களுக்கு ஒரு மையம் என்ற விகிதத்துடன் உத்தரப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன. தமிழ் நாடு 631 மாணவர்களுக்கு ஒரு மையம் என்ற விகிதத்துடன் நான்காம் இடத்தில் உள்ளது…
View More நீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன?சல்லிக்கட்டு : கலாசாரத் திரிபுகளும் மீட்டெடுப்புகளும்
சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் வரைகூட காளையை அடக்குபவர்கள் அந்தப் போட்டியை நடத்தும் கோவிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையில் பங்குபெற்று, நெற்றி நிறைய விபூதி பட்டை இட்டுக்கொள்வார்கள். வேட்டியை தார்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு களத்தில் குதிப்பார்கள். இப்போதைய போட்டிகளில் பங்குபெறுபவர்கள் விபூதி இட்டுக்கொள்வதில்லை. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டிக் கொண்டு களம் காண்பதில்லை… காளையை அடக்குவதற்குப் பின்னால் என்ன மனநிலை செயல்படுகிறது..? ஆண் என்கிற கர்வம். ஊரில் எல்லார் முன்னாலும் வீரனாக வலம் வர வேண்டும் என்ற ஆசை. பெண்கள் முன்னால் தலை நிமிர்ந்து நடக்கவேண்டும் என்ற ஆணாதிக்க மனம்….
View More சல்லிக்கட்டு : கலாசாரத் திரிபுகளும் மீட்டெடுப்புகளும்தமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி அனைத்து திக்கிலும் சுற்றி வளைத்தது போல சர்ச்சுகள் வந்துவிட்டன என்று கூகிள் வரைபடத்தைப் பல நண்பர்கள் பகிர்ந்து ஆவேசப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது திடீரென்று நடந்து விட்ட ஒன்றா என்ன? தமிழகத்தின் ஒவ்வொரு சிறு/பெரு நகரத்திலும் ஊர்களிலும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு துல்லியமாக திட்டமிட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள இந்துக்கள் ஒன்றிணைந்து அங்கங்கு நிகழும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பைத் தம்மளவில் தடுத்து நிறுத்த இப்போதே முனைந்து செயல்படாவிட்டால்…? உங்களுடன் இப்போது இளித்தும் சிரித்தும் பேசிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களின் சந்ததிகள் வெறிபிடித்து வந்து உங்கள் கோயில்களை இடிப்பார்கள், சிதைப்பார்கள், இந்துவாக நீங்கள் வாழவே முடியாது என்ற அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்…
View More தமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள வேதாரண்யம், திருத்துறைபூண்டி, பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ஆர்எஸ்எஸ் – சேவா பாரதி புயல் நிவாரண பணி முகாம்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொருளாகவும், பணமாகவும் உதவி செய்ய விரும்புவோருக்கான தொடர்புகள் கீழே… புயலுக்கு பின் முதலில் களத்திற்கு வந்த சேவாபாரதி சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த முடிவு செய்து பணியை துவக்கியது. பெட்ரோலால் இயங்கும் ரம்பங்கள் திருப்பூரிலிருந்து வாங்கி அனுப்பப்பட்டது. அதோடு 10,000 எம் ஏ எச் திறனுள்ள பவர் பேங்க் 200 முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்டு அங்கு நிவாரணப்பணியில் களத்தில் இருப்பவர்களுக்கும், அரசு நிர்வாகத்தில் இயங்குபவர்களுக்கும் வழங்கப்பட்டது. பழைய ப்ளெக்ஸ்கள், தார்பாய்கள் வாங்கப்பட்டு தற்காலிக முகாம்கள்,உடைந்த கூரைகள் மீது போட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் மிக முக்கியமாக உணவுப்பொருட்களை அனுப்பும் துவங்கியது…
View More கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன?
தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் எப்போது வந்தன? இது ஒன்றும் புதிய பழக்கமல்ல. தீபாவளி பண்டிகையின் மிக புராதனமான அம்சம் இது. மகாளய பட்சத்தில் பூவுலகிற்கு வந்த முன்னோர்கள் திரும்பிச் செல்லும் காலம் தீபாவளி. அவர்கள் தங்கள் லோகத்திற்குத் திரும்பச் செல்லும் வழியினை ஒளிமயமாக்கத்தான் உயர்ந்த கம்பங்களில் தீப்பந்தங்கள் பண்டைய காலத்தில் ஏற்றப்பட்டன. ஆகாயத்தில் வாணவேடிக்கைகளும் கூட இதற்காகத்தான் தீபாவளி சந்தர்பத்தில் ஏற்படுத்தப்பட்டன. பண்டைய நூல்களில் இதற்கு “உல்கா தானம்” என்று பெயர்.. விஜயநகர சாம்ராஜ்யத்திலும் (பொ.யு. 1336 முதல்) , மொகலாயர்களின் காலகட்டத்திலும், மராட்டிய பேஷ்வாக்கள் ஆட்சியிலும் கூட மகாநவமியினை தொடர்ந்து வாணவேடிக்கைகள் விசேஷமாக செய்யப்பட்டன. ஒரிய அரசனான ப்ரதாப ருத்ரனின் (பொ.யு. 1497-1539) ஆட்சியில் வாணவேடிக்கைகள் நடந்தது பற்றிய குறிப்புகள் உள்ளன. கேரளத்திலும் காஷ்மீரத்திலும் கூட வாணவேடிக்கைகள் இருந்தது பற்றி குறிப்புகள் கிடைத்துள்ளன. விசேஷமாக கேரளத்தில் நீலகண்டன் என்பவரால் “வெடிக்கம்ப விதி” என்று பட்டாசுகள் தயாரிப்பு பற்றி ஒரு நூலே எழுதப்பட்டுள்ளது…
View More தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன?அழகிய மரமும் பூதனையின் பாலும்
லயோலா போன்ற கிறித்துவர்களின் கல்வியோ தெரசா போன்றோரின் உதவியோ, எல்லாமே கிறித்துவ மத மாற்றத்திற்கான ஒரு கருவியே. இதனாலே தான் கிறித்துவர்கள் கொடுக்கும் கல்வி பூதனையின் பால் போன்றது. அதில் சில நச்சு வஸ்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கும். மிதமான வகையில் கிறித்தவத்தின் மீது ஒரு நன்றியும்,நன்மதிப்பும் கொடுக்கும்; சராசரியாக இந்து மரபின் மீது ஒரு அக்கறையின்மையும் ஏளனமும் உண்டுபண்ணும்; தீவிரமாயின் இந்து சமய பண்டிகைகள் கொண்டாடினாலோ, மரபின் அடையாளங்களை அணிந்தாலோ தண்டிக்க கூடச்செய்யும். அண்மையில் கூட அத்தகைய செய்திகள் வந்துள்ளன…. இந்த பொய் வரலாற்றிற்கு வைரமுத்து போன்றோர் சாட்சி கூறிவருவது மிகவும் ஈனச்செயல். “கிறிஸ்துவர்கள் வராவிட்டால் தமிழ் நாட்டில் கல்வி பொதுவுடைமை ஆகியிருக்காது”, என்று அவர் கூறுவது, ஒரு திருடன் ஊர் சொத்தை கொள்ளையடித்து தன் வீட்டில் அன்னதானம் செய்வதை போற்றுதல் போல. மரபுக்கல்வியாகிய அழகிய மரத்தின் நிழலில் பொதுவாக அனைவரும் படித்தனர், அதை சாய்த்துவிட்டு, பெஞ்சுகள் செய்து, கிறித்துவக்கல்வி என்னும் கலப்படப்பாலை ஊட்டுவோர்க்கு நன்றி அறிவித்தல் அறிவீனம்…
View More அழகிய மரமும் பூதனையின் பாலும்கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன?
முன்பு இந்த மதமாற்ற கொள்ளையர்கள் இந்தியாவுக்குள்ளே வந்த போது பிராமணர்கள் மீது இறைச்சியையோ அல்லது ரத்தத்தையோ வீசிவிடுவார்களாம். மற்ற பிராமணர்கள் அவரை ஒதுக்கிவிடுவதால் வேறு வழியில்லாமல் மதம் மாறி வாழவேண்டியிருக்குமாம். அப்படி எவ்வளவோ பேரை மதம் மாற்றினார்களாம். அதே போல் இன்றைக்கு பேரை மறைத்து வெறும் விளம்பரம் என கொடுக்கும்போது ஏமாந்த ஆட்களையும் வசைபாடி அவமானப்படுத்தி துரத்தி விடுகிறோம். வெளங்குமா? அவர்களுக்கு புரியவைத்து, திருத்தி, அரவணைத்து செல்லவேண்டும். நமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்… பரப்புரை செய்ய வருபவர்களை விரட்டிவிடலாம். பதிலடி கொடுத்துவிடலாம். ஆனால் நம்மில் நலிந்தோருக்கு உதவி? தேவையிக்கும் குடும்பங்களுக்கு உதவியும் ஆறுதலும்? முன்னேற துடிக்கும் இளைஞர்கள் இளைஞிகளுக்கு வழிகாட்டுதல்? இதை யார் செய்வது?…
View More கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன?வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்
மானமுள்ள வன்னியர்கள் யாராவது இருந்தால் “வன்னிய கிறிஸ்தவர்” “கிறிஸ்தவ வன்னியர்” ஆகிய அவமானகரமான பெயர்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வைக்கக் கிளர்ந்தெழ வேண்டாமா? புனிதமான அக்னிச்சட்டியின் மீது மானுட விரோத அன்னியமத சின்னமான சிலுவையை வரைந்திருப்பதை எப்படி சகித்துக் கொள்கிறீர்கள்?… அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் முழுக்க வன்னியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவருகிறார்கள். காரணம் என்னவென்று தெரியவில்லை. மதம் மாறினாலும் அவர்கள் வன்னியர் சங்கத்திலும், பாமகவிலும் தொடர்ந்து இருப்பதால் பாமக தலைமையும் கண்டுகொள்வதில்லை… மதமாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிட்ட சாதி சமுதாய அமைப்புகளும், இந்து அமைப்புகளும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இணைந்து இயங்கினால் கிறிஸ்தவ மதமாற்றப் பிசாசுகளை கட்டாயம் விரட்ட முடியும். அது நிகழ விடாமல் தடுப்பது சாதிக்கட்சிகளின் சுயநல சுயலாப அரசியலும், அதை நன்றாகப் புரிந்து வைத்துள்ள கிறிஸ்தவ மதமாற்றிகள் விரித்த வலையில் அந்த சாதி அமைப்புகள் வீழ்ந்து விட்டதும் தான்…
View More வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன?
பத்திர பதிவு என போனால் அரசு காசு வாங்கிக்கொண்டு இன்னாருக்கும் இன்னாருக்கும் இடையே ஒரு பதிவு நடந்தது என்று மட்டும் தான் எழுதும். அதுவும் பொதுவான அல்லது இணைக்கப்பட்ட பதிவு ஆவணம் என ஒன்று இருக்காது. யாரேனும் ஆக்கிரமித்தால் கோர்ட்டுக்கு ஒரு 100 வருசம் நடக்கவேண்டும். இந்தியாவிலே 60 சதம் வழக்குகள் நிலத்தகராறு வழக்குகள் தான். இதனால் என்ன நடக்கிறது? புற்றீசல் போல இஷ்டத்துக்கும் எலிவளை, புறாக்கூண்டு போல ஆங்காங்கே கட்டிடம் கட்டிக்கொண்டே போகிறார்கள்…எல்லாவற்றிக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிமுறைகள் வரைமுறைகள் இருக்கவேண்டும். இல்லாவிடில் எப்படி 20,000 பேர் வேலைசெய்யும் நிறுவனத்தின் கழிவையும் 40 பேர் குடியிருக்கும் வீட்டின் கழிவையும் ஒரே மாதிரி அகற்றி திட்டம் போடுவது? திட்டம் போடுவதன் முதல் பகுதியே கணக்கெடுப்பு என்றால் நிலம் பினாமியிலே இருக்க முடியாது, கருப்பு பணத்திலே நிலம் வாங்க முடியாது. இதனால் ஆதார் கூடாது இணைப்பு கூடாது என குதிக்கிறார்கள்…
View More ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன?