கொடுப்பதை, சிரத்தையுடன் கொடுத்திடுக. அசிரத்தையுடன் கொடுத்தல் தகாது. செல்வத்திற்கேற்பக் கொடுத்திடுக. நாணத்துடன் கொடுத்திடுக. அச்சத்துடன் கொடுத்திடுக. சம்மதத்துடன் கொடுத்திடுக என்கிறது தைத்திரிய உபநிஷதம்… அச்சம் ஏன்? கொடுப்பதால் நமக்கு அகம்பாவம் ஏற்பட்டு விடக் கூடாதே, நல்ல உள்ளத்துடன் நாம் கொடுத்தாலும் பெறுபவன் மனம் புண்பட்டு சிறுமையடைந்துவிடக் கூடாதே என்பதான அச்சம். ‘ஸம்வித்’ என்பதற்கு ‘நட்புணர்வுடன்’ என்று சங்கர பாஷ்யம் தரும் பொருள் சிறப்பானது. கொடையைப் பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த ஆறு உபநிஷத வாக்கியங்கள் அளித்து விடுகின்றன…
View More கொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்Tag: அன்னதானம்
அன்னமும் அடையாளமும்
என் அடையாளங்கள் அற்ற நிலையில், எனக்கும் பரவிப் பொங்கி வந்த அன்பு அது. அடுத்த முறை ரொட்டி வந்தபோது, வாழ்வில் முதன்முறையாக யாசிப்பதுபோல கை காட்டி, வீழ்ந்த ரொட்டியை பக்தியுடன் வாங்கினேன். கண்கள் கலங்கிப்போய், பருப்பில் தோய்த்து, விழுங்கி விக்கித்தேன். அந்த ரொட்டித் துண்டு,. எவனோ, எவளோ அடுப்பினருக்கே பொங்கும் வியர்வையைத் துடைத்தபடி, கைவலிக்க தட்டி சுட்டு எடுத்த ரொட்டி. அதற்கும் எனக்கும் என்ன உறவு.. உலகளவிய அன்பு அன்றி வேறேது?… அம்மாக்களின் இந்த காலத்திய அதீத செல்லங்களால் கெட்டுப்போகும் குழந்தைகளுக்கும், இந்த பாரம்பரிய மரபுக்கும் எவ்வளவு வித்தியாசம்? அவரவர் தட்டுகளை அவர்வர் கழுவ வேண்டும், முடிந்தால் பிறருக்கு உதவவேண்டும் என்பதை கர் சேவையில் கண்ட நேரம் அது….
View More அன்னமும் அடையாளமும்ஒரு கர்நாடகப் பயணம் – 5 (சிருங்கேரி, பேலூர்)
ஆதி சங்கரரின் மனம் இப்பகுதியின் இயற்கை அழகிலும் அமைதியிலும், புனிதத்திலும் தோய்ந்து ததும்பி நிறைகிறது. நீ இங்கேயே உறைந்து மக்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று அன்னை சரஸ்வதியை வேண்டிக் கொள்கிறார். சலங்கை ஒலி நின்று விடுகிறது. சாரதை அங்கு நிரந்தரமாகக் குடி கொள்கிறாள்… கண்ணாடியில் முகம் பார்க்கும் தர்ப்பண சுந்தரிகள், வேட்டைக்காக வில்லுடன் நிற்கும் கானக அழகிகள், இசைக்கருவிகளை மீட்டும் வாதினிகள், அபிநயம் பிடிக்கும் நர்த்தகிகள் என மூச்சடைத்து, பித்துக் கொள்ள வைக்கும் சிற்பங்கள். ஒவ்வொரு அங்குலத்திலும் மகோன்னத சிற்பிகளின் உளிகளும் கரங்களும் இதயங்களும் உயிர்களும் கலந்து எழுந்திருக்கும் அற்புதக் கலைப் பெட்டகம் பேலூர் கோயில்…
View More ஒரு கர்நாடகப் பயணம் – 5 (சிருங்கேரி, பேலூர்)கைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவி
மாறனார் சிறிதும் தாமதிக்காமல் வீட்டின் கூரையிலிருந்த வரிச்சுகளை வாளால் வெட்டி எடுக்கிறார். அதைக் கொண்டு ஒருவாறு அடுப்பைப் பற்றவைத்துப் பின் ஈரநெல்லை வறுக்கிறாள். அதை அரிசியாக்கி உலையில் போட்டு சோறாக்கு கிறாள். சரி, உணவு தயாராகி விடும். வந்த விருந்தினருக்கு வெறும் சோற்றை மட்டும் எப்படிக் கொடுப்பது? யோசிக்கிறாள். மறுபடியும் கணவரிடம் போய் காய்கறி ஒன்றும் இல்லையே, என்ன செய்யலாம்? என்று இருவரும் சேர்ந்து யோசிக்கிறார்கள்… இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் மாறநாயனார் வாழ்ந்த வீடும், அவர் பயிர் செய்த நிலமும் இருக்கிறது. இந்நிலத்தை “முளைவாரி அமுதளித்த நாற்றாங்கால்’ (இறைவனுக்கு அமுதளிக்க நெல் விளைந்த வயல்) என்கிறார்கள். குருபூஜையன்று மாலையில் சிவன், அம்பாள், மாறநாயனார், அவரது மனைவி புனிதவதி ஆகிய நால்வரும் ஒரே சப்பரத்தில் எழுந்தருளி புறப்பாடாவது விசேஷம். அன்று சிவனுக்கு தண்டுக்கீரை பிரதான நைவேத்யமாக படைக்கப்படும்…
View More கைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவிஎழுமின் விழிமின் – 18
தானங்களில் எல்லாம் தலையாயது ஆத்மீக ஞானம் புகட்டுவது தான். அதற்கு அடுத்து உலகியல் ஞானம் கற்பித்தல்; அதற்கு அடுத்து ஒருவனது உயிரைக் காப்பாற்றுதல்; கடைசியாக உணவும் நீரும் அளித்தல்… சமயமானது நமது மக்களினத்தின் பொதுச் சொத்து ஆகும். அவர்களது பொதுவான பிறப்புரிமையாகும். அதனை ஒவ்வொரு வீடுதோறும் எவ்வித தடையுமின்றிக் கொண்டு செல்லல் வேண்டும். கடவுள் அளித்துள்ள காற்றைப் போல சமயத்தை எல்லோருக்கும் எளிதில், தடையின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும்…சம்ஸ்கிருத சொற்களின் தொனியினாலேயே இந்த மக்களினத்திற்கு ஒரு கௌரவ உணர்ச்சியும், ஆற்றலும், சக்தியும் கிடைக்கின்றன…
View More எழுமின் விழிமின் – 18[பாகம் 3] கம்யூனிசத்தில் என்ன பிரச்சினை ?
அப்போது சோவியத் யூனியம் ஓகோவென்று இருந்தது…ருஷ்யாவைப் பற்றி மகோன்னதமான பிம்பங்கள் இருந்தன…அந்தக் காலக்கட்டத்தில் ருஷ்ய கம்யூனிசத்தைப் பற்றி சுவாமிஜியிடம் கேட்டோம். சுவாமிஜி மிக அழகாகப் பதில் சொன்னார்கள்…“சுவாமிஜி, இவ்வளவு பெரிய சொத்து நமக்குக் கிடைக்கிறது. நாம் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ட்ரஸ்ட்டின் நோக்கம் என்ன? மத்தியானம் சாப்பாடு இலவசமாகப் போடுவது. அவ்வளவுதானே?”…
View More [பாகம் 3] கம்யூனிசத்தில் என்ன பிரச்சினை ?அமெரிக்காவில் ஒரு அன்னதான நிகழ்வு
பாரதி தமிழ்ச் சங்கம் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும் தமிழ் கலாச்சார அமைப்பு [..] இந்தியாவில் அமெரிக்கா என்றால் பணக்கார நாடு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கும் வறுமை உண்டு [..] வயிற்றுக் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற மகாகவியின் லட்சியத்தை இவை போன்ற அமைப்புகள் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றன. [..]
View More அமெரிக்காவில் ஒரு அன்னதான நிகழ்வுமாயக்கரங்கள் (சிறுகதை)
“ஆத்தா, எந்திரன் படம் பார்த்துட்டேன்.” என்று கத்திக் கொண்டே வந்தான் ரஜினி முத்து. முகம் எல்லாம் கருப்பும், சிவப்புமாக வண்ணப் பொடிகள் ஒட்டி மீசையில் வேர்வை சொட்ட கோமாளி மாதிரி வந்து நிற்கிற பிள்ளையைப் பார்த்து “டேய்… ” என்று கூப்பிட்டுக் கொண்டு வந்த அவன் அம்மா வசந்திக்கு சிரிப்பு வந்து விட்டது.
View More மாயக்கரங்கள் (சிறுகதை)மதுரையிலும்கூட மலரும் மனித மல்லிகை
இவருக்கு ஓய்வு என்பதில்லை. ஒரு சினிமாவுக்கு, ஒரு டிராமாவுக்கு, ஒரு விளையாட்டுக்கு, ஒரு சுற்றுலாவுக்கு என்று எங்குமே இவரால் போக முடியாது. மதுரையை விட்டு ஒரு நாள் கூட தன் சொந்த வேலைகளுக்காக நேரம் செலவழிக்க இயலாது. 24 மணி நேரமும், 365 நாட்களும் ஓய்வின்றி எந்தவித ஒப்பந்தமும் இல்லாத ஒரு கடமைக்கு, ஆதரவற்ற சமூகத்தின் ஒரு சேவைக்காகத் தன் இளமை, வருமானம், நேரம், மகிழ்ச்சி, குடும்பம் என்று அனைத்தையுமே இந்த இளைஞர் தியாகம் செய்துள்ளார். உலகம் முழுவதும் சுற்றி வரும் திறமையான படிப்புப் பெற்றும் உள்ளூரில் சேவை செய்யும் உன்னதமான ஒரு தியாகத்தை தன் வாழ்க்கைப் பணியாகத் தேர்வு செய்துள்ளார்.
View More மதுரையிலும்கூட மலரும் மனித மல்லிகைஏழாம் உலகம் – இரக்கம் கோரும் கொடூரங்கள்
மனிதன் தன் சக மனித ஜீவனை எவ்வளவு கேவலப்படுத்துவதன் மூலம் தன்னையும் கேவலப்படுத்தக் கூடியவன், அது பற்றி பிரக்ஞையே இல்லாமல், பின் அதற்கு தார்மீக, அரசியல் சித்தாந்த ஜோடனைகளுடன் அலங்காரங்கள் செய்வான், அவன் எவ்வளவு ஆபாசமானவன் என்பது தெரியும்.
View More ஏழாம் உலகம் – இரக்கம் கோரும் கொடூரங்கள்