இந்து மதம் குறித்து அவதூறு பரப்புபவர்கள் எல்லாம் கிறிஸ்தவ, இஸ்லாமிய கார்ப்பரேட் கம்பெனியின் விளம்பர நடிகர்கள் போன்றவர்கள். காசு வாங்கிக் கொண்டு போய்கொண்டே இருப்பார்கள். ஆனால், ஒட்டு மொத்த இந்து தரப்பும் பதறியடித்துக்கொண்டு அதற்குப் பல்வேறுவிதமான பதில்களைச் சொல்லத் தொடங்குகிறது. .. நாம் பேச வேண்டியவற்றை மற்றவரைக் கொண்டு பேசவைப்பதென்பது மத அரசியலில் பால பாடம். கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படை சக்திகள் அதில் டாக்டரேட் முடித்து விட்டிருக்கிறார்கள். நாம் பத்தாவது பாஸ் செய்யவாவது முயற்சிகள் எடுக்கவேண்டும்…”ராஜராஜன் இந்து இல்லை என்று சொல்பவன், என் அம்மா என் அப்பாவுடன் படுத்து என்னைப் பெறவில்லை என்று சொல்கிறான்” என்று அவர்கள் மத்தியில் இருந்தே ஒருவரைப் பேசவைக்க வேண்டும்..
View More இந்துமதம் குறித்த அவதூறுகளை எப்படி எதிர்கொள்வது: ஒரு பார்வைTag: ஊடகப் பொய்ப்பிரசாரம்
அரசியல் “மாநாடு”: திரைப்பார்வை
இருபது நிமிடங்களில் என் மீது திணிக்கப்படும் கருத்து என்னவென்று தெரிந்துவிட்டது. 1998 கோவை குண்டு வெடிப்பு களம். பாஷா என்ற பெயரை யாரும் உச்சரிக்கவில்லை.. “எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்” என்று ஆதங்கப்படும் அவர்கள் “ஏன் எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்” என்று கேள்வி கேட்காமல் இருப்பது விந்தையே.. படம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் மகன் “ஆமாம்பா. Poor they are. They are being crucified. பாவம் அவுங்க” என்று சொன்னபொழுது தான் என் பயம் அதிகமாகியது. The agenda works…
View More அரசியல் “மாநாடு”: திரைப்பார்வைவள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?
திருக்குறளை ‘தங்கத்தட்டில் வைத்த மலம்’ என்று கேவலமாக விமர்சித்த ஈ.வெ.ரா.வின் அடிப்பொடிகளுக்கு பாஜகவினரை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை… திருக்குறளை புனித நூலாக ஹிந்துக்கள் போற்றுகிறார்கள். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அவ்வாறு திருக்குறளை புனித நூல் என்று ஒப்புக் கொள்கிறார்களா?… திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த ஞானி; பாரதப் பண்பாட்டின் அடிநாதமான ஒழுக்கலாறுகளை உபதேசித்த சனாதனி; உலகுக்கு ஞானம் அளித்த துறவி. சனாதனத்தின் இப்போதைய பெயர் ஹிந்து என்பதால், வள்ளுவர் ஓர் ஹிந்துவே. அவரைப் போற்றவும், எந்த வடிவிலும் வணங்கவும் ஹிந்துப் பெருமக்களுக்கு உரிமையும் உண்டு கடமையும் உண்டு. இதை விமர்சிக்க எவனுக்கும் உரிமை இல்லை…
View More வள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்
பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராஜாங்க ரீதியான இரகசிய ஒப்பந்தம் பழைய காங்கிரஸ் அமைச்சர் அந்தோனி சார்பில் கை எழுத்து இடப்பட்டது என்று கூறி அந்த ஒப்பந்தத்தையும் காண்பித்து விட்டார். பிரான்ஸ் அரசாங்கமும் தெளிவாக ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சொன்னதாக சொன்ன தகவலை மறுத்து விட்டது.. முதலில் UPA அரசாங்கம் சொன்ன விலை மிகவும் குறைவான ஒன்று என்று இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் தெளிவாக ஆதரங்களுடன் சொல்லி விட்டனர். ஆனால் இப்போது மோடி அரசாங்கம் வாங்க இருப்பதோ அதி நவீன தொழில் நுட்பத்தில் தயாராகி கொண்டிருக்கும் விமானங்கள். அதிலும் பார்த்தோம் என்றால், இவர்கள் பழைய விமானங்களுக்கு செலவிட வேண்டிய பணத்தை விட வெறும் ஐந்து மில்லியன் டாலர்கள் மட்டுமே இதற்கு அதிகம். அது மட்டும் இல்லாமல் நமக்கு சாதகமாக என்னென்ன தேவைப்படுமோ அத்தனை சரத்துகளையும் நாம் இதில் உடன்பட வைத்து இருக்கிறோம்…
View More ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5
ஆக நம் நாட்டில் இரண்டுவகையான சுவாமிஜிக்கள் இருக்கிறார்கள். ஒன்று: தவறு செய்பவர்கள். இன்னொன்று தவறு செய்ததாக அவதூறு செய்யப்படுபவர்கள். நிஜத்தில் இரண்டு வகை சுவாமிஜிக்களுமே தோற்றவர்களாக இருக்கின்றார்கள். நமது கதாநாயகர் அடிப்படையில் நல்லவர் மட்டுமல்ல, அவருக்கு இழைக்கப்படும் அவதூறுகளையும் தீமைகளையும் வென்றுகாட்டக்கூடியவரும் கூட… … நாம் லௌகிக இன்பத்தில் திளைக்க துறவிகளைக் காயடிக்கவேண்டுமா என்ன..? அவர்கள் நமக்குத் தரும் மன நிறைவுக்கும் வழிகாட்டுதலுக்கும் இன்ன பிற உதவிகளுக்கும் நாம் காட்டும் நன்றி விசுவாசம் என்பது இதுதானா? துறவிகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிப்போம். அந்தக் காலத்தில் ரிஷியும் ரிஷி பத்தினியுமாக வாழ்ந்ததில்லையா அதுபோல் வாழ அனுமதிப்போம் என்று சொல்கிறார்கள்…
View More சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5“சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்
இந்தத் தொடர், ராமாயணத்தை ‘சீதையின் பார்வையிலிருந்து’ சித்தரிக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால், ஒரு மாதத்திற்குப் பின், இந்தத் தொடர் தன்னிச்சையாக ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கி, வால்மீகி ராமாயணத்தின் மூலத்திலிருந்து முற்றிலும் விலகிவிட்டது.. மூலக் கதையை திரித்தது மட்டும் இல்லாமல், நவீன “மதச்சார்பற்ற” “முற்போக்கு” கருத்துக்களையும் அதன் மேல் திணிக்க முயற்சி செய்து, ஹிந்துக்களின் பண்டைய வரலாற்றின் ஒரு பகுதியாக, இதிகாசமாகவும் புனித நூலாகவும் கருதப்படும் ராமாயணத்தை கேலி செய்வது போல் அமைந்துள்ளது… ராம -லட்சுமணர்களுக்கும் மாரீசன்- சுபாகு தலைமையிலான ராட்சதர்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தம், அரசர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே நடைபெறுவதாகக் காட்டப்படுகிறது ! இந்தத் தொடரை உருவாக்கியவர்களுக்கு ஆரியப் படையெடுப்பு தொடர்பான கதைகளின் தாக்கம் அதிகம் இருந்திருக்கும் போல…
View More “சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்பீஹார் 2015 – ஒரு போஸ்ட் மார்ட்டம்
பி ஜே பியின் தோல்விக்கு தாத்ரியோ, எழுத்தாளர்கள் போராட்டங்களோ பத்திரிகைகளோ எந்த விதத்திலும் காரணம் இல்லை. இவை எதுவுமே நடந்திருக்கா விட்டாலும் கூட இதே முடிவுகள்தான் வந்திருக்கக் கூடும்… பீகார் வாக்களர்களுக்கு பொருளாதார அறிவு எல்லாம் பெரிதாகக் கிடையாது. அடிப்படையில் உணர்ச்சி வேகத்திலும் ஜாதி மத அடிப்படைகளிலும் ஓட்டுப் போடும் முட்டாள்கள் அவர்கள். அவர்களிடம் அச்சா தீன் என்று நீ எதைச் சொல்வாய் என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. வளர்ச்சி என்றால் எது என்ன என்பதை அவர்களால் சொல்லக் கூட முடியாது. அவர்களுக்குத் தெரிந்த ஒரே வளர்ச்சி எல்லாம் அவர்கள் பையில் கிடைக்கும் பணம் மட்டுமே… ஆகவே உண்மையான வளர்ச்சித் திட்டங்களை சற்று குறைத்துக் கொண்டு பொது மக்களுக்கு வரிச் சலுகை மூலமாக லஞ்சம் அளித்து ஓட்டுக்களைக் கவர பி ஜே பி முயலலாம். சாலைகளும், துறைமுகங்களும், டிஜிட்டல் இண்டியாவும், ஸ்மார்ட் சிட்டிகளும் இல்லாமல் போனாலும் அவர்களுக்குக் கவலையில்லை அவர்களுக்குத் தேவையெல்லாம் இலவசங்களும் வரிக் குறைப்புக்களும் மட்டுமே….
View More பீஹார் 2015 – ஒரு போஸ்ட் மார்ட்டம்சம்ஸ்கிருதம் குறித்து அப்படி என்னதான் சொல்லி விட்டார் ராஜ்நாத் சிங்?
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியது சம்ஸ்கிருதம் மற்றெல்லா மொழிகளையும் விட அறிவியல்*பூர்வமான* மொழி என்பதைத் தானே தவிர, உடனடியாக அறிவியல் பாடங்களை எல்லாம் சம்ஸ்கிருதத்தில் படிக்க வேண்டும் என்பதாக அல்ல… வேறெந்த மாநிலத்திலும், ஆங்கில ஊடகங்களிலும் கூட இந்த செய்தியினால் எந்த சலசலப்பும் இல்லை. ஆனால் தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதை ஏதோ பெரிய பிரசினையாக்கிக் கொண்டிருக்கின்றன. “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்” என்று பாரதியார் சொல்லவில்லையா என்ன? அதே போன்ற ஒரு லட்சிய வாசகம் தான் “க்ருஹம் க்ருஹம் ப்ரதி சம்ஸ்க்ருதம்” என்பது. எல்லா மக்கள் இயக்கங்களுக்கும் இத்தகைய வாசகங்கள் தேவை…மொத்தத்தில் நரேந்திர மோதி அரசுக்கு எதிராக எந்த பிரசினையையும் குற்றச்சாட்டையும் கிளப்ப முடியவில்லையே என்ற புகைச்சலும் நமைச்சலும் மட்டுமே இதில் தெரிகிறது….
View More சம்ஸ்கிருதம் குறித்து அப்படி என்னதான் சொல்லி விட்டார் ராஜ்நாத் சிங்?தில்லி சட்டசபைத் தேர்தல் – ஒரு அலசல்
திட்டமிட்ட ஒருங்கிணைந்த வெகுஜன மக்கள் தொடர்பை இலக்காகக் கொண்ட தேர்தல் ப்ரசாரம். ஆப்புக்கட்சி இந்த யுக்தியை முழுமையாக தில்லி தேர்தலில் உபயோகித்துள்ளது. பாஜக தரப்பில் இதன் சுவடு கூட காணப்படவில்லை என்பது கசப்பான உண்மை… ஃபோர்டு ஃபவுண்டேஷன், பரங்கிய க்றைஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போன்றோரின் பணக்குவியல்கள் மற்றும் ஆசீர்வாதப் பின்னணியில் ஹிந்துஸ்தான அரசியல் அரங்கில் மூக்கறுபட்ட போலி மதசார்பின்மையை தாத்காலிகமாக மீட்டெடுத்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் ஸ்ரீ கேஜ்ரிவால்… உண்மை பாதி உண்மை போன்று காட்சியளிக்கும் பொய் பாதி போன்ற காரணிகள் – லவ் ஜிஹாத், கர்வாப்ஸி, த்ரிலோக்புரி மற்றும் பவானா போன்ற சில இடங்களில் நிகழ்ந்த கலவரங்கள். இது போக தோல்வியுடன் சம்பந்தப்படாத கொசுக்கடிக் காரணிகளும் உண்டு…
View More தில்லி சட்டசபைத் தேர்தல் – ஒரு அலசல்பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்
நாவலாசிரியரின் எழுத்துரிமை பற்றி இரு வேறு கருத்து இருக்க முடியாது. அது பாதுகாக்கப்பட வேண்டியது தான். ஆனால் அதற்காக வாதாடும் அறிவுலக வாதிகள், தாங்கள் நியாயம் எனக் கருதும் விஷயத்துக்காக எந்த வித வன்முறையுமின்றி அமைதியாகப் போராடும் சாமானிய மக்களை எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாமா? ஜாதியவாதிகள் என்று அவர்களைச் சொல்வதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த எதிர்ப்புகளை தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். கோவில் தேர்த்திருவிழாவில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் பொறுப்புக்கள் உள்ளன… ஊடகங்களில் சிலவாவது திருச்செங்கோடு சென்று அவர்களைச் சந்தித்து அங்கு என்ன நடந்து வருகிறது என்று நேரடியாகத் தெரிந்து கொள்ளலாமே? அதற்கு என்ன தயக்கம்? இந்த விஷயத்தைப் பொறுத்த மட்டில் ஏன் தலைநகரில் இருந்து ஒரே மாதிரியாகவே கருத்துக்கள் வருகின்றன? தங்களின் தெய்வத்தைக் கொண்டாடி வழிபட்டு அமைதியாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை ஏன் மற்றவர்கள் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டும்? அவர்கள் என்ன குற்றத்தைச் செய்தார்கள்? அறிவு ஜீவிகள் என்றும் விபரம் தெரிந்தவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பெரு நகரங்களில் உட்கார்ந்து, தூரத்தில் வாழ்ந்து வரும் மக்கள் மேல் பழி சுமத்திக் கொண்டே போவது எந்த வகையில் நியாயம்?….
View More பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்