அவரிடமிருந்து கற்கவேண்டிய விஷயம் அவரது மனோபலம்தான். எந்த நிலையிலும் தளர்ந்து போக மாட்டார். அவருடைய அசாத்திய உழைப்பு அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும். இறுதிவரை தொடர்ந்த ஜபதபங்கள், வாசிப்பு, சிந்தனை, சொற்பொழிவு எல்லாமே ஆச்சர்யப் படுத்துபவை. இம்மி அளவுகூட விரதங்களில் சமரசம் செய்துகொள்ளாதவர். தமிழகம் தாண்டி இந்தியாவெங்கும் எத்தனை எத்தனை மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஆதரவு நிலையங்கள்! எல்லாவற்றையும் தமது நேரடிப் பார்வையிலேயே நிர்வாகம் செய்தவர் சுவாமிகள்… ஸ்ரீ ஜெயேந்திரர் பயணித்த பாதை கடும் முட்களும் விஷ பாம்புகளும் நிரம்பியது. ஒவ்வொரு தலித் பகுதிக்கும் சென்றது, தலித் பூசகர்களிடம் கை நீட்டி பிரசாதம் வாங்கியது, தலித் தொழில் முனைவோருக்கு மடத்தின் சார்பில் உதவி வழங்கியது- என மடத்தின் போக்கை மாற்றியவர் அவர். அவரது மடத்தின் சூழலிலும் வரலாற்றிலும் அவர் எடுத்த முயற்சிகள் நிச்சயம் மிகப் பெரிய முன்னகர்வு….
View More அஞ்சலி: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்Tag: காமகோடி பீடம்
தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்
காஞ்சி மடத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாகப் பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்து வருகின்றது. அரசாணையின்படி, ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் செய்தது தவறே அல்ல. அவரும் அவர்களுடைய தர்மப்படியும் மரபின்படியும், கடவுள் வாழ்த்து பாடப்படும்போது, அமர்ந்த நிலையில் தியானம் செய்துள்ளார். இதில் வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்பு கேட்கவோ அவசியமே இல்லை.. 1971ல் தமிழ்த்தாயைக் கொச்சைப் படுத்தியும், அருவருக்கத்தக்க விதத்தில் அவமானப்படுத்தியும், “மூவாயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கும் தமிழ்த்தாய் உங்களைப் படித்தவராக ஆக்கினாளா?” என்று கேள்வி கேட்டு ஈ.வெ.ரா பேசிய உரை பதிவுசெய்யப் பட்டுள்ளது. சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொளுத்துவோம் என்று பேசியுள்ளார்… ஆண்டாளுக்கான போராட்டத்தை வெறும் பிராம்மணர்களின் போராட்டமாகக் காட்டவும் பிராம்மண – அப்பிராம்மண, சைவ – வைணவ சண்டையாகவும், மாற்றவும் முயற்சி செய்தனர். அவை பெரும் தோல்வி அடைந்தன. அந்த நிலையில், இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சனையை ஒரு வாய்ப்பாகக் கருதி மக்களைத் திசைத் திருப்ப முயற்சி செய்கின்றனர்….
View More தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?
சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்கிறது? ஆரம்பத்தில் ஒரு தமிழ்ப்பாடல் வருகிறது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். சரி, சம்ஸ்க்ருத சுலோகங்களுக்குப் பதிலாக தமிழில் உள்ள தெய்வபக்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள் என்று தானே சுவாமிகள் நினைத்திருப்பார்? வழக்கம் போலவே அமர்ந்திருந்து தானும் அந்தத் தருணத்தில் தெய்வ சிந்தனையில் இணைந்திருக்கிறார். உண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அரசாங்கம் கொடுத்திருப்பதை விட உயர்ந்த ஸ்தானத்தைத் தான் சுவாமிகள் கொடுத்திருக்கிறார். ஸ்வாமிகள் அமர்ந்திருந்தது முற்றிலும் இயல்பான, எந்தவிதத்திலும் இங்கிதக் குறைவில்லாத செயல்… காஞ்சி மடம் இந்த விஷயம் குறித்து தெரிவிக்க வேண்டியது வருத்தமும் அல்ல, மன்னிப்பும் அல்ல, மேற்கண்ட விளக்கத்தைத் தான். மேலே உள்ள வீடியோ பதிவுகளின் க்ளிப்பிங்குகளுடன் இந்த விளக்கத்தை தொலைக்காட்சிகளிலும் மற்ற ஊடகங்களிலும் வரச்செய்ய வேண்டும்.
View More தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?[பாகம் 25] காமகோடி பீடம் – சுவாமி சித்பவானந்தர்
ஒரறிவு படைத்த உயிர்கள் இப் பிரபஞ்சத்தைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு ஆசைப்பட்டு ஈரறிவு படைத்த உயிர்களாகவும பின் அவைகள் மூன்று, நான்கு, ஐந்து, ஆறறிவு படைத்த உயிர்களாகப் பரிணமித்து வருகின்றன. இத்தகைய பரிணாமத்தின் உச்சநிலையில் இருப்பவன் மனிதன் ஆகின்றான். இனி மனிதனிலும் மிக்கதோர் உயிர் வகையை இப்பூவுலகில் யாரும் பார்த்ததில்லை. இப்பூவுலக அமைப்பில் மனிதனே அதிகமான இந்திரியங்களும், விரிந்து செயலாற்றக் கூடிய அந்தக்கரணமும் வாய்க்கப் பெற்றவனாக இருக்கிறான். இனி, மனித நிலைக்கும் மேலான ஒரு நிலை உண்டு. அது தெய்வீக நிலை எனப்படும். மனம் மனிதனிடத்து ஓயாது அலையும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. ஆகையால் தான் மனிதன் அநேக காமங்களுக்கு ஆளாகிறான். அக்காமங்களைத் தெய்வீகக் காமமாக மனிதன் மாற்றியமைக்கத் தெரிந்து கொண்டால் காமத்தின் வேகம் குறைகிறது. காமம் முற்றிலும் அகன்றவிடத்து மனிதன் தெய்வ சொரூபமாகிவிடுகிறான். மனிதநிலையில் இருக்கும் நாம் இந்த மேலாம் நிலையை அடைய முயற்சி எடுத்துக்கொண்டு அந்நிலையை யடைகிறபொழுது நம்முடைய காமத்துக்கும் ஒரு முடிவு உண்டாகிறது. மனித இனத்தில் ஓர் உத்தமர் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியயண்ணி ஏழை நெஞ்சம் புண்ணாகச் செய்தது இனிப் போதும் பராபரமே என்று இறைவனிடம் பரிந்து விண்ணப்பிக்கிறார். கண்ணா! மனம் அலையும் தன்மையது : திடமுடையது ; அதை அடக்குவது காற்றை அடக்குவது போன்று இயலாதது என்று நினைக்கிறேன் என்கிறான் மஹாரதனாகிய அர்ஜூனன்.
சிற்றுயிர் பேருயிராகப் பரிணமித்து வர ஆசை பயன்பட்டது. மானுட நிலையில் ஆசை இருவிதப்படுகிறது. மனிதனைப் பந்தத்தில் தள்ளவும், பாரமார்த்திக நெறிக்கு எடுத்துச்செல்லவும் ஆசை மனிதனுக்குப் பயன்படுகிறது. இந்த ஆசைக்கு இருப்பிடம் மனது ஆகும். இந்த மனது என்பது யாது? அதன் இயல்பு என்ன? மானுட நிலையில் அதை உயர்ந்ததோர் காரியத்துக்குப் பயன்படுத்துவது எப்படி, என்பனவற்றை ஆராய்வோம்.
View More [பாகம் 25] காமகோடி பீடம் – சுவாமி சித்பவானந்தர்