ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறக்காட்டா நிச்சயமாக ஒரு காரணமும் இருக்க முடியாது. அப்படியே பிறந்திருப்பினும், உங்களோட நம்பிக்கையின் சுய லாபங்களையும், இடர்களையும் சீர் தூக்கிப் பாருங்க. என்னையே எடுத்துக்குங்க…
எது உண்மைக்கு நெருக்கமானது, மனுசனுக்கு நன்மையானது: ஆனந்தப் பிரம்மமா, அகண்ட நரக நெருப்பா? ஆனா, சின்ன வயசுலேயே கிறிஸ்தவத்துக்கு வசக்கப் பட்டவர்கள், வயசாகியும் வாத்துக்களைப் போலக்கூடப் பரிணாம வளர்ச்சி அடையல்ல…
Tag: இந்துமதம்
புதிய பொற்காலத்தை நோக்கி – 18
பிரிட்டிஷாருக்கும் கிறிஸ்தவத்துக்குமான பிணைப்பு இதுவென்றால், இந்தியாவில் இருந்தவர்கள் ஒரு மண்வெட்டி செய்வதாக இருந்தாலும் வயலில் நாற்று நடுவதாக இருந்தாலும் வான் ஆராய்ச்சி செய்வதாக இருந்தாலும் அம்மை நோய்க்கு மருந்து தயாரிப்பதாக இருந்தாலும் அனைத்தையும் தெய்வ நம்பிக்கையோடு பக்தியோடு இறைவனைக் கும்பிட்டுவிட்டே செய்திருக்கிறார்கள். பிரிட்டிஷாரின் அராஜகத்தை கிறிஸ்தவத்தோடு இணைத்துப் பேசாமல் இருந்ததில் என்ன அரசியல் இருந்ததோ அதுவே இந்துஸ்தானத்தில் இருந்தவர்களின் மேன்மையை இந்து மதத்தோடு இணைத்துச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். இந்தியாவில் அனைத்து ஜாதியினருக்கும் தரப்பட்ட கல்வி பற்றிய ஆவணத்தில் அந்தப் பள்ளிகள் சரஸ்வதி வணக்கத்துடன் தான் ஆரம்பித்தது என்ற குறிப்பு எங்குமே இல்லை…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 18சைவ சமய நம்பிக்கை உறுதிமொழி
தமிழ்ச்சூழலில் சைவம், சைவசித்தாந்தம் குறித்து பல்வேறு குழப்படியான கருத்துக்களும், சைவத்தின் அடிப்படைகளுக்கே முற்றிலும் எதிரான கருத்துக்களும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. இச்சூழலில் டாக்டர் லம்போதரன் இராமநாதன் அவர்கள் வரைந்துள்ள இந்த அருமையான பத்து அம்ச உறுதிமொழி அனைத்து தமிழ்ச்சைவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழும்…
View More சைவ சமய நம்பிக்கை உறுதிமொழிஇந்துமதமே உலகிற்குத் தன்னை எடுத்துரைத்தது: சுவாமி விவேகானந்தர்
ஆங்கிலம், சம்ஸ்க்ருதம் ஆகிய இரண்டிலும் நிகரற்ற புலமை பெற்ற வங்காள பாரத வாலிபன் பேசினான். நவீன நாகரிகத்தின் கல்வியால் விளைந்த பெரும்பயன் பேசியது. அறிவொன்றையே ஆதிமுதல் தன் அந்திம நாள்வரையில் தன் கவசமாகப் பூண்ட தற்காலச் சிந்தனை விழிப்புற்ற ஹிந்து பேசினான்.. ஹிந்து மதமே தன் சிறப்புகளை வாழ்ந்து காட்டினால் எப்படி இருக்கும் என்பதை குரு காட்டினார். ஹிந்து மதமே தன்னைத் தெள்ளத் தெளிவாக உலகிற்கு எடுத்துரைத்தால் எப்படி இருக்கும் என்பதை சீடர் காட்டினார்…
View More இந்துமதமே உலகிற்குத் தன்னை எடுத்துரைத்தது: சுவாமி விவேகானந்தர்வேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜி
டாக்டர் ரங்கன்ஜி ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ என்ற சிறப்பான குறுஞ்சொற்பொழிவுத் தொடரைக் கடந்த சில மாதங்களாக நிகழ்த்தி வருகிறார். சங்க இலக்கியங்களில் வேதம், வேதியர், வேத தெய்வங்கள், வேத வேள்விகள், வேதாந்த தத்துவம், ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், முருகன், சிவபெருமான், திருமால், சக்தி எனப் பலவற்றையும் பற்றிய குறிப்புகள் வரும் இடங்களையெல்லாம் எளிமையாக, அழகாக, ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கிறார்…
View More வேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜிஇந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்
கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள். ஜாதி : மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படும் இந்த (இந்து) சமூகக் கட்டமைப்பின் உண்மை மதிப்பீடு, மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள்… புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி – கோட்சே குற்றவாளியா?…
View More இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்இந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா
பாபாசாகேப் அம்பேத்கரை இந்துத்துவ பார்வையில் பார்க்கையில் அவரது இந்துமத விமர்சனத்தை கணக்கில் எடுத்துகொண்டே அவரது இந்துத்துவ ஆதார நிலைபாடுகளை ம.வெங்கடேசன் முன்வைக்கிறார். ஆனால் பாபாசாகேப் அம்பேத்கரை இந்து விரோதியாக காட்டுகிறவர்கள் அவரது ஆதார இந்துத்துவ நிலைபாடுகளை மறைத்தே அவரை இந்துவிரோதியாக காட்டவேண்டியதுள்ளது. இதிலிருந்தே உண்மையான பாபாசாகேப் அம்பேத்கர் யார் என்பதும் அவரது முழுமையான பரிமாணங்கள் என்னென்ன என்பதும் விளங்கும்.
View More இந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழாஇந்துமதம் குறித்து மூன்று நூல்கள்
இன்றைய நவீன வாசகர்கள் பலர் இந்து மதத்தை வரலாற்றின் வழியாக, சமூக இயக்கங்களின் வழியாக, ஞான, தத்துவ விவாதங்களின் வழியாக அறிவதில் தான் பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய வாசகர்களின் தேடலைப் பூர்த்தி செய்யும் நூல்கள் அத்தியாவசியமானவை. இந்த வருடம் சொல்புதிது பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூன்று நூல்கள் இந்த வகையில் வரும்…. ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டை தீவிரமாக மறுதலித்தவர்களில், கேள்விக்கு உள்ளாக்கியவர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் , விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர், டாக்டர் அம்பேத்கர் போன்று கல்விப் புலங்களுக்கு வெளியே சமூக, ஆன்மிகத் தலைவர்களாக இருந்தவர்களே……”இந்து அடையாளம்” என்கிற அடிப்படையான விஷயம் குறித்து தீர்க்கமான பார்வைகளை முன்வைப்பதாக உள்ளது. இந்துமதத்தின் ஒருமை – பன்முகத் தன்மை, முரண்கள் – இசைவுகள் ஆகியவற்றை அதன் முழுமையான வீச்சுடனும், நடைமுறையில் காணும் உதாரணங்களூடனும் எடுத்துச் சொல்லிப் புரியவைக்கும்…..
View More இந்துமதம் குறித்து மூன்று நூல்கள்இந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!!
இந்து என்ற சொல்லில் மனிதநேயத்தின் அத்தனை கூறுகளும் அடங்கியுள்ளன. இந்த மனித நேயமே இந்து ஒவ்வொருவருக்கும் பெருமையளிப்பது. ஆனால், இந்த “இந்து” என்ற சொல்லை போலி-செக்யூலர் வியாதிகளும் இந்து விரோத சக்திகளும் ஒரு தீண்டத்தாகத வார்த்தையாக மாற்றிவிட்ட ஒரு பெரும் அவலம் இப்போது நிலவுகிறது. இந்த அவல நிலை புற்று நோய்போல் எல்லா இந்தியர்களையும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் சுயநல லாபத்திற்காகவும் ஆட்டிப்படைக்கிறது.
View More இந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!!மதமெனும் பேய்
”நம் வள்ளலாரோ ஒரு படி மேலே சென்று மதம் ஒரு பேய் என்றே எடுத்துரைத்திருக்கிறார். என்னே வள்ளலாரின் பகுத்தறிவுப் பாங்கு!..”… காலனிய காலகட்டத்தில் மேற்கத்தியர்கள் தங்கள் மதமான கிறிஸ்தவம் இயற்கையிலேயே புனிதமானது, தெய்வீக ஆணையுடையது என்றும், மற்ற மதங்கள் வெறும் கருத்துக் குவியல்கள் என்றும் கருதினார்கள். ஆனால் இந்திய மரபில் மதம் வெறும் நம்பிக்கையை அல்ல, அறிவுபூர்வமாக விவாதித்து பின் உட்கிரகிக்கப் பட்ட கொள்கை என்பதையே குறித்தது என்று அந்தச் சொல்லின் உருவாக்கம் மூலமே புரிந்து கொள்ள முடியும்…
View More மதமெனும் பேய்