சன்னதியில் தேவி மூன்று பிண்டிகளாக (சுயம்பு ரூபங்களாக) தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். சிலைகளோ அல்லது மூர்த்திகளோ கிடையாது…“கவலைப்படாதே! அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை அழைத்திருக்கிறாள்” என்று ஆங்கிலத்தில் யாரோ யாருக்கோ சொல்வது நம் காதில் விழுகிறது… நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகளும் அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தாலும்…
View More அழைத்து அருள் தரும் தேவிTag: அமர்நாத் யாத்திரை
காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்
[மூலம்: தருண் விஜய்] காஷ்மீருக்காகப் போராடி உயிர்நீத்த படைவீரனின் மனைவியையும், தாயையும் கேட்டுப்பாருங்கள் – அவர்கள் வெறும் ஊதியத்துக்காகத் தான் அந்தத் தியாகம் செய்தார்களா என்று. காஷ்மீரின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்தும், பொட்டுவைத்துக் கொண்டதற்காகவும், “சிவ சிவ” என்று தங்கள் இறைவனின் பெயரைச் சொல்லி வழிபட்டதற்காகவுமே, முஸ்லிம் ஜிகாதிகளால் துரத்தியடிக்கப் பட்ட காஷ்மீரி இந்துக்களைக் கேட்டுப்பாருங்கள் – அவர்களைத் தாக்கி விரட்டியவர்களிடமே காஷ்மீரைக் கொடுத்துவிடலாமா என்று… ஜம்முவிலிருந்து இதனை எழுதுகிறேன். இங்கே மக்கள் இந்திய வழியில் தேசபக்தி என்றால் என்ன என்று காஷ்மீரின் முஸ்லிம்களுக்குக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலைகளும், தெருக்களுக்கும் வெறிச்சோடிக் கிடக்கின்றன, ஊரே அடங்கி விடுகிறது – எதிர்ப்பு ஊர்வலம் இல்லாத நேரங்களில் மட்டும்!
View More காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்ஜம்முவின் ஹிந்து எழுச்சி – சோதிக்கப்பட்ட பொறுமையின் கதை!
“அமர்நாத் கோயில் நில விவகாரம்” என்பது ஏதோ அயோத்யா பிரச்சனை போல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்காக இரு வேறு குழுவினர் சண்டை போட்டுக் கொள்வது போல ஒரு மேலோட்டமான உருவம் நிலவுகிறது. இது வெறும் அமர்நாத் நிலம் பற்றிய பிரச்சனை தானா ? ஒரு நூறு ஏக்கர் நிலத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு? முதலில் இந்த அமர்நாத் பிரச்சனை எப்படி ஆரம்பித்தது ? அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும், பத்திரிகைகளும், காஷ்மீரிகள் என்று சொல்லை காஷ்மீரில் வாழ்கின்ற முஸ்லீம்களை மட்டுமே குறிக்கும்படி பயன்படுத்துகிறார்கள். உண்மையில் காஷ்மீரிகள் யார்? பண்டிட்கள் என்பவர்கள் யார்? இன்னும் பல கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை விடையாக அமைகிறது.
View More ஜம்முவின் ஹிந்து எழுச்சி – சோதிக்கப்பட்ட பொறுமையின் கதை!அமர்நாத் யாத்திரை: பழம்பெரும் பாரம்பரியம்
புனித அமர்நாத் குகையும் அதன் பனிலிங்கமும் இந்தியர்களால் மிகப் பழங்காலம் முதல் அறியப்பட்டிருந்ததும், இந்தியா முழுவதிலிருந்து பல நூற்றாண்டுகளாக யாத்திரீகர்களை ஈர்த்து வந்ததும் பல வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ளன. அமர்நாத் குகையைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு 6ம் நூற்றாண்டின் ஸம்ஸ்கிருத மொழி நூல் நீலமத புராணத்தில் கிடைக்கிறது. இந்த நூல் காஷ்மீர் மக்களின் அக்கால சமுதாய மற்றும் மத வழிமுறைகளை விளக்குகிறது. மேலும், இந்தப் புனித தலத்தின் யாத்திரை வழிமுறைகளும், இந்த தலத்தின் அதிக விவரங்களும் பிருங்கி ஸம்ஹிதை, அமர்நாத மஹாத்மியம் போன்ற பிற ஸம்ஸ்கிருத நூல்களிலும் காணக்கிடைக்கின்றன…
View More அமர்நாத் யாத்திரை: பழம்பெரும் பாரம்பரியம்