‘எல்லாம் காலம் காலமா இருக்குப்பா. என்ன மதமாற்றம் பண்ணி என்ன செய்யப் போறாங்க.. இந்த இந்துத்துவ பூச்சாண்டி எல்லாம் தேவை இல்லை’ போன்ற மேதாவி வாதங்கள்.. ‘ஈசனும் நானே, சிவலிங்கமும் வெள்ளமும் நானே, எனவே எதிலிருந்து எதை காப்பது’ என்றெல்லாம் வெத்து ஞானமரபுத்தனம் பேசி அன்னை விலகவில்லை. மாறாக தன்னைவிட மேலாக சிவலிங்கத்தை கருதி வெள்ளத்திலிருந்து அதைக் காப்பாற்ற அதை அணைத்துக் கொள்கிறாள். எனில், இந்து வெறுப்பு வெள்ளம், மதமாற்ற வெள்ளம், திராவிட அரசு இயந்திர வெள்ளம் ஆகியவற்றிலிருந்து நம் சமுதாயத்தையும், ஆலயங்களையும் பாதுகாக்க நாம் எப்படிப்பட்ட தியாகத்துக்கு நம்மை தயார் செய்ய வேண்டும்…
View More இந்துத்துவம் என்னும் ஆன்ம சாதனைTag: காமாட்சி
காஞ்சி காமாட்சியும் சங்கரரும்
காஞ்சியில் ஆதி சங்கரர் காமாட்சி தேவியின் வழிபாட்டை நிலைநிறுத்தினார் என்ற குறிப்பு மாதவீய சங்கர விஜயத்தில் (பொ.பி 14ம் நூற்.) உள்ளது. இந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ள கோயில் காமக்கோட்டம் எனப்படும் ஸ்ரீகாமாக்ஷி ஆலயம் தான் என்று வரலாற்று அறிஞர் முனைவர் சங்கரநாராயணன் கருதுகிறார். பாரததேசத்தின் பல பிரதேசங்களில் உள்ள கோயில்களிலும், அங்குள்ள சிவ, விஷ்ணு, சக்தி மூர்த்திகளின் வழிபாடுகள் ஸ்ரீசங்கரரால் நிறுவப்பட்டன அல்லது சீரமைக்கப் பட்டன என்ற சம்பிரதாயத்தைப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்கள்… தமிழ்நாட்டில் கோயில் மரபுகளைப் பற்றிய எந்த வரலாறானாலும், எந்த ஆதாரமுமில்லாமல் அது தொடர்பாக பிராமண சதி (அல்லது ஸ்மார்த்தர் சதி, வைணவ சதி இத்யாதி) என்று சதிவலை தியரிகளை எடுத்துவிடுவது ஒரு வழக்கமாகப் போய்விட்டது. கிராம தேவதையான காஞ்சி காமாட்சியை பிராமணர்கள் அபகரித்து விட்டார்கள் என்பதும் இதேபோன்ற ஒரு அவதூற்றுக் கதையே அன்றி வேறில்லை…
View More காஞ்சி காமாட்சியும் சங்கரரும்எப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்
சாஸ்திரிகளின் கீர்த்தனைகள் பக்திச் சுவை நிரம்பியவை. சக்தி உபாசகரான அவரின் பெரும்பாலான கீர்த்தனைகள் அம்பாளைக் குறித்தே, அதிலும் அவரின் பூஜ்ய தேவதையான பங்காரு காமாட்சியைக் குறித்தே அமைந்தவை. ..‘மாயம்மா’ என்ற ஆஹிரி ராகத்தில் அமைந்த கீர்த்தனையை மனமுருகப் பாடினார். மும்முறை ‘நம்பினேன்’ என்று சொல்வதின் மூலம் அம்பிகையின்மேல் அவர் வைத்த அசையாத நம்பிக்கை புலப்படுகிறது. உள்ளத்தை உருக்கும் அப்பாடலைக் கேட்டு அங்கிருப்போர் மட்டுமல்ல மீனாட்சி அம்பிகையே மனமுருகியிருக்க வேண்டும்… அவரது கீர்த்தனைகள் நுட்பமான தாளக் கணக்குடன் அமைந்தவை. குறிப்பாக, மிஸ்ர சாபு தாளத்தை அவர் அசாதாரணமான முறையில் கையாண்டிருக்கிறார். இதனால், தேர்ந்த சங்கீத வித்வான்களால் மட்டுமே அவரது கீர்த்தனைகளை அனுபவிக்கவும் பாடவும் முடிகிறது. நாட்டியங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த ஸ்வரஜதியை, செவ்விசை வடிவமாக்கிய பெருமை அவருக்கு உண்டு…
View More எப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்குழவி மருங்கினும் கிழவதாகும் – 4
குழந்தை மகிழ்ச்சியில் தன் இருகைகளையும் தட்டிக்கொண்டு தம் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும். அதனைக் காணும் தாயும் மகிழ்ச்சியில் பூரிப்படைவாள்… தன்னை வணங்குவார் தலைமீது இருகரமும் வைத்து, ‘நன்றாக இரு’ என்று வாழ்த்தும் போதும் வள்ளிக்கு முன் முருகன் கரங்கூப்பும்போதும்…. அறவாழ்க்கை வாழ்வாரெல்லாம் எம்மிடம் வருகவருக என்று அழைத்தல் போலத் திருநிலைநாயகி! கொட்டுக சப்பாணி….கை ஈசுவரனைப் பூஜை பண்ணுகிறதல்லவா? ஈசுவரனைப் பூஜை பண்ணி எனக்கு மோட்சத்தை வாங்கிக் கொடுப்பது இதுதானே?….
View More குழவி மருங்கினும் கிழவதாகும் – 4அம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்
..உள்ளக் கமலத்தில் உறையும் உன்னதமானவளை.. மானசீகமாக, உள்ளே, அந்தராத்மாவில் பூஜித்துப் பின்னர், சுழு முனை வழியே பிரமரந்திரம் வரை கொண்டு சென்று, உபசாரங்கள் வழங்கி நாசித்துவாரத்தின் வழியே திரிகண்டமுத்திரையில் குவித்து, புஷ்பாஞ்சலியுள் புகுவித்து, புறத்தே அமைந்துள்ள ஶ்ரீசக்கர மஹாயந்திர மத்தியில் ஆவாஹனம் செய்வர்…
View More அம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்தலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)
உங்களுடைய வீரியம் முழுவதையும் பண்டாசுரன் கவர்ந்தான். அவன் வெளியில் இல்லை. உங்கள் ஒவ்வொருவருடைய உடலிலும் கலந்துள்ளான்… இந்நிலையில் யாங்கள் இங்கிருந்து என்ன பயன்? நின் தழலுருவத்தில் கலந்திடும் இன்பமே மேவுவம்” என்று கூறி செழுந்தழற் பிழம்பொளி எழுப்பினர்… ஒருக்கால் நிலைமை நம் கையை மீறி ஐயனும் அம்மையும் எல்லாவற்றையும் சங்காரம் செய்து, அழித்துப் போட்டுக் களேபரமாக்கி மீண்டும் புனருற்பவம் செய்வரேயானால், அந்த உக்ர வேள்வியில் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ள விடுத்த அழைப்பு இது…
View More தலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)தலபுராணம் என்னும் கருவூலம் – 3
விசுவநாதர் சந்நிதியில் நின்று வியாசர், “நாரணனே பரப்பிரமம்,” என்றபோது, எல்லாப் பெயரும் ‘தன்பெயர் எனும் மறை வழக்கால்’ விசுவநாதன் வெகுளாமல் வெறிமலர்க்குழல் உமையொடும் மகிழ்ந்து வீற்றிருந்தனன் என்று பாடுகின்றார்… இறைவனுடைய பேரருளே அம்பிகை எனப்படுகின்றது. சிவனையும் சத்தியையும் சேர்த்துத் துதித்தபோது இறைவன் அம்மையப்பராய்த் தோன்றிப் பிரமன் விரும்பியவாறு ஆண்மை பெண்மைகளைப் படைக்கும் ஆற்றல் பெற்றான்..
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 3