மதிப்பிற்குரிய பெரியவர் வெங்கட் சாமிநாதன் அடுத்தடுத்த இரண்டு மாரடைப்புகளால் நேற்று (21 அக்டோபர் 2015) அதிகாலை பெங்களூரில் காலமானார். கலைமகளின் தவப்புதல்வர் புனிதமான சரஸ்வதி பூஜை நாளன்று மறைந்து விட்டார். கலை இலக்கிய விமர்சன பிதாகமர், மகத்தான சிந்தனையாளர். அரை நூற்றாண்டு காலம் தனது கூர்மையான எழுத்துக்களாலும் இடித்துரைகளாலும் தொடர்ந்து புதிய திறப்புகளை தமிழர்களாகிய நமக்கு அளித்து வந்து வழிகாட்டியவர் மறைந்து விட்டார்…. தமிழ்ஹிந்து இணையதளம் உருவான 2008ம் ஆண்டு முதல், தொடர்ந்து வெ.சா அவர்களின் படைப்புகள் இதில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெ.சா தனது வாழ்நாளில் இறுதியாக எழுதியது இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் என்ற கட்டுரை தான். அதன் முதல் பகுதி தமிழ்ஹிந்துவில் சென்ற வாரம் வெளிவந்தது. அதன் அடுத்தடுத்த பகுதிகளை ஏற்கனவே அவர் அனுப்பி வைத்திருந்தார்…
View More அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்Tag: விமர்சகர்
பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று
”பி.பி. ஸ்ரீனிவாஸ் விழா நடத்த இருக்கிறோம். பல மொழிகளிலும் தம் பங்களிப்பைத் தந்துள்ள, பி.பி ஸ்ரீனிவாஸ் போல 80 வயது நிறைந்த, அறிஞர்களையும் கௌரவிக்கத் திட்டமிட்டு, அவ்வகையில் தமிழ் மொழிக்குத் தாங்கள் செய்துள்ள பாராட்டத்தக்க சேவையைக் கருத்தில் கொண்டு அதே மேடையில் தங்களையும் கௌரவிக்க விரும்புகிறோம்” என்று 2012 டிசம்பரில் வந்த கடிதத்தில் கண்டிருந்தது.. ஆச்சரியமாக இருந்தது. இங்கு அதுவும் தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூச்சலிடும் கர்நாடகத்தில், ”உங்களை கௌரவிக்கிறோம்” என்றா குரல் எழும்? எப்படி இது நேர்கிறது?…. ”அவர் இருந்த போது பெரிய அளவில் நடத்த இருந்தோம். நம் துரதிர்ஷ்டம் அவர் மறைந்து விட்டார். இருந்தாலும் விழாவும் கௌரவிப்பும் இருக்கும். பெரிய அளவில் இல்லாவிட்டாலும். முடிந்த அளவில் நடத்துவோம்” என்றார்…. பாலஸ் மைதானத்தில் உள்ளே நுழைந்தால் ஒரு பெரிய கொட்டகை திறந்த மைதானத்தில் எழுப்பப் பட்டிருந்தது. மேடையும் மிகப் பெரியது… கௌரவிக்கப்பட இருந்தவர்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்டு எஸ்,பி.பாலசுப்ரமணியம், ஏசுதாஸ் முதலிய நக்ஷத்திர பாடகர்கள், சரோஜா தேவி, ஜெயந்தி, ரவி உட்பட எல்லோரும் புடை சூழ ஒவ்வொருவரும் கௌரவிக்கப்படுபவரை கால் தொட்டு வணங்கி, சால்வையோ, மாலையோ, பணமுடிப்போ, ஷீல்டோ கொடுத்தனர்….
View More பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்றுஅஞ்சலி: மலர் மன்னன்
இரண்டு நாட்கள் முன் இருக்குமா? மலர்மன்னனிடமிருந்து வந்தது தொலை பேசி அழைப்பு ஒன்று. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிக் கொண்டே தொலை பேசியை எடுத்தேன். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே, ”உங்க ரங்கநாதன் தெரு கட்டுரை நம்ம சென்னையில் வந்திருக்கு இந்த மாதம். பாருங்கோ நெட்லே கிடைக்கும். அச்சிலே வரதுக்கு நாளாகும்” என்றார். ”பாக்கறேன். ஆனால் நெட் கனெக்ஷன் போயிடுத்து” என்று கொஞ்சம் நிம்மதி அடைந்து அவருக்கு பதில் சொன்னேன். அவருக்கும் எனக்கும் இடையே சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக அவருடைய புத்தகம் “திராவிட இயக்கம், புனைவும் உண்மையும்” பற்றித் தான் பேச்சு. அது பெற்றுள்ள வரவேற்பு பற்றி அவருக்கு ரொம்ப சந்தோஷம். ”ராமகோபாலன் பத்து காபி வாங்கிண்டு போயிருக்கார். அவரைச் சுத்தி எல்லாருக்கும் கொடுக்கறதுக்கு” என்று. சொன்னார். புத்தகம் ஸ்டாலுக்கு வரதுக்கு முன்னாலேயே நெட்லேயே எல்லாம் வித்துப் போச்சாம் என்று ஒரு செய்தி. ”இனிமே மறுபடியும் அச்சடிச்சு எனக்கு எப்போ காபி கொடுக்கப் போறாளோ தெரியலை,” என்று ஒரு நாள். “வைரமுத்து, கருணாநிதிக்குக் கூட இவ்வளவு வரவேற்பு இருந்ததா கேள்விப்படலையே ஸ்வாமி, எதுக்கும் ஜாக்கிரதையா இருங்கள். அரவிந்தன் புத்தகத்துக்கு நடந்தாப்போலே, பெரியார் திடல்லே கூட்டம் போடுவாங்க உங்களைத் திட்டறதுக்கு. இல்லாட்டா, ராமமூர்த்தி புத்தகத்து பதில் கொடுத்தாப்போல, உங்களுக்கு ஒரு 400 பக்கத்துக்கு பதிலடி கொடுக்க வீரமணி தயார் பண்ணிக் கணும்” என்று இப்படி ஏதோ பேசிக்கொள்வோம். பத்ரி இந்த புத்தகத்தை எழுதச்சொல்லி இவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த தொலை பேசி சம்பாஷணை தொடர்ந்தது. புத்தகம் கைக்கு வந்ததும் எனக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்திருந்தார். அதிலிருந்து நான் அதைப் படித்தேனா என்று கேள்விகளுக்கும், படித்து விட்டேன் என்றதும் எப்படி இருக்கிறது புத்தகம்? என்றும் தொடர்ந்து கேள்விகள், பின்னர் எழுதத் தொடங்கியாயிற்றா?” என்று கேள்விகள் கேட்டு தொலை பேசி மணி அடித்தவாறு இருக்கும்.
ஒவ்வொரு தடவையும் திண்ணையில் அவர் எழுதும் கட்டுரைகள் மாத்திரம் அல்ல, பின்னூட்டங்கள் பற்றியும் கேட்பார். எனக்கு அவர் சளைக்காமல் காவ்யா, சுவனப்ரியன் (இப்படி அனேகர்), இவர்களின் விதண்டா விவாதங்களுக் கெல்லாம் பதில் அளித்துக்கொண்டிருப்பது அவர் தன் நேரத்தை வீணடிப்பதாக எனக்குப் படும். நான் சொல்வேன். ஆனால் அவர் கேட்கமாட்டார். ”எழுதி வைப்போம். இன்னம் படிக்கிறவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு இது போய்ச் சேராதா,” என்பார். இந்த தீவிர முனைப்பும் சளைக்காத உழைப்பும், விசாலமான அனுபவம், வாசிப்பு, உற்சாகம் மிகுந்த துடிப்பு எல்லாம் அவரிடம் பார்த்து நான் பொறாமைப் பட்டதுண்டு. மேலும் மிகவும் மென்மையான சுபாவம். யாரையும் கடிந்து கொள்ள மாட்டார். சீற்றம் என்கிற சமாசாரம் அவரிடம் இருந்ததில்லை. தார்மீக காரணத்துக்கானாலும் சரிதான்….
ஒரு நாள் மாலை அளவளாவல் – 3 [இறுதிப் பகுதி]
நடக்கிறது எதுவுமே, அது எனக்கு சந்தோஷத்தை இல்லை ஏதோ தாக்கத்தைத் தந்தால், அதைப்பற்றி சொல்லணும் என்று தோன்றினால் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், யாரும் கேட்டால் சொல்கிறேன். அவ்வளவுதான்… புதுமைப் பித்தன் நாவல் எழுதுகிறேன் என்று ஆரம்பித்து ஒரு இடத்திலே “அவரைக் கைத் தாங்கலாக அழைத்து வந்ததாக” எழுதுகிறார்… நிறைய சச்சரவுகள் வரும் என்று பிரசுரமாகவில்லை. கடைசியில் டைம்ஸ் டுடேயோ என்னவோ பத்திரிகையில் பிரசுரமானது. இதன் தமிழ் வடிவத்தை தமிழ் ஹிந்து (www.tamilhindu.com) என்னும் இணைய இதழில் பார்க்கலாம்… பிச்சமூர்த்தி யாப்பில் எழுதி fail ஆயிருக்கிறார் பார்த்தீர்களா?…
View More ஒரு நாள் மாலை அளவளாவல் – 3 [இறுதிப் பகுதி]ஒரு நாள் மாலை அளவளாவல் – 2
சிவாஜி கணேசனைப் பற்றி எழுதும்போது நமக்கு சிலது சொல்லணும்போல இருக்கு. மற்றபடி ஏகப்பட்ட பேர்கள் இருக்காங்க. இப்ப உதாரணத்துக்கு சொல்லப் போனா….. நல்ல பிம்பம் உருவானால் உருவாகட்டுமே, அது நமக்கு சம்மதமாக இருந்தால், அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்தால், அதிலிருந்து நாம் வளர்ந்தால், இருக்கட்டுமே…. நான் ஒரு புது மொழியை சிருஷ்டிக்கிறேன் என்று சொல்வதாக இருந்தால், அது எனக்கு புரியாத மொழியானாலும் அது என்னை இருந்த இடத்திலே உட்கார வைக்கணும்….
View More ஒரு நாள் மாலை அளவளாவல் – 2ஒரு நாள் மாலை அளவளாவல் – 1
இப்படி எங்காவது நடக்குமா? ஒரு பத்திரிகையின் தேர்வைக் கேள்வி எழுப்பி எழுதியவனை அந்தப் பத்திரிகை ஆசிரியர் எங்காவது தன் பத்திரிகைக்கு எழுதச் சொல்வாரா? அது நடந்தது என் விஷயத்தில்… எந்த ஆழ்ந்த தன்னை மறந்த ஈடுபாட்டிலும் ட்ரான்ஸ் வரும். ஒருத்தனுக்கு புத்தகம் படிக்கிற போது கூட வரும். எழுதும் போது கூட வரும். எதிலும் தன்னை மறக்கும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால் வரும்… எனக்கு என்னதான் தெரியும்.. பின்னே? எனக்கு எதையும் பார்த்தா அதைப் பாத்து பிரமிச்சு நிக்கத் தெரியும். அந்த பிரமிப்பை நான் சொல்கிறேன். இது என்ன விமர்சகனுடைய வேலையா? இது என்ன ஒரு Job- ஆ? நான் என்ன தாசில்தாரா, கணக்கப் பிள்ளையா?…
View More ஒரு நாள் மாலை அளவளாவல் – 1நமக்கு எதற்கு வெ.சா.?
[…]வெசாவின் கட்டுரைகளில் நம் தலையில் அடித்து விழிப்புறச் செய்வது ‘பான்:ஸாய் மனிதன்’; 1964 இல் எழுத்து இதழில் வெளியானது. இறுதியாக இப்படி முடியும்: “ஒரு அடிப்படையான சாதாரண கேள்வி கேட்க எனக்கு உரிமை அளிப்பீர்களா? எருமைக்கு எதற்கு நீச்சுக்குளம்?” அந்தக் கட்டுரைக்குள் இருக்கும் கோபம் ஆதங்கம் பரவலாக தமிழனது மூளையில் இன்னும் இயங்கும் பாகங்களை சென்று சேர்ந்திருந்தால் தமிழ்நாட்டு ரசனை கொஞ்சமாவது ஏற்றமடைந்திருக்கும்.[…]
View More நமக்கு எதற்கு வெ.சா.?