பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் விக்கிரகம் அன்று வணங்கப்படுவது. உண்மையில் பிரபஞ்ச மயமாக இருக்கும் விராட் விக்கிரகம்தான் வணங்கப்படுவதாம். அந்த விராட் விக்கிரகம் எதனால் ஆனது? சேதனர்கள் என்னும் ஜீவர்களின் முழுமையும் சேர்ந்து ஒரு பெரிய சரீரம் என்று கருதினால் அந்தச் சரீரத்தில் இருக்கும் ஆத்மாவாக நாராயணன் இருக்கிறார்… பூமிதான் பாதங்கள். த்யு லோகம் என்னும் விண் என்பதுதான் சிரம். ஆகாயம் என்பது நாபி. சூரியன் தான் கண்கள். வாயு மூக்குகள். திக்குகள்தாம் காதுகள். பிரஜாபதியைக் குறியாக உடைய அந்த விராட்டிற்கு மரணம் என்னும் மிருத்யுதான் அபானம். லோகபாலர்கள் அவருடைய கைகள். சந்திரன் மனம். யமன் புருவங்கள்…
View More விஷ்ணுவின் பிரபஞ்ச மயமான விக்ரகம்Tag: விஷ்ணு
ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2
பாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமானுக்கோ அல்லது அடியாருக்கோ அல்லது ஆசார்யனுக்கோ வசப்பட்டிருத்தல் ஆகும். நமது உடலில், மனஸ் அல்லது அந்தகரணம் என்று ஒரு உள்-புலனுண்டு. அதற்கு சிந்தித்தல் (சித்தம்) , தேர்வு செய்தல் (புத்தி) மற்றும் “தன்னை இன்னது என்று அடையாளம் செய்வது” (அபிமாநம்) என்னும் 3 பணிகளுண்டு. அந்த மூன்று பணிகளையும், பரமனின் திருவுள்ள உகப்பிற்காக அர்பணிப்பது பாரதந்த்ர்யம் ஆகும்… பிறப்பே இல்லாத பகவான் ,தன் பக்தர்களிடம் தானும் பாரதந்த்ர்யமாய் (அடிமையாய்) நடந்து, விளையாட வேண்டி, தன் இச்சைக்கு ஏற்றபடி உடலெடுத்துப் பிறக்கிறான் என்கிறது வேதம். அதைத்தான் “மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து, தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்” என்று உருகுகின்றார் சடகோபர்…
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1
க்ருபையாவது பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை. ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் படும் துக்கத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமல் எம்பெருமானோடு இவர்களை சேர்ப்பதற்கு உறுப்பான முயற்சி செய்வதற்கு க்ருபை வேணும். பிராட்டி ஜனகராஜன் திருமகளாராய்த் தோன்றி அப்பெருமாளை மூன்றுதரம் பிரிந்து இம்மூன்று குணங்களை வெளிப்படுத்தினாள். நாம் அதுகொண்டு அறியலாம்… இந்தத் தேவியின் மனம் ராமனிடத்திலும், ராமனின் மனம் இந்த தேவியிடத்திலும் நிலைத்திருக்கின்றது. அதனால்தான் இந்த தேவியும், தர்மாத்மாவான ராமரும், இதுநாள் வரையிலும் உயிரோடு இருக்கின்றனர் என்கிறான் அனுமன். குளிர்ந்த பெரிய மலர் உந்தி வீட்டை உண்டாக்கி, அதில் உலகங்களை படையென்று நான்முகன் முதலியவர்களை உண்டாக்கியவன். அதையே திருவிளையாடல்களாகச் செய்யும் மாசற்றவனைக் கண்டீரோ? என்கிறாள் ஆண்டாள்…
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8
விஷ்ணுவால் அதிகம் விரும்பப்படும் எட்டு மலர்கள் யாவை? அவற்றை நாம் தேடி விலை கொடுத்து வாங்க வேண்டுமா? இல்லை! அகத்திலேயே அவற்றை நீரூற்றி வளர்க்கலாம் என்பது பெரியோர்களின் கொள்கை. அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்…. திருமாலின் இயல்பு, மேன்மை, நீர்மை ஆகியவற்றைக் காட்டும் ‘ஸ்வரூப-குணங்களை’ விவரிக்கும் பல பகுதிகள் சங்க இலக்கியத்தில் அடங்கியுள்ளன…”நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள, நின் தண்மையும் சாயலும் திங்கள் உள” – சூரியனின் வெம்மை, சந்திரனின் குளுமை இரண்டும் பூமிக்கு இன்றியமையாதது போல, சர்வேசுவரனாகிய வாசுதேவன் உயிர்களிடத்துக் காட்டும் அன்பு, வன்மை இரண்டுமே உலக நடப்புக்கும் அவ்வுயிர்களின் ஆன்ம வளர்ச்சிக்கும் அவசியம்…
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8பலவேசமுத்துவும் தன்னாசியும்
“பலவேசமுத்து துணை” என்று ஒருநாள் ஒரு ஆட்டோவில் பார்த்தநொடியிலிருந்து சிந்தனை தொடங்கியது… விகிர்தர் என்னும் சொல்லுக்கு பலவிதமான உருவங்களை எடுப்பவர் என்று அர்த்தம்… இத்தெய்வங்களை நாட்டார் தெய்வங்கள் எனப் பெயர் சூட்டி அவமானப்படுத்தும் ஆட்களிடம் இருந்து காக்கவேண்டும் எனத் தோன்றுவதில்லை… ‘அண்ணன்மார் கதை’யைத்தான் திரித்து பாத்திரங்களின் தெய்வத்தன்மையை மறுத்து கருணாநிதி ஒரு புத்தகம் எழுதியதும் அதைக்கொண்டு படம் எடுத்ததும்…
View More பலவேசமுத்துவும் தன்னாசியும்பாலகிருஷ்ணனும் பசித்த துறவியும்
கிருஷ்ணனை அந்தத் துறவியின் முன்னால் கொண்டு வந்து அவருடைய பாதங்களில் கிடத்தினார்கள். கிருஷ்ணனும் பவ்யமாக நமஸ்காரம் செய்துக் கொண்டே துறவியின் பாதங்களை இறுக்கத் தழுவிக் கொண்டார்… நீலமேக வண்ணன் வெள்ளை வெளேரென்றிருந்த பால்பாயாசத்தை உண்ணலானார். என்ன ஒரு கான்ட்ராஸ்ட்! கோமளமான வாயைச் சுற்றிலும் பாயாசம்… இந்த மாளிகையைச் சுற்றி நான்கு வாசல்கள் உள்ளன. ஒரு வாசலுக்கு ஒருத்தர் என்ன இரண்டு பேரைக் காவலுக்கு நியமிக்கிறேன். நந்தகோபரும் அவர்களோடு சேர்ந்து வாசலைக் காப்பார்….
View More பாலகிருஷ்ணனும் பசித்த துறவியும்பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 7
“வேதாந்த மார்க்கத்தில் பிரபஞ்சத்தைப் பொய்த் தோற்றம் என்றனர். ஆகையால் பாரதம் அறிவியல் துறையில் வளர்ச்சி அடையாமல் இருந்தது” என்று நமது தத்துவ மேதைகளின் மீது குற்றம் சுமத்துவார்கள் [..] நான்முகக் கடவுளும் உருத்திர மூர்த்தியும் திருமாலின் அம்சங்கள் என்றும், முறையே அவ்விருவர் புரியும் சிருஷ்டி-சங்காரத் தொழில்கள் திருமாலின் தொழிலே என்பதும் [..] விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “கர்த்தர்” (படைப்பவன்) என்ற பெயரும் வரும் [..]
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 7பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5
இராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் என்றைக்கோ ஓடிய காட்டாறு என்றால், பல்வேறு தலங்களில் நமக்கென்று காட்சி தரும் அர்ச்சாவதாரங்களானவை அக்காட்டாற்றின் மடுக்களில் இன்றைக்குத் தேங்கியிருந்து பல விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் கோடைக்காலமாகிய கலியுகத்தில் குளிர்ச்சி தரும் ஊற்றுநீர் போன்றதாகும். ஆகையால், பரப்பிரம்மத்தின் பரிபூரணமான வடிவம் இந்த அர்ச்சை மூர்த்தி வடிவமே என்பது பெரியோர்கள் துணிவு…
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3
பெருமானே! முந்தைய மகா பிரளயத்தின்போது, பிரபஞ்சம் என்பது நாம ரூபங்களோடு இல்லாமல் இருந்தது. அப்பொழுது மாயை என்னும் மூலப் பிரக்ருதி உன்னிடமிருந்து பிரியாவண்ணம், புலன்களைக்கொண்டு நேராகவோ, அனுமானத்தாலோ அறியப்படாத ஒன்றாய் விளங்கிற்று. பிறப்பிறப்பு நிலைகளும் இல்லை; பகல் இரவு எதுவும் இல்லை. பரமானந்த சோதியாக நீ ஒருவனே பொலிந்து நின்றாய் [..]
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 1
பூமியை அவன் பாதமாகவும், சிறந்த நாதத்தை உடைய வெண்சங்குகளைக் கொண்ட கடலினை அவன் ஆடையாகவும், ஆகாயத்தை உடலாகவும், நான்கு திசைகளையும் நான்கு கரங்களாகவும், கதிரவனையும் திங்களையும் அவன் கண்களாகவும் [..] மயிலின் தோகை விரிந்த நிலை போன்றதே இன்று காணும் பிரபஞ்சத்தின் தூல நிலை. நாட்டியம் முடிந்தபின் தோகையை உள்வாங்கிக் கொண்ட நிலையே பிரபஞ்சம் அழிந்து பிரளயத்தில் கிடக்கும் சூட்சும நிலை [..]
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 1