வளரும் பாரதத்தின் உலக மேலாண்மை

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும்.

View More வளரும் பாரதத்தின் உலக மேலாண்மை

இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?

இலங்கையில் அதிகாரப் பரவல் சாத்தியமாக வேண்டும்; ஈழத்தமிழர்களும் மாகாண சுய ஆட்சியைப் பெற வேண்டும்; வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: போர்க்காலக் காயங்கள் ஆற்றப்பட வேண்டும்; குடிபெயர்ந்த தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட வேண்டும்; போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிங்கள ஆதிக்கம் குறைக்கப்பட்டு உண்மையான சமஷ்டிக் குடியரசாக இலங்கை மலர வேண்டும். இந்தியாவுடன் பிராந்தியரீதியான நல்லுறவை இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா வலுப்படுத்த வேண்டும். அப்போது பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசால் முடியும். இவை அனைத்தும் நடக்குமா?
நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

View More இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?

இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்

இந்தியப் பிரதமராக மக்களின் பேராதரவுடன் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்திய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தாண்டி ஒளிக்கீற்றாகவே பார்க்கப்படுகிறார்… தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மூன்று முக்கிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் – இராணுவ மயமாக்கப் பட்ட சூழல், திட்டமிட்ட நிலப்பறிப்பும் குடியேற்றங்களும், மதமாற்றம்… முக்கியமான வரலாற்றுப் பிழை இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றாமலேயே அதற்குள்ளாகவே மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரமுடியுமென்று இந்தியா நினைத்தமை. அந்த அமைப்புக்குள் பகிரப்படும் அதிகாரங்கள் மத்திய அரசினால் எந்தநேரத்திலும் மீளப்பெறக் கூடியவை… இலங்கை இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வுகளில் இலகுவானதும் அதிகபலப்பிரயோகம் இன்றி நடைமுறைப்படுத்தக் கூடியதுமான தீர்வு முழுமையான சமஷ்டி அமைப்பினை ஏற்படுத்துவதாகும். இதனை வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் இலங்கை அரசு செய்வதற்கு மறுத்தால், இந்திய அரசு மற்ற இரண்டு சிக்கலான தெரிவுகளுக்கு செல்வது தான் பிரசினைக்கு தீர்வு காணும் வழிகளாக ஆகும்….

View More இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்

ஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா?

தனது கடும்போக்கு மூலம் ஜெயலலிதா என்ன உணர்த்துகிறார்? “ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்” என்ற ஒற்றை பிரசினையை மையமாக வைத்துத் தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் உள்ள உறவு நிர்ணயிக்கப் படும் என்கிறாரா? இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்குக் கூட தங்களது அன்றாட வாழ்வாதார, சமூக, பொருளாதார பிரசினைகளைத் தாண்டி *மையமான* ஒற்றைப் பிரசினையாக இந்த விஷயம் இல்லை… தமிழகத்தின் மக்கள் மிகப் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு வாக்களித்தது ஜெயலலிதா ராஜபட்சேக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பதற்காகவா என்ன?… தனக்குக் கிடைத்திருக்கும் ஜனநாயக பூர்வமான அதிகாரத்தை ஜெயலலிதா துஷ்பிரயோகம் செய்கிறார்…

View More ஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா?

திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி

தமிழர்கள் சம உரிமையுடனும் பாதுகாப்புடனும் வாழும் இந்தியாவின் நட்புநாடாக இலங்கையை மோதி மாற்றுவார். அதற்கான நோக்கமும், திட்டமிடலும், செயல் வேகமும், தகுதியும் ,வாய்ப்பும், ஆர்வமும் இன்று மோதி அவர்களிடம் மட்டுமே உள்ளது. ஆனால் அவரைப் புரிந்துகொண்டு பாரதத்தின் புணர்நிர்மாணத்தில் தோள்கொடுக்க தமிழகம் தவறியது வேதனையான ஒன்று… மோதி அவர்கள் இலங்கை அதிபர் ராஜபச்சாவை பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததைக் காட்டமாக விமர்சிக்கும் தீவிர தமிழர் அமைப்புகள் ஈழத்தமிழருக்கு நன்மை செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியத் தமிழர்களையும் தவறான பாதையில் திருப்புகிறவர்கள். இதில் பலரது நோக்கம் வயிற்றுப்பிழைப்பு, இவர்களால் ஈழத்தமிழர்கள் பெற்ற நன்மை என்ன? ஒன்றுமே இல்லை…

View More திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி

பிரதமர் பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகள்: ஒரு பார்வை

இதுவரை எந்த நாடும், எந்தத் தலைவரும் இப்படி ஒரு காரியத்தைச் செய்ததில்லை. சாதாரணமாக தேர்தல் முடிந்தபின் பதவியேற்றுக்கொள்வது என்பது ஒரு உள்நாட்டு நிகழ்ச்சியாக மட்டுமே கருதப்பட்டுவரும் நிலையில், அண்டைய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்ததன் மூலம் உலக நாடுகள் அனைத்தையும் பாரதத்தின் மீது தனிக்கவனம் செலுத்த வைத்திருக்கிறார் மோதி. இதன் மூலம் தன்னை ஒரு வித்தியாசமான தலைவராக முன்னிறுத்தியுள்ளார்… தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் பாரதத்தின் தலமைச் சிறப்பையும் அதிகாரத்தையும் நிலைநிறுத்தும் நோக்கத்துடன் மோதி அரசு செயல்படும் என்பது என் கருத்து. பாரதத்தின் வெளியுறவுக் கொள்கைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு உலக அளவில் பாரதத்தின் நிலை உயரும் என்பது நிச்சயம்.

View More பிரதமர் பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகள்: ஒரு பார்வை

யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?

5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத்…

View More யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?

கம்பனும் இலங்கையும்

கம்ப ராமாயணத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகவும் விரவிக் காணப் படுகின்றது. வேறெந்தப் புலவனுக்கும் கொடுக்கப் பெறாத பெருமை கம்பருக்கு வழங்கப் பெற்று வருகின்றது.”ஈழத்து வீழ்ச்சியை” பாடிய கம்பரை ஈழம் நிராகரிக்க வேண்டும் என்ற வகையிலான கருத்துக்களும் ஆங்காங்கே சிலரால் எழுப்பப்பட்டு வந்துள்ளன… அறமற்ற வகையில் உரிமையற்ற ஆட்சியாளனால் ஆளப்படும் நாடாக ஈழம் காட்டப்படுகிறது. எனினும் தன் இச்சைக்காகச் சமுதாயத்தைப் பலியிட்ட இராவணனிடமிருந்து ஈழத்தை “உம்பரில் ஒரு முழம் உயர்ந்த ஞானத்தம்பி” என்று காட்டப்பெறும் விபீடணனுக்கு வழங்கியே காவியத்தைக் கம்பர் நிறைவு செய்கிறார்… “தவம் செய்த தவமால்” என்று உயர்த்திப் பேசுவதும் ஈழத்தின் உயர்வை உறுதியாகவும், சிறப்பாகவும் கம்பர் போற்றியுள்ளார் என்பதற்குத் தக்க சான்றுகளாகும்…

View More கம்பனும் இலங்கையும்

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன் தமிழாக்கம்      : எஸ்.…

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30

இலங்கை: என்று தீரும் எம் சகோதரர்களின் சோகம்?

2009  ஏப்ரல், மே மாதங்களில் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் போது ஏதோ வேற்றுக் கிரகத்தில் நடப்பது போல வேடிக்கை பார்த்திருந்த அதே தமிழகம், இப்போது குதித்துக் கொந்தளிக்கிறது…. தீர்மானத்தில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து எங்காவது ஒரு வார்த்தை இருக்கிறதா? அல்லது, இலங்கை  அரசின் போர்க் குற்றங்கள் குறித்த கண்டனங்கள் எதாவது இருக்கின்றனவா? இந்த அதிமேதாவித் தனமான தீர்மானத்தை ஆதரிக்கத் தான் இரண்டு வாரம் யோசித்தது நமது மத்திய அரசு. இந்தத் தீர்மானத்தால் புளகாங்கிதம் அடைத்து தான் நமது மாணவர்கள் தங்கள் படிப்பைத் துச்சமெனத் துறந்து தெருவில் இறங்கினார்கள். இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?….. இந்தியாவின் இறையாண்மையை உலக அரங்கில் உயர்த்தும் நோக்கத்துடனும், இந்திய வம்சாவழியினரின் நலனுக்காகப் பாடுபடும் திண்மையுடனும் மத்தியில் எப்போது நல்லரசு உருவாகும்? அப்போது தான் நமது சகோதரர்களின் சோகம் தீரும்….

View More இலங்கை: என்று தீரும் எம் சகோதரர்களின் சோகம்?