‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்ற பழமொழியை நமது முன்னோர் தெரியாமல்…
View More தன்வினை தன்னைச் சுடும்Tag: ஸ்பெக்ட்ரம்
ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?
அன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் (ரூ. 1.76 லட்சம் கோடி) குறித்து சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த ஆ.ராசாவை பதவி விலகச் செய்த காங்கிரஸ் கட்சி, அதே போன்ற நிலக்கரி சுரங்க ஊழலை (ரூ. 1.86 லட்சம் கோடி) சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த மன்மோகன் சிங்கை நீக்குவது தானே முறை? தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக பதவி விலகுவது கட்டாயம் என்றால், நிலக்கரித் துறையை 2005 முதல் 2009 வரை தன்வசம் வைத்திருந்த மன்மோகன் சிங் நிலக்கரி ஊழலுக்காக பதவி விலகுவது தானே சரியானது? இதில் உச்சபட்ச நகைச்சுவை, பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாக சோனியா அம்மையார் முழங்கி இருப்பது தான். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பல்வேறு தருணங்களில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எவ்வாறெல்லாம் அமளியில் ஈடுபட்டார்கள் என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
View More ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?ஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…
அண்ணா ஹசாரே ஜன லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர்கள் மீதான விரைவான விசாரணை கோரியும், நேற்று (ஜூலை 29) முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளார். திருட்டில் தொடர்புடைய ஒருவரிடம் இருந்து நேர்மையான விளக்கத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அதுவும் நாட்டையே திவாலாக்கும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பர் என்று எதிர்பார்ப்பது பரிதாபமானது. இதைவிடப் பரிதாபம், இன்னமும், அண்ணா ஹசாரே, ‘’மன்மோகன் சிங் நல்லவர் தான்’’ என்று ஓயாமல் பேசிக் கொண்டிருப்பது. இதையே காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஹசாரே மீது நம்பிக்கையின்மை ஏற்படும்படியான செய்திகளை வெளியிடுகின்றன. சுதந்திர இந்தியாவில் இருந்த அரசுகளிலேயே மிகவும் ஊழல்மயமான அரசு என்று பெயர் பெற்றுவிட்ட மன்மோகன் சிங் அரசு இப்போது ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை முன்னிறுத்தி வென்றிருக்கிறது. அவர் மீதும் குற்றம் சாட்டி இருக்கின்றனர் ஹசாரே குழுவினர். இதுதான் இப்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.
View More ஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…சில்லறை மனிதர்கள் திருந்துவதில்லை
லோக்பால் மீதான மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அரசு ஆடிய நாடகம் இது. அடுத்ததாக, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம், விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாடின்மை, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு, தெலுங்கானா பிரச்னை உள்ளிட்ட பல சங்கடமான விஷயங்களிலிருந்து நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளின் கவனத்தைத் திசை திருப்ப இதை விட நல்ல உபாயம் வேறில்லை, எனவேதான் நாடாளுமன்றம் நடக்கும்போது, கொள்கை முடிவுகளை மக்களவையில் தான் வெளியிட வேண்டும் என்ற இலக்கணத்தை வேண்டுமென்றே மீறினார் முகர்ஜி.
View More சில்லறை மனிதர்கள் திருந்துவதில்லைதி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்
ஆ.ராசாவை முன்னிறுத்தி கனிமொழியும் ராசாத்தி அம்மாளும் நிகழ்த்திய ஊழல் அது. இதற்கு முன்னோட்டம் வகுத்துத் தந்தவர் தயாநிதி மாறன். உடன் இருந்து கூட்டுக் கொள்ளை அடித்தவர்கள் சோனியா அண்ட் கோ நிறுவனத்தினர். ஆனால், சிறையில் கம்பி எண்ணுபவர்கள் கனிமொழியும் ராசாவும் மட்டுமே. என்ன கொடுமை இது?
View More தி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்மக்களை முட்டாளாக்கும் புத்திசாலி மந்திரி
அரசியல் சாசன அமைப்புகளான நாடாளுமன்ற பொது கணக்குக் குழு, உச்சநீதி மன்றம், மத்திய புலனாய்வு அமைப்பு ஆகியவை விசாரித்துவரும் ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்க தொலைதொடர்புத் துறை அமைச்சர் போடும் வேடங்கள், ஆ.ராசாவை விட கேவலமாக உள்ளன. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கிறார் சுப்பிரமணியம் சாமி. பிரதமர் மன்மோகன் உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால், கபில் சிபலை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
View More மக்களை முட்டாளாக்கும் புத்திசாலி மந்திரிசி.பி.ஐ. நடத்துவது விசாரணையல்ல, வீட்டுப் பாடம்
தயை தாட்சண்யமின்றி, விருப்பு வெறுப்பு இன்றி, முறைகேடுகளைப் புலன் விசாரணை செய்து, எவருக்கும் அஞ்சாமல் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி, குற்றப் பத்திரிகையினையும் மிகவும் உறுதி வாய்ந்ததாகத் தயாரித்து, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வாங்கித் தரும் அமைப்பு… தாம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவதாகத் தமக்கு அபவாதம் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சியதாலும், என்னதான் இருந்தாலும் படுகொலையான முன்னாள் பிரதமரின் மனைவியாயிற்றே என்கிற தாட்சண்யத்தினாலும் வாஜ்பாய்… ஆண்டிமுத்து ராசாவிடம் சி.பி.ஐ. மணிக்கணக்கில் உரையாடல் மேற்கொண்டிருக்கிறது என்றால் அது விசாரணையல்ல…
View More சி.பி.ஐ. நடத்துவது விசாரணையல்ல, வீட்டுப் பாடம்யார் இந்த நீரா ராடியா?
நூறு கோடிக்கும் அதிகப்படியான மக்கட் தொகையுள்ள இந்திய அரசியலில் இந்த ஒரு பெண்மணி குறுக்குச்சால் ஓட்ட முடிந்தது எப்படி?… நீராவுக்குச் சொந்தமான, டில்லியில் அமைந்துள்ள சத்தர்ப்பூர் தோட்டபங்களா பல பெரிய மனிதர்கள், விமானத் தொழிலதிபர்கள் பங்கேற்பால் பிரபலமடைந்து வந்தது… இனி வரப்போகும் காலம் நீரா ராடியாவுக்கு பெரும் சவாலாக இருக்குமென்பதில் ஐயமில்லை.
View More யார் இந்த நீரா ராடியா?கூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) என்றால் காங்கிரசுக்கு குளிர் ஜுரமா, அல்லது அலர்ஜியா?
Bofors பீரங்கி ஊழலைப் பற்றி விசாரிக்க என JPC முதன் முதலாக அமைக்கப்பட்டது. அதுவும் எப்படி நடந்தது என்று நினைக்கிறீர்கள்? […] முக்கியமாக ராஜீவ் காந்தி […] குடும்பத்தின் பெயரைக் காப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். […] ஆனாலும் ஒரு சில வாரங்களிலேயே சோனியா-ராஜீவ் காந்தியின் இத்தாலிய நண்பரான ஆட்டோவியோ குவத்ரோச்சிக்கும், மற்றும் சிலருக்கும் Bofors நிறுவனம் வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 7.3 மில்லியன் டாலர்கள் போட்டிருப்பது பற்றிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்றன.
View More கூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) என்றால் காங்கிரசுக்கு குளிர் ஜுரமா, அல்லது அலர்ஜியா?ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2
வண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான நிகழ்வுகளில் முகமூடி கிழிந்தவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். வண்ண வண்ணமாக வெளிப்படும் பல முகங்களின் பின் புலத்தை பிட்டு வைக்கும் விதமாக, ஒவ்வொரு தரப்பையும் ஒரு நிறத்துடன் ஒப்பிட்டு தொடர்கிறது இந்த கட்டுரை.
View More ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2