இதுநாள் வரை எந்த வேலையும் செய்யாமல் அரசியல் தலைவர்களுக்கு ஒத்து ஊதிக்கொண்டிருந்த அதிகாரிகளுக்குத்தான் முதல் ஆப்பு. எங்கே, எப்படி எந்த திட்டத்தில் கொள்ளையடிக்கலாம் என்று அரசியல்வாதிகளுக்கு கோடிட்டுக் காட்டுபவர்களே இந்த அதிகாரிகள்தான்… அரசாங்கத்திற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பாலமாக இருக்கும் இந்த புரோக்கர்கள் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமில்லை… என்.ஜி.ஓக்களின் பண புழக்கங்கள், பட்டுவாடாக்கள் மேற்பார்வை இடப்படும். இவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பண உதவிகள், புதிய சட்டங்கள் மூலம் தீவிரமாக கட்டுப்படுத்தப்படும்…. இந்திய ஜனநாயகத்தின் ஐந்தாதவது தூண் என்று பறைசாற்றிக்கொண்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர்களில் முதன்மையானவர்கள் இந்த ஊடகத்துறையினர். அரசியல் அமைப்புச் சட்டம் தங்களுக்கு கொடுத்த கருத்து சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்த அரக்கர்கள்….
View More மோடி பிரதமரானால் யாருக்கெல்லாம் ஆப்பு?Tag: இந்திய அரசு நடவடிக்கைகள்
தேவையா நீ பணிப் பெண்ணே? – 2
ஐ டி வேலைக்கு வருபவர்கள் கடும் உழைப்புக்கும் நடுவிலும் சமையல் செய்து பாத்திரம் கழுவி கார் ஓட்டி கார் கழுவி கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வாழ்ந்து கொள்வதில்லையா என்ன? இவர்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துரைத்தனம்?…. இந்தியாவில் இருந்து வேலையாட்களை அழைத்து வரும் உரிமை இவரைப் போன்ற உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே உண்டு. அதை எவருமே முறையாகப் பயன் படுத்திக் கொள்வதில்லை. பிரிட்டிஷ் கால எச்சமாக நாம் அரசாங்க அதிகாரிகளுக்குத் தேவைக்கேற்ற சொகுசு வாழ்க்கைகளை அளிக்கிறோம்…. நேர்மையும், உறுதியும் தன்னம்பிக்கையும் ஆற்றலும் செயல் திறனும் சிந்தனைத் தெளிவும் தீர்க்க தரிசனமும் கூடிய தலமை இந்தியாவுக்கு அமைய வேண்டும். அது அமைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஊழலில்லாத நேர்மையான துணிவான பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு வாய்த்து விட்டால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியாவின் மீது தானாகவே மரியாதை பிறக்கும். இந்தியாவின் மீது நல்லெண்ணமும் உயர் அபிப்ராயமும் ஏற்படும். இந்தியர்களும் மதிக்கப் படுவார்கள்….
View More தேவையா நீ பணிப் பெண்ணே? – 2தேவையா நீ பணிப் பெண்ணே? – 1
அமெரிக்க அரசாங்கம் இந்தியாவை வேறு ஏதாவது ஒரு காரணத்துக்காக வற்புறுத்தும் ஒரு கருவியாக, இந்தியாவின் கைகளை முறுக்கும் ஒரு முயற்சியாக இந்த கைதை பயன் படுத்தியுள்ளதா? அமெரிக்கா தன் நாட்டு தூதரக அதிகாரிகள் வேறு நாடுகளில் கொலையே செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வற்புறுத்தி விடுதலையைக் கோரி அவர்களை வெளியே கொண்டு வந்து விடுகிறது…. அப்துல் கலாம் அவமரியாதை செய்யப் பட்ட பொழுதும், இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட பொழுதும், மீனவர்கள் கைது செய்யப் பட்ட பொழுதும் விழிக்காத இந்தியா இப்பொழுது தீடீரென்று தர்மாவேசம் கொண்டு சாமி ஆடுவதின் காரணம் என்ன? சோழியன் குடுமி ஏன் ஆடுகிறது? …. இந்தியாவின் பலவீனங்கள் குறித்தும் ஊழல்கள் குறித்தும் பேசுவதினால் இந்தியா என்னும் ஒரு மாபெரும் தேசத்திற்கு இருக்கும் சுய மரியாதையையும் கவுரவ்த்தையும் மறுத்து விட முடியாது. இங்கு அவமரியாதை செய்யப் பட்டிருப்பது தேவயானி என்றவொரு தனி நபர் கிடையாது. இந்தியா என்னும் ஒட்டு மொத்த தேசமும் அவமானப் படுத்தப் பட்டதாகவே கருதப் படும்….
View More தேவையா நீ பணிப் பெண்ணே? – 1இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1
கிறிஸ்தவர்களைப் பொறுக்கி எடுத்து முன்னேற்றுவதற்காக இந்திய மக்களின் வரிப்பணம் மானியமாக செலவாகிக் கொண்டிருக்கிறது… வளர்ந்துவரும் ஒரு நவீன தேசம் தனது குடிமக்களின் ஒரு பிரிவினருக்கு எதிராக, அதுவும் பெரும்பான்மையினருக்கு எதிராக இப்படி பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.. இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் (2001 சென்சஸ் படி) உள்ள கிறிஸ்தவர்கள், இந்தியாவிலுள்ள 22 சதவீதம் கல்வி நிறுவனங்களைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளார்கள். அதாவது தங்கள் எண்ணிக்கையைப் போல 10 மடங்கு கல்வி நிறுவனங்கள்…
View More இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்
எப்படி ஏமாற்ற முடியும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒரு உண்மையான, தேர்தல்களில் பயன்படுத்தப் பட்ட EVM இயந்திரத்தை வைத்தே நிரூபித்துக் காட்டியது. இந்த இயந்திரம் தன் கைக்கு எப்படிக் கிடைத்தது என்ற விவரத்தை வெளியிட ஹரி பிரசாத் மறுத்து விட்டார்…இந்த வழிமுறைகளில் சில வீடியோவில் செய்து காட்டப் பட்டும் உள்ளன… எழுந்துவர வாய்ப்பில்லை என்று எழுதிவைத்து விட்ட காங்கிரஸ் வியக்கத் தக்க வகையில் தேர்தல் வெற்றிகள் பெற ஆரம்பித்தது ஒட்டுமொத்தமாக EVM மூலம் வாக்குப் பதிவுகள் நிகழ ஆரம்பித்த பின்பு தான்…
View More மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி
வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?… இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது….
View More தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி