ஆயிரத்தில் ஒருவன் – ஜடங்களுக்கான சினிமா

சோழனையும் பாண்டியனையும் விட்டுத் தள்ளுங்கள், கற்பனையாகவே இருந்து தொலையட்டும். இந்திய ராணுவம் எவ்வாறு வியட்நாம் சென்று ஆயிரக் கணக்கில் மக்களை சுட்டுத் தள்ளுகிறது?… இந்த அரைவேக்காடுகள் பழைய தமிழர் வரலாற்றை நினைத்தபடி பயன்படுத்தி இருப்பது, கார்த்தி ரீமாவிடம் வாங்கிய கன்னத்து அறையை விட வலி தருகிறது. இந்த மாதிரி ஒரு படத்தை வேறு மொழிகளில் எடுத்திருந்தால் அங்கு பிரளயமே நடந்திருக்கும். நாம் ஜடங்களாக, வெ(ற்)றிப் படத்தைப் பார்த்து விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம்…

View More ஆயிரத்தில் ஒருவன் – ஜடங்களுக்கான சினிமா

திரைப்பார்வை: அவதார்

ஆனால் இத்திரைப்படம் ஒரு ஹிந்துவுக்கு இந்த கிராபிக்ஸ் பிரம்மாண்ட ‘ஆஹா’க்களை மீறி சில செய்திகளை சொல்கிறது. ஒரு விதத்தில் இத்திரைப்படம் மேற்கத்திய பண்பாட்டின் ஒரு வாக்குமூலம் என்று சொல்லலாம்.

View More திரைப்பார்வை: அவதார்

ரோமன் பொலன்ஸ்கி கைது – தொடரும் வினையின் நிழல்

பொலன்ஸ்கியின் அபிமானிகள் பெரும்பாலோனோர் ஸ்தாபிக்க நினைப்பது போல பொலன்ஸ்கி மனிதரில் புனிதரெல்லாம் கிடையாது. இருண்மை நிறைந்த சொந்த வாழ்க்கையில் பல இழப்புகளையும் மனசிக்கல்களையும் சந்தித்த பொலன்ஸ்கிக்கு பெண்கள் ஒரு மருந்தாக இருந்தது மறுக்க முடியாத உண்மை. இளம் பெண்கள் மீது அவருக்கு இருக்கும் மோகத்தை பொலன்ஸ்கியே வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார்.

View More ரோமன் பொலன்ஸ்கி கைது – தொடரும் வினையின் நிழல்

உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்

பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டிய எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அரசியல் கட்சிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் – இவ்வளவு ஏன்? – அவரவர் வீட்டுக்குள்ளேயாவது தீவிரவாதம் குறித்து அலசி இருப்போமா என்பது சந்தேகம்.

View More உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்

மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்

அசாம் தீர்க்க முடியாத ஒரு சிக்கலில் மாநில அரசின், இந்திய அரசின் கையாலாகாத் தனமா, குறுகிய கால சுயலாபத்திற்காக, அசாமின், நாட்டின் சரித்திரத்தையே காவு கொடுத்துவரும் சோகத்தை இந்த சாதாரண அன்றாட வாழ்க்கைச் சித்திரத்தின் மூலம் சொல்லும் தைரியம் மணிராமுக்கு இருக்கிறதே ஆச்சரியம் தான்..ஆரவாரம் இல்லாது இந்த மாதிரி இன்றைய தமிழ் அரசியல் சமூக வாழ்க்கையை அப்பட்டமாக முன் வைக்கும் தைரியம் நம் தமிழ் நாட்டில் இல்லை. இனியும் வெகு காலத்துக்கு இராது என்று தான் தோன்றுகிறது

View More மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்

உலகத் திரை: The Shawshank Redemption

நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கும் படம். ஆங்கிலம் நன்றாக புரிந்த குழந்தைகளை வைத்துக்கொண்டு பார்க்க வேண்டாம் – எல்லா கதாபாத்திரங்களும் சரமாரியாக கடின வார்த்தைகளை உபயோகப்படுத்துவார்கள். என்னுடைய all time favorite பட்டியலில் இந்த படத்திற்கு தனியிடம் உண்டு. ஒரு வேளை உங்களுக்கும் பிடிக்கலாம் ……

View More உலகத் திரை: The Shawshank Redemption

உலகத் திரை: Death On a Full Moon Day – சிங்களத் திரைப்படம்

நம்பிக்கையும் ஆழ்ந்த வேட்கையும் கொண்ட மனிதனாக வண்ணிஹாமி, பிரசன்ன விதனாகே இயக்கிய “Death on a full moon day” திரைப்படத்தில் நம் கண்முன் தோன்றுகிறார். ஒரு மணி நேரத்திற்கும் சற்றே அதிகமாக ஓடும் படம். ஆனால் அதன் தாக்கம் அந்த ஒரு மணி நேரத்தையும் தாண்டியதாக இருக்கிறது – எந்த ஒரு சிறந்த திரைப்படத்தைப் போல.

View More உலகத் திரை: Death On a Full Moon Day – சிங்களத் திரைப்படம்

அலைபாயுதே கண்ணா… (மிழிகள் சாக்‌ஷி, மலையாளத் திரைப்படம்: ஒரு பார்வை)

… இந்தப் படம் மெனக்கெட்டு குறிப்பிடும் அளவுக்கு எந்த விதத்திலும் ஒரு சிறப்பான படமோ அல்ல, குறிப்பிடத்தக்க ஒரு சினிமாவோ அல்ல. இவ்வளவு குறைகளுக்கு நடுவிலும் இந்தப் படம் தன் கதையினாலும், ஒரு சில வசனங்களினாலும், ஜிஹாதி பயங்கரவாதத்தினால் சூழப்பட்ட இன்றைய இந்திய சூழ்நிலையில் குறிப்பிடத் தக்க ஒரு படமாக மாறிப் போகிறது. இப்படி ஒரு சினிமா தமிழ் சூழலில் எடுக்கப் படுவது சாத்தியமில்லை என்பதினாலும் இதில் துணிவாக எடுக்கப்பட்ட ஒரு சில முயற்சிகளினாலும் இந்தப் படத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

View More அலைபாயுதே கண்ணா… (மிழிகள் சாக்‌ஷி, மலையாளத் திரைப்படம்: ஒரு பார்வை)

இசையில் தொடங்குதம்மா

.. இந்த இரண்டு துருவங்களுக்கும் நடுவே, இளையராஜாவின் இசையைப் பற்றிய் உண்மையான மதிப்பீடு பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதேயில்லை… இப்போது பெரும்பாலும் கர்நாடக இசைப்பாடல்கள் கேட்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. நாம் வேண்டாம் என்று விலகி ஓடினாலும், ஒரு அழகான ஹம்ஸநாதத்தை நமக்குத் தந்திருக்கிறார் இளையராஜா.

View More இசையில் தொடங்குதம்மா