பசங்க-2: பார்க்க வேண்டிய படம்

“பசங்க– 2 பாரு தம்பி… நல்லா இருக்கு. குழந்தைகளுக்கான படம்” என்றார் நண்பர்…

View More பசங்க-2: பார்க்க வேண்டிய படம்

“சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்

இந்தத் தொடர், ராமாயணத்தை ‘சீதையின் பார்வையிலிருந்து’ சித்தரிக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால், ஒரு மாதத்திற்குப் பின், இந்தத் தொடர் தன்னிச்சையாக ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கி, வால்மீகி ராமாயணத்தின் மூலத்திலிருந்து முற்றிலும் விலகிவிட்டது.. மூலக் கதையை திரித்தது மட்டும் இல்லாமல், நவீன “மதச்சார்பற்ற” “முற்போக்கு” கருத்துக்களையும் அதன் மேல் திணிக்க முயற்சி செய்து, ஹிந்துக்களின் பண்டைய வரலாற்றின் ஒரு பகுதியாக, இதிகாசமாகவும் புனித நூலாகவும் கருதப்படும் ராமாயணத்தை கேலி செய்வது போல் அமைந்துள்ளது… ராம -லட்சுமணர்களுக்கும் மாரீசன்- சுபாகு தலைமையிலான ராட்சதர்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தம், அரசர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே நடைபெறுவதாகக் காட்டப்படுகிறது ! இந்தத் தொடரை உருவாக்கியவர்களுக்கு ஆரியப் படையெடுப்பு தொடர்பான கதைகளின் தாக்கம் அதிகம் இருந்திருக்கும் போல…

View More “சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்

ஆதிசங்கரர் படக்கதை — 6

நான் பூமியல்ல, ஆகாயமல்ல, நீருமில்ல, நெருப்புமல்ல. காற்றுமல்ல, மனமுமல்ல, உணர்வுமல்ல. அனைத்தையும் கடந்த சிவம்!

View More ஆதிசங்கரர் படக்கதை — 6

வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை

தேளின் கொடுக்கை நீக்கிவிட்டால் அது துன்பம்தர முடியாததைப்போல மனிதனின் தீயகுணத்தை அறிந்து, அதைத் தகுந்த சமயத்தில் நீக்கி விட்டால், அவனால் துன்பம் யாருக்கும் எந்தக் காலத்திலும் ஏற்படாது என்பது வேமானாவின் கருத்தாகும். ஒரு சமூக சீர்திருத்தவாதியாக கருத்துக்களை ஆழமாகவும் உறுதியாகவும் எவ்விதச் சார்பற்றும் சொல்வதால், “வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை” என்று தெலுங்கு இலக்கிய உலகம் அவரை அடைமொழியோடு போற்றுகிறது. பிறந்த சாதியைவிட மனிதனின் குணம்தான் அவனை எக்காலத்திலும் மேம்படுத்துகிறது என்பது சீர்திருத்தவாதிகளின் ஒருமித்த கருத்தாகும். மனிதனின் தீயகுணத்தை அழிக்க உதவுவதுதான் உயர்வான சிந்தனை… “இடமும் நேரமும் நம்முடையதாக இல்லாதபோது வெற்றி நமக்கில்லை, இதனால் நாம் சிறியவர்களில்லை – கண்ணாடியில் மலை மிகச்சிறியது தானே, விஶ்வப் பிரமாவினுரா வேமா”…

View More வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை

பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்

பாரதியாரின் பகவத்கீதை மொழியாக்கத்தை எனது குரலில் ஒலிப்பதிவு செய்திருக்கிறேன். கூடிய வரையில் நிதானமாகவும், வாசகங்களின் பொருள் நன்கு வெளிப்படுமாறும் வாசிக்க முயன்றுள்ளேன். கீதா ஜெயந்தியும் வைகுண்ட ஏகாதசியும் ஆகிய இப்புனித நாளில் இந்த ஒலிப்பதிவை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். 18 அத்தியாயங்களும் தனித்தனி ஒலிக்கோவைகளாக உள்ளன. அவற்றைத் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்…. கீதையின் வாசகங்களை பாராயணம் செய்வதும், கேட்பதும், மனதில் மீட்டிப் பார்த்து தியானிப்பதும், கீதையைக் கற்கும் மாணவர்கள், கற்று முடித்தவர்கள், யோக சாதகர்கள், ஆன்மத் தேடல் கொண்டவர்கள் எனப் பல சாராரும் எப்பொழுதுமே கைக் கொண்டு வந்துள்ள ஒரு முறையாகும். கீதையின் மூல சுலோகங்களை நேரடியாக சம்ஸ்கிருதம் மூலம் பயின்றவர்கள் அவ்வாறே வாசித்தும், கேட்டும் தியானிப்பார்கள். அவ்வாறு பயிலாதவர்களும் தாங்கள் பயின்ற மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வாசித்தும், கேட்டும் இதனை மேற்கொள்ளலாம். காத்திருக்கும்போதோ, பயணம் செய்யும் போதோ கூட கவனத்தைச் செலுத்தி இந்த ஒலிப்பதிவுகளைக் கேட்பதன் மூலம் கீதையின் உட்பொருளைச் சிந்திக்கலாம்….

View More பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்

நாடாளுமன்ற முடக்கம்: காங்கிரஸின் கீழ்த்தரமான சதி

காங்கிரஸ் கட்சியினர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், 2019 மே வரை மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த நாட்டை ஆளும். அதன் பிறகும் பாஜக அரசு தொடர்வதற்குரிய பணிகளையே காங்கிரஸ் கட்சியின் துர் நடத்தைகள் உருவாக்கி வருகின்றன.

ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அவர்கள் பொறுமையுடன் நடப்பவை அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினரின் நயவஞ்சகத் தந்திரங்கள் நிச்சயம் காங்கிரஸ் கட்சியினருக்கே எமனாகும். இதனை மக்கள் அவர்களுக்குப் புரிய வைப்பார்கள்.

View More நாடாளுமன்ற முடக்கம்: காங்கிரஸின் கீழ்த்தரமான சதி

போர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்

நாம் வாழும் வடஇலங்கையின் யாழ்ப்பாணப்பகுதியில் 1990ஆம் ஆண்டு யூன் மாதம் தொட்டு, கிட்டத்தட்ட 2000ஆம் ஆண்டு வரை மின்சாரமற்ற வாழ்வு நிலை கொண்டிருந்தது. விமானக்குண்டு வீச்சுக்களே இதற்கு முக்கிய காரணமாயின. தொலைத்தொடர்பு வசதிகள் முற்றாக இக்காலத்தில் செயலிழந்திருந்தன. நாங்கள் வாழ்ந்த வடபுலத்திற்கும் பிற பகுதிகளுக்குமான தரைவழிப்போக்குவரத்தும் இல்லாதிருந்தது. திடீரென்று நவீன உலகத்திலிருந்து ஆதிகாலம் போன்ற ஒரு உலகத்திற்கு தள்ளப்பட்டோம். ஆனால், என்ன அதிசயம் என்றால் இக்காலத்தில் மனிதவிழுமியங்கள் இப்போது நம் ஊர்களில் இருப்பதைக் காட்டிலும், மிக உயர்ந்த நிலையிலிருந்ததாக சொல்கிறார்கள்… உணவு, உடை போன்ற யாவற்றுக்கும் கப்பலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை வேறு இருந்தது. கப்பல் வரா விடின் விலை கிடு கிடு என அதிகரிக்கும். பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படும்… இன்றைக்கு சென்னை மக்களின் அவலத்தை போக்க இயன்ற உதவிகளை, இதே போன்ற அவலத்தை அனுபவித்த இலங்கையை சேர்ந்த வசதிபடைத்த புலம்பெயர் மக்களும் பிறரும் இயன்ற அளவு செய்ய முன்வருவது சிறப்பானதாகும்….

View More போர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்

வீடுபெற நில்!

“அங்கே போய்ப் பார்க்காதவரை நாம் ஒன்றும் சொல்ல முடியாது. நாம் காண்பதெல்லாம் வெறும் மனப் பிரமை. கண்ணைக்கூசும் வெளிச்சம் பலவிதமான இல்லாத தோற்றங்களை உண்டுபண்ணுகிறது.”
“ஒண்ணைப் பார்க்காதாதுனாலே அது இல்லேன்னு நம்ம சிங்காரவேலர் சொல்றார். அந்த மலைலே ஏறி வெளிச்சத்திலே போய் மறையறவங்க யாரும் திரும்பி வரதாக் காணோம். மலைலேந்து உருண்டு விழறவங்க தூரத்திலே வீடு வேணும்கற கூட்டத்தில கலந்துடறாங்க. அதைப் பார்த்து நாம நம்ம மனசுக்குத் தோணினதைச் சொல்றோம். மலைக்கு மேல என்ன இருக்குன்னு தெரியாம வெளிச்சம்தான் நம்ம கண்ணை மறைக்குது. ”
“ஏன்? நாமளும் அந்தக் கூட்டத்தோட சேந்துக்கினு போய்ப்பாத்தாத்தான் இன்னா கொறஞ்சா பூடும்?”

View More வீடுபெற நில்!

ஆதிசங்கரர் படக்கதை — 5

உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற எங்கிருந்தாலும் ஒடோடிவருவேன், அம்மா! என்னைப் பிரிவதால் உங்கள் கீர்த்தி பலமடங்கு அதிகமாகும்.

View More ஆதிசங்கரர் படக்கதை — 5

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6

ஜீசஸ் அதாவது இயேசு என்ற ஒரு மனிதர் பிறந்தார், வாழ்ந்தார் என்பதை உறுதியாகக்கூறுவதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பது தெளிவாகிறது. அப்படி ஒருவர் வாழ்ந்தார் என்றே கொண்டாலும், சாதாரணக் குழந்தைகளுக்கு மாறாக, சிறப்பான எதையும் அவரிடது பிறப்பிலிருந்து காணமுடிகிறதா?… இயேசு தூரத்திலிருந்து அத்திமரத்தைப் பார்ப்பது சொர்க்கத்திலிருந்து வளமையான ஜெருசலம் நகரத்தைக் காண்பதற்கும், அருகில் சென்று கனிகள் உள்ளனவா என்று காண்பது அவர் ஜெருசலத்துக்கு வந்து அங்குள்ள யூதர்களிடம் நீதி, கருணை, நம்பிக்கை ஆகிய நற்குணங்கள் இருக்கிறதா என்று தேடுவதற்கும், அவர் கனிகளைக் காணாமல் இலைகளைக்கண்டது, அவர்களிடம் வெற்றுசடங்குகளையும், நம்பிக்கை இன்மையையும் கண்டதன் உருவகமாகும்…

View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6