இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [2]

மின் உற்பத்தி நிறுவனங்களைச் செயல்படாமல் இருத்திவைப்பதன் மூலம், அதிக விலைக்கு பிற மாநிலங்களிடமிருந்தோ, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ மின்சாரம் வாங்குவதனால் அவர்களிடமிருந்து கிடைக்கும் கமிஷனுக்காகவே இது போன்ற கீழ்த்தரமான வேலைகளில் கழகங்கள் ஈடுபடுகின்றன… இந்தியாவின் வீடுகளில் உள்ள மின்னணுச் சாதனங்களைப் புனேவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வுசெய்தது. இந்த ஆய்வின் முடிவில்… நீர் மின் உற்பத்தி நிலையங்களில் பழுது நீக்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுதல் மூலம் அவற்றிலிருந்து மிக மிகக் குறைந்த செலவில் முழு அளவிலான மின்சாரத்தைப் பெறலாம் (யூனிட் 60 பைசா அளவில்)…

View More இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [2]

இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [1]

அரசு, அதன் செயல்படாத அமைச்சர்கள், செயல்திறமையற்ற அதிகாரிகள் என்ற கேவலமான கூட்டணியால் 6 கோடி மக்கள் தினமும் பரிதவிக்கிறார்கள்… மிகுமின்சார உற்பத்தி மாநிலமாக இருந்த தமிழகத்தை, அதன் பிறகு மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் ஏறிய ஜெயலலிதாவும், கருணாநிதியும் மின் உற்பத்திக்கான தேவையை சிறிதும் கவனியாமல் விதவிதமான ஊழல்களில் ஊறித்திளைத்து, மக்களைப் பெரும் அவதியில் தள்ளினர்… மத்திய காங்கிரஸ் அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கும், ஜெயலலிதாவால் தமிழகத்திற்கு எந்தவித நன்மையும் நிச்சயம் ஏற்பட்டு விடவே கூடாது என்ற கருணாநதியின் நல்ல எண்ணமும்தான் ஒட்டுமொத்த இருளுக்கும் காரணம்… காற்றாலை, அனல்மின், நீர்மின் திட்டங்களையும் ஒழுங்காகப் பராமரிக்காமல் கவனமாக வீணாக்கியது…

View More இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [1]

தள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்

இன்னமும் 100 பேர் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களாக- அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்… ஆட்சிக்கு வந்து 16 மாதங்களில் 15 அமைச்சர்களை மாற்றுவதென்பது, ஒட்டுமொத்த அமைச்சரவையின் நம்பகத்தன்மையைப் பாதிப்பதாகவே உள்ளது… உளவுத்துறைக்கு அமைச்சர்கள் குறித்த தவறான தகவல்களை போட்டியாளர்கள் தருவதாகவும் தகவல்கள் உண்டு… பதவியில் இல்லாதவர்களே நிம்மதியாக இருக்க முடியும் என்ற சூழல் தமிழகத்தில்… காமராஜர் அமைச்சரவையில் அரசியல் நடத்தவில்லை… காமராஜர் ஆட்சி என்பது ஒரு கனவுச்சொல்லாக தமிழகத்தில் நிலைபெற்றிருப்பது அதனால்தான்…

View More தள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்

ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?

2009 மே மாதம் நடந்த 15 வது நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் இல்லாத நேரம் பார்த்து, கடைசி சுற்றில் அதிக வாக்குகள் பெற்றதால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூன் 7 ம் தேதி, ராஜ கண்ணப்பனின் மனுவை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ப.சி. நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டி வரும். இதே போன்ற நிலைக்காகத் தானே திமுக அமைச்சர்கள் தயாநிதி, ஆராசா ஆகியோர் பதவி விலகினர். இப்போது ப.சி. பதவி விலகத் தேவையில்லை என்கிறதே காங்கிரஸ்! திமுகவுக்கு ஒரு நியாயம், காங்கிரசுக்கு ஒரு நியாயமா? ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று முரசறைந்த அதே மதுரையில் இருந்து வெளிவந்துள்ள இத்தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்?

View More ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?

புதுக்கோட்டையும் அரசியல் கட்சிகளும்

ஓராண்டுகால அதிமுக ஆட்சியில் சில துறைகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி அதிமுகவுக்கு எதிராக தேமுதிக பிரசாரம் செய்துவருகிறது. எனினும் இந்த அதிருப்தி அதிமுகவை வெல்லப் போதுமானதல்ல. இந்தத் தேர்தலின் விளைவாக, தேர்தல் முடிந்தவுடன் தேமுதிக பிளவுபடக்கூடும்… எப்பாடுபட்டும் இடைத்தேர்தலில் வெல்வதை ஆளும் கட்சிகள் கௌரவப் பிரச்னையாகக் கருதுகின்றன… தமிழக அமைச்சரவையே அங்கு இடம் பெயர்ந்துவிட்டது போல, எங்கு பார்த்தாலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வாகனங்கள் பறக்கின்றன. இடைத்தேர்தல் வாழ்க!…

View More புதுக்கோட்டையும் அரசியல் கட்சிகளும்

மக்களைக் காப்பது விளையாட்டல்ல…

அதிமுக அரசின் கவனம் முழுவதும் எங்கு செலுத்தப்பட வேண்டுமோ அங்கு செலுத்தப்படாமல், தேவையற்ற பகுதிகளில் விரயமாகிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவலர்கள், முன்னாள் அமைச்சர்களின் பழைய சரித்திரத்தை புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசை விழிப்புணர்வுடன் காக்க வேண்டிய உளவுத்துறையோ சில்லறை விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் முடிவடையும் நிலையில், இன்னும் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து கொண்டிருப்பது, அவர்கள் மீது அனுதாபத்தையே உருவாக்கும்…

View More மக்களைக் காப்பது விளையாட்டல்ல…

சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு

திமுக அரசு தமிழகத்தை முற்றிலும் சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு,  திவாலாகும்   நிலைக்கு தள்ளிவிட்டது” என்ற ஜெயலலிதாவின் கூற்று உண்மைதான். இதை சரிப்படுத்த ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தார்? கருணாநிதி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைக் கொடுத்தார்; ஜெயலலிதாவோ, இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன், தாலிக்கு தங்கம், இலவச ஆடு, மாடு வழங்கிக் கொண்டிருக்கிறார். செலவுக்கு முன்னிற்கும் முதல்வர், வரவுக்கு என்ன செய்தார்? கருணாநிதி என்ன செய்தாரோ அதையே பல மடங்கு அதிகமாகச் செய்வதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது?

View More சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு

மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி – ஓர் அலசல்.

ஜனநாயகத்தில் தேர்தல்கள் வகிக்கும் பேரிடத்தை உணர, அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளைக் காண வேண்டும்… புத்ததேவை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்துவிட்ட மக்களுக்கு, பாஜகவை திரும்பிப் பார்க்கவும் நேரமில்லை… மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும். அந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவற விட்டுவிட்டன… ராகுலின் பிரசாரமே இடது முன்னணிக்கு இறுதிநேர ஆசுவாசமாக அமைந்தது… பாஜக, ஜெயலலிதாவை எதிர்த்தும் பிரசாரம் செய்திருக்க வேண்டும்…

View More மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி – ஓர் அலசல்.

தமிழகம் ஊழலுக்குக் கொடுத்த சம்மட்டி அடி

ஊழல் உறுத்து வந்து ஊட்டும்; அரசியல் பிழைத்தோர்க்கு தேர்தல் கூற்றாகும்…ஜாதி அரசியலால் வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவு கண்ட பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச்… நல்ல பாடம் கற்றிருக்கின்றன… இதன்மூலம், ஊழல் ஒரு பொருட்டல்ல என்று விதண்டாவாதம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முகத்திலும் கரியைப் பூசி இருக்கிறார்கள், விழிப்புணர்வுள்ள மக்கள்… நாட்டு மக்களை பொய்யான கருத்துக் கணிப்புகளால் குழப்பிவிட முடியாது என்பதும் இத்தேர்தலில் நிரூபணம் ஆகியிருக்கிறது.

View More தமிழகம் ஊழலுக்குக் கொடுத்த சம்மட்டி அடி

காகித ஓடம் – கார்ட்டூன்

காகித ஓடம் ..
கடலலை மேலே..
போவது போலே..
மூவரும் போவோம்..

View More காகித ஓடம் – கார்ட்டூன்