தாமஸ் பெய்ன் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர், சிந்தனையாளர். இவர் மதங்களுக்கு எதிரானவர் என்பது பொதுவான கருத்து, ஆனால் இறைமறுப்பாளர் இல்லை. எனில், அவர் எதிர்த்தது எதை? அவர் ஏற்க விரும்பிய இறைவன், யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதநூல்களில் விவரிக்கப்படும் இறைவன் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தாமஸ் பெய்ன் ஹிந்து தர்மத்தைப் பற்றி எழுதியதாவோ, அதுபற்றிய அறிவு அவருக்கு ஏற்பட்டதாகவோ தெரியவில்லை. ஒருவேளை, ஹிந்து தர்மத்தின் மெய்யியல் கொள்கைகளை அவர் படித்திருந்தால், நிச்சயமாக அவர் அதனை ஒப்புக்கொண்டு இருப்பார் என்று தோன்றுகிறது…
View More ஆபிரகாமிய மதங்களும் ஆன்மீகமும்Tag: இறைவன்
இந்துக்களுக்கு இத்தனை தெய்வங்கள் ஏன்?
சாதாரண மனிதர்களுக்கு பனி என்பது ஒரே விதமாக வெண்மையாகவே தென்படும். எனவே ‘பனி’ என்றால் எல்லா பனியும் ஒன்றே என்று எண்ணுவோம். ஆனால் பனியோடு அதிக சமீபத்தில் வாழும் துருவப் பிரதேசவாசிகளான எஸ்கிமோக்களுக்கு பனியில் பல ரகங்களைத் தெரியும்.
பனியில் 48 விதங்கள் இருப்பதாக அவர்களின் விஞ்ஞானம் தெரிவிக்கிறது. அத்தனை வித பனிகள் பற்றிய ஆழ்ந்த அறிவு அவர்களுக்கு ஏற்படக் காரணம் பனியோடு அவர்களுக்குள்ள அருகாமையும், நெருக்கமுமே. அதைப்போல ‘ஒன்றே கடவுள்!’ என்று உணர்ந்து நிரூபித்து விளக்கிய போதிலும் கடவுளோடு அதிக நெருக்கமும் முழுமையான அனுபவமும் பெற்ற காரணத்தால் இறைவனை அனேக வித தேவதைகளின் வடிவத்தில் ஹிந்து தர்மம் தரிசிக்க முடிந்தது. விவரிக்கவும் முடிந்தது. கடவுளோடு அப்படி ஒரு நெருங்கிய, நித்தியத் தொடர்பு கொண்ட உண்மையான தெய்வ தரிசனம் ஹிந்துக்களுடையது…
[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்
ருத்ரன் என்பதன் பொருள் “அழச்செய்பவன்” என்பதாகும். உயிர்களை அழச் செய்வதன் மூலம் அவைகளைப் பண்பாடுறச் செய்வது ருத்ரனின் ஒப்பற்ற செயலாகிறது. உலகத்தவர் அழுகின்ற அழுகையின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தால் அது துன்பத்தினை தவிர்த்து இன்பத்தினை நாடுவதாகவே இருப்பதைக் காணலாம்…. அழிந்து போகும் உலகப் பொருட்களை நாடி ஓடும் மனிதன் ஒருக்காலும் நிலைத்த இன்பத்தினைப் பெறமாட்டான். அதற்கு மாறாக அவன் மேலும் மேலும் துன்பத்தில் அகப்பட்டுப் பிறவிப் பெருங்கடலினூடே தத்தளிக்க வேண்டியதுதான்… யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் – ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே…
View More [பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு
அடியவர்க்கும் ஆண்டவனுக்கும் என்றென்றும் அறாத உறவு இருந்து வருகிறது.
பாரில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் என்று வீறுகொண்டு முழங்குவோரும் பரிபூரணனுக்கு அடிமை செய்ய முந்துகின்றனர். நாமார்க்கும் குடியல்லோம் என்று இறுமாந்து பேசும் நாவரசர் பெருமானும் இறைவன் முன் மீளா ஆளாகி அடிமைப்பட்டு நிற்கிறார். இவ்வாறு அனைத்துயிர்களையும் பிணிக்கும் பேராற்றல் ஒன்று நின்று நிலவி நம்மை உய்யக் கொள்ளுகிறது. அத்தகைய பேராற்றலுக்கும் நமக்கும் உள்ள உறவே இனிய உறவாக, மெய்யான உறவாக அமைகிறது. பிற உறவனைத்தும் கண்மயக்காய் ஒழியும் பொய்த்தன்மையவே.
[பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்
இறையுணர்வு என்பது அனைத்தையும் வெறுத்து அகல்வது என்று ஆகாது. உலகுடன் ஒன்றி நின்று அனைத்துயிர்களும் இறைவடிவாக இலங்கும் உண்மையைத் தெரிந்து, அவற்றினிடத்தன்பு கொண்டு, எல்லாம் இறைமயம், இன்பமயம் என்று கண்டு இறைவனுக்கு ஆட்பட்டு வாழ்கின்ற எளிய வாழ்விலும் இறையுணர்வு கைகூடப் பெறலாம். எனவே அகத்துறவே இறையுணர்விற்கு அடிப்படையானது என்பது தெளிவாகின்றது. ‘யான்’, ‘எனது’ என்று நம்மையறியாமலே நம்மிடத்து ஓங்கி வளர்ந்துள்ள செருக்குணர்வு ஒன்றைனையே நாம் வேருடன் களைய வேண்டும்… தோரோ, எமர்ஸன், விட்மன் முதலான அமெரிக்க அறிஞர்தம் கருத்துகளை இவண் எடுத்துரைப்பது நம் இந்து சமயத்தின் பெருமையைக் காட்டுவதற்காக அன்று ; எந்நாட்டவராயினும், எம்மதத்தைச் சார்ந்தவராயினும் அடிப்படையான தத்துவக் கருத்துகள்…
View More [பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்இரண்டெழுத்து அற்புதம்
கம்பன் எனும் காவியச் சோலையில் பூத்துக் குலுங்கும் சொற்பூக்களும் பழுத்துக் குலுங்கும் சொற்கனிகளும் ஏராளம், ஏராளம். அவற்றின் வண்ணமும் வாசமும் கண்ணைக் கவரும். கருத்தை ஈர்க்கும். சொற்பூக்கள் கண் சிமிட்டும்; இள நகை சிந்தும்; தீயும் சொரியும்; தென்றலாய் வருடும்; புயலாய்த் தாக்கும்; சொற்கனிகள் அமுதாய் இனிக்கும், கனிச்சுவையில் நவரசங்களும் சொட்டாது – கொட்டும். வார்த்தைகளைத் தேடிக் களைத்து தன்னை வஞ்சித்துவிட்டு ஓடிவிடுவதாக ஷெல்லியைப் போல் கம்பன் வார்த்தைக்காகத் தவம் கிடக்கவில்லை, வார்த்தைகள் அவனைக் காதலித்தன. வரிசையாக நின்று அவன் கவிதையில் இடம் பிடிக்க முண்டியடித்து முன்னே வந்தன. கவிதையின் அழகெல்லாம் ஒன்று திரண்டு ஒரே ஒரு சொல்லில் பூத்துக் குலுங்க வைப்பது கம்பன் கலை.
View More இரண்டெழுத்து அற்புதம்வீரமுண்டு… வெற்றியுண்டு!
இந்த நாளில் தான், பாரதத்தின் உயர்வுக்காகப் பாடுபடும் ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்’ எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நான்கு சிறுவர்களுடன் நாகபுரியில் துவக்கினார் [..] போராட்டமயமான வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான உந்துசக்தியையும் தன்னம்பிக்கையையும் மக்களுக்கு அளிப்பவையாக நவராத்திரி பூஜையும் விஜயதசமி விழாவும் [..] கல்வி பயில்வதற்கான ‘எழுத்தறிவித்தல்’ விஜயதசமியில் துவங்குவது நமது மரபு. வித்யாரம்பம் இந்நன்னாளில் துவங்கினால், நன்மை என்பது நாடு முழுவதுமே பரவலாக காணப்படும் நம்பிக்கை [..] இறை சக்தியும் வீரமும் உள்ள இடத்தில் வெற்றி இருக்கும். அங்குதான் அமைதி நிலவும் [..]
View More வீரமுண்டு… வெற்றியுண்டு!நமது கோவில்களில் நவீன மாற்றங்கள்
நமது கோவில்களில் எத்தனை வகைகள் உண்டு? பழமையும், பெருமையும் வாய்ந்த கோவில்கள் எவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன? பெரும் தூண்களும், மண்டபங்களும், கலை நயத்துடன் விளங்கும் ஒழுங்கின் பின்னணி என்ன? அருளொளி வீசும் தெய்வீக நிலையங்களான கோயில்களில் ஏற்படுகிற நவீன மாற்றங்களுக்கு தக்கவாறு நாம் செய்ய வேண்டியது என்ன?
View More நமது கோவில்களில் நவீன மாற்றங்கள்பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை
துயில் எழுப்புதலும், நீராட அழைத்தலும் இனிய ராகங்கள். வைகறையில் மானுடத்துக்கு இதைவிட இனிமை வேறு எதுவுமில்லை… அழகெல்லாம் உருகி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது. ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம், பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம்.. மாணிக்கவாசகரிடம் ஞானச்சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும். இருவர்தம் பாவைப் பறவைகளும் ஆன்மவெளியில் பறக்கும் உயரங்களோ..
View More பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வைபிறப்பும் சிறப்பும் இறப்பும் – 3
ஒருவரை நல் வழியில் கொண்டு வருவதற்கு, மரண பயத்தைப் போன்றதொரு சாதனம் வேறு கிடையாது. ஞானம் பெறுவதற்கும், நாம் உலகில் நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்வதற்கும் அது ஒரு பயனுள்ள சாதனம் தான்…. “நான்” எனும் கணவன் இறந்துவிட்டால் அவனது மூன்று மனைவிகளும் கைம்மை அடைவதைப்போல, கர்த்தா நான் இல்லை என்றால் கர்மம் மூன்றும் நம்மை ஒட்டாது…
View More பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 3