இம்மைச் செய்தது

பொய்க் குற்றம் சாட்டிப் பரதனைக் கொல்வித்தவன் இப்பிறப்பில கோவலனாகப் பிறந்தான். பரதன் மனைவி அந்நிய நாட்டில் பட்ட துயரத்தைத்தான் அவள் சாபப்படி கோவலன் மனைவியாகிய நீ அனுபவித்தாய்’….

… கழிந்த பிறப்பில் செவ்விய மனம் இல்லாதோருக்கு, அக்காலத்துச் செய்த தீவினை வந்து பலிக்கும் காலத்தில் இப்பிறப்பில் செய்த நல்வினை வந்து உதவாது. இந்தத் தீவினை பலிப்பதற்கு முன்னோ அல்லது பின்னோ அந்த நல்வினை அதற்குரிய நற்பலனைத் தருமே அன்றி முன்செய்த தீவினையை இப்பொழுது செய்த நல்வினை அழிக்காது. புண்ணியபலனையும் பாவத்தின் பலனையும் தனித்தனியே அனுபவித்துக் கழிக்க வேண்டுமேயன்றி அவை ஒன்றையொன்று ஒழியா என்பது மதுராபுரித் தெய்வம் கூறியதன் கருத்து.

View More இம்மைச் செய்தது

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2

பரதம் ஒரு சரித்திர கால, தொல்பொருட் காட்சி சமாசாரமாகவே தான் காப்பாற்றிப் பாதுகாக்கப்பட வேண்டுமா? இன்று பரதம் ஆடும் கலைஞர்கள், நிறையப் படித்தவர்கள். பண்டித மணிகள். கூர்ந்த அறிவுடையவர்கள். எதையும் அலசி ஆராய்பவர்கள்… மரபு என்றால் என்ன? தன் எந்த செயல் அர்த்தமுள்ளதாகவும் தெரிந்து, செய்வதில் அது உயிர் பெறுவதாகவும் இருக்கிறதோ அது தானே மரபாகத் தொடர்ந்து வரும்?… சங்க காலத்தில் காதலனாகக் கண்ட மனித ரூபத்திலான ‘அவன்”, பக்தி இயக்கத்தில் தேவனாகிவிட்ட ’அவன்’ ஆனது போல.. முருகனுக்கும் கண்ணனுக்கும் ஏங்கியவள் இப்போது ஒரு ஜமீந்தாரின் காதலுக்கு ஏங்குகிறாள்.

View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

தேவ தாசிகள், மாதவி முதல் மைலாப்பூர் கௌரி அம்மாள் வரை தாம் சார்ந்த கலையின் சிகரங்கள், நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை…சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த பெயர் தெரியாத சிற்பிகளுக்கு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை…

View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

மஹாபாரதத்தில் ஒரு நாள்

கேவலம் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே யாராலும் நாட்டின் அரசனாக முடியாது. ராஜசிம்மாசனத்தின் மீதுள்ள அதிகாரம் என்பது பிறப்பின் அடிப்படையால் மட்டுமல்ல, செயல்பாடு யோக்கியதை போன்றவைகள் வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். ராஜா என்ற அதிகாரம் தன் குடும்பத்திற்காகவும் மகனுக்காகவும் அல்ல. அவனது தேசம் மற்றும் நாட்டின் விசுவாசிகளுக்காகத்தான்.

View More மஹாபாரதத்தில் ஒரு நாள்

சகோதரர்களுக்கிடையே ஒப்பீடு

பலரும் இதுபோன்ற ஒப்பீடுகளின் சுமையை உணர்ந்திருப்பீர்கள். மனித வாழ்வின் ஒரு நிலையான அம்சம் இந்தச் சகோதர ஒப்பிடல்.

மனிதனாகவே வாழ்ந்த, மனிதனாகவே வடிக்கப்பட்ட, மனிதனாகவே காட்டப் பெற்ற கம்பனின் இராமனும் இதிலிருந்து தப்பவேயில்லை…

View More சகோதரர்களுக்கிடையே ஒப்பீடு