அஞ்சலி – டோண்டு ராகவன்

அவர் மாதிரி ஒருவர் சளைக்காமல் சலித்துக்கொள்ளாமல், அவரைச் சீண்டும் சில்லுண்டிகளின் மொழியிலேயே அவர்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டும் இருப்பவரை எங்கு பார்க்கமுடியும்?…. அவர் அளவில் ஒரு போராளி தான். எல்லா அராஜக சிந்தனைகள் செயல்களுக்கும் தார்மீகமற்ற சொல்லாடல்களுக்கு அயராது தன் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்திருக்கிறார். ஒரே குறை. அவர்கள் எல்லோரும் நான் பார்த்த வரை நாகரீகமும் பண்பும் அற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அது ஒரு சோகம் தான். நல்ல மனிதர். பழகுவதற்கு இனிமையானவர். தன்னை அநாகரீமாகச் சாடியவர்களுக்கு அவர் நட்புக் கரம் நீட்டியவர். ஆனால் அந்த நட்புக் கரம் பற்றியவர்களோ “ பார்ப்பன “ என்ற துவேஷ அடைமொழி இல்லாது எந்த உறவையும் பேணத் தெரியாதவர்கள். இவர்களுடன் போராடித் தான் அவர் காலம் பெரும்பாலும் கழிந்தது என்பது ஒரு சோகம்…

View More அஞ்சலி – டோண்டு ராகவன்

இந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்

இந்துத்துவம் என்பது இந்த தேசத்தின் வாழ்வியல் முறை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட பிறகும், இன்றும் இந்துத்துவம் என்றாலே நம்மவருக்கும் கூட கசப்பாகவே இருக்கிறது. … நமது வரலாற்றை, பண்பாட்டை சரியான படி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு லாப நோக்கமில்லாத ஒரு பதிப்பகத்திற்கான மிகப் பெரிய அவசியம் உள்ளது. இத்தகைய ஒரு பதிப்பகத்தை நாம் நன்கறிந்த எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமான அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்திருக்கின்றனர்… 2012 டிசம்பரில் கீழ்க்கண்ட பத்து புத்தகங்களை இந்துத்துவ பதிப்பகம் சார்பில் கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளது. இந்தப் பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் எப்படியெல்லாம் உதவலாம்?…

View More இந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்

திருப்பூர்: விஜயதசமி விழா, சிறப்பு சொற்பொழிவுகள்

அறம் அறக்கட்டளை, திருப்பூர் நடத்தும் நிகழ்ச்சிகள்: காலை – எழுத்தறித்தவில் (வித்யாரம்பம்) விழா. மாலை – சொற்பொழிவுகள். ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பேரா. கனகசபாபதி, ஏ.பார்த்திபன் மற்றும் நகர பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் .. அழைப்பிதழ் கீழே. அனைவரும் வருக!

View More திருப்பூர்: விஜயதசமி விழா, சிறப்பு சொற்பொழிவுகள்

காஞ்சி மாமுனிவர் குறித்த விமர்சனங்கள்: ஓர் எதிர்வினை

ஆஸேது ஹிமாசலம் பரந்து விரிந்த ஹிந்துஸ்தானத்தில் இவ்வாறு ஹிந்து தர்மம் தழைக்க வாழ்ந்த பல நூறு துறவியரில் ஒருவர் காஞ்சி மஹாஸ்வாமிகள் என்று அன்புடன் அழைக்கப்பெடும் பூஜ்ய ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள். ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் சம்பந்தமாக நமது தமிழ் ஹிந்து தளத்தில் பதிவான சில கருத்துக்களில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. பிறப்படிப்படையிலான வர்ணம் என்ற கருத்து “தெய்வத்தின் குரல்” தொகுப்பில் பேசப்படுகிறது. சங்கத்திலும் ஹிந்து இயக்கங்களிலும் ஒன்றாய் உண்டு விளையாடி ஹிந்து எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் பாடுபடும் எவராலும் இக்கருத்தை ஏற்கவியலாது என்பது விஷயம். எது எப்படி இருப்பினும் ஒட்டு மொத்த தொகுப்பையே ஆபாச மஞ்சள் புத்தகங்கள் என உருவகப்படுத்துவது முற்றிலும் ஏற்கவியலாது.

View More காஞ்சி மாமுனிவர் குறித்த விமர்சனங்கள்: ஓர் எதிர்வினை

மார்ச்-25: திருப்பூரில் புத்தக அறிமுகம், கருத்தரங்கம்

உடையும் இந்தியா? மற்றும் பஞ்சம், படுகொலை,பேரழிவு: கம்யூனிசம் – அரவிந்தன் நீலகண்டனின் இரு நூல்கள் குறித்த கருத்தரங்கம். பா.ஜ.க பொறியாளர் அணி நடத்துகிறது. நூலாசிரியர், ஜடாயு, ம.வெங்கடேசன், பி.ஆர்.ஹரன், ஓகை நடராஜன், வீர.ராஜமாணிக்கம் மற்றும் நகர பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அனைவரும் வருக! அனுமதி இலவசம்.. அழைப்பிதழ் கீழே..

View More மார்ச்-25: திருப்பூரில் புத்தக அறிமுகம், கருத்தரங்கம்

கும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம்

நாள்: 25-02-2012, சனிகிழமை பிப்-25, சனிக்கிழமை மாலை 7 மணி. ராயா மகால், காந்தியடிகள் சாலை. பேராசிரியர். சாமி. தியாகராஜன், திரு. கிருஷ்ண பறையனார், திரு.ம. வெங்கடேசன் (எழுத்தாளர்), திரு. ம. ராஜசேகர் (வழக்குரைஞர்), திரு. B.R. ஹரன், (பத்திரிக்கையாளர்) திரு. அரவிந்தன் நீலகண்டன் (நூலாசிரியர்) கலந்து கொள்கின்றனர்…

View More கும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம்

விவேகானந்த கேந்த்ரா: புத்தக வெளியீட்டு விழா

நாள்: 9, ஃபிப்ரவரி 2012, இடம்: “ராகசுதா ஹால்”, மைலாப்பூர் சென்னை,
விவேகானந்த கேந்திர பிரகாசன் அறக்கட்டளையின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா. அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்!

View More விவேகானந்த கேந்த்ரா: புத்தக வெளியீட்டு விழா

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்

ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களுமாகப் படுகொலை செய்யப் பட்டதைப் பக்கம் பக்கமாகப் படிக்கும் போது, மரணங்கள் வெறும் புள்ளி விவரங்களாக ஆகி விட்ட நிதர்சனம் மனதைச் சுடுகிறது… கொள்கை மோகம் மட்டுமல்ல, சுய-அகங்கார நோக்கங்களும் நேருவை ஸ்டாலினின் சோவியத் யூனியனுடன் மையல் கொள்ள வைத்திருந்தன.. ‘திபெத்தில் எரிந்த நாலந்தா’ அத்தியாயத்தைப் படித்து முடித்த போது, காட்டெருமையின் குளம்புகளில் சிக்கிக் கொண்ட குழந்தை என்ற வர்ணனை தான் மனதில் எழுந்தது… எல்லா சான்றுகளுமே கம்யூனிஸ்டுகளே வெளியிட்டுள்ள பல நூல்களில் இருந்தும், ரஷ்ய, சீன பதிப்புகளில் இருந்துமே தரப்பட்டிருப்பது…

View More பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்

உடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்

இந்தப் புத்தகம் தேச ஒற்றுமையில் சமரசம் செய்துகொள்ளத் தயாரில்லாத அண்ணல் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, விவேகானந்தர் ஆகியோருக்கு நன்றிக் கடனாக, தன்னுடைய சிறு முயற்சி என்றும் இந்தப் புத்தகத்தின் தேவை தீரும் நாளையே தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அரவிந்தன் குறிப்பிட்டார்… ஜோ டி குரூஸ் அன்று கச்சிதமாகப் பேசி அனைவரையும் நெகிழவைத்தார்… கம்பர் சேக்கிழாருக்கு அடுத்தபடியாக அரவிந்தன் நீலகண்டனைக் குறிப்பிட்டுப் பேச ஆரம்பித்தார் எஸ்.ராமச்சந்திரன்… அதிரடிக்குரலும் ஆர்ப்பரிக்கும் அலைபோன்ற தொடர் பேச்சும் வாள் வீச்சாக இருந்தது….

View More உடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்

சென்னையில் “உடையும் இந்தியா?” புத்தக வெளியீட்டு விழா!

ஜனவரி-3, 2012 (செவ்வாய்) மாலை 6 மணி.. அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பத்ரி சேஷாத்ரி, கிருஷ்ண பறையனார், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், கல்வெட்டு எஸ்.இராமச்ச்சந்திரன், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், டாக்டர் தியாக சத்திய மூர்த்தி, பேரா. சாமி தியாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்… அழைப்பிதழ் கீழே! அனைவரும் வருக. ஆதரவு தருக!

View More சென்னையில் “உடையும் இந்தியா?” புத்தக வெளியீட்டு விழா!