அவர் புன்னகைத்தார். “ நாலு மார்க்” என்றார். ராகவன் சாரின் ஒரு சிறப்பு அம்சம் அது என்று சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர் என்னைப் பார்த்தார். “ நீ அந்த சியாமளாவைப் பார்த்து ஜொள்ளு விடுவதை நான் பாத்திருக்கேன். அந்த காதலை ஜி g ந்னு வைச்சுக்குவோம். சியாமளாவின் புன்னகையை எக்ஸ் Xனு வைச்சுக்குவோம்” … வீட்டின் உட்புறம் , ஒரு அறையில் கட்டிலின் அருகே நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார். உடல் வற்றிப்போய், கைகளில் நரம்புகள் புடைத்து, அசாதாரணப் பளபளப்பில் தோல் மினுங்க, அவரைப் பார்க்கையில் என்னமோ செய்தது….
View More கால்குலஸ் வாழ்க்கைTag: அறிவியல் புதினம்
“7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வை
“அமைதி ஓர் ஆயுதம் ஷிவானி. ஆயுதம்னா தாக்குறதுக்கு மட்டுமில்லை, தற்காப்புக்கு வச்சிருக்கிறதும்தான். எந்த ஆயுதமும் இல்லாத நிலையிலும் உன் மன அமைதி, தெளிவுதான் உன்ன மனுஷனா வச்சிருக்கு. அமைதியா இருக்கும் வரை உனது கட்டுப்பாடு உன் வசம். உன் மன அமைதியை நான் குலைச்சேன்னா உன்னால் தெளிவாக சிந்திக்க முடியாது. உள்ளிருக்கும் மிருகம் வெளிவரும்”… தமிழில் இதுவரை சொல்லப்படாத கதைக்களனை எடுத்துக்கொண்டு அதை நாம் விரும்பி வாசிக்கும் வகையில் சுதாகர் கஸ்தூரி இந்தக் கதையைச் சொல்லி இருக்கும் விதம் அருமை…இந்திய ராணுவம் மற்றும் உளவுத்துறைகள் எப்படி பல துறைகளுடன் ஒன்றினைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன என்பதும், துப்பாக்கிகள், ஓநாய்கள், மருந்துகள், மனதினைப் படிக்கும் கருவிகளைக் குறித்த தகவல்களும், வான மண்டலம் குறித்த தகவல்களும், நிறைந்திருந்தாலும், அதை நமக்கு புரியும்படி எடுத்துச் சொல்வதில் நிச்சயம் வென்றிருக்கிறார்…
View More “7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வைகரங்கள் [சிறுகதை]
“எந்திரங்களும் மனித தன்னுணர்வும் குறித்த புரிதல் முக்கியமானது” என்றார் பண்டிட். லியோன்ஸ்கி அதை ஆமோதித்ததை பாஸு வெளிப்படையான எரிச்சலுடன் எதிர்கொண்டான். “இதற்கும் ஏதாவது வேத ஸ்லோகம் வைத்திருப்பீர்களே”… அவனது தலையிலும் நெற்றியிலும் இருந்து சென்ஸார்கள். அவற்றுடன் பல மெல்லிய பச்சையும் சிவப்புமான இழைகள் இணைந்திருந்தன. அச்சிறுவனிடமிருந்து செல்லும் சென்ஸார்களின் நீட்சிகளே அந்த இழைகள் என ஊகிக்க முடிந்தது… நல்ல காலம் சோவியத் யூனியன் இப்போது இல்லை. இல்லாவிட்டால் இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் பூர்ஷ்வா சதிகளல்ல என்பதை நிரூபிக்க நாங்கள் எத்தனை கட்சி கமிசார்களிடம் என்னவெல்லாம்…
View More கரங்கள் [சிறுகதை]திரைப்பார்வை: அவதார்
ஆனால் இத்திரைப்படம் ஒரு ஹிந்துவுக்கு இந்த கிராபிக்ஸ் பிரம்மாண்ட ‘ஆஹா’க்களை மீறி சில செய்திகளை சொல்கிறது. ஒரு விதத்தில் இத்திரைப்படம் மேற்கத்திய பண்பாட்டின் ஒரு வாக்குமூலம் என்று சொல்லலாம்.
View More திரைப்பார்வை: அவதார்வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்
விரும்பிய தொழிலை விரும்பிய வகையில் செய்வதுதான் மனித விடுதலை என்று முழங்கிய மார்க்ஸ் அது எப்படி நெடுங்காலத்துக்கு எந்த சமூகத்திலும் கிட்டாத ஒரு சுதந்திரம் என்பதை அறியாமல் இல்லை. தெரிந்தும் ‘புரட்சி’ செய்ய மனிதரை உந்தியது (சுய?) வெறுப்பின் பால், வாழ்வுக் கோணலை ஒரே முயற்சியில் நிமிர்த்தி விடும் அவசரத்தில் எழுந்த குரோத முயற்சி. அதை இனம் காணாமல் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று விழுந்து தண்டனிடும் லட்சங்கள் தாமாக எதார்த்தத்தைத் தரிசிக்க முடியாத மந்தை ஆடுகள். உண்மையில் இருந்து அன்னியமான ‘மனிதர்’கள் ….
View More வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்