தலைமைத்துவம் தமிழ் மரபில் நான்கு குணங்களைக் கொண்டது – அஞ்சாமை, ஈகை, விவேகம், செயலூக்கம். திராவிட இயக்க அரசியல் இந்த நான்கையும் எப்படி சித்தரிக்கிறது என பார்க்கலாம்… யார் ஒன்றுமே செய்ய மாட்டார்களோ அவர்களுக்கு நேராக செய்வது நல்லது என்ற நோக்கில் திராவிடம் மத்திய அரசை நோக்கி புஜம் மடிப்பது மோஸ்தரானது. பொதுவாக திருப்பி்அடிக்கும் தரப்புகளிடம் குனிந்தும், ஒன்றும் செய்யாதென உறுதி படுத்தப்பட்ட தரப்பிடம் கொந்தளிப்பதும் திராவிட மரபு…
View More தமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்Tag: கருணாநிதி குடும்பம்
அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)
ஆன்மாவுக்கு மரணமில்லை என்பது பாரத நம்பிக்கை. கருணாநிதியின் ஆன்மா தனது பாத்திரத்தில் 94 ஆண்டுகள் மனிதக் காலக் கணக்கில் வாழ்ந்து மறைந்துவிட்டது. அவ்வாழ்க்கையில் அவர் செய்த நன்மை- தீமைகளை எடையிட்டு அதற்கேற்ப அவரை விமர்சிப்பதே தகுதிசார் மதிப்பு. எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவரை வாழ்த்திக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் எனது குரல் அபஸ்வரமாகத் தோன்றலாம். ஆனால் இது காலத்தின் தேவை. அண்ணாதுரைக்கு எதிராக அவரது இரங்கல் கூட்டத்திலேயே கடும் மதிப்பீட்டை முன்வைத்த ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகள் இன்றில்லை… அவரை அதிமானுடனாக உருவகிப்பதிலோ, சமூக நீதி காத்த தளகர்த்தராகப் புகழ்வதிலோ, மகத்தான தலைவராக முன்னிறுத்துவதிலோ எனக்கு சற்றும் உடன்பாடில்லை…
View More அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)தமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)
வெற்றி பெறும் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்ற கேவலமான மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உங்கள் எதிர்காலம் வெற்றி பெறுவதற்கான கட்சிக்கு வாக்களியுங்கள். அந்தக் கட்சி பாஜக, அதன் சின்னம் தாமரை… மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் – தயவு செய்து தமிழ் நாட்டைக் கைவிட்டு விடாதீர்கள். மீண்டும் நரகத் தீக்குள் முழுகி விடாதீர்கள். தமிழ் நாட்டை நாசக்காரர்களிடமும் மோசடிப் பேர்வழிகளிடமும் ரவுடிகளிடமும் கொள்ளையர்களிடமும் அடமானம் வைத்து விடாதீர்கள். உங்கள் சந்ததியினருக்குப் பாவத்தை இழைத்து விடாதீர்கள். அவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளின் கல்வியைக் கேலிப் பொருளாக்கி அவர்களை எதற்கும் உபயோகமில்லாத வீணர்களாக மாற்றி விடாதீர்கள். உங்கள் நதிகளை அழித்து விடாதீர்கள். உங்கள் மலைகளை இழந்து விடாதீர்கள்…
View More தமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)பா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)
முதலில் பி ஜே பி அரசு தமிழ்நாட்டுக்காக என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்ப்போம். முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளத்தின் அடாவடியையும் மீறி தமிழ் நாட்டிற்கு அதிக நீர் வருவதற்காக அணையின் உயரத்தை உயர்த்த ஆட்சிக்கு வந்தவுடனேயே உத்தரவிட்டது. காங்கிரஸ் திமுக அரசாங்களினால் தடை செய்யப் பட்ட ஜல்லிக்கட்டை முறையாக நடத்த ஏற்பாடுகளை செய்தது. இன்று தமிழகத்தில் ஓரளவுக்கு மின் வெட்டு இல்லாமல் இருப்பதன் காரணம் அகந்தையும் மூர்க்கமும் நிறைந்த ஜெயலலிதா அரசு அல்ல. மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய மின் பகிர்மான கட்டுமானங்களை துரித கதியில் நிர்மாணித்து மத்திய தொகுப்பில் இருந்து வரும் மின்சாரத்தை தடையின்றி அளித்து வருவதே காரணம்.., இனி பாஜக மத்திய பாஜக அரசின் மகத்தான சாதனைகளை எடுத்துச் சொல்ல பல ஆயிரம் பக்கங்கள் தேவைப் படும். முக்கியமான சிலவற்றை மட்டும் பார்க்கலாம்..
View More பா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 4 (வேண்டும் பா.ஜ.க)
தமிழ் நாடு அழிவுப் பாதையில் இருந்தும், ஊழல்களின் பிடியில் இருந்தும், வன்முறைகள் பயங்கரவாதப் பிடிகளில் இருந்தும், அழிந்து கொண்டிருக்கும் கல்விகளில் இருந்தும், சூழல் அழிவுகளில் இருந்தும், கடன்களில் இருந்தும் விட்டு விடுதலையாகி வளர்ச்சிப் பாதையில் சென்று ஒளி மயமான ஒரு எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டு வாக்களர்களின் முன்னால் இருக்கும் ஒரே ஒரு தேர்வு பா ஜ க கட்சி மட்டுமே. பா ஜ க எந்த வகையில் முந்தைய நான்கு கட்சிகளை விட வேறு பட்டது? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்… அவர்கள் இது வரை என்ன செய்திருக்கிறார்கள் என்று கேட்கலாம். தாங்கள் ஆளும் மாநிலங்களிலும், மத்திய அரசிலும், தமிழ் நாட்டுக்காகவும் பி ஜே பி இது வரை செய்துள்ள சாதனைகள் எண்ணற்றவை….
View More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 4 (வேண்டும் பா.ஜ.க)திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்
தத்தம் சாதி நலனுக்கு என்றே கட்சிகள் தொடங்கிய அனைத்துமே இதே திராவிட இயக்க சிந்தனையின் பாரம்பரியத்தில் வந்தன தான். தம் சாதி நலன், பதவி வேட்டை, பணத்தாசை இந்த மூன்றின் அடித்தளத்தில் இருப்பது ”பிராமணனை ஒதுக்கி வை” என்னும் மூல மந்திரம் தான்.. கட்சி மாறுவதற்குக்கூட வருஷக் கணக்கில் மாதக்கணக்கில் ஆகும். ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் திடீரென்று பகுத்தறிவுப் பகலவனாக, தந்தை பெரியாராக ஆகிவிடுகிறார். இத்தகைய மனமாற்றம், சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவரும் சொன்னதில்லை. யாரும் அவரைக் கேட்டதும் இல்லை… வடவர் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய கட்சி, இன்று தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் அத்தனையும் சுரண்டியாகிறது.. கக்கூசைக் கழுவ என்றே ஒரு சாதி என்ற இழிநிலைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்ன தலித் தலைவரிடம், பெரியார் சொல்கிறார் – இதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க. வேறே யார் செய்வாங்க?…
View More திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்அப்பாடா, கிடைத்தது ஜாமீன்!
கூட்டுச் சதியாளர், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட கடும் குற்றச்சாட்டுகளுடன், கடந்த மே 20 முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனிமொழிக்கு பலமுறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டு… வெளியில் வந்துவிட்டார். திமுகவுடன் பாந்தமாக இருந்த ஒரு பத்திரிகை இப்போது அதிமுக பத்திரிகையாகவே மாறிவிட்டது…. உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்’ என்பது பழமொழி. எனினும் தந்தை சாப்பிட்ட உப்புக்கு மகள் தண்ணீர் குடிக்க வேண்டி இருக்கிறதே என்பது வேதனை அளிக்கவே செய்கிறது…
View More அப்பாடா, கிடைத்தது ஜாமீன்!காகித ஓடம் – கார்ட்டூன்
காகித ஓடம் ..
கடலலை மேலே..
போவது போலே..
மூவரும் போவோம்..
மன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்
மன்மோகன் சிங் சுற்றிலும் நடக்கும் புயல், மழை, இடி, சூறாவளி எதனைப் பற்றியும் கவலைப் படாமல், அமைதியாக, ‘விசுக் விசுக்’ என்று நடந்து கொண்டு தன் கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்… முரசொலி மாறன் படத்துக்கு மலர் போட வந்த அவர், ராசாவைத் தட்டிக் கொடுக்கிறாரே, அதன் பொருள் என்ன?… ‘ஸ்பெக்ட்ரம்’ பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மையின் மீது சந்தேகப்படுவது வெட்கக்கேடானது.
View More மன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்