மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்

அசாம் தீர்க்க முடியாத ஒரு சிக்கலில் மாநில அரசின், இந்திய அரசின் கையாலாகாத் தனமா, குறுகிய கால சுயலாபத்திற்காக, அசாமின், நாட்டின் சரித்திரத்தையே காவு கொடுத்துவரும் சோகத்தை இந்த சாதாரண அன்றாட வாழ்க்கைச் சித்திரத்தின் மூலம் சொல்லும் தைரியம் மணிராமுக்கு இருக்கிறதே ஆச்சரியம் தான்..ஆரவாரம் இல்லாது இந்த மாதிரி இன்றைய தமிழ் அரசியல் சமூக வாழ்க்கையை அப்பட்டமாக முன் வைக்கும் தைரியம் நம் தமிழ் நாட்டில் இல்லை. இனியும் வெகு காலத்துக்கு இராது என்று தான் தோன்றுகிறது

View More மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 13: விலைமாதர் இல்லங்களில் பெரியார்

பெரியார் அயல்நாடு சென்றபோது பல்வேறு நிர்வாணச் சங்கங்களைச் சுற்றிப் பார்த்ததையும், நிர்வாண சினிமா பார்த்ததையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவையெல்லாம் அவரது காவிரியாற்றங்கரைத் திருவிளையாடல்களைப் பற்றிய ஞாபகங்களின் எச்சங்களே தவிர இன்று அவரது திடீர் சீடர்கள் சிலர் புல்லரித்துப்போவது போலப் புரட்சிகரமான செயல்பாடுகள் அல்ல.

”பாலினுக்கு அடுத்த பட்டணமாகிய போஸ்டாமில் பெரியார் இருந்த ஏழு நாள்களில் நான்கு நாள்களை நிர்வாணச் சங்கங்களிலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.” (நன்றி :- காலச்சுவடு – செப்டம்பர் 2004)

View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 13: விலைமாதர் இல்லங்களில் பெரியார்

போகப் போகத் தெரியும் 29

ஈ.வெ.ராவின் சுயமரியாதைத் திருமணம் பற்றிப் பலர் பேசுவதைப் பார்க்கிறேன். அதைப் பற்றி அந்தப் பகுதி வரும்போது விரிவாகப் பேசுவேன். இப்போதைக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

‘சுயமரியாதைத் திருமணத்தை வலியுறுத்திய ஈ.வெ.ராவின் திருமணம் ஒரு சுயமரியாதைத் திருமணம் அல்ல.’

View More போகப் போகத் தெரியும் 29

சொற்றமிழ் சூடுவார்

பேணிக் காப்பாரின்றி எண்ணற்ற சிவன் கோயில்கள் தமிழகத்தில் சிதிலமடைந்து வருவதுபோல ஓதுவார் பரம்பரையும் போற்றுவாறின்றி மங்கி வருகின்றது… தீட்சிதர் கீர்த்தனைகள் திருமுறைகளுக்கு எதிரானவை அல்ல; தீட்சிதர் சுந்தரமூர்த்தி நாயனார் மேல் பத்திகொண்டு அவரைப் போற்றி ‘டக்கா’ என்னும் அபூர்வராகத்தில் ஒருகீர்த்தனை இயற்றியுள்ளார் …

View More சொற்றமிழ் சூடுவார்

இசைக்கூறுகள் – 5 : இசைப் பயிற்சி மற்றும் அரங்கிசை வடிவங்கள்

ஐரோப்பா இசை பயிற்சியில், சில சுரக்கோர்வைகளை கற்றுக்கொண்டு சின்ன பாடல்களையோ, துணை இசைக் கோர்வைகளையோ இசைக்கலாம். கர்நாடக சங்கீத பயிற்சிப் பாடங்களோ படிப்படியாக சுரங்களைப் பாடுவதையும், அவற்றைக் கோர்த்து ஒரு ராகத்தைப் பாடுவதையும் உருவாக்கும். இந்தப் பயிற்சியிலும் பல நிலைகள் உள்ளன…

View More இசைக்கூறுகள் – 5 : இசைப் பயிற்சி மற்றும் அரங்கிசை வடிவங்கள்

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 2

ஒரு மனிதன் தனக்காகவென்று தனியாகச் செய்கின்ற சாதனமன்று காயத்ரீ. ‘நம்முடைய அறிவை எப்பொருள் தூண்டுகிறதோ’ என்று அது பன்மையில் துவங்குகிறது. ‘அப்பெரிய பொருளை தியானிப்போமாக’ என்று பன்மையில் முடிகிறது. ஆத்மசாதகன் தனித்திருந்து சாதனங்கள் பயிலுகின்ற இடத்தும் எண்ணத்தால் தன்னை மற்ற உயிர்களோடு இணைத்துக் கொள்ளவேண்டும் … புறத்திலுள்ள சூழ்நிலை அறிவைத் தூண்டுவதற்கு ஏதுவாகிறது. தூண்டுதல் உடன்பாடு, எதிர்மறை ஆகிய இரண்டு நிலைகளிலும் நிகழ்கிறது.

View More காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 2

போகப் போகத் தெரியும் – 28

சுயமரியாதைத் திருமணம் ஆரம்பமான கதை இதுதான். ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பெண்களைக் கட்டிவைத்ததுதான் பகுத்தறிவுப் பாரம்பரியத்தின் தொடக்கம்.

View More போகப் போகத் தெரியும் – 28

மதன்லால் திங்க்ராவின் மரண அறிக்கை – நூற்றாண்டு நினைவுகள்

” ஒரு ஹிந்து என்ற முறையில் என் தேசத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம் என் தெய்வத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம். என் தேசத்தாயின் சேவை ஸ்ரீ ராமனின் சேவை. அவளுக்கு செய்யப்படும் சேவை ஸ்ரீ கிருஷ்ணனுக்கு செய்யப்படும் சேவை” .. சிறைக் கம்பிகளுக்குள் மரணமெனும் மணப்பெண்ணுக்காகக் காத்திருந்த அந்த இளைஞனின் பெயர் மதன்லால் திங்க்ரா. அவரது இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கனத்த இதயத்துடனும் இத்தகைய தியாகக் குழந்தைகளைப் பெற்ற பாரத மண்ணில் பிறந்ததற்காக சோகத்துடனான பெருமிதத்துடனும் ..

View More மதன்லால் திங்க்ராவின் மரண அறிக்கை – நூற்றாண்டு நினைவுகள்

பலுசிஸ்தானின் சுதந்திரப் போர்

அப்போதைய பலுசிஸ்தான் தலைவர்களில் ஒருவர் இந்திரா மீது மிகுந்த அபிமானமும் மரியாதையும் வைத்திருந்தார். அவர் தனது மகளின் திருமணத்தை புதுடெல்லியில் நடத்த விரும்பினார். புதுடெல்லியில் திருமணத்தை நடத்தினால் இந்திரா நேரில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிப்பார் என்று அவர் நினைத்ததுதான் அதற்கு காரணம். முதலில் இந்திராவும் இதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்தார். ஆனால் இதைப்பற்றி ஆழமாக யோசித்ததை அடுத்து…

View More பலுசிஸ்தானின் சுதந்திரப் போர்

மஹாகவி பாரதியாரின் கதைகள் – ஓநாயும் வீட்டு நாயும்

தூ! பிரஷ்டப் பயலே! என்னை நீ ஏமாற்றப் பார்த்தாய். உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா?நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய்ப்பேசினாய்; நான் சுதந்திரப் பிரியன்.

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – ஓநாயும் வீட்டு நாயும்