அறியாமை என்பதற்கு ஒரு தனியான இருப்பு கிடையாது. அறிவு இல்லாமல் இருப்பதுதான் அறியாமை எனும் நிலை. அறியாமையை அகற்றுவதுதான் அறிவைப் புகட்டுவது என்றாகிறது…. கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங் கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் சீவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்… .
கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படாததால், அவைகள் அஞ்ஞானத்தை நீக்குவதில்லை. ஞானம் ஒன்றே அறியாமையைப் போக்கும்….
Tag: அறியாமை
பாவ மன்னிப்பும் பாப விமோசனமும்
சாம்பல் குவியலில் தீ இருப்பது ஒருவனுக்குத் தெரியவில்லை. அதனுள் நடந்தான்; அது காலைச் சுட்டுவிட்டது. அந்த வலியை அவன் அனுபவித்தே ஆகவேண்டும். அந்த வலியை மன்னித்து விடுகிறேன் என்று யாரும் சொல்லமுடியாது ….கொடிய செயல்களும் பிரபஞ்சத்தின் பெரிய திட்டத்தில் தகுந்த இடம் பெற்றிருக்கின்றன. பசுவின் மடியில் பால் இருப்பதும் பிரபஞ்ச நடைமுறைக்குத் தேவை. பாம்பின் பல்லில் விஷம் இருப்பதும் பிரபஞ்சத்தின் நடைமுறைக்குத் தேவை…
View More பாவ மன்னிப்பும் பாப விமோசனமும்அறியும் அறிவே அறிவு – 12
கற்றவன் என்ற கர்வம் வந்ததால் எண்ணம், பேச்சு என்று எதிலும் தனது தனித் தன்மையை நிலை நாட்டும் செயல்களில் ஈடுபடுவதால் வாதங்கள் புரிவதிலும், தனது பெயரையும், புகழையும், பற்றுகளையும் பெருக்கிக் கொள்வதில் காலத்தைச் செலவிடுமே தவிர, தான் பெற்ற அறிவால் தன்னைத் தெரிந்து கொள்ளும் வழியில் இருந்து தப்பிச் சென்றுவிடும். இதுதான் அடி முடி தேடிய புராணத்தில் பிரமன் சென்று தெளிந்த பாதை […]
View More அறியும் அறிவே அறிவு – 12அறியும் அறிவே அறிவு – 4
ரமணரின் “நான் ஆன்மாதான்” என்று மதுரையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், பிற்காலத்தில் அதைப்பற்றி “அருணாச்சல அஷ்டக”த்தில் அவரே எழுதியுள்ளதையும் பாருங்கள். முதல் செய்யுளில், “அருணாச்சலம் எனக் கேட்டதும், அதுதான் திருவண்ணாமலை என ஒருவர் சொல்லியும், அது ஏதோ எல்லாவற்றையும் விட மிகப் பெரியது என்று என் புத்தியில் தோன்றிக்கொண்டு இருந்தது. அதன் உண்மைப் பொருளை நான் அறியவில்லை. என் அறிவை அது மயக்கி, என்னை அதன் அருகினில் ஈர்க்க நானும் வந்த போது அது அசலமாய் இருக்கக் கண்டேன்” என்கிறார்.
View More அறியும் அறிவே அறிவு – 4அறியும் அறிவே அறிவு – 3
அறிவில் அறியாமை கலந்திருக்கிறது. அறியாமையில் அறிவு கலந்திருக்கிறது. அறியாமையில் அறிவின் கலப்பு இல்லையென்றால், தெரியவில்லை என்று (கூடச்) சொல்லமுடியாது [..] இது பக்தி வழி என்றால், அது ஞான வழி என்றும், இரண்டும் ஒரே இடத்திற்கு சாதகனை இட்டுச் செல்கிறது என்றுதானே அர்த்தம்? [..] மெய்யான ஞானத்தை விட்டு விதவிதமாகத் தோன்றும் உலக ஞானம் தனித்து நில்லாது. (ஆனாலும்) உலகம் தோன்றும்போது ஆத்மா தோன்றாது. ஆத்மா தோன்றும்போது உலகம் தோன்றாது [..]
View More அறியும் அறிவே அறிவு – 3