சொந்த கலாசாரம், தேச பக்தி, உயர் மதிப்பீடுகள் போன்றவை கல்வியின் அடிப்படையாக இருக்கவேண்டும். பொருளாதார, சர்வதேச அம்சங்கள் இரண்டாம்பட்சமானதாக இருக்கவேண்டும்.. இணையம் என்பது அனைவரையும் அருகே கொண்டுவந்து விட்டிருக்கிறது. இணைய வழி வகுப்புகள், கருத்தரங்குகள், சந்திப்புகள் போல் இணைய வழி குடும்ப நிகழ்ச்சிகள் மாதம்தோறும் நடத்தப்படலாம்…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 14கோவிட்: தொலைந்த உண்மைகளும், திசை தவறிய விவாதங்களும்
மருத்துவமனைகளின் ஆக்ஸிஜன் வினியோகக் குளறுபடியை அரசின் மீது சுமத்துகையில் ஒரு முக்கிய உண்மையையும் மறைக்கப் படிகிறது… மத்திய அரசு ஆக்ஸிஜன் வழங்குவதற்காக முன்கூட்டியே திட்டமிட்டும், பல அரசு மருத்துவமனைகள் கூட அவர்கள் இடத்திலேயே ஆக்ஸிஜன் உற்பத்தி வசதிகளுக்கான அரசின் திட்டத்தை முறியடித்தன… தற்போதைய கோவிட் சுனாமி பழையது அல்ல, மாறாக முற்றிலும் எதிர்பாராத வேகத்தில் தாக்குகிறது. வரலாறு காணாத இந்த சுனாமியை எதிர்கொள்ள எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. உண்மைகளை மறைக்காமல், விவாதங்களை திசை திருப்பாமல், பிற மீது பழி போடாமல், ஒட்டு மொத்தமாக எல்லோரும் உறுதியுடன் செயல்பட வேண்டிய தருணம் இது…
View More கோவிட்: தொலைந்த உண்மைகளும், திசை தவறிய விவாதங்களும்அஞ்சலி: தமிழறிஞர், ஆய்வாளர் பெ.சு.மணி
வெ.சாமிநாத சர்மா அவர்கள் மணி அய்யாவிடம் தனது வாழ்நாளில் பேர் சொல்லும்படி 100 புத்தகங்களாவது எழுதி விடு என்றாராம். அதனை தாரக மந்திரமாக கொண்டு தரமான ஆய்வு புத்தகங்களை மட்டும் எழுதி வருபவர். சுமார் 80 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். பெ.சு.மணி ஐயா பல்கலை கழக வளாகங்களில் பேராசிரியராக பணிபுரிந்து கை நிறைய சம்பளம் வாங்கி வேலை செய்பவருமல்ல. அஞ்சல் துறையில் இரவு முழுவதும் கடிதங்கள் பிரிக்கும் வேலையை செய்து கொண்டு பகல் முழுவதும் சைக்கிள் மிதித்து நூலகம் தோறும் சென்று தேனீ போன்று உழைத்து கொண்டு வந்த புத்தகங்கள் பல கல்லூரி பேராசிரியர்களுக்கு முன்னேறுவதற்கு இவரது புத்தகங்கள் படிக்கல்லாய் திகழ்ந்தது…
View More அஞ்சலி: தமிழறிஞர், ஆய்வாளர் பெ.சு.மணிபுதிய பொற்காலத்தை நோக்கி – 13
கிறிஸ்தவ மதம் உலக மக்கள் அனைவரையும் கிறிஸ்தவராக மாற்றத் துடிப்பதுபோல் கிறிஸ்தவ தேசப் பொருளாதார சக்திகள் தமது கார்ப்பரேட் பொருளாதார வடிவத்தையே உலகம் முழுவதிலும் திணிக்கத் துடிக்கின்றன. கிறிஸ்தவ தேச குளிர்பான நிறுவனங்கள் உலகம் முழுவதும் தாகத்துக்கு தனது பானத்தை மட்டுமே அருந்தவேண்டும் என்று நினைக்கின்றன. கிறிஸ்தவ தேசக் கல்வி அமைப்புகள் உலகம் முழுவதும் தனது கலாசாரம், வரலாறு, விஞ்ஞானம் இவை மட்டுமே இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகிறது. கிறிஸ்தவ தேச அரசியல் சக்திகள் உலகம் முழுவதும் ஜனநாயகத்தை மலரச் செய்யும் பெரும் சிலுவையைக் கஷ்டப்பட்டுத் தானே தோளில் சுமந்துகொண்டு தமது கைப்பாவைகளையே உலகம் முழுவதிலும் நியமித்துவருகின்றன…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 13புதிய பொற்காலத்தை நோக்கி – 12
ஆங்கிலம், கார், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், அலோபதி மருத்துவம், அறுவை சிகிச்சைகள், மின் விளக்குகள், ஃப்ரிட்ஜ், டி.வி, செல்போன், குளிர்பானங்கள் என எதையும் பயன்படுத்தக்கூடாது. மேற்குலகின் கண்டுபிடிப்புகள் வேண்டும். மேற்குலகைப் பழிக்கவும் வேண்டும் என்றால் எப்படி நியாயம் என்று ஒரு கேள்வி இங்கு எழுகிறது. மேற்குலகினர் நம்மை முடக்கினார்கள் என்பதைச் சொல்லும் தார்மிகத் தகுதியை அரை மேற்கத்தியராக ஆகிவிட்டிருக்கும் நாம் இழந்துவிட்டிருக் கிறோம். அந்த உண்மையைச் சொல்லவேண்டுமானால் நாம் நம் கடந்த காலத்துக்குத் திரும்பியாகவேண்டும். மாட்டுவண்டி, திண்ணைப் பள்ளி, பாட்டி வைத்தியம், ஓட்டு வீடு, அரிக்கேன் விளக்கு, அரை ஆடை, பிரசவ கால மரணங்கள், மண் ரோடு, கமலை ஏற்றம், ராட்டை, கிட்டிப்புள், கபடி, மரத்தடி பஞ்சாயத்து எனத் திரும்பியாகவேண்டும். இது சாத்தியமா?…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 12கானக மக்களும் மலைக்கோயில்களும்
கானக மக்களும் மலைவாசிகளும் தமக்கென்று ஒரு தனிக்கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் இந்துக்களே அல்ல – இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துக்கள் காலனியம் கட்டமைத்த வரலாறு மூலமாக புகுத்தப் பட்டன. தமிழில் உள்ள சைவ, வைணவ பக்தி இலக்கியங்களை சாதாரணமாகக் கற்பவர்களுக்குக் கூட இந்த சித்திரிப்புகள் எவ்வளவு பொய்யானவை என்பது புரியும். “கானவர் தம் மாமகளிர்” என்கிறார் சம்பந்தர். மலைக்குறவர் இனங்கள் திருமாலின் பொன்னடி வணங்கும் காட்சியைப் பாடுகிறார் பெரியாழ்வார்..
View More கானக மக்களும் மலைக்கோயில்களும்புதிய பொற்காலத்தை நோக்கி – 11
உலகம் முழுவதுமே எல்லாத் தொழில்களும் பரம்பரை வழியிலேயே கைமாற்றித் தரப்பட்டபோதிலும் பாரதத்தில் மட்டுமே அப்படி இருந்ததாகவே மெக்காலே கல்வி முத்திரை குத்தியது. ஐரோப்பாவிலும் நவீன பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகே கல்வி அனைவருக்கும் கிடைத்தது என்றாலும் பாரதத்தில் மட்டுமே கல்வி அனைவருக்கும் மறுக்கப்பட்டதாக அவர்கள் நம் வரலாற்றை எழுதிக் கொடுத்தார்கள். அதுவே இன்றைய அறிவுஜீவி, அரசியல் ஜீவி மட்டங்களில் மனனம் செய்யப்பட்டு முழங்கப்படுகிறது…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 11இரு புறநானூற்றுப் பாடல்கள்
ஒக்கல் வாழ்க்கையின் குரூரத்தால் அதன் வன்முறையால் நொந்து போன ஒருவனின் புலம்பலாகத் தான் இந்த எளிய கவிதை எனக்குத் தோன்றுகிறது. புல்லைத் தின்று வாழும் அந்த ஜீவனுக்கு மான் என்ற அடையாளம் கூட இல்லை, வெறும் ‘புல்வாய்’ அது… தமர் பிறர் அறியா அமர் – புறநானூற்றுப் பாடல்களை வாசித்துக் கொண்டே வரும் போது, இந்தச் சொற்றொடரைக் கண்டு திகைத்து நின்று விட்டேன். தம்மவர் என்றும் அயலார் என்றும் அறியாத போர்க்களம்…
View More இரு புறநானூற்றுப் பாடல்கள்புதிய பொற்காலத்தை நோக்கி – 10
எல்லாரும் எல்லா தொழிலையும் கற்றுக் கொண்டு விருப்பமான தொழிலைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய பள்ளிக் கல்வி முறை அன்று உலகில் யாராலும் நினைத்துப் பார்க்கவே பட்டிருக்கவில்லை. எனவே இந்தியாவிலும் அது இருந்திருக்கவில்லை… அக மண முறையும், குல பந்தி – குல விருந்து முறையும் இயல்பான தேர்வாகவே இருந்திருக்கிறது. இந்துசமூகத்தில் மட்டும் கடைநிலையில் இருந்தவர்களும் இழிவான தொழிலைச் செய்தவர்களும் மேலேற முடியாமல் போய்விட்டது என்ற வாதத்தில் அர்த்தமே இல்லை. அவர்களுக்கான வெளிகள், உரிமைகள், அதிகாரங்கள் எல்லா காலத்திலும் இருக்கவே செய்திருக்கின்றன…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 10இந்துக்களுக்கு இத்தனை தெய்வங்கள் ஏன்?
சாதாரண மனிதர்களுக்கு பனி என்பது ஒரே விதமாக வெண்மையாகவே தென்படும். எனவே ‘பனி’ என்றால் எல்லா பனியும் ஒன்றே என்று எண்ணுவோம். ஆனால் பனியோடு அதிக சமீபத்தில் வாழும் துருவப் பிரதேசவாசிகளான எஸ்கிமோக்களுக்கு பனியில் பல ரகங்களைத் தெரியும்.
பனியில் 48 விதங்கள் இருப்பதாக அவர்களின் விஞ்ஞானம் தெரிவிக்கிறது. அத்தனை வித பனிகள் பற்றிய ஆழ்ந்த அறிவு அவர்களுக்கு ஏற்படக் காரணம் பனியோடு அவர்களுக்குள்ள அருகாமையும், நெருக்கமுமே. அதைப்போல ‘ஒன்றே கடவுள்!’ என்று உணர்ந்து நிரூபித்து விளக்கிய போதிலும் கடவுளோடு அதிக நெருக்கமும் முழுமையான அனுபவமும் பெற்ற காரணத்தால் இறைவனை அனேக வித தேவதைகளின் வடிவத்தில் ஹிந்து தர்மம் தரிசிக்க முடிந்தது. விவரிக்கவும் முடிந்தது. கடவுளோடு அப்படி ஒரு நெருங்கிய, நித்தியத் தொடர்பு கொண்ட உண்மையான தெய்வ தரிசனம் ஹிந்துக்களுடையது…
