“அறிவே தெய்வம்” பாரதியார் பாடல்: ஒரு விளக்கம்

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் என்று தொடங்கும் இந்தப் பாடல் உயர்நிலைப்பள்ளியில் எனக்குப் பாடமாக இருந்தது (1980களின் மத்தியில்). அனேகமாக 9 அல்லது 10ம் வகுப்பாக இருக்கலாம். திராவிட பாணி பகுத்தறிவு, கடவுள் மறுப்பு கொள்கைகள் அதில் உள்ளதாகக் கருதி தமிழ்ப்பாடநூலில் அது சேர்க்கப் பட்டிருந்தது… பின்னாளில் வேதாந்த தத்துவ அறிமுக நூல்களையும் உபநிஷதங்களையும் கற்கும்போது தான், இந்தப் பாடலுக்கு பாரதியார் வைத்துள்ள ‘அறிவே தெய்வம்’ என்ற தலைப்பே ‘ப்ரக்ஞானம் ப்ரஹ்ம’ என்ற மஹாவாக்கியத்தின் நேரடி மொழிபெயர்ப்பு என்பது புரிந்தது. இதிலுள்ள கருத்துக்களும் முழுக்க முழுக்க அத்வைத வேதாந்தம் சார்ந்தவையே…

View More “அறிவே தெய்வம்” பாரதியார் பாடல்: ஒரு விளக்கம்

ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்

கண்களால் காணும்போது ஆகாயம் நீலமாக நம் தலைக்குமேல் இருப்பதாகத் தோன்றுகிறது. இதைக் கொண்டு பகுத்து அறியும் திறனற்றோர் (அவிவேகிகள்) நீலநிறம், கவிந்திருப்பது போன்ற தன்மை (concavity) ஆகியவை ஆகாயத்தைச் சார்ந்தது என்கின்றனர். ஆனால் பஞ்சபூதங்களைப் பற்றிய ஞானமுடையவர்கள் ஆகாயம் நிறமும் வடிவமுமற்றது, காட்சிப் பிழையால் (அத்யஸ்தம்) அவ்வாறு தோன்றுகிறது என்று அறிகின்றனர். அதுபோல, ஆத்மாவின் ஸ்வரூபத்தையும், அனாத்மாவின் (உடல், புலன்கள், உலக வியவகாரங்கள்) ஸ்வரூபத்தையும் பிரித்தறியும் திறன் கொண்ட விவேகிகள், உடல் புலன்கள் ஆகியவற்றின் செய்கைகள் ஆத்மாவைச் சேர்ந்தது என்று எண்ண மாட்டார்கள்.. ஸ்ரீ சங்கரரின் ஆத்மபோதம் என்ற இந்த நூல் (68 சுலோகங்கள்) அழகிய பற்பல உவமைகளின் மூலமாக வேதாந்த தத்துவத்தின் ஆழமான கருத்துக்களை படிப்படியாக அற்புதமாக விளக்கிச் செல்கிறது…

View More ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்

ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்

சுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன் – வேற்றுமையற்றவன் – பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து மங்கிய மேனியழகுடையவன் – சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன் -அறியவொண்ணாதவன் – சத்தியப்பொருளென அறியப்படுபவன்… அனைத்துப் பொருள்களையும் நாம் அறிவது அறிவு (புத்தி) என்ற அகக்கருவியின் துணையைக் கொண்டு தான். பின்பு, அந்த அறிவின் அகத்துள் இருப்பவனை (பு3த்தே4ரந்த: ஸ்த2ம்) எப்படி அதே கருவியால் நேரடியாக அறிவது? அது சாத்தியமன்று. பிம்பத்தை அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து அறிந்து கொள்வது போல, அறிவின் பிரகாசத்தைக் கொண்டு அதனைப் பிரகாசிக்கச் செய்யும் ஆத்மாவை உய்த்துணர்வது மட்டுமே சாத்தியம் என்கிறது வேதாந்தம். அறிவோனை அறிவது எங்ஙனம்?…

View More ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்

சிறைவிடு காதை – மணிமேகலை 24

என்னுடைய அந்தபுரத்தில் மணிமேகலை என்ற பெண் ஒருத்தி இருக்கிறாள். உன்னை ஒருவருக்கும் தெரியாமல் அவள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்லச் சொல்கிறேன். நீ அங்குள்ள அந்தப்புர மகளிரின் கண்களில் பட்டுக்கொண்டிருப்பதுதான் உன் வேலை. பிறகு நல்ல சமயம் பார்த்து, ‘மணிமேகலை கண்சாடை காட்டித் தன்னுடைய இளம் முலைகள் இரண்டையும் உன்னுடைய அழகிய மார்பில் பொருந்தும்படி என்னுடன் கூடினாள்’ என்று மற்றவர்களிடம் கூறவேண்டும். இதற்கு வெகுமதி ஒரு கிழி நிறை பொன் கழஞ்சு. இது அரச கட்டளை. செய்ய மறுத்தால் தண்டிக்கப்படுவாய்.

View More சிறைவிடு காதை – மணிமேகலை 24

முண்டக உபநிஷதம்

இரு பறவைகள், இணைபிரியாத் தோழர்கள், ஒரே மரத்தில். ஒன்று கனிகளைத் தின்கிறது, மற்றொன்று தின்னாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது… சத்தியமே வெல்லும், பொய்மையல்ல – சத்தியத்தின் பாதையே தெய்வீக வழி – ஆசையடங்கிய ரிஷிகள் சென்றடைவதும் சத்தியத்தின் மேலாம் இருப்பிடமே… சொல் விளக்கங்களால் அடைவதல்ல அந்த ஆத்மா – மேதமையால் அல்ல, கேள்வியின் மிகுதியாலும் அல்ல – அதற்காக ஏங்குபவன் அதனையடைகிறான். அவனுக்கே தன்னியல்பை வெளிப்படுத்துகிறது ஆத்மா…. வலிமையற்றோன் அடைவதில்லை ஆத்மாவை – ஆர்வமின்மையும் இலக்கற்ற தவங்களும் அடைவதில்லை – சரியான உபாயங்களால் முயலும் அறிவுடையோனது ஆத்மா பிரம்மத்தின் இருப்பிடத்தில் சென்றடைகிறது…

View More முண்டக உபநிஷதம்

அத்தி மரத்தடியில்..

நேற்று இந்த பிரம்மாண்டமான அத்தி மரத்தைப் பார்த்தேன். அதன் நிழலில் நின்று உளம் பூரித்தேன். பெங்களூரின் பசவனகுடி பகுதியில் உள்ள அழகான, விசாலமான சிருங்கேரி மட ஆலய வளாகத்தில் ஆதி சங்கரர் சன்னிதிக்குப் பின்புறம் உள்ளது இந்தப் பெருமரம்…. ஆல், அத்தி, அரசு. இந்த மூன்றுமே மிகப் புனிதமான மரங்களாக வேதகாலம் முதல் கருதப் பட்டு வந்துள்ளன. இந்த மரங்களின் மலர்களுக்கு ஒரு தனிசிறப்பு இருக்கிறது என்று தோன்றியது. என்ன அது? இந்த மூன்று மரங்களின் மலர்களுமே மிக அபூர்வமானவை. அவற்றின் பூப்பருவம் என்பதை நாம் காணவே முடியாது. அது காய், கனிப் பருவங்களின் (fig) அடியில் மறைந்து கிடக்கிறது…

View More அத்தி மரத்தடியில்..

வியாசன் எனும் வானுயர் இமயம்

வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இந்த நான்கு “வியாசர்களும்” ஒருவராக இருப்பது என்பது முற்றிலுமாக சாத்தியமில்லாதது. கிருஷ்ண துவைபாயன வியாசர் என்பவர் முழுமையான ஒரு தனித்த வரலாற்று ஆளுமை என்பது மகாபாரதத்தை ஆழ்ந்து வாசிக்கும் எவருக்கும் கிடைக்கும் சித்திரம். வேதகால கருத்தாக்கங்களின் மிக இயல்பான நீட்சியாகவே மகாபாரதம் உள்ளது… “கைகளைத் தூக்கிக் கொண்டு கதறுகிறேன். ஆனால் கேட்பார் ஒருவருமில்லை. அறத்திலிருந்து தான் பொருளும், இன்பமும் எல்லாம். ஆனால் அதை ஏன் மனிதர் பின்பற்றுவதில்லை? காமத்தாலோ பயத்தாலோ பொறாமையாலோ உயிர் போகும் என்ற நிலையிலோ கூட தர்மத்தை விட்டு விடாதீர்! தர்மம் என்றும் உள்ளது. இன்ப துன்பங்கள் அநித்தியமானவை…

View More வியாசன் எனும் வானுயர் இமயம்

பாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1

கடந்த ஒராண்டில் ஏறத்தாழ 23,500 கிலோ மீட்டருக்கும் மேல் பாரதம் முழுக்க என் பயணம் விரிந்தது. இதன் கலாச்சார வளமையும், நாகரீகமும், தொன்மையும், அறிவு செழித்து பல்கி பெருகி விரிந்த இடங்களையும், இயற்கை அன்னையின் பெருங் கருணையையும், பண்பாட்டு உச்சங்களையும், கவின் கலையின் பிரமிப்புகளையும், வரலாற்றுத் தடங்களையும், தருணங்களையும், மட்டுமின்றி பாரதத்தின் ஒருமித்த பேருருவை கண்டடைந்த பெருமித கணங்களை பதியத் துவங்குகிறேன்…. தமிழ் மொழியின் தோற்றம் வளர்ச்சி பரவல் பற்றி ஆராயும் மானுடவியலாளர்கள், மொழியியல் வல்லுனர்களுக்கு தமிழக கலிங்க உறவுகளும் ஹாத்தி கும்பா கல்வெட்டுகளும் மிகப்பெரிய புதையலாகும்… பெரிய மெளரிய வம்ச சக்ரவர்த்திகளாலேயே வெற்றி கொள்ள முடியாத தீரமிக்க தமிழ் மன்னர்களை திரை செலுத்த வைத்தது தன்னுடைய மிகப்பெரிய சாதனை என காரவேலர் இந்தக் கல்வெட்டில் தெரிவிக்கிறார்….

View More பாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் -6.

உலகம் என்று நாம் காண்பது நம் உடலில் உள்ள கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் என்ற ஐந்து கர்ம இந்திரியங்கள் மூலமாகவும், அவை வழியே பெறப்படும் தகவல்களின் மேல் நாம் வளர்க்கும் எண்ணங்கள் மூலமாகவும் நம் மனதில் பதிந்துள்ள ஓர் உருவகம்தான். இந்திரியங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எப்படி இருந்தாலும், இறுதியில் அவைகளைப் பற்றிய நமது எண்ணங்கள் முன்னதைவிட வலிமை வாய்ந்தனவாக இருக்கின்றன.

தற்போது வரும் தகவல்களுடன், முன்பு அவை தொடர்பான வந்த தகவல்களும் அவை பற்றிய எண்ணங்களும் சேர்ந்து ஒரு தொகுப்பாக மனதில் பதிவதுதான் அந்த வலிமைக்குக் காரணம். அதாவது உள்ளதைவிட நாம் பார்க்கும் பார்வையின் கோணமும் (அஹங்காரம்) இதில் சேர்ந்திருக்கிறது. இவை எல்லாமே நமது விழிப்பு (ஜாக்ரத்) நிலையில் நடக்கின்றன. அதனால் அதை “ஜாக்ரத அஹங்காரம்” என்று சொல்வார்கள்.

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் -6.

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5

அது எப்படி மனத்தை மனத்தால் அறியமுடியும் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றினால் அது நியாயமான கேள்விதான். அதனை விளக்க வேதாந்திகள் ஒரு உதாரணம் சொல்வார்கள். ரமணரும் ‘பிணம் சுடு தடி போல்’ என்ற அந்த உவமையைக் கூறுகிறார். மற்ற கட்டைகளோடு பிணத்தையும் நன்கு எரியவிட்ட கழியும் சேர்ந்து தானும் எரிந்துவிடும். இப்படியாக மனத்தின் மூலத்தை அறிவிக்க உதவிய மனம் தானும் அழிந்து போவதை மனோ நாசம் என்பார்கள்…. தடி ஒன்றை எடுத்துக்கொண்டு தன்னை நோக்கி ஒருவன் வருகிறான் என்றால் ஓடிவிடப் பார்க்கும் ஒரு பசு, அவனே தடிக்குப் பதிலாக புல்லை எடுத்துக்கொண்டு வருகிறான் என்றால் அவனை நோக்கித் தானே ஓடி வருகிறது? இப்படித்தான் மனிதர்களும் தான் விரும்புவதை நோக்கி ஓடிக்கொண்டும், வெறுப்பதை விட்டு விலகியும் இருக்கிறார்கள். விலங்குகளின் இந்தக் குணத்திலிருந்தும் மனிதன் மீள வேண்டாமா என்று கேட்கிறார்….

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5