எந்தப் பரமாத்மா இந்த உலகம் முழுவதையும் கட்டி வைத்திருக்கிறாரோ, அவரைக் கட்டி வைத்து விடலாம் என்று யசோதாம்மா நினைத்து விட்டார்கள். அவருடைய ஒப்புதல்லில்லாமல் அவரை யாராவது கட்ட முடியுமா? யார் தன்னுடைய மனதில் ‘த்வதீய’ பாவனையை விட்டு விட்டார்களோ, அவர்களுடைய கட்டுக்குள் மட்டும் தான் வருவார்; மற்றவர்களுடைய கட்டுக்குள் வர மாட்டார். த்வதீய என்பதன் அர்த்தம் ‘எனது’ ‘உனது’ என்கிற பாவனை. அதை விட்டாலொழிய அவர் கட்டுக்குள் வர மாட்டார்.
View More வெண்ணைப் பானைCategory: ஆன்மிகம்
[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி
தம்மிடம் பயிற்சி பெற்ற கண்மணிகள் உலகுக்கு என்ன சமூக சேவை செய்கிறார்கள் என்பதை அவர்கள் வாயிலாகவே கேட்டு மகிழ்வது சுவாமிக்கு பிடிக்கும். இதனால் சமூக சேவை செய்யாதவர்கள் கூட செய்ய ஆரம்பித்தனர். ஏதோ கூடினோம்; கும்மாளம் போட்டோம்;கலைந்தோம் என்று இல்லாமல் சேவை புரியும் பயிற்சி பெற்ற பட்டாளம் இந்த முன்னாள் மாணவர் சங்க பட்டாளம் ஆகும். வெளி உலகிலேயே உள்ள முன்னாள் மாணவர் சங்கங்களுக்கும் திருப்பராய்த்துறை குருகுல பயிற்சி பெற்ற பழைய மாணவர் சங்கத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான்…
View More [பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதிதித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2
தண்மையான குளிர்ந்த மாலைகளை அணிந்தவராகவும், பட்டர்பிரான் என்று பண்டிதர்களுக்கு தலைவராகவும் பெரியாழ்வார் விளங்குகிறார். அப்பேர்பட்டவருடைய திருமகளான கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை, இரண்டு கை போதாது அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பானாம். அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று இன்புறுவர் என்று மங்கல வாழ்த்துரை செய்து திருப்பாவையை முடிக்கிறாள் ஆண்டாள்.
View More தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2அருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் – பயணம்
..கருவறையின் உட்புறம் ஒரு கோள வடிவாகவும், வெளிப்புறத் தளத்தை விட கொஞ்சம் பள்ளமாகவும் இருக்கும். லிங்கத்தின் மீது அபிஷேக பாத்திரத்தின் மூலம் நீர் சொட்டிக்கொண்டே இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. நம்மூர் கோயில்கள் போலன்றி ‘காட்சிக்கு எளியவனாய்’ கருவறையில் சுவாமியைத் தொட்டுத் தரிசித்து வேண்டி வரலாம். ..
View More அருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் – பயணம்தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1
ஆண்டாள் இயல்பாகவே பெண்ணாக இருப்பதால், இறைவனைத் தன் காதலனாக எண்ணி அவனை காதலனாக நினைத்து கசிந்து உருகி பக்தி செய்ய முடிந்தது. இதைக் கண்ட மற்ற ஆழ்வார்களெல்லாம், எவ்வளவு எளிதாக பக்தி செய்து இச்சிறுபெண் கண்ணனை அடைந்து விட்டாள்! பெண்ணாக இருந்தால் இறைவனை எளிதாக அடைந்து விடக் கூடுமோ என்று எண்ணி ஆண்டாளை உதாரணமாகக் கொண்டு அவர்களும் பெண் பாவனையில் கண்ணனைக் காதலித்தல், ஊடல் கொள்ளுதல், பிரிந்து வருந்துதல், தூது விடுதல், மடலூர்தல் என்று விதவிதமாக நாயகி பாவத்தில் கண்ணனை பக்தி செய்து அனுபவித்தனர் போலும்
View More தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1கதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்
புத்தர் இந்தப் பிணக்கைத் தீர்க்க மணிபல்லவம் வந்தார்… ‘எந்த விக்கிரகத்தின் வலது கால் அசைவதைக் காண்கிறாயோ, அதுவே சரியானது என்று காட்டு’ எனக் கட்டளையிட்டாள்… “ஒரு மார்பிழந்த திருமாபத்தினி” என்று போற்றப்படும் கண்ணகியின் கற்பு அவளை தெய்வீக நிலைக்கு உயர்த்தியிருக்கிறது… அம்பாள் திருவடிவத்தை கிறிஸ்துவின் அன்னையான மரியாள் என்று காட்டினார்கள். வந்தவர்கள் மகிழ்ந்து அக்கோயிலை கத்தோலிக்க மரபுப்படி மாற்றி ஜெபமாலை மாதா என்று போற்றினார்களாம்..
View More கதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்பகவானைக் காணவில்லை
…மற்றவர்கள் சாப்பிட அமர்ந்தார்கள். அனைவருக்கும் இலை போடப்பட்டது. வழக்கமான இடத்தில் ரமணர் இல்லை. பகவான் எங்கே ? எல்லாரும் தேடினார்கள். பகவானைக் காணவில்லை!… நீங்கள் உங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து காட்டலாம். இந்தக் குரங்கு மட்டும் கொண்டு வந்து காட்டக்கூடாதா ? இது என்ன நியாயம் ?” என்று கேட்டார். அன்பர்கள் அடங்கி விட்டனர். குரங்கு தன் குட்டியுடன் உள்ளே வந்து பகவானிடம் சிறிது நேரம் தன் குட்டியை வைத்திருந்துப் பின் எடுத்துச் சென்றது…ரமணர், திருடர்களிடம், “சமையல் அறையில் சாப்பாடு இருக்கிறது. சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்று கருணையோடு சொன்னார்…
View More பகவானைக் காணவில்லைபாலகிருஷ்ணனும் பசித்த துறவியும்
கிருஷ்ணனை அந்தத் துறவியின் முன்னால் கொண்டு வந்து அவருடைய பாதங்களில் கிடத்தினார்கள். கிருஷ்ணனும் பவ்யமாக நமஸ்காரம் செய்துக் கொண்டே துறவியின் பாதங்களை இறுக்கத் தழுவிக் கொண்டார்… நீலமேக வண்ணன் வெள்ளை வெளேரென்றிருந்த பால்பாயாசத்தை உண்ணலானார். என்ன ஒரு கான்ட்ராஸ்ட்! கோமளமான வாயைச் சுற்றிலும் பாயாசம்… இந்த மாளிகையைச் சுற்றி நான்கு வாசல்கள் உள்ளன. ஒரு வாசலுக்கு ஒருத்தர் என்ன இரண்டு பேரைக் காவலுக்கு நியமிக்கிறேன். நந்தகோபரும் அவர்களோடு சேர்ந்து வாசலைக் காப்பார்….
View More பாலகிருஷ்ணனும் பசித்த துறவியும்[பாகம் 6] சித்பவானந்தரின் குணநலன்கள்
கொல்லாமை. ஆசையின்மை, ஒழுக்கம், சகிப்புத்தன்மை, நேர்மை, தைரியம், வைராக்கியம், தலைமைப்பண்பு ஆகிய நவநற்பண்புகள்தான் சின்னுவை சித்பவானந்தர் ஆக்கியது என்றால் அது மிகையாகாது… எம்.ஜி.ஆர் காலதாமதமாக வந்ததை சுவாமிஜி சுட்டிக்காட்டினார். அவர் வருத்தம் தெரிவித்த அடுத்த விநாடியே சிரித்து ஏற்றுக்கொண்டார் நமது சித்பவானந்தர்…
View More [பாகம் 6] சித்பவானந்தரின் குணநலன்கள்ஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்
ஆழமில்லாத அந்த கடல் பகுதியில் இந்த தேசத்தின் பல பகுதிகளில் வாழும் இந்துக்கள் தங்கள் பெற்றோர், முதாதையர்களுக்கு இறங்கி நின்று தர்ப்பணம் என்று அழைக்கபடும் அஞ்சலியை செலுத்துகிறார்கள். எண்ணற்ற இந்திய மொழிகளின் தொனியில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலிப்பதை கேட்கமுடிகிறது. இங்கு செய்யும் இந்த புனித காரியத்தால் அவர்களது ஆத்மாக்கள் சாந்தியுடன் சொர்க்கம் அடையும் என்ற ஆழந்த நம்பிக்கை. வருபவர்களில் பலர் தங்கள் சிறுவயது குழந்தைகளுடன் வந்திருக்கும காட்சியை கண்டபோது அந்த பிஞ்சுமனங்களில் இப்படிவிதைக்கபடும் நம்பிக்கை விதைகள் தான் இந்து மதம் என்ற அழியாத விருட்சம் பல ஆயிரமாண்டுகளாக தொடர்ந்து வளர்கிறதோ என்ற எண்ணம் எழுந்தது.
View More ஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்