ஓர் ஓநாய் புள்ளி மானைத் துரத்துவதைப்போல் – அன்பே –
உன்னை நான் துரத்துகிறேன் – நீ முழுவதும் எனக்கு மட்டுமே – அதனாலேயே கூர் நகங்கள் கொண்டு – சுதந்தரம் முழுவதுமாகக் கிழித்துப் போடுகிறேன் – உன்னை எனக்குள் முழுவதுமாக –
உள்வாங்கிக் கொண்டபின் –
உன் சகோதரியைப் பின்தொடர ஆரம்பிப்பேன்…
Tag: பெண்கள் நடத்தை
அர்த்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் நினைத்தார்கள் என்று எண்ணுவது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகம். வள்ளுவர் நாணுடைமை என்ற ஓர் அதிகாரத்தையே உருவாக்கியிருக்கிறார். அங்கே ஆண்/பெண் வேறுபாடில்லை…
View More அர்த்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்புஅம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]
அந்த வீட்டு மாமா வருகிற கார் சத்தம் தெரு முனையில் கேட்டவுடனேயே மாமி பேச்சை அவசர அவசரமாக நிறுத்தி விட்டு “வரேன் மாமி” என சன்னலை விட்டு ஓடுவாள்.இது அம்மாவுக்கும் எங்களுக்கும் பெரிய ஆச்சரியம், ஏனெனில் எங்கள் அப்பா வருகிறாரென்று நாங்கள் எந்த வேலையையும், விளையாட்டையும், பேச்சையும் பாதியிலே நிறுத்தியதேயில்லை… ஒரு விதத்தில் மாமாவும் நல்லவர்தான். மாமியும் பாவம் பரம சாது. ஆனால் அவர்களின் உறவின் இழையில் நுண்ணிய சிக்கல்கள். சராசரி நல்ல தனத்தொடு கூடிய ஒரு ஆண் + சராசரியான ஒரு நல்ல பெண் = ஒரு சராசரி சந்தோஷமான தம்பதிகள் என்ற சமன்பாடு சரியாக இருக்கின்ற தருணங்கள் வெகு குறைவே என்ற ஞானம் எனக்கு பிறந்தது… நான் சொன்னேன் ”அந்த மாமி பாவம் இல்ல!!” அண்ணா சொன்னான் “போடி பாவமும் இல்ல ஒண்ணும் இல்ல! பெரிய பங்களாவில இருங்காங்க. கார் வச்சுண்டு இருக்காங்க பையன் கான்வெண்டில படிக்கறான் ஊட்டியிலயோ எங்கயோ, நம்மளை மாதிரி கார்பரேஷன் ஸ்கூலா என்ன? ஜாலியாத்தான் இருக்காங்க. நாமதான் பாவம்!”….
View More அம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]பாஞ்சாலியின் புலம்பல்
ஆண் மட்டும்தான் பிடிக்காத பெண்ணை விலக்கி வைக்க வேண்டுமா, பிடிக்காவிட்டால் பெண்ணும் அவ்வாறு செய்வதில் என்ன தவறு என்று பெண்ணுக்குத் திருமண முறிவில் முதலிடம் வைக்க முயலுகிறீர்களே – ஒரு பெண், ஒருவர் பின் ஒருவராக, ஒன்றுக்கு மேற்பட்ட கணவருடன் வாழலாம் என்ற கருத்தை ஆதரிக்கிறீர்களே, ஐவரோடு வாழ்ந்தாலும் அவர்களுக்கு மட்டுமே என் மனதில் இடம் கொடுத்திருந்தேனே, யாரையும் தூக்கி எரியவில்லையே, அதை என் போற்ற மாட்டேன் என்கிறீர்கள்?… என் கணவன் குடாகேசி(அருச்சுனன்)யிடம் நான்கு முறை தோற்று ஓடியவனும், போர்க்களத்தை விட்டுப் பதினான்கு முறை ஓடியவனுமான கர்ணனை உயர்த்தியும், என்னவர் அருச்சுனனைத் தாழ்த்தியும் பேசுகிறீர்களே, பலவாறு ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளும் காட்டுகிறீர்களே, இதுதான் சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் கோடாமல் இருக்க வேண்டிய சான்றோர்களான உங்களுக்கு அணியா(கலனா)?….
View More பாஞ்சாலியின் புலம்பல்கைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவி
மாறனார் சிறிதும் தாமதிக்காமல் வீட்டின் கூரையிலிருந்த வரிச்சுகளை வாளால் வெட்டி எடுக்கிறார். அதைக் கொண்டு ஒருவாறு அடுப்பைப் பற்றவைத்துப் பின் ஈரநெல்லை வறுக்கிறாள். அதை அரிசியாக்கி உலையில் போட்டு சோறாக்கு கிறாள். சரி, உணவு தயாராகி விடும். வந்த விருந்தினருக்கு வெறும் சோற்றை மட்டும் எப்படிக் கொடுப்பது? யோசிக்கிறாள். மறுபடியும் கணவரிடம் போய் காய்கறி ஒன்றும் இல்லையே, என்ன செய்யலாம்? என்று இருவரும் சேர்ந்து யோசிக்கிறார்கள்… இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் மாறநாயனார் வாழ்ந்த வீடும், அவர் பயிர் செய்த நிலமும் இருக்கிறது. இந்நிலத்தை “முளைவாரி அமுதளித்த நாற்றாங்கால்’ (இறைவனுக்கு அமுதளிக்க நெல் விளைந்த வயல்) என்கிறார்கள். குருபூஜையன்று மாலையில் சிவன், அம்பாள், மாறநாயனார், அவரது மனைவி புனிதவதி ஆகிய நால்வரும் ஒரே சப்பரத்தில் எழுந்தருளி புறப்பாடாவது விசேஷம். அன்று சிவனுக்கு தண்டுக்கீரை பிரதான நைவேத்யமாக படைக்கப்படும்…
View More கைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவிஎழுமின் விழிமின் – 23
ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல்நிலைக்கு உயர்த்தியிருக்கிறீர்களா? எங்காவது பலவீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள்…. எந்த வேதத்தில், எந்த ஸூக்தத்தில் வெளிநாட்டிலிருந்து பாரதத்தினுள் ஆரியர் வந்ததாக உங்களுக்குத் தெரிகிறது? நீங்கள் ராமாயணம் படித்தது வீணாகி விட்டதே. அதிலிருந்து பெரிய, அருமையான கட்டுக் கதையொன்றை எதற்காக உற்பத்தி செய்கிறீர்கள்?.. பெண் என்கிற பால் பாகுபாட்டை ஒதுக்கி விட்டு, பொதுவான மனிதத்துவ உணர்ச்சியின் அடிப்படையில் நீங்கள் பழகக் கற்றுக் கொள்கிற வரையில், உங்கள் பெண்ணினம் வளர்ச்சியடையாது….
View More எழுமின் விழிமின் – 23சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 3
அவர்கள் திருந்தி வாழவேண்டும் என்று சொல்வதைவிட்டு அந்த உரிமை பெண்களுக்கும் வேண்டும் என்ற திசையில் சென்றுகொண்டிருக்கிறது இன்றைய பெண்களின் சம உரிமைக் கோரிக்கை… இவற்றை எல்லாம் எந்தப் பெண்ணியவாதிகளோ அல்லது தங்களை அப்படிச் சொல்லிகொள்கிறவர்களோ சுட்டிக் காட்டியதும் இல்லை; அவர்கள் கண்களில் இவை படுவதும் இல்லை. அவர்களுக்குத்தான் கணவனுக்கும் மாமியாருக்கும் காபி போட்டுக் கொடுக்கும் பெண்ணடிமைகளை மீட்கவேண்டிய நெருக்கடி இருக்கிறதே… பெண்கள் தங்கள் நளினத்தையும், எழிலையும், கம்பீரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர்.
View More சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 3கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்
ஒரு பெண்ணுக்கு ஆண் நண்பர்கள் இருப்பது சகஜம் என்பது இன்றைய பெண்களின் நிலை. ஆண் பெண் நட்பு நல்லது என்று பிரசாரம் செய்தவர்கள் அதன் அளவு கோலைப் பிரசாரம் செய்யவில்லை. மாறாக ஆணும் ஆணும் பழகுவதைப்போலவே பெண்ணோடு பெண் பழகுவதைப் போலவே ஆணும் பெண்ணும் பழகலாம் என்றே உசுப்பிவிட்டனர். விளைவு கேவலமான பத்திரிக்கைச் செய்திகள் நாறும் அளவிற்கு இன்றைய குடும்ப கலாச்சாரம் சீரழிந்து போய்விட்டது. ஒரு மதிப்பிற்குரிய பெண்மணியிடம் இந்த நட்பு நாகரீகத்தில் எது அளவு என்றும் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் வரிசையாக சில விஷயங்களை அடுக்கினார்…
View More கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்பெண்கள், குடும்பம் – 1
நம் கடவுளர்கள் கூட மனைவியரோடு தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் நாம் கல்யாணம், குடும்பம் என்றெல்லாம் கூறி மகிழ்கின்றோம். ஈசன் உடலில் சரிபாதியை அன்னைக்குக் கொடுத்திருக்கின்றான். காக்கும் கடவுளான விஷ்ணுவோ தன் நெஞ்சிலேயே அவளைச் சுமக்கின்றார். படைப்பவரான பிரம்மாவோ தன் நாக்கிலேயே மனைவியை வைத்திருப்பதாகக் கூறுவார்கள். கல்விக்கு அதிபதியாக நாம் கூறுவது சரஸ்வதி என்னும் பெண் தெய்வமே. அதே போல் வீரத்துக்கு மலைமகளையும், செல்வத்துக்கு அலைமகளையும் அதிபதியாகக் கூறுகின்றோம்…
View More பெண்கள், குடும்பம் – 1