மே-23 அன்று ஆலய கோபுர கலசங்கள் சேதப்படுத்தப்பட்டதும், இறை மூர்த்தங்களின் உடைமைகள் திருடப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் இருப்பது அதிர்ச்சிகரமான செயல். அற நிலையத்துறை சார்பாக எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல் விடப்பட்டுள்ள ஆலயத்திற்கு பக்தர்கள் சார்பாக ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலரும் முழு போதையில் சுய நினைவின்றி இருந்திருக்கிறார். காவல்துறை கடைசியில் கோவிலில் ஒளிந்திருந்த நபரை கைது செய்தனர். நன்கு ட்ரிம் செய்யப்பட்ட தாடி மற்றும் உடலில் அங்கங்கே டாட்டூ குத்திக்கொண்டு முழு ஆரோக்கியத்தோடு திட்டமிட்டு கோவில் கதவை திறந்து இறை மூர்த்தங்களை சேதப்படுத்திய “மனநலம் குன்றியதாக” அறிவிக்கப்பட இருக்கும் கூலி சமூக விரோதியான அந்த நபரை காவல் துறையினர் பத்திரமாக பாதுகாத்து அழைத்து சென்றனர்… திமுக ஆட்சி வந்த உடன் திருக்கோவிலின் திருக்குளத்தை ஆக்ரமித்து கட்டப்பட்டு வெற்றிகரமாக மத மாற்ற பணிகளை ஆலயத்திற்குள்ளேயே செய்யும் பெந்த கோஸ்தே சர்ச்சின் அடாவடிகள். அதற்கு துணை போகும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அற நிலையத்துறை அதிகாரிகள் என்று அலங்கோல நிலையில் இருக்கிறது உண்மை நிலை…
View More அவிநாசி ஆலயம் மீது திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள்: நேரடி ரிப்போர்ட்Tag: இந்துக்கள் மீது தாக்குதல்
இந்துமதம் குறித்த அவதூறுகளை எப்படி எதிர்கொள்வது: ஒரு பார்வை
இந்து மதம் குறித்து அவதூறு பரப்புபவர்கள் எல்லாம் கிறிஸ்தவ, இஸ்லாமிய கார்ப்பரேட் கம்பெனியின் விளம்பர நடிகர்கள் போன்றவர்கள். காசு வாங்கிக் கொண்டு போய்கொண்டே இருப்பார்கள். ஆனால், ஒட்டு மொத்த இந்து தரப்பும் பதறியடித்துக்கொண்டு அதற்குப் பல்வேறுவிதமான பதில்களைச் சொல்லத் தொடங்குகிறது. .. நாம் பேச வேண்டியவற்றை மற்றவரைக் கொண்டு பேசவைப்பதென்பது மத அரசியலில் பால பாடம். கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படை சக்திகள் அதில் டாக்டரேட் முடித்து விட்டிருக்கிறார்கள். நாம் பத்தாவது பாஸ் செய்யவாவது முயற்சிகள் எடுக்கவேண்டும்…”ராஜராஜன் இந்து இல்லை என்று சொல்பவன், என் அம்மா என் அப்பாவுடன் படுத்து என்னைப் பெறவில்லை என்று சொல்கிறான்” என்று அவர்கள் மத்தியில் இருந்தே ஒருவரைப் பேசவைக்க வேண்டும்..
View More இந்துமதம் குறித்த அவதூறுகளை எப்படி எதிர்கொள்வது: ஒரு பார்வைகாஷ்மீர் ஃபைல்ஸ் – ஓர் இந்து இனப் படுகொலையின் கலை ஆவணம்
இது இந்தியத் திரைப்பட உலகில் நிகழ்ந்திருக்கும் மாபெரும் அதிசயம்.. மதம் மாறு… அல்லது…. ஓடிப் போய்விடு… அல்லது செத்துப்போ என்று காஷ்மீர இந்துக்களுக்கு விடப்பட்ட மிரட்டல் அப்படியே படத்தில் இடம்பெற்றிருக்கிறது. தேசம் முழுவதிலும் இருக்கும் இந்துக்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நேற்று பண்டிட்கள்… நாளை நாம் என்று ஓர் அதிர்ச்சி உடம்பெல்லாம் ஓடும். அந்த வகையில் இந்தத் திரைப்படம் இப்படியான ஒரு படுகொலை இனி நடக்காமல் தடுக்க என்ன செய்யவேண்டுமோ அதை உரத்த குரலில் எச்சரிக்கை செய்யும் கண்டாமணியோசையாக இருக்கிறது.. என்று இந்தப் படம் நம் நெற்றிக்கு நேராகத் துப்பாக்கியை வைத்துப் பாடம் எடுத்திருக்கிறது…
View More காஷ்மீர் ஃபைல்ஸ் – ஓர் இந்து இனப் படுகொலையின் கலை ஆவணம்மேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்
சுதந்திர இந்திய வரலாற்றில் தேர்தல் முடிவுகளை ஒட்டி நடந்த மிகக் கொடூரமான வன்முறையாக சமீபத்தில் திரிணாமுல் கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய மேற்குவங்க வன்முறைகள் உள்ளன… மாநிலத்தின் பல இடங்களில் கற்பழிப்புகள், கூட்டு பலாத்காரம் மற்றும் கொலைகள் நடந்துள்ளன. தேர்தல் நாளன்று பாஜகவின் வாக்குச் சாவடி முகவர்களாக பணியாற்றிய காரணத்துக்காகவே பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்… கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சகோதர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்…
View More மேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்
ஒரு எளிய ஹிந்து அல்லது இந்தியன் தினம் தினம் ஒரு கூர்மையான வாதத்தால் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு சாதரண பேச்சில் பகிரங்கமாக சீண்டப்படுகிறான். இந்த சூழலில், சமூகசேவை, கல்வி, மருத்துவம் தொடங்கி எல்லாமே இந்தியாவில் எப்படி ஒரு அரசியல் கருவியாக, உள்நோக்கம் கொண்டதாக ஆகியிருக்கிறது என்பதை தன் இயல்பான தர்க்கத்தால் முன் வைத்திருக்கிறார் B.R.மகாதேவன், கதைமாந்தர்களின் வழியாக. எப்படிப்பட்ட வாதங்களால் நாம் அன்றாடம் களத்தில் வீழ்த்தப்படுகிறோமோ, அது எல்லாவற்றிற்கும் வெகுசாதாரண மொழியில் பதில் சொல்ல,ஒரு தரப்பை உருவாக்கிக் கொள்ள இந்த புத்தகம் மிக முக்கியமானது…
View More ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்மரிச்சபி படுகொலை: நெஞ்சில் எரியும் தீ
என் மனைவியை அழைத்துக்கொண்டு ஒரு குழுவாக நாங்கள் எல்லையைக் கடக்க முயன்றபோதுதான் இந்தக் காயங்கள் எனக்கு ஏற்பட்டன. ஓர் இஸ்லாமிய கும்பல் எங்களைச் சுற்றி வளைத்துத் தாக்கியது…எங்கள் படகுகள் இடது சாரி அரசின் காவலர்களால் தாக்கப்பட்டு ஆற்றின் நடுவில் மூழ்கடிக்கப்பட்டன. அதில் சென்றவர்களும் அப்படியே மூழ்கி இறந்தனர்.. 1970களின் மரிச்சபி படுகொலைகள் இந்தியாவையே உறையவைத்த நிகழ்வு. அதில் பாதிக்கப்பட்டவர்களின் சோகங்களை அவர்கள் வாய்மொழியிலேயே பதிவு செய்துள்ள முக்கியமான ஆவணம் இந்த நூல்..
View More மரிச்சபி படுகொலை: நெஞ்சில் எரியும் தீசொல்லுங்கள் மகாத்மாவே
உன் அஹிம்சா மூர்த்தங்களின் அபிஷேகத்துக்கு எம் மக்களின் ரத்தம்தானா கிடைத்தது? உன் அதீத அன்பின் பிரார்த்தனைகளுக்கு எம் மரண ஓலமா மந்திரங்கள்? உன் பெருங் கருணையின் யாகத்துக்கு எம் உடல்களா சமித்துகள்?.. சொல்லுங்கள் மகாத்மாவே நீங்கள் அவதாரமா.. அரிதாரமா?.. காலின் கீழ் போட்டு மிதித்தவனிடம் ஏன் காவு கொடுத்தாய் உன் கிராம ராஜ்ஜியக் கனவுகளை? உன்னை நம்பி உன் பின் திரண்ட ஆவினங்களை எதற்காக ஒரு மாட்டு வியாபாரியிடம் விலை பேசி விற்றாய்?.. கொடு நரகமாக இருந்த சிறைச்சாலைகள் எல்லாம் நீங்கள் போர்க்களம் புகுந்ததுமே பூஞ்சோலைகளாகியது எப்படி? இடுப்பில் விலங்கு பூட்டி இழுக்க வைக்கப்பட்ட கல் செக்குகள் எல்லாம் காணாமல் போனது எப்படி? சிறையில் இருந்தபடியே நீங்கள் சுய சரிதம் எழுதிக் குவிக்க உங்களுக்கு எப்படிக் கிடைத்தன சித்திர எழுதுகோல்கள்..
View More சொல்லுங்கள் மகாத்மாவேசொல்லுங்கள் மனித குல மாணிக்கங்களே
நாதுராம் கோட்÷ ஒரு மத வெறியன் ஒரு முட்டாள் மாபெரும் குற்றவாளி – மனிதருள் மாணிக்கங்களே நீங்கள் சொல்லுங்கள் – நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்அவனிடத்தில் நீங்கள் இருந்திருந்தால் – உங்கள் தாயும் மனைவியும் மகளும் கதறக் கதற உங்கள் கண் முன்னே கற்பழிக்கப்படுகிறார்கள் – முதியவர் தன் ஊன்றுகோலால் இருவரையும் எட்டித் தள்ளிவிட்டு, சற்று தொலையில் ஹூக்கா குடித்துக்கொண்டுகண்களில் மதம் மின்ன சற்றே களைப்புடன் சாய்ந்திருப்பவன் முன் சென்று நிற்கிறார்…
View More சொல்லுங்கள் மனித குல மாணிக்கங்களேகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு
பாஜகவை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் மோசமான நிலையில் வாழும் இந்துக்களின் எந்த ஒரு அவலநிலையையும், கிறிஸ்துவர்களின் அவலநிலையையும் பேசக்கூடாது என்று இங்கே ஒரு அறிவுஜீவி வர்க்கம் நினைக்கிறது. இந்துக்கள் பாஸிஸ்டுகள், இந்து மதமே கேவலமானது, இந்துக்கள் கொன்றொழிக்கப்பட்டால் அது நல்லதுதான் என்று அளவுக்கு இவர்களது மனத்தில் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான கடும் வெறுப்பு நச்சாக ஆக்கிரமித்திருக்கிறது… இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே. 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை. ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்கவில்லை… பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்தியாவை விட வறுமை, வேலைவாய்ப்பின்மை. இஸ்லாமியர்கள் தனியான தேசிய இனம், பிரிவினை வந்தாலே இஸ்லாமிய சொர்க்க பூமி உருவாகி பாலும் தேனும் பெருக்கெடுக்கும் என்று தம்பட்டம் அடித்து லட்சக்கணக்கான இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்களைக் கொன்றழித்து உருவான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவாகியுள்ளது…
View More குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்புதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் பொம்மி நாய்க்கன்பட்டியில் 64 வயது வள்ளியம்மாள் இறந்திருக்கிறார். இறுதிச் சடங்குக்காக வழக்கமான பாதையில் எடுத்துச் செல்கையில் வேறு வழியில் கொண்டு செல்லுங்கள் அல்லது பிணத்தை வைத்து விட்டு ஓடுங்கள் என்று சொல்லி இஸ்லாமியர்கள் மிரட்டுகிறார்கள். கெஞ்சிக் கேட்டபோதும் இரங்காமல், பயங்கரமான ஆயுதங்களை வைத்து தலித் இந்துக்களைத் தாக்குகிறார்கள்.. இதன் பின் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள், பிணத்தை சுமந்து சென்ற ஏழை இந்து சகோதரர்களின் வீடுகளை தீக்கிரையாக்கியும், அவர்களின் வாகனங்களை உடைத்தும் இரவு மீண்டும் அப்பாவி தலித்கள் மீது தாக்குகிறார்கள். எப்போதும் சமூக நீதி, சமத்துவம், சகிப்பின்மைக்கு எதிரானவர்களின் எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டிருக்கும் எந்த அரசியல் தலைவரும் இதற்காக வாய் திறக்க வில்லை…
View More தலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை