… ஆணுக்கேனும், பெண்ணுக்குகேனும் இளமைப் பிராயம் கடந்த மாத்திரத்திலே போக விருப்பமும் போக சக்தியும் இல்லாமற் போகும்படி கடவுள் விதிக்கவில்லை. உலகத்தின் நலத்தைக் கருதி கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் போக இச்சையை அக்கிரமமான வழிகளில் தீர்த்துக்கொள்ள முயல்வோரை மாத்திரமே நாம் கண்டிக்கலாம்… வீண் சந்தேகம், பொறாமை, குருட்டுக்காமம், பெண்களை ஆத்மாவில்லாத, ஹ்ருதயமில்லாத, ஸ்வாதீனமில்லாத அடிமைகளாக நடத்தவேண்டுமென்ற கொள்கை இவற்றைக்கொண்டே நம்மவர்களில் சில புருஷர்கள்….
View More இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை – பாரதியார் கட்டுரைCategory: மகளிர்
தீராத விளையாட்டுப் பிள்ளை
… யசோதை கண்ணனைத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். கண்ணன் தொட்டில் கிழிந்து விடும்படி உதைக்கிறான். [பின்னால் சகடாசுரனை உதைப் பதற்கு ஒத்திகை பார்த்திருப்பானோ?]ஐயோ இப்படி உதைத்து, உதைத்துக் குழந்தைக்குக் காலெல்லாம் வலிக்கப் போகிறதே யென்று ஆதங்கத்தோடு தூக்கி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால் இடுப்பையே முறித்து விடுகி றானாம் ….
View More தீராத விளையாட்டுப் பிள்ளைபுனிதர் அல்போன்ஸா ஒரு இனவாதக்குறியீடா?
ஒரு வெள்ளை இனமேன்மை வாத மனம் தான் போப் பதினாறாம் பெனிடிக்ட் *இந்தியாவின்* *முதல்* பெண் புனிதரை பட்டமளித்து அங்கீகரித்ததாகக் கூற முடியும்.. ஏனெனில் இந்தியா ஏற்கனவே அதன் மண்ணில் வளர்ந்த தெய்வீகப் பெண்களான புனிதைகள் பலரைக் கொண்டிருக்கிறது. சொல்லப் போனால், இனம் குறித்த அதீத உணர்ச்சி கிறிஸ்தவ சபையில், குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் அதிகமாக இல்லாதிருந்திருந்தால் அல்போன்ஸா (”இந்தியாவுக்கான” என்றில்லாமல்) கத்தோலிக்க உலகனைத்துக்குமான புனிதையாகக் குறிப்பிடப்பட்டிருப்பார்.
View More புனிதர் அல்போன்ஸா ஒரு இனவாதக்குறியீடா?பெண்கள், குடும்பம் – 1
நம் கடவுளர்கள் கூட மனைவியரோடு தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் நாம் கல்யாணம், குடும்பம் என்றெல்லாம் கூறி மகிழ்கின்றோம். ஈசன் உடலில் சரிபாதியை அன்னைக்குக் கொடுத்திருக்கின்றான். காக்கும் கடவுளான விஷ்ணுவோ தன் நெஞ்சிலேயே அவளைச் சுமக்கின்றார். படைப்பவரான பிரம்மாவோ தன் நாக்கிலேயே மனைவியை வைத்திருப்பதாகக் கூறுவார்கள். கல்விக்கு அதிபதியாக நாம் கூறுவது சரஸ்வதி என்னும் பெண் தெய்வமே. அதே போல் வீரத்துக்கு மலைமகளையும், செல்வத்துக்கு அலைமகளையும் அதிபதியாகக் கூறுகின்றோம்…
View More பெண்கள், குடும்பம் – 1பெரிது பெரிது பெண்மையின் சக்தி!
பெண் என்பவள் ஆதாரசக்தி, வாழ்வின் ஆதாரம். பெண் இல்லை எனில் சிருஷ்டியே இல்லை. அவளை முன்னிறுத்தியே சிருஷ்டி நடந்து வருகின்றது… குடும்பத்தைத் தாங்கும் ஒரு பெண், தன் தனி ஒரு குடும்பத்தை மட்டுமின்றி இந்த சமூகத்துக்கேப் பெரிய உதவி புரிகின்றாள். நல்மக்களை வளர்ப்பதன் மூலம் நாட்டையே உயர்த்துகின்றாள்.
View More பெரிது பெரிது பெண்மையின் சக்தி!பெண்மைக்குப் பெருமை சேர்த்த தமிழ் மகளிர்
பாண்டிய நாட்டின் அரசியாக ஆட்சி புரிந்த தேவி மீனாட்சி முதல் மதுரையை ஆண்ட பெண்ணரசிகள் பலர் இருந்திருக்கின்றனர். இந்துமதத்தில், கலாசாரத்தில் பெண்கள் ஒருநாளும் சிறுமை அடைந்திருக்கவில்லை. பெருமையாகவே இருந்திருக்கின்றார்கள்…
View More பெண்மைக்குப் பெருமை சேர்த்த தமிழ் மகளிர்பெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்!
பெண்கள் இன்றைய காலகட்டத்தில் போகப் பொருளாகவும், பொழுதுபோக்குச் சாதனமாகவும், விளம்பரங்களுக்குத் தேவைப்படும் மாதிரிகளாகவுமே நினைக்கப் படுகின்றனர். சரித்திர காலங்களில் பார்த்தோமானால், நிறையப் பெண்கள் தைரியம், வீரம், சொல்லாற்றல் நிரம்பியே இருந்து வந்திருக்கின்றனர்…
View More பெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்!கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்
ஸ்ரீ கிருஷ்ணர் “பெண்களும் பரகதி பெறுவர்” (கீதை 9.32) என கீதையில் கூறுகிற போது அவர் கூறுவது ‘பெண் தாழ்ந்தவள்’ எனும் மனநிலை படைத்த ஆணினை நோக்கி என்றே கருத வேண்டும். “அவளுக்கு ஞானமும் வீடுபேறும் கிடைக்கும்” என கீதை சொல்வது மிக உன்னத நிலையை இந்த பிறவியிலேயே அவள் அடைந்திட முடியும் என்னும் எக்காலத்துக்குமான உண்மையையும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்….சீதை எந்த இடத்திலும் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கும் ஒரு பெண்ணடிமைப் பாத்திரமாக சித்தரிக்கப் படவில்லை. மாறாக வலுவான பெண்ணியப் பார்வை கொண்ட, அதே நேரத்தில் சமுதாயத்துக்கு ஒரு தன்னிறைவு இலட்சியமாக திகழும் பாத்திரமாகவே அவள் காட்டப் படுகிறாள். குறுகிய எல்லைகளைக் கடந்து மானுடம் முழுவதையும் அரவணைக்கும் பார்வையை சீதை மூலமாக இராமாயணம் நமக்கு வைக்கிறது
View More கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்