ஆலயக் கோவிலுக்கு ஐந்து நிலை இராஜகோபுரம் இருக்கும் என்றார் முத்தையா ஸ்தபதி. கோபுரத்தின் நிலைகளை எப்படித் தீர்மானிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “அது கோவிலின் பரப்பளவையும், மக்கள் தொகையையும் பொறுத்திருக்கிறது. மக்கள் தொகையைப் பொறுத்தே கோவில் எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப் படுகிறது. அதைப் பொறுத்தே இராஜகோபுரத்தின் நிலைகளும் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் கூறி, தனது ஒவ்வொரு கூற்றுக்கும் ஆகம சாத்திரத்திலிருந்து வடமொழி சுலோகங்களைக் கூறி சான்று காட்டினார்… நமது விருப்பப்படி சிலைகளைச் செதுக்கக்கூடாதா என்று வினவியதற்கு, “ஆகம சாத்திரம் அதற்கு அனுமதிப்பதில்லை. விநாயகர் சிலைகளையே பலவிதமாக வடிவமைக்க சாத்திரங்கள் இருக்கின்றன என்று மேற்கோள்கள் காட்டினார். அதுபோலவே, சிவன், பார்வதி, முருகன் முதலிய பல கடவுளர்கள் சிலைகளையும் வடிவமைக்க ஆகம விதிகள் உள்ளன.” என்று பதில் கூறினார்….
View More ஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்Tag: விக்கிரகம்
அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்
எதற்காக இவ்வளவு பயங்கரமும் அச்சமும்? இதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன? எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன? … பல நூற்றாண்டுகளாக, ரிஷிகளும், ஞானிகளும், கவிஞர்களும் கலைஞர்களும் அந்த தெய்வீக உருவை உள்ளுணர்ந்தும் ஓதியும், போற்றியும் பாடியும் ஆடியும், செதுக்கியும் வடித்தும் வரைந்தும் எண்ணற்ற விதங்களில் தரிசித்துள்ளனர்…. எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் சன்னிதியை நான் குறிப்பிட்டுத் தேடிச் செல்வது வழக்கம். ஒவ்வொரு நடராஜரிடத்திலும் அவரை வடித்த சிற்பி செய்திருக்கும் சில நுட்பமான கலை அம்சங்கள் புலப் படும். நடராஜ வடிவம் என்பதே ஒரு தனித்த சிற்ப மொழி என்றும், ஒவ்வொரு சிற்பியும் அதன் மூலம் தான் வடிக்கும் நடராஜ மூர்த்தங்களில் சில குறிப்பிட்ட உணர்ச்சிகளை மையமாக வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறாரோ என்றும் தோன்றும்….
View More அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்
பிப்ரவரி 25, 26 (சனி, ஞாயிறு இரு நாட்களும்). பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புகழ்பெற்ற அறிஞர்கள், ஸ்தபதிகள், கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கு பெறுகின்றனர். இரு நாட்களும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு. அனுமதி இலவசம். அனைவரும் வருக! சம்ஸ்கார் பாரதி அமைப்பின் தமிழகக் கிளை இந்தக் கருத்தரங்கத்தை நடத்துகிறது.
View More கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்வேல் உண்டு, பயமேன்?
யாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்தை ‘கந்தபுராண கலாச்சாரம்’ என்று அழைப்பதும் வழக்கம்.. அவ்வளவுக்கு இவர்களின் வாழ்வு முருகனுடன் .. முருக வரலாறாகிய கந்தபுராணத்துடனும் இணைந்திருக்கிறது…. இன்றும் இதனை நாம் பார்த்து ஏங்கலாம்.. யாழ். மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து எங்கு சென்று வாழ்ந்தாலும் அங்கெல்லாம் நம் அழகுக் கடவுளுக்கு கோயில் சமைத்துக் கும்பிட்டு வருகிறார்கள்.. நல்லூரில் கந்தன் கோயில் கொண்ட இடம் கத்தோலிக்க தேவாலயமானது.. சில ஆண்டு காலத்தில் போர்த்துக்கேயரை ஓட ஓட துரத்தி விட்டு ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற்றினர்.
View More வேல் உண்டு, பயமேன்?