டேனிஷ் மிஷனரி ஆவணங்களில் இருந்து பறையர்கள் பெருமளவில் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. இங்கு படை என்பது ஐரோப்பிய படை மட்டும் அல்ல ; மராத்திய அரசர்களின் படையும் தான்…பறையர்களிடம் ஏராளமான மாந்த்ரீக, வைத்திய சுவடிகள் இருப்பதை தெரிந்துகொண்டோம். அதுமட்டும் இல்லாமல் இவர்களின் வைத்திய, மாந்த்ரீக திறனை அனைத்து ஜாதியினரும் பயன்படுத்தி இருக்கின்றனர்; அதற்கான தக்ஷிணையும் கொடுத்திருக்கின்றனர்… பறையர்கள் சில இடங்களில் சில நேரங்களில் கொடுமைப்படுத்தபட்டனர் என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அவர்கள் வேறு சில இடங்களில் விவசாய குடிகளாகவும் போர்குடிகளாகவும் கோலோச்சினார் என்பது. அவர்கள் பெருமையை கூறாமல் அவர்கள் அனுபவித்த கொடுமையை மட்டும் கூறுவது மன ரீதியாக அவர்களை வலிமை இழக்க செய்து தாழ்வு உணர்ச்சியை உருவாக்குவதற்கான தந்திரம்…
View More சொல்லப்படாத பறையர் வரலாறுTag: விவசாயத் தொழிலாளர்கள்
நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1
தலித் என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வதை ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. ‘அதன் அர்த்தம் என்னைத் துன்புறுத்துகிறது! எனது துன்பக்கேணி இதுதான். அது என்னை கும்பலில் ஒருவனாக அடையாளப்படுத்துகிறது. அது ஒரு கூட்டு அடையாளம். அதை நான் மறுப்பதை விடவும், அதுதான் என்னை மறுத்துக் கொண்டிருக்கிறது’ என்று கூறுகிறார். இது முழுக்கவும் நியாயமான வாதமே… நிஜத்தில் காதலர்கள் எந்தவித அரசியல் சிந்தனைகள் இல்லாமல் காதலுக்காகவே காதலிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசியல் செய்பவர்கள்தான் சாதி கடந்த காதல்களை சாதிப் போரின் ஓர் அங்கமாகப் பார்க்கிறார்கள். இரு தரப்பு அரசியல் சக்திகளும் களத்தில் இறங்காத இடங்களில் இந்த சாதி கடந்த திருமணங்கள் சம்பந்தப்பட்டவர்களால் ஓரளவுக்கு சுமுகமாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டிருப்பதையும் சமூக ஆய்வாளர்கள் கணக்கில் கொண்டாகவேண்டும். ஏனெனில் அதுவே நடைமுறையில் அதிகம்…
View More நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1
இலக்கியமாக வாசகனின் உணர்ச்சியை வெற்றிகரமாகத் தட்டி எழுப்பும் இந்த நாவல் தலித்திய பிரசார ஆயுதமாகவும் திகழ்கிறது. நாவல் உருவாக்கும் வரலாற்றுணர்வு, எந்த அளவுக்கு உண்மையான வரலாற்றுத் தரவுகளுடன் பொருந்திச் செல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது… பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர். பிரிட்டிஷ் வரி வசூல் அவர்களின் வருமானத்தைப் பாதித்தது. தங்கள் கூலியான அறுவடைப் பங்கை அவர்கள் அதிகரித்துக் கேட்டனர். விவசாயக்கூலிகளின் இந்தக் கோரிக்கைக்கும் வேலை நிறுத்தத்துக்கும் நில உடைமையாளர்களின் ஆதரவு இருந்தது… சென்னையில் ‘கொடை பங்களிப்பு எதிர்ப்பு சட்டம்’ (Anti-Charitable Contribution Act) ஒன்றை கொண்டு வந்தார் ரிச்சர்ட் டெம்பிள். அரசு நிர்ணயித்த உணவு தானிய விலையை குறைக்கும் விதத்தில் பஞ்சநிவாரணச் செயல்பாடுகளில் ஈடுபடுவது சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. பஞ்சத்தினால் ஏற்படும் படுகொலைகள் குறித்துப் பேசுவதும் எழுதுவதும்கூட குற்றமாக கூறப்பட்டது….
View More புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1பசுமைப் புரட்சியின் கதை
அந்த நண்பர் விவசாயி மகன் . அக் கணம் நான் அந்த நண்பர் மீது பொறாமைப் பட்டேன். ஒரே ஒரு கடி – அதன் வழியே அக்காய் விளைந்த மண், அதன் பின்புலமான இயற்கை, மற்றும் விவசாய அமைப்பு, அதன் பகுதியான மனிதர்களின் உழைப்பு வியர்வை, அனைத்தையும் ருசிக்கும் அந்தப் பேரனுபவம், எல்லா மனிதர்களுக்கும் சாத்தியப் படாதது… நமது வேளாண்மை வரலாற்றின் அனைத்துக் கூறுகள் மீதும், நேற்று இன்று நாளை என அது எதிர்கொண்டு முன்னகர வேண்டிய சவால்கள் மீதும் கவனம் குவித்து, திறன்வாயந்த அடிப்படை நூலாக வந்திருக்கிறது சங்கீதா ஸ்ரீராம் அவர்கள் எழுதிய ”பசுமைப் புரட்சியின் கதை”. நூலின் சில பகுதிகளை கண் கலங்காமல் , குரல்வளை அடைக்காமல் கடக்க முடியாது… உலகப் போருக்கு கண்டடையப் பட்ட ரசாயனம் அம்மோனியா. உரமாக மாறி இங்கு வந்து குவிகிறது. ஓரினப் பயிரும், கைவிடப்பட்ட பயிர் சுழற்சி முறையும் , கால்நடைகளுக்கான தீவனப் பற்றாக்குறையும், கன ரக உழவு முறைகளின் தாக்கமும் எவ்வாறு நமது விவசாயத்தை மொத்தமாக சீர்குலைத்ததென்று நூல் பல்வேறு ,தரவுகள் வழியே சொல்லிச் செல்கிறது….
View More பசுமைப் புரட்சியின் கதைவிவசாயிகளைப் பாதுகாப்போம்
விவசாயம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது என்பது தான் சிக்கல். இதிலிருந்து மீள்வது எப்படி என்று யோசித்ததின் விளைவாக இப்புத்தகத்தை எழுதியிருக்கும் சு.சண்முகவேல் அடிப்படையில் ஒரு விவசாயி. விளைச்சல் வீட்டு அலமாரியை நிறைப்பதில்லை என்ற உண்மையை சிறுவயது முதலே கண்டவர். அவர் தொழில் மாறியதற்கும் காரணம் இதுதான். எனினும், தனது குலத் தொழிலின் மீட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமே இந்த நூலை எழுதுமாறு அவரைத் தூண்டி இருக்கிறது….ஐந்து அருமையான செயல்திட்டங்களை இந்நூல் முன்வைக்கிறது. ‘வீழ்ந்து கிடக்கும் விதைகளை மேலெழுப்புவதற்காகவே பெய்யும் மழைத்துளி போல’ என்று நூலை வாழ்த்தியுள்ளார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்…
View More விவசாயிகளைப் பாதுகாப்போம்வெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன?
..உற்சாகம் கரைபுரண்டோட வீட்டின் கதவை வெளிப்பக்கம் தாழ்போட்டுவிட்டுக் கூரை மீது பெட்ரோல் ஊற்றினார்கள். வீட்டின் நாலா பக்கமும் தீ வைத்தார்கள்…எரிந்தது! எரிந்தது! அந்த வீடு குட்டிச்சுவராக ஆகுமட்டும் எரிந்தது! 44 மனிதர்களும் கருகி கருகிக் கரிக்கட்டைகளாக ஆகுமட்டும் எரிந்தது!.. நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். ..
View More வெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன?