காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை

ஹிந்துகளின் அறியாமையே காங்கிரசின் பலம். இப்படியே வளர்ந்துவிட்ட ஹிந்துக்களின் அறியாமையை விலக்க நாம் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பதால் நாடு எதிர்நோக்கியுள்ள தீமைகளை விளக்கி சொல்ல வேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஹிந்து விரோத, தேசியவிரோத கொள்கைகளை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் பட வேண்டும். காங்கிரஸ், அன்று மத அடிப்படையில் ஒரு கருவியாக இருந்து நாட்டை பிரித்தது. இப்போது இந்துக்களை வஞ்சித்து மைனாரிட்டிகளை திருப்தி படுத்துகிறோம் என்று நாட்டை நாசப் படுத்தி வருகிறது. நீங்கள் நேர்மையானவர், தேசியத்தின் மீது மனமார பற்றும் நம்பிக்கையும் கொண்டவர், இருந்தும் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பவர் என்றால் இந்த கட்டுரை உங்களுக்குத்தான்.. ஓ ஹிந்து சகோதர, சகோதரிகளே இன்னுமா காங்கிரசிர்கு ஒட்டு போட வேண்டும் என்கிறீர்கள்? அப்படி என்றால் நீங்கள் நமது நாடு குழிதோண்டப் படுவது பற்றியும் உங்கள் குழந்தைகளும் உங்களது பேரக்குழந்தைகளும் இரண்டாம்தரக் குடிகளாக வாழ்வதை வரவேற்கிறீர்கள் என்று அர்த்தம்!

View More காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை

இந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்

1962க்கு பின் திட்டமிட்ட ரீதியில் சீனா பாரத தேசத்தின் மீது மறைமுகமாக ஒரு…

View More இந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்

விதியே விதியே… [நாடகம்] – 5

பிரதமர்: உண்மையில் இந்தப் போர் தமிழ் மக்களின் சம்மதத்துடன் நடந்த ஒன்றே அல்ல. ஆயுதம் ஏந்திய ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று அவ்வளவுதான். இன்னும் சரியாகச் சொல்வதானால், ஒரு சர்வதேசக் கடத்தல்காரன், விடுதலைப் போராளி என்ற போர்வையில் ஊரை ஏமாற்றி உலையில் போட்டிருக்கிறார். இதுதான் உண்மை. அதனால்தான் தனி நாடு கேட்ட வடக்கு கிழக்கு பகுதியில் எவ்வளவு தமிழர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு தமிழர்கள், சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தெற்குப் பகுதியில் இதே போர்க் காலகட்டம் முழுவதிலும் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்… குழந்தை: விடுதலைப் புலிகள் செய்த தவறுக்காக அப்பாவிகள் கொல்லப்பட வேண்டுமா..? ஒரு பக்கம் போராளிகள்… இன்னொரு பக்கம் ராணுவம். இரண்டுக்கும் நடுவில் அப்பாவிகள் சிக்கிக் கொண்டிருந்தோமே… எங்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்திருக்கலாமே…. அழிவின் மர்மச் சுரங்கத்தில் ஆயிரம் காலடித் தடங்கள். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக. ஆனால், அன்பின் நெடுஞ்சாலையிலோ ஒற்றைக் கால் தடம் கூடப் பதிக்கப்படவில்லை. அது ஏன்..? கோரிக்கையும் சரியில்லை. வழிமுறையும் சரியில்லை. நீ யாராக இருந்தாய் என்பதை வைத்து அல்ல… யாராக இருக்கிறாய் என்பதை வைத்துத்தான் மற்றவர்கள் உன்னை மதிப்பார்கள் என்று போராளிகளுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும்…

View More விதியே விதியே… [நாடகம்] – 5

மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 2

அயாஸ் ரஸூல் நஸ்கி எழுதுகிறார் – “எனக்கு ஸ்ரீநகரின் ஹரிபர்வதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சாரதா பீடம். அது என் மூதாதையர்கள் நடந்து சென்ற பாதை. தத்தாத்ரேய கணேஷ் கௌலின் மூதாதையர்களும் கடந்து வந்த பாதை. பீர் ஷேக் ஹம்ஸா மக்தூம் சாஹேபின் மூதாதையர்கள் வந்த பாதையும் அது தான்….க்ருஷ்ண கங்கா நதிக்கரையின் மறுபக்கம் இரண்டு மலைகளுக்கிடையே சூரிய கிரணங்கள் தலைநீட்ட, மெல்லிய மஞ்சள் ஒளியில் க்ருஷ் ணகங்காவின் நீரோட்டம் அப்போது தனி இருள் – ஒளி நர்த்தனமாகத் தெரிந்தது. இதோ என் எதிரே சாரதா ஆலயம். அது என் வேர். என் மூலாதாரம். என் தொன்மை…”. ஸ்ரீ நஸ்கி அவர்களது தாகத்துடன் ஒப்பிடுகையில் எனது தேடலில் இருக்கும் ஆவல் மிகவும் மாற்றுக் குறைவானதே. நான் ஸ்தலத்தின் வெகு அருகில் சென்றிருந்தாலும் தேசப்பிரிவினையால் இடப்பட்ட வெம்மை மிகுந்த தடைக்கோட்டால் வெகு தொலைவில் இருக்கிறேன் என்பது நிதர்சனம்…

View More மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 2

மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 1

வழிபாட்டு ரீதியாக அன்னிய மதத்தைக் கடைப்பிடித்தாலும், காலங்காலமாக ஹிந்துஸ்தானத்தை தாய்நாடாகக் கொண்ட பற்பல இஸ்லாமியச் சஹோதரர்கள் அதன் தேசியப் பண்பாட்டை மதித்துப் போற்றுவதைக் கண்டிருக்கிறேன். அவ்வாறு போற்றும் அன்பர்களை நினைவு கூர்வதன் மூலம் ஹிந்துத்வம்வெறும் கருத்தாக்கம் அல்லது கற்பனை அல்ல மாறாக நடைமுறை சாத்யம் என்பதை சித்தப்படுத்த இயலும்… ஆங்காங்கு முந்தைய இரவில் விழுந்த பனித்துளிகள். கோபாத்ரி பர்வதம் என்ற ஒரு சிறு குன்றின் மீது ஆலயம். காஷ்மீரத்தில் ஆதிசங்கரர் இக்கோவிலுக்கு வருகை தந்தமை பதியப்பட்டிருந்தது. அப்படியானால் அந்த ஸர்வக்ஞ பீட ஸ்தலம் எங்கிருக்க வேண்டும்?…. ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி என்ற இஸ்லாமியப்பெருந்தகை சாரதா பீடத்திற்குச் சென்று வர வேண்டும் எனத் தணியாத ஆசை கொண்டிருந்தார். அது நிறைவேறியது எப்படி எனபதை ஒரு அழகிய வ்யாசமாக எழுதியுள்ளார்…

View More மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 1

காஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த காஷ்மீர் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.…

View More காஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்

பாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா

மேடையில் பாட்டு பாடுவது ஹராம். இறைவனின் ஆணைக்கு எதிரானது எனவே பாட்டு பாடும்…

View More பாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா

பாகிஸ்தானை நம்பக் கூடாது

இந்திய எல்லைக் காவல் படையினரைத் தாக்கி இரண்டு ஜவான்களைக் கொன்றதுடன், இருவரின் தலையையும் வெட்டி, உடலை சின்னாபின்னப் படுத்திய சம்பவம் இந்தியர்களின் மனதில் சொல்லொணாத் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் தனது அயோக்கிய தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது….. எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் ஊடுருவாமல் இருக்கும் வகையில் 1,751 கி.மீ தூரம் வரை வேலி அமைத்து முழு கண்காணிப்பு செய்ய வேண்டும்… இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள மதராஸக்களும் பயங்கரவாதத்திற்கு ஊக்கம் கொடுப்பதுடன், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பும், ஊடுருவுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கின்றன….

View More பாகிஸ்தானை நம்பக் கூடாது

காஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை

… எந்த மாநிலத்திற்கும் இல்லாத அதிகாரங்கள் கொடுக்கும் விதமாக அரசியல் ஷரத்து 370, காஷ்மீர் மாநிலத்திற்கு என தனி அரசியல் சட்டம் போன்றவற்றை கொடுத்ததில் விளைவு, காஷ்மீர் மாநிலத்தில் இன்னும் கொழுந்து விட்டு எரியும் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளது. இநத பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திருப்ப வேண்டும் என பல்வேறு குழுக்கள் நியமித்து பரிந்துரை செய்த பின்னும் கூட பிரச்சனைகள் தீர்க்கப்பட வில்லை என்பது வேதனைக்குரியது….

View More காஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை

[பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்

‘‘….. பண்டிட் நேரு எப்போதும் முஸ்லீம்களின் பக்கம் நிற்பார். முஸ்லீம்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களைவிட அதிகப் பாதுகாப்பு தேவைப்படுகிற மற்ற வகுப்பினருக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை அவர்கள் தட்டிச்செல்லக் கூடாது என்றுதான் கூறுகிறேன்….. காங்கிரஸ் அரசாங்கம் அவர்களது குறைகளைத் தீர்க்க முன்வராது என்பதை உணர்ந்தேன். எனவே பதவி விலகுவதென முடிவு செய்தேன். பண்டிட் நேரு எந்தப் பதிலும் எனக்குத் தரவில்லை.’’

View More [பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்