[இந்து மதத்தை] இழிவு படுத்துவது லாபம் தரும் அரசியலும் வாழ்வுமாகி அதுவே பகுத்தறிவுமாகிவிட்ட கட்டத்தில், ஹிந்து தர்மத்தின் இன்னொரு வெளிப்பாடாகத் தோன்றிய ஆரிய சமாஜம் பற்றியும், அதை உருவாக்கிய துறவியும் ஞானியுமான தயானந்த சரஸ்வதி பற்றியும் ஒரு புத்தகம் தமிழில் வெளிவருகிறதென்றால், அது எதிர்நீச்சலிடும் காரியம் தான். பலத்த தொடர்ந்த இரைச்சலுக்கு எதிராகக் குரல் எழுப்பும் காரியம் தான். […….]மலர் மன்னன் தயானந்த சரஸ்வதியின் வரலாற்றையும் அனுபவங்களையும் அவர் காலத்திய சூழலையும், அவர் கருத்துக்களையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார். புராணங்களையும் விக்கிரஹங்களையும், சடங்குகளையும், கோவில்களையும் நிராஹரித்த இந்த நாஸ்திகரையும் தமிழ்ச் சமூகம் அறிந்து கொள்ளட்டுமே என்று.
View More ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்Tag: பகுத்தறிவு
ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்
போலிப்பகுத்தறிவு பேசிய இனவாதிகள் ஆபிரகாமிய மத நம்பிக்கையை ஆதர்ச மத நம்பிக்கையாக நம் மக்கள் முன் வைத்தனர். இந்துக்களும் தமது இறைக் கோட்பாடுகளை ஆபிரகாமிய சட்டகத்தில் பிரதி எடுக்க ஆரம்பித்தனர். “நான் முருகனை நம்புகிறேன். நீ ஏசுவை/அல்லாவை நம்புகிறாய்” என மத-ஒப்புமை பேச ஆரம்பித்தனர். ஆனால் உண்மை வேறுவிதமானது; … ஒரு தொடக்க அறிதல் முறையாக சிருஷ்டியை ஒரு தேவன் செய்தான் என்கிற கோட்பாட்டை வைத்து விளையாடிவிட்டு அதனை வளரும் குழந்தை பொம்மைகளை உதறுவது போல உதறியிருக்கிறார்கள்…
View More ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்சுய அறிதலும் வரலாற்று அறிதலும்
புனிதமற்ற வாழ்க்கைதான் மானுடருக்கு லபித்திருக்கிறது. புனிதம் என்பதே ஒரு ஆதர்சம். இல்லாதது என்பதால்தான் அத்தனை கவர்ச்சியாக அது தெரிகிறது…நம் தனிவாழ்வின் வரலாற்றுச் சிறையில் இருந்தே நாம் ஒவ்வொருவரும் உலகை நோக்குகிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்… சமத்துவம் என்ற பெயரில் நிறையப் புரட்டு வேலைகள் செய்து பதவிக்கு வந்து வேறொரு அடுக்கு முறையை மக்கள் மீது திணித்த பல சர்வாதிகாரிகளை நாம் மார்க்சியம், நாசியிசம், ஃபாசிஸம், கிருஸ்தவம், இஸ்லாம் என்ற செமித்தியச் சிந்தனையின் பல வடிவங்களில் உலகில் பார்க்கிறோம்…
View More சுய அறிதலும் வரலாற்று அறிதலும்போகப் போகத் தெரியும் – 41
வயது வந்தவர்கள் எல்லோரும் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்ட காலம் அல்ல. நகராட்சிக்கு வரி கட்டுபவர்கள் மட்டுமே போட்டியிடலாம். காமராசர் பெயரில் எந்த சொத்தும் இல்லாததால் அவர் எவ்வித வரியும் கட்டவில்லை. எனவே போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது… சித்தர் மரபில் வந்த தாயுமான சுவாமிகள் சரளமாக சமஸ்கிருத சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறாரே அது தமிழர் நெறி இல்லையா என்று கேட்டதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
View More போகப் போகத் தெரியும் – 41போகப் போகத் தெரியும் – 34
‘நீ எவ்வளவுக்கெவ்வளவு முகத்தை மூடிக்கொள்கிறாயோ அவ்வளவுகவ்வளவு அழகாக இருக்கிறாய்!’ என்றான் நண்பன்.
திராவிட இயக்க வரலாறும் இப்படித்தான். எவ்வளவுக்கெவ்வளவு அது நீர்த்துப்போனதோ அவ்வளவுக்கவ்வளவு அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
View More போகப் போகத் தெரியும் – 34சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்
பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம்தான் பிரமாணம்’ என்கிறார்… ”தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்” என்கிறார் ஜெயகாந்தன்.
View More சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்போகப் போகத் தெரியும் – 22
“சிறிதுகாலம் பாரதிதாசன் சிறைப்பட்டதாக ஒரு தகவல். அதுகூடப் பொதுக்காரணத்திற்காக அல்ல, தனிப்பட்ட சொந்தக் காரணத்திற்காக. ஏதோ ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக ஊர்மக்கள் இவரை நையப்புடைத்ததாகவும் அவரை நன்கறிந்தோர் கருத்து கூறுகின்றனர். அந்தக் காலத்தில் அச்சடித்து விநியோகிகப்பட்ட சிற்றறிக்கை ஒன்றும் இதை உறுதி செய்கிறது.”
View More போகப் போகத் தெரியும் – 22போகப் போகத் தெரியும்-21
தலைமுடியை நேர் வகிடாக எடுத்திக்கொள்வதும், உதட்டுக்கு மேலே ஒரு வரியாக மீசையை ஒதுக்கிக் கொள்வதும் தமிழ்ப் பற்றாகக் கருதப்பட்ட காலம் அது. மகாலிங்கங்களும் (டி.ஆர்), ஜெயராமன்களும் (சி.எஸ்) தமிழகத்தை மயக்கி வைத்திருந்தார்கள் அப்போது சினிமாவில் வருவதுதான் சிலப்பதிகாரம்; மைக்கில் பேசுவதுதான் மணிமேகலை என்று ஒரு கூட்டத்தால் பரப்பப்பட்டது. சத்தம் போடுவதுதான் சங்கத்தமிழ் என்றும் சிலர் நம்பினார்கள்.
படித்தவர்களுக்குத் தி.மு.க. மீது ஏற்பட்ட கவர்ச்சி பிறகு பாமரர்களையும் வீழ்த்தியது…
View More போகப் போகத் தெரியும்-21போகப் போகத் தெரியும்-20
இந்தியர்கள் அனைவரும் ஒரு குரலாகக் கண்டனம் தெரிவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்து அறிக்கை விட்ட பெருமை டாக்டர் டி.எம். நாயருக்கு உண்டு. இந்த டி.எம். நாயர் இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தலில் (1916) வி.எஸ். சீனிவாச சாஸ்திரியால் தோற்கடிக்கப்பட்டார். அதன் காரணமாக பிராமணர்கள் மீது இவருக்குக் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டது…
…. இப்படி மூக்கறுபட்ட மூலவர்கள் சேர்ந்து அமைத்ததுதான் தென்னிந்திய நல உரிமை சங்கம்…
ஆலயம் என்னும் அற்புதம்
கோயில்கள் எங்கும் எந்த நாட்டிலும் உண்டு தான்… இந்தியாவிலும் மற்ற மாநிலங்களில் இந்துக்கள் தெய்வங்களை வணங்கச் செல்லும் கோயில்கள் இருக்கின்றன தான். ஆனால் தென்னாட்டில் கோயில்கள் மக்கள் வாழ்வில் கொண்டுள்ள இடம் அவற்றின் தாக்கம் மிக ஆழமானதும் பரவலானதும் ஆகும்…
View More ஆலயம் என்னும் அற்புதம்