மக்களை அச்சுறுத்தும் கொள்ளைக்காரியாக இருந்த பூலான் தேவி, இந்த நாட்டு மக்களுக்குத் தேவைப்படும் சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்… மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திலும், மாநிலச் சட்டமன்றங்களிலும் இருப்போர், எந்தவிதக் குற்றங்களைச் செய்தாலும் அவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது… காங்கிரஸ் கட்சி, தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வின் போதாவது, குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடையாது என்று சொல்லியிருக்கிறார்களா?…
View More புனிதர்களே சட்டங்களை இயற்றட்டும்!Tag: அரசியல்
யார் இந்த நீரா ராடியா?
நூறு கோடிக்கும் அதிகப்படியான மக்கட் தொகையுள்ள இந்திய அரசியலில் இந்த ஒரு பெண்மணி குறுக்குச்சால் ஓட்ட முடிந்தது எப்படி?… நீராவுக்குச் சொந்தமான, டில்லியில் அமைந்துள்ள சத்தர்ப்பூர் தோட்டபங்களா பல பெரிய மனிதர்கள், விமானத் தொழிலதிபர்கள் பங்கேற்பால் பிரபலமடைந்து வந்தது… இனி வரப்போகும் காலம் நீரா ராடியாவுக்கு பெரும் சவாலாக இருக்குமென்பதில் ஐயமில்லை.
View More யார் இந்த நீரா ராடியா?காமராஜர் என்கிற தேசியவாதி
கொள்கையில் மாறுபாடுள்ள அரசியல் கட்சிகள், மக்கள் நலனுக்காகத் தமக்குள் ஓரளவு சமரசம் செய்துகொண்டு, குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு இயங்குவதைத்தான் கூட்டணி என்று குறிப்பிட வேண்டும்…. அண்ணாவின் வியூகம் காங்கிரசுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கக்கூடும் என்கிற உளவுத்துறையின் முன்னெச்சரிக்கை உரிய தருணத்தில் வந்தும் காமராஜர் அதைப் பொருட்படுத்தவில்லை… தட்சிணப் பிரதேசம் அமைந்தால் தம்மைப் போன்றவர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று அரசியல்வாதி காமராஜர் கருதியிருக்கக் கூடும்.
View More காமராஜர் என்கிற தேசியவாதிஅடுத்த தேர்தல் கூட்டணிகள் குறித்து சில ஹேஷ்யங்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தல், கூட்டணி அமைப்பதிலும், பின் தேர்தலிலும் ஒரு பெரிய மாற்றத்தை அளிக்கப் போகிறது… திமுக விற்கும், அதிமுகவிற்கும் வாழ்வா, சாவா என்கின்ற நிலை… திமுகவின் ராஜ்ய சபா ஏமாற்றல் பா.ம.க வை மிகவும் பாதித்துள்ளது… காங்கிரஸ், அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி என்றால், ஜெயலலிதாவின் பழைய காட்டமான வசைகள், மீண்டும் நினைவிற்கு வருகின்றது… வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகம் ஒரு பெரிய கூத்தைக் காணப் போகிறது.
View More அடுத்த தேர்தல் கூட்டணிகள் குறித்து சில ஹேஷ்யங்கள்சிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]
தான் அன்பும், மதிப்பும் கொண்ட ராஜீவ் இறந்துவிட்டார் என்பதையே சோனியாவால் நம்ப முடியவில்லை. இனி ராஜீவின் அன்பான பேச்சுக்களோ ஆழமான முத்தங்களோ சோனியாவுக்குக் கிடைக்கப்போவதில்லை… இந்திரா காந்தியைப் பற்றியும் ராஜீவ் காந்தியைப் பற்றியும் எந்தவிதமான விமர்சனமும் புத்தகத்தில் வைக்கவில்லை என்பது உண்மைதான். போஃபார்ஸ், குத்ரோச்சி பற்றிய சர்ச்சைகளைப் பற்றியும் நான் எழுதவில்லை. காரணம், நேரு குடும்பத்தினர் அனைவரும் நேர்மையாளர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை…
View More சிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]ஒரு நதியின் நசிவு
மூன்று பெரும் அழிவுகள் இந்த ஆற்றின் வனப்பை, ஜீவனை இன்று அழித்து வருகின்றன. அவை அரசியல்வாதிகளின் பேராசையினால் விளைந்த மணல் கொள்ளையும் அரசாங்கத்தினரின் அலட்சியத்தினால் உருவான சீமக் கருவேல மரங்களின் வளர்ச்சியும் கட்டுப்பாடில்லாமல் ஆற்றினுள் விடப்படும் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவு மற்றும் ப்ளாஸ்டிக், பாலித்தீன் குப்பைகளும் ஆகும்…. வழிபாட்டிற்குரிய ஒரு கடவுளாக நம்பி வணங்கப்பட்டவரை நதிகளின் இயற்கையான வனப்பும் அழகும் எழிலும் தூய்மையும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. என்று அந்தக் கலாசாரம் அழிக்கப்பட ஆரம்பித்ததோ, என்று திராவிட இயக்கங்கள் மற்றும் மதமாற்ற விஷப் பிரசாரங்களினால் மக்களின் கடவுள் நம்பிக்கையும் இயற்கை வழிபடும் நம் தொன்மையான கலாசாரமும் மெதுவாக கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப் பட்டதோ, அன்றிலிருந்து இயற்கை வளங்களை பக்தியுடன் நாம் வணங்கிய, பாதுகாத்த உணர்வு மங்கி…
View More ஒரு நதியின் நசிவுசி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு
(எழுதியவர்: வி. சண்முகநாதன், பா.ஜ.க செயலர்) நம் நாட்டின் சாதாரண குடிமக்கள், ஐக்கிய முன்னணிக் கூட்டணியின் பிரதமர் மன்மோகன்சிங்கின் அமைதியான, சீரியசான, சிந்தனையில் ஆழ்ந்த முகத்தைப் பார்த்து ஏமாந்து போகிறார்கள். இப்படிப்பட்ட அப்பாவித்தனமான தோற்றத்துக்குப் பின்னே, சி.பி,ஐ யினை துஷ்பிரயோஒகம் செய்யும் கையும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
View More சி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு