பறையொலி கீழானதென்றும் பறை இசைப்போர் கீழானவரென்றும் கருதும் சமுதாயமாக நாம் இருந்திருப்பின் பறை இசை கலைஞர் இப்படி கம்பீரமாக இறை வடிவங்களுக்கொப்ப கோவில் மண்டபத் தூண் சிற்பத்தில் ஏன் காட்டப்பட வேண்டும்?… சுசீந்திரத்தில் கோவில் நுழைவு போராட்டம் நடந்த போது ஒரு தலைமுறைக்கு முன்னால் பட்டியல் சமுதாய மக்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அதற்காக பெரும் போராட்டம் நடத்தப்பட வேண்டியிருந்தது. ஆனால் இன்று அதே கோவில் தெருவில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வைத்து பாபா சாகேப் அம்பேத்கரின் பரிநிர்வாண நாள் குறித்த உரை நடைபெறுகிறது….
View More பறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்Tag: அரவிந்தன் நீலகண்டன்
அரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்
உண்மையில் அம்பேத்கரின் கிறிஸ்தவ இஸ்லாம் எதிர்ப்பை முன்வைப்பதை விட அம்பேட்கர் எப்படி ஒரு யதார்த்தமான முழுமையான தேசியவாதி என்பதையே அ.நீ முன்வைக்கிறார். சாதி ஒழிப்பில் அம்பேத்கரின் முக்கிய தோழர்களாக விளங்கிய ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், நாராயண கரே போன்றவர்கள் இந்து மகாசபை காரர்கள் என்பதை அ.நீ நினைவுபடுத்துகிறார். ஸ்மிருதி அடிப்படையிலான இந்து மதத்தின் மீதே அம்பேத்கருக்கு விலகலும் கடும் விமர்சனமும் இருந்தது, ஆனால் அவரது தேசபக்தி கேள்விகளுக்கு அப்பாலானது என்பதுதான் அ.நீயின் நிலைப்பாடு. கறாரான ஆதாரங்களுடன் தான் எழுதுகிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை… அநீ மீது வசைகளை வீசும் வாசகர்களுக்கு அறிவுரை கூறாவிட்டாலும் அவர்களை நீங்கள் ஊக்குவிக்காமலாவது இருக்கலாம்…
View More அரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்
மாளவியா ஒரு மண்ணுருண்டை, திலகர் ஒரு கொலைகாரர், வீர சாவர்க்கர் ஒரு கோழை, பிரிட்டிஷார் வரவில்லை என்றால் நமக்குக் கல்வி அறிவே இருந்திருக்காது – தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களையும், அதன் மகத்தான பண்பாட்டுக் கூறுகளையும் கொச்சைப்படுத்துவதில், இழிவுபடுத்துவதில் தான் முடிகிறது. ஆனால் உண்மை என்ன? இந்துத்துவத்தின் வரலாற்றுப் பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்தப் பாரம்பரியம். பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச்சூழலில் ஒரு கட்டாயத் தேவை… அறிவுஜீவிகள் கூறுவதுபோல இந்துத்துவம் என்பது இந்து ஞான மரபுடன் தொடர்பு இல்லாத வெறும் அரசியல் சித்தாந்தம் அல்ல. இந்துத்துவத்தின் வரலாறு என்பது வீர சாவர்க்கருடன் தொடங்கி ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பின் இயக்க வரலாறு என்பதாக மட்டும் இல்லை. அதன் தொடக்க வேர்கள் புராதனமானவை. பாரதத்தின் உன்னதங்களைக் கொண்டாடிப் பாதுகாப்பவை. அவற்றைத் தகவமைத்து வளர்த்தெடுப்பவை. அதுபோலவே பாரதத்தின் சீர்கேடுகளுக்கு ‘பார்ப்பனீயம்’ போன்ற பொய்யான எதிரிகளை உருவாக்காமல் பொறுப்பேற்பவை. அந்த சமூக தேக்கநிலைகளிலிருந்து விடுதலையாகும் உத்வேகத்துடன், இந்துத்துவம் அதற்கான தீர்வுகளைப் பாரத மண்ணிலிருந்து உருவாக்குகிறது….
View More கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்இந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்
தமிழில் இப்படி ஒரு நூல் வந்திருப்பது நம் நல்லூழ். இன்றைய அறிவியலுக்கும் பாரத மெய்ஞானச் சிந்தனை முறைகளுக்கும் என்ன தொடர்பு? அறிவியல் கண்டுபிடிப்புகளை நம் பாரம்பரியமான சிந்தனை மரபுகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடியுமா என்னும் கேள்வியுள்ள தேடல் கொண்டவர்களுக்கு வீணான பெருமித மார்தட்டல்களின்றி, மிகக் கறாராக நவீன விஞ்ஞானத்தின் பாய்ச்சலை, பாரதத்தின் மெய்ஞான தரிசனங்களின் ஒளியில் விளக்கும் சிறந்த நூல். இந்நூலுக்காக அரவிந்தன் நீலகண்டனுக்கும் சாந்தினிதேவி ராமசாமிக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். பாரதம் அளித்த தரிசனங்களிலும் நவீன அறிவியலிலும் ஈடுபாடுள்ளவர்கள் இந்த நூலைக் கண்டிப்பாகத் தவறவிடக் கூடாது….
View More இந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்ஹிந்துத்துவ சிறுகதைகள்
தமிழ்ஹிந்து இணையதளத்தில் ஆலந்தூர் மள்ளன் என்ற புனைபெயரில் அரவிந்தன் நீலகண்டன் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியது நினைவிருக்கும். அந்தக் கதைகள் வாசகர்களால் தொடர்ந்து விவாதிக்கப் பட்டு, பாரட்டவும் பட்டன. அவற்றை மிக நேர்த்தியாகத் தொகுத்து தடம் பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது…. பிரசார சிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களை அனாயசமாக தொட்டுப் பார்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு இது. அத்தகைய கதைகளின் வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் விலகி, வரலாற்றுப் பின்னணியில் இந்திய உணர்வுடன் வெளிவரும் சிறுகதைகளை இத்தொகுப்பில் நாம் விழிவிரிய வாசிக்கலாம். பாரதப் பண்பாட்டில் வேர்கொண்டு நம் மரபின் மகத்துவக்கொடியைப் பறக்கவிடும் கதைகள் இவை…
View More ஹிந்துத்துவ சிறுகதைகள்அம்பேத்கரும் தேசியமும்
அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை புரட்சியாளர்களுக்கே உரித்த மேடு பள்ளங்கள் நிரம்பியது. அதுபோலவே அவரது…
View More அம்பேத்கரும் தேசியமும்ஆழி பெரிது புத்தக வெளியீட்டு விழா
இன்று (12 ஜூலை 2014) ‘ஆழி பெரிது’ நூல் நண்பர்களின் ஒரு சிறிய…
View More ஆழி பெரிது புத்தக வெளியீட்டு விழாஇரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்
நேற்று (7-7-2014) இந்து சமுதாய சமத்துவப் போராளியும் தமிழக தலித் இயக்க முன்னோடியுமான…
View More இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் – புத்தக அறிமுகம்
மோதியின் அரசியல் வாழ்க்கையின் முக்கியப் புள்ளிகளை சுருக்கமாக ஆனால் முழுமையாகத் தொட்டுச் செல்கிறது அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல். “டீக்கடைப் பையன்” முதல் “பிரதம மந்திரி மோடி?” வரை பதினாறு அத்தியாயங்களில் மோடியின் தொடக்க காலம், ஆர் எஸ் எஸ் பிரசாரக்கிலிருந்து குஜராத் முதல்வர் வரை அவர் படிப்படியாக வளர்ந்து வந்த அரசியல் வரலாறு, அவரது சாதனைகள், மோடி எதிர்ப்பாளர்களின் குற்றச் சாட்டுகள், அதற்கான எதிர்வினைகள் என்று கச்சிதமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் மோடியின் வாழ்க்கை சம்பவங்களை மட்டுமல்லாமல், அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல் பின்னணியையும் சேர்த்தே சொல்லிச் செல்வது இளம் வாசகர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். முக்கியமான ஆதாரபூர்வமான தரவுகளை உள்ளடக்கி, அதே சமயம் எல்லா விதமான வாசகர்களும் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழி நடையில் உள்ளது இந்த நூல்..
View More நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் – புத்தக அறிமுகம்ஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை
திருப்பூரில் ஆகஸ்டு-15 அன்று அறம் அறக்கட்டளை நிகழ்த்திய கருத்தரங்கில் ஊடகங்கள் குறித்து அரவிந்தன் நீலகண்டன் உரை நிகழ்த்தினார். பல சிந்தனைக்குரிய கருத்துக்களை அந்த உரையினூடாக அவர் தெரிவித்தார். போபால் விஷவாயு விபத்து காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் களத்தில் இறங்கி பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிய இயக்கம் ஆர் எஸ் எஸ் மட்டுமே. அப்போதைய செய்தித் தாள்களில் கூட அந்த விஷயம் வெளிவந்தது. ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் அந்த இயக்கத்திடம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார். பின்னர் மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரால் போபால் விபத்து குறித்த விவரணங்கள் எவ்வாறு திரிக்கப் பட்டன என்பதையும் கூறினார்…. தமிழகத்தில் ஒடுக்கப் பட்டவர்களுக்கு ஈவேராவின் இயக்கம் எந்த விதத்திலும் உதவவில்லை; இந்தியாவிலேயே முதன் முதலில் உடுப்பி மாநகராட்சியில் மனிதக் கழிவை அகற்றுவதை தடைசெய்து சட்டம் இயற்றியது பாரதிய ஜனதா கட்சி தான் – இத்தகைய அரிய தகவல்களை எடுத்துரைத்தார்… இந்த 20 நிமிட உரை முழுவதையும் கீழ்க்கண்ட வீடியோக்களில் காணலாம்…
View More ஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை