கம்பராமாயணத்தில்  சிவபெருமான் 

உலகக் காப்பிய வானில் கதிரவனாய் ஒளிரும் கம்பன் தனது காப்பியத்தில் உணர்ச்சிச்சுவை, பாத்திரச்சுவை, பத்திச்சுவை, நாடகச்சுவை, அவலச்சுவை என பல சுவைகளைப் படைத்துள்ளான். அவற்றில் இலக்கியச் சுவையில் சிவபிரானைப் பற்றிய சில பகுதிகளைக் கண்டு களிப்பதே இக்கட்டுரையாகும்.

View More கம்பராமாயணத்தில்  சிவபெருமான் 

வேதத்தில் சிவலிங்கம்

“இந்த வேதத்தில – ருத்ரம் இருக்கு, அதுல நமச்சிவாய எல்லாம் இருக்கு, ஆனா சிவலிங்கம் என்று வெளிப்படையாக இருக்கா சார்” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். கேட்டவர் ஒரு “சைவர்” என்பது சொல்லாமலே விளங்கும்… கிருஷ்ண யஜுர்வேதம், தைத்திரியாரண்யகம் கடைசி பாகத்தில் உள்ளது மஹாநாராயண உபநிஷத். இதில் ஶிவோபாஸன மந்த்ரா: என்ற பெயரில் கீழ்க்கண்ட மந்திரங்கள் வருகின்றன. சிவபெருமானின் ஐந்து முகங்களுக்கான மகாமந்திரங்களும்,ருத்ர நமஸ்கார மந்திரங்களும் உள்ளன…

View More வேதத்தில் சிவலிங்கம்

சைவ சமய நம்பிக்கை உறுதிமொழி

தமிழ்ச்சூழலில் சைவம், சைவசித்தாந்தம் குறித்து பல்வேறு குழப்படியான கருத்துக்களும், சைவத்தின் அடிப்படைகளுக்கே முற்றிலும் எதிரான கருத்துக்களும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. இச்சூழலில் டாக்டர் லம்போதரன் இராமநாதன் அவர்கள் வரைந்துள்ள இந்த அருமையான பத்து அம்ச உறுதிமொழி அனைத்து தமிழ்ச்சைவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழும்…

View More சைவ சமய நம்பிக்கை உறுதிமொழி

சிவனுக்கான திருவீடு

சிவபெருமானை எழுந்தருளச் செய்ய கோபுரங்களும், விமானங்களும், மாடங்களும் கொண்ட மாபெரும் கோயில்களோ அல்லது பூஜா மண்டபங்களோ அத்தியாவசியமா என்ன? அவனை என்றும் இருத்தி வழிபடுவதற்கு உரிய உன்னதமான திருவீடு எது? மாணிக்கவாசகர், ஆதிசங்கரர், பசவண்ணர், திருமூலர் முதலான மகான்களும் அருளாளர்களும் தெளிவாகவே அதைக் கூறுகிறார்கள்…

View More சிவனுக்கான திருவீடு

சிவ மானஸ பூஜா – தமிழில்

முறையான பூஜைக்கான இடம், காலம், சாதனங்கள், பொருட்கள் எதுவும் இல்லாதபோதும், மனதாலேயே பூஜை செய்வது மானஸ பூஜை எனப்படும். கவனம் சிதறாத உளக்குவிப்புடனும் தியான நிஷ்டையுடனும் செய்யப் படுமானால், புறத்தே செய்யப் படும் பூஜையை விடவும் மானஸ பூஜை உத்தமமானது என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது….
இரத்தினங்கள் இழைத்த இருக்கை – பனிநீராடல் – திவ்யமான ஆடைகள் – பல்வேறு மணிகளால் அணிகலன்கள் – கஸ்தூரியுடன் குழைத்த சந்தனம் – மல்லிகை செண்பகம் வில்வம் கலந்த மலர்கள் – தூபம் தீபம் – தேவா தயாநிதி பசுபதி – இதயத்தில் கற்பித்த இவையனைத்தையும் ஏற்றிடுக…

View More சிவ மானஸ பூஜா – தமிழில்

சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2

ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து, தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து, கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி.. இப்பாடலில் புலவர், சிவபெருமான் ஆடும் மூன்று வகைத் திருத்தாண்டவங்களைக் கூறுகிறார். அனைத்தயும் அழிக்கும் ஸம்ஹார காலத்தில் ஆடுவது கொடுகொட்டி எனும் தாண்டவம். திரிபுரத்தை அழித்த போது ஆடியது பாண்டரங்கம் எனும் தாண்டவம். ப்ரம்மனின் சிரத்தைக் கொய்து ஆடியது காபாலம் எனும் தாண்டவம்.. ஔவைப்பிராட்டியார், தனக்கு மூப்பில்லாத வாழ்வு தரும் அரிய நெல்லிக்கனியை வழங்கிய அதியமான் நெடுமானஞ்சியின் பெரும் கொடைத்திறத்தையும், நல்லுள்ளத்தையும் வாழ்த்திப் பாடுகிறார். அவர் அதியமானை,என்றும் நிலைத்து நிற்கும் சிவபெருமானைப் போல நீயும் நிலைத்து வாழ்வாயாக,என்று வாழ்த்துகிறார்…

View More சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2

சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1

பதிற்றுப்பத்து நூலின் கடவுள் வாழ்த்தில், சிவபிரானின் செம்மேனி வண்ணமும், அளவில்லா ஆற்றலும், அவன் கூத்தியற்றும் அற்புதப் பாங்கும், அவன் சக்தியோடு கலந்திருக்கும் அந்தத் தனித்தன்மையும், அவன் அருளின் செவ்வியும்,பிறவும் கூறி வியந்து போற்றுகிறார் புலவர். “கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே; பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” என்கிறது புறநானூறு. “நச்சுக்கறை அழகுசெய்ய விளங்கும் திருக்கழுத்தை உடைய பெருமானான அவரின் திருநுதலில் விளங்கும் சிறப்புமிக்க நெற்றிக்கண் போலத் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் மாறனே” என்று பாண்டியன் நன்மாறனைப் போற்றுகிறது ஓர் பாடல். சோழர் தம் தலைநகரான புகாரில் சிவபெருமானுக்குப் பெருங்கோவில்கள் இருந்தமையும் சிவவழிபாடு பெரிதும் பரவியிருந்தமையும் சிலப்பதிகாரத்தால் தெரிகிறது. மாமன்னர் சேரன் செங்குட்டுவர் சிவனருளால் பிறந்தவர் என்றும் இளங்கோவடிகள் கூறுகிறார்…

View More சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1

‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2

மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்று ஆராய்ச்சி என்ற போர்வையில் திருப்பெருந்துறை கோயிலை சிவாலயமன்று என்று நிறுவமுயன்று, அதற்கு அறிவார்ந்த சான்றுகள் எதுவும் கிடைக்காமல் போக, கருவறையில் லிங்க பணமில்லை, அம்பிகையின் சந்நிதியில் திருமேனியில்லை, கல்வெட்டில்லை, நந்தியில்லை, கொடிமரமில்லை, கோணங்கியில்லை, என் தகப்பன் குதிருக்குளில்லை என்பது வரை பேசி, அது சமணச்சார்புடைய கோயில் என்று கொண்டு நிறுத்தி, அதற்கும் அடங்காமல் ஆதாரமுமில்லாமல், ஏதோ ஒரு க்ராமக்கோயில் கல்வெட்டை கோடிட்டு காட்டி, பீடம், இந்திரன், சாத்தன், திருமால், குதிரை, கொட்டடி, கொள்ளுக் கடையென்று கொட்டமடித்து விளையாடியுள்ளார். என்ன விதமான ஆராய்ச்சி இது? இதற்கு சைவசித்தாந்தப் பெருமன்றமும் துணைபோயுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் இது போன்ற “ஆய்வு” நூல்கள் வெளிவரும் என்று வேறு பயமுறுத்தியுள்ளார். மிகக்கொடுமை. ஆரூர் த்யாகேசப்பெருமான் காப்பாற்றட்டும்…

View More ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2

‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1

சென்னை சைவ சித்தாந்த பெருமன்றத்தால் வெளிக்கொண்டுவரப்பட்ட நூலொன்று “திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” என்பது. சென்னையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும், தமிழக தொல்லியல்துறையில் பணியாற்றியவருமான முனைவர்.ஆ.பத்மாவதி அவர்களால் எழுதப்பட்டது… இரண்டு கேள்விகள் இயல்பாகவே நம்முள் எழுகின்றன. ஒன்று, மாணிக்கவாசகர் எடுப்பித்த கோயில் உண்மையில் எது? இரண்டு, இன்று இருக்கும் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் தோற்றம், வளர்ச்சி என்பதை எப்படி அறியவேண்டும்? இதில் முன்னதற்கு விடையாக இரண்டாம் கட்டுரையும், பின்னதற்கு விவகாரமாக முதல் கட்டுரையின் இரண்டாம் பகுதியும் அமைந்துள்ளது. இந்த இரண்டாம் கட்டுரையில் தான் ஆராய்ச்சியாளர் பல சூக்ஷும முடிச்சிகளை அவிழ்ப்பதாக எண்ணி, சைவ அடியார்கள் தம் நம்பிக்கையை அசைத்து விளையாட முனைந்து , வரலாற்று எச்சங்கள் ஒன்றும் தெளிவாக இல்லாத காரணத்தால், கிடைத்த செதில் கற்களை கொண்டு ஒரு பெரிய கற்பனை கோட்டையை கட்டி எழுப்புகிறார்…

View More ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1

நின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்

மலைமேல் பெய்த மழைநீர் ஆறாக சமதளத்தை நோக்கி வரும். அவ்வாறு வரும் நதிகளிற் சில நேரே கடலிற் புகும்; வளைந்து வளைந்து தடைபட்டுப் பட்டுப் பாயும் நதிகளும் இறுதியில் கடலில்தான் சங்கமம் ஆகும். அதுபோன்றே சமய உலகில் வேதாந்தம்., சாங்கியம்,யோகம், பாசுபதம் , வைணவம் எனப் பல சமயநெறிகள் உள்ளன. அவை தம்முள் வேறுபட்ட கொள்கைகளும் அனுட்டானங்களும் உடையன. ஒவ்வொன்றும் அபிமானத்தாலே தன்னுடைய கொள்கையே பெருமையுடையது, மேன்மையது என்று கூறிக் கொண்டாலும் , நேராகச் செல்லும் நதியும் வளைந்து செல்லும் நதியும் இறுதியில் கடலைச் சேர்ந்தே முடிவதுபோல எச்சமயத்தாரும் இறுதியில் சிவனைச் சேர்ந்தே முத்தி பெறுவர்… சிவாபராதத்திலிருந்து உய்யவும் மீண்டும் கந்தர்வ நிலைபெற்று ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றல் பெறவும் சிவபெருமானின் பெருமைகளைப் பாடித் தோத்தரிக்க விரும்பினார் புட்பதந்தர். ஆனால் பெருமானின் பெருமைகளை எடுத்துப் புகழும் ஆற்றல் தனக்கு இல்லையே எனவும் வருந்தினார். இறைவன் அருள் புரிந்தார். சிவனின் மகிமைகளை எடுத்தோதிப் போற்றும் நூலாதலின் இது ‘சிவமஹிம்ந ஸ்தோத்திரம்’ எனப் பெயருடையதாயிற்று….

View More நின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்