சோழமன்னனும் அரசியும் புனலாடிக் கரையேறியபோது அரசியின் மார்பில் மாலை இல்லாததைக் கண்டான். “இறைவனே! உனக்குச் சாற்ற நினைத்த முத்துமாலையைக் காவிரிவெள்ளத்தில் இழக்கும் தீவினையை உடையவன் ஆயினேன். இந்த ஆரத்துக்கு நிகரான வேறு ஆரமெவ் வுலகினு மில்லையே!. என்னுடைய பிழையைத் தீர்த்தாண்டருள் புரிவையேல், அந்த ஆரத்தை நின் திருமேனியில் நீயே பெற்று அணிந்தருள வேண்டும்!” என்று இறைவனிடம் முறையிட்டான். முத்தாரம் சொன்னவாறு இறைவன் திருமேனியை அடைந்தது.
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 7 [நிறைவுப் பகுதி]Category: ஆன்மிகம்
அருணாசலத்தில் ‘ம’கரத்தின் மகத்துவம்
காலப்போக்கில், அதைப் படிக்கப் படிக்க, அதில் ஏதோ ஒரு மறைபொருள் உள்ளதோ என்று எனக்குத் தோன்றும்… ஒரு மலையாகவும் நம் பிறவிப்பிணி மருந்தாகவும் நம் கண்ணெதிரே அவன் உருவெடுத்துள்ளான் என்பதை நாம் உணரவேண்டும்…
View More அருணாசலத்தில் ‘ம’கரத்தின் மகத்துவம்உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது!
துடைப்பம், தண்ணீர் வாளிகள், மம்மட்டி, அரிவாள் உள்ளிட்டவற்றுடன் பக்தர்கள் தூய்மைப் பணியில் இறங்கினார்கள்…தீட்சிதர்கள், அவர்களுக்கு அன்புடன் அன்னமிட்டனர். ஜாதி வேறுபாடின்றி அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து தீட்சிதர்கள் வழங்கிய உணவை உண்டனர்… சிதம்பரம் கோயில் தூய்மையானது. இப்போது புது மெருகுடன் கோயில் காட்சி அளிக்கிறது; சிதம்பரம் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
View More உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது!யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2
மந்திரங்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதன் பயன் என்று ஒன்று உண்டு. நம்முடைய சூக்ஷ்ம உடலில் சில குறிப்பிட்ட அதிர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்துவதன் மூலம் மந்திரங்கள் வேலை செய்கின்றன. … தினமும் இரவு தூங்கப் போகும் முன், ஒரு அரை மணி நேரம், அன்றைய மனோ நிலைக்கு உகந்த ஆன்மிக நூல் ஒன்றை படிப்பது அல்லது சொற்பொழிவு பதிவைக் கேட்பது என்னும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்…
View More யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2சில ஆழ்வார் பாடல்கள் – 2
இனிய ஒலியெழுப்பும் கண்ணனின் குழலை விட, ஓங்கி ஒலிக்கும் சங்கைத் தான் ஆண்டாள் அதிகம் பாடியிருக்கிறாள்… அசுரர்களை அழித்து தன் அடியாரைக் காக்கும் பௌருஷம், அதோடு பெண்மைத் தனம் கொண்ட குறும்பு – இப்படி பெண் அணுக்கம் உள்ள அவ்வளவு எதிர்பார்ப்புகளின் லட்சியமாகவும் கண்ணன் இருக்கிறான்… உலகும் இயற்கையுமாய் அழகை விரிக்கும் படைப்பின் விதை அது என்பதால் “கொப்பூழில் எழு கமலப் பூவழகர்”என்றாள்…
View More சில ஆழ்வார் பாடல்கள் – 2சில ஆழ்வார் பாடல்கள் – 1
ஊர் அடங்கி விட்டது. இவள் காதலைப் பற்றி வம்பு பேசிப்பேசியே களைத்துப் போன ஊர்! அந்த வம்புப் பேச்சுக்கள் தான் இவளது காதலுக்கு உரமாக இருந்ததாம்… நம்மாழ்வார் பாடல்களில் சொல்லப் படும் தத்துவம், கோட்பாடாக, கருதுகோளாக நேரடியாக இல்லாமல் கவிதையாகவே இருக்கிறது… நாராயணன் பிரபஞ்சத்தினின்றும் வேறான ஒரு கடவுளாக அல்ல, பிரபஞ்சமாகவே நிற்கும் கடவுள் (cosmic God) என்ற சமய தத்துவத்தை… (ஊட்டி இலக்கிய சந்திப்பில் பேசியது).
View More சில ஆழ்வார் பாடல்கள் – 1தலபுராணம் என்னும் கருவூலம் – 6
வெளித்தோற்றத்தில் இந்த இரட்டைகளிடையே வேறுபாடு உள்ளதுபோலக் காணப்பட்டாலும், அவை ஒன்றையொன்று தழுவியே நிற்கின்றன. பாமரம், வைதிகத்தை நோக்கி முன்னேற, வைதிகம் பாமரத்தைத் தழுவி அணைத்துக் கொள்வதை, இந்துப் பண்பாட்டின் வெளிப்பாடுகளாகிய இசை, இலக்கியம், சமயம் ஆகிய அனைத்திலும் காணலாம்…. சிறுதெய்வங்களுக்குத் தலபுராணங்கள் ஏற்றம் தந்து விடுகின்றன. நாளடைவில் சிறுதெய்வங்களும் வைதிகக் கடவுளராகி வேதநெறியில் வழிபடத் தக்கோராக மாற்றம் அடைந்துவிடுகின்றனர்.
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 6அச்சுதனின் அவதாரப் பெருமை – 2
ஸ்ரீமத் பாகவத புராணத்திற்குச் சாரமாக வடமொழியில் 1036 பாசுரங்களாகப் பாடினார். அதை குருவாயூர் திருத்தலத்தில் அரங்கேற்ற, இவர் பாடிய ஒவ்வொரு தசகத்துக்கும் (பத்துப் பாசுரங்களுக்கும்) குருவாயூரப்பனே தலையசைத்து வரவேற்றதாக இத்தல வரலாறு கூறும்… பிறந்த பெண் குழந்தை மெதுவாக அழுது கொண்டிருந்தது. கதவுகள் திறந்து கிடந்தன. அந்த இல்லத்திற்குள் வசுதேவன் சென்றார். அங்கே உம்மைப் படுக்கவைத்து விட்டு அங்கே இருந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு விரைவாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார்…
View More அச்சுதனின் அவதாரப் பெருமை – 2யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 1
மனதைத் தூய்மைப்படுத்தி, துக்கத்திலிருந்து விடுதலை அடைந்து, பேரின்பமான உங்கள் ஸ்வரூபத்தை நீங்கள் உணர விரும்பினால், யோகத்தை முழு மூச்சுடன் வாழ்க்கை முறையாக மாற்றுவது அவசியம். நீங்கள் கிறித்தவராகவோ, முஸ்லீமாகவோ இருந்தால், முதலில் அந்த மூட நம்பிக்கைகளில் இருந்து முழுவதும் விடுபட வேண்டும். வேண்டுமானால் பகுத்தறிவுவாதியாக இருந்து விஞ்ஞான ரீதியில் யோகத்தை அணுகலாம். … தனி நபர்களை கடவுளாகப் பாவித்து சாமான்ய மனிதர்களால் இயற்றப்படும் சொற்றொடர்களை மந்திரங்கள் என்று கொள்வது சாத்திர ரீதியில் பார்க்கையில் தவறு.
View More யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 1அச்சுதனின் அவதாரப் பெருமை
பிரம்மத்தின் மேன்மையை மனதில் வைத்துக் கொண்டாலொழிய பிரம்மம் எடுக்கும் அவதாரங்களின் மகிமை புரிவது கடினம். நிற்க, இங்கு ஒரு நியாயமான ஐயம் எழக்கூடும். “நமக்கு எட்டாத இந்த பிரம்மத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்வதால் ‘நமக்கு என்ன பயன்? அப்படி ஒரு பொருள் இல்லை’ என்று கூறிவிட்டு நிம்மதியாக இருக்கலாமே?” என்று கேட்கலாம்.
View More அச்சுதனின் அவதாரப் பெருமை